Published:Updated:

வாசகர் மேடை: கிறுகிறு க்ளைமாக்ஸ்!

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

பெட்ரோலைச் சேமித்து வாகனம் ஓட்டுவோரே ஓட்டுவர் - மற்றவரெல்லாம் கண்ட்ரோல் இழந்து கவலை கொள்வர்.

வாசகர் மேடை: கிறுகிறு க்ளைமாக்ஸ்!

பெட்ரோலைச் சேமித்து வாகனம் ஓட்டுவோரே ஓட்டுவர் - மற்றவரெல்லாம் கண்ட்ரோல் இழந்து கவலை கொள்வர்.

Published:Updated:
கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

பெட்ரோல், டீசல் - ஒரு குட்டிக்கவிதை ப்ளீஸ்...

பெட்ரோலைச் சேமித்து வாகனம் ஓட்டுவோரே ஓட்டுவர் - மற்றவரெல்லாம் கண்ட்ரோல் இழந்து கவலை கொள்வர்.

வே. விநாயகமூர்த்தி

திரவத் தங்கமே...

நீ அரேபியாவின் ஆதார் கார்டு

அரசுகளின் பான் கார்டு

எங்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு!

அஜித்

தேர்தலே, நீ ஒவ்வொரு மாதமும் வந்து விடு...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தள்ளிவிடு...

S.பற்குணன்

ஏறத்தெரிந்த எரிபொருளே... உனக்கு

இறங்கத் தெரியாதா - எங்களிடம்

இரக்கம் பிறக்காதா?

மருதூர் மணிமாறன்

பெட்ரோல் விலை உயர்வென்பார்

டீசல் விலை உயர்வென்பார்

சமையல் கேஸ் விலையறியாதார்!

மூ. மோகன்

காஸ்ட்லியான கவிதை

கேட்டாள் காதலி

பெட்ரோல்-டீசல் என்றேன்!

பெ.பாண்டியன்

ஒரு லிட்டர் பெட்ரோல் குஞ்சொன்று

வாங்கினேன் - அதைப்

பைக்கின் டேங்கிலோர்

பொந்திடை வைத்தேன்

சென்று நின்றது சில மீட்டரில் - விலை

மூப்பில் யானையும் பெட்ரோலும் வேறோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

IamUzhavan

கி.மு, கி.பி வைத்துக் காலத்தைக் கணக்கிடு!

தே.மு, தே.பி வைத்து என் விலையைக் கணக்கிடு!

இப்படிக்கு,

இந்திய பெட்ரோல், டீசல்!

pbukrish

வாசகர் மேடை: கிறுகிறு க்ளைமாக்ஸ்!

அர்விந்த் கெஜ்ரிவால் பயோபிக் எடுத்தால் யார் நடிக்கலாம்?

நடிகர் விஜய் ஆண்டனி

கு.வைரச்சந்திரன்

கெஜ்ரிவாலாக நடிகர் கார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும்.

parath.sarathi?

நடிகர் ரமேஷ் அரவிந்த்! பெயர், முக பாவனை, மற்றும் பர்சனாலிட்டி சரியாக இருக்கும்.

வி. கார்த்திகை குமார்

ஆம் ஆத்மி ‘தொப்பி’யுடன் பார்த்தால் ‘டாப்’ ஆக மேட்ச் ஆவது நடிகர் சூர்யாதான்!

மருதூர் மணிமாறன்

‘கோ’ படத்தில் முதல்வராக நடித்திருந்த அஜ்மல் உருவ ஒற்றுமையிலும் பொருத்தமாக இருப்பார்.

மன்னார்குடி இராஜகோபால்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனஞ்செயன் - கெஜ்ரிவால் வேடத்தில் கச்சிதமாக இருப்பார்.

jerry

விக்ரம் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

 த.சிவாஜிமூக்கையா, சென்னை

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு மாதிரி இன்னும் என்னென்ன கொண்டுவருவார்கள்?

ஒரே நாடு ஒரே மொழி...

சம்ஜே..?

ஆர். பிரசன்னா

வாசகர் மேடையில் வந்ததும் ஜி அமல் படுத்திருவாருங்க..! அந்தப் பாவம் நமக்கு எதற்கு..?

அவ்வை. கே. சஞ்சீவிபாரதி

ஒரே நாடு ஒரே ஓட்டு... நாட்டில் பிரதமருக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்களிக்கும் உரிமை.

மாணிக்கம்

ஒரே நாடு, ஒரே உணவு... ஒன்லி சப்பாத்தி!

பா.ஜோதிமணி

ஒரே நாடு ஒரே படம் (காஷ்மீர் ஃபைல்ஸ்)

 கா.மு.ஃபாரூக், சென்னை

யோகி கொடுக்கும் மாடுகளை மட்டும்தான் வளர்க்கணும்னு ‘ஒரே நாடு ஒரே மாடு’ திட்டம் கொண்டு வரலாம்.

பெ.பாலசுப்ரமணி

ஒரே நாடு ஒரே நெட்வொர்க் (ஜியோ)

ராம்ஆதிநாராயணன்

ஒரே நாடு ஒரே பேஸ்ட், ஒரே சோப்பு ஒரே பவுடர் என்று சொல்லி எல்லாமே பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி தரப்படலாம்.

A ஆசிக் ஜாரிஃப்

‘ஒரே நாடு ஒரே ரோடு’ திட்டம்... (நாட்டில் உள்ள எல்லாப் பாதைகளையும்... அவ்வளவு ஏன், குக்கிராமங் களில் உள்ள மண் பாதைகளைக்கூட எட்டு வழிச்சாலைகளாக மாற்றும் அதிரடித் திட்டம் இது...)

LAKSHMANAN_KL

ஒரே நாடு, ஒரே கடுப்பு (தென்னிந்திய மக்களுக்கு வருவது, வட இந்திய மக்களுக்கு இன்னும் வரல, வந்தா நல்லாருக்கும்னு தோணுது)

NedumaranJ

ஒரு சினிமாவில் யாருமே எதிர்பாராத க்ளைமாக்ஸ் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

நாலைந்து க்ளைமாக்ஸ் காட்சிகளை வைத்து, ஆளாளுக்குப் பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என அவரவர் சாய்ஸுக்கு விட்டுவிட வேண்டும்!

ரிஷிவந்தியா

வில்லனைத் தேடி ஹீரோ ஆக்ரோஷமாகப் புறப்படும்போது, அவனெதிரில், வில்லன் கூட்டத்தை அரெஸ்ட் பண்ணி காவல் துறையின் உயரதிகாரி நிறுத்த வேண்டும்.

துடுப்பதி வெங்கண்ணா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வைச் சேர்ந்த ஹீரோ ஜெயித்து ஆட்சியைப் பிடிப்பது போலவும், கோப்பில் முதல் நாள் முதல் கையெழுத்து போடுவது போலவும் காட்டினால் அது யாரும் எதிர்பாராததாக அமையும்.

ஈனோஸ் இப்ராஹீம்.

படத்தின் தயாரிப்பாளர் திரையில் வந்து ‘இத்துடன் எனது படத்தினை முடித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லலாம். (பணம் காலியாகிவிட்டது என்பது அவரோட மைண்ட் வாய்ஸ்)

G.V. செல்வகணேஷ்

க்ளைமாக்ஸில் தயாரிப்பாளருக்குச் செலவு வைத்த அயிட்டங்களைக் காண்பித்து அனுதாபம் தேடலாம்!

Saisudhar1

க்ளைமாக்ஸ் மட்டும் வேறு மொழியில் பேசுற மாதிரி எடுக்கலாம். என்ன நடந்ததுன்னு தெரியாம மக்கள் தலையைப் பிச்சுக்குவாங்க.

balebalu

இந்தப் படம், எந்தப் படத்திலிருந்து காப்பியடிக்கப் பட்டது என்பதைச் சொல்லி, இப்படத்தின் க்ளைமாக்ஸை அந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும் என்று போடலாம்.

amuduarattai

வாசகர் மேடை: கிறுகிறு க்ளைமாக்ஸ்!

இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி என்று சுருங்கிவிட்ட காங்கிரஸ் வளர வேண்டும் என்றால் ராகுல் என்ன செய்ய வேண்டும்?

குழந்தை வளர வழிமுறைகளைக் கூறலாம், கிழவர் வளர யார் என்ன சொல்ல முடியும்?

எஸ்.இராஜேந்திரன்

தலைவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தொண்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

அ.பச்சைப்பெருமாள்

ஆந்திரா இரண்டாகப் பிரிந்த மாதிரி காங்கிரஸ் ஆளும் இரண்டு மாநிலங்களை நான்காகப் பிரித்தால், நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆளுகிறது, கட்சி வளர்ந்தி ருக்கிறது எனப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

எஸ்.வாஜு

காளான் பிரியாணி செய்வதை விட்டுவிட்டு வடை சுட வேண்டும்!

நா.இரவீந்திரன்

எதைச் சொன்னாலும் ‘சாப்பிட்டு சாயந்தரம் தேடலாமா தலைவரே’ மோடுலதான் இருக்கப் போறாங்க... ஏன் எங்க எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?!

saravankavi

வைகோ மாதிரி நடைப்பயணம் போகலாம்... ஆனா, வைகோ கட்சி வளர்ந்துச்சான்னு கேக்கக் கூடாது!

ParveenF7

‘தாமரை மலர்ந்தே தீரும்’ எனத் தமிழக பா.ஜ.க-வினர் ஓயாமல் உச்சரிப்பதுபோல், ‘கை ஒசந்தே தீரும்’ என காங்கிரஸும் முழங்கினால் கட்சி வளர வாய்ப்புண்டு.

maha40176220

வாசகர் மேடை: கிறுகிறு க்ளைமாக்ஸ்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. தோனியை மிஸ் பண்றவங்க அதை ஒரு குட்டிக்கவிதையாச் சொல்லுங்க பார்ப்போம்!

2. யாருமே எடுக்காத அளவு சினிமாவில் பிரமாண்டம் காட்டணும்னா என்ன பண்ணலாம்?

3. நீங்கள் ரசித்த ஒரு ஆட்டோ/பைக் வாசகம்?

4. ம.தி.மு.க வளர்ச்சியடைய வைகோவுக்கு சில ஐடியாக்கள்...

5. RRR போல தமிழில் எந்த இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கலாம்? (இதுவரை இணைந்து நடிக்காத நடிகர்கள் மட்டும்)

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism