Published:Updated:

வாசகர் மேடை: உதயநிதி வழங்கும் ‘கவர்னர் ஃபைல்ஸ்’

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் வசித்தபோது எங்கள் தெருமுனையைத் தாண்ட முடியாமல் தேர் நின்றுவிடும். அதை அங்கிருந்து நகர்த்த அரை நாள் ஆகிவிடும்.

வாசகர் மேடை: உதயநிதி வழங்கும் ‘கவர்னர் ஃபைல்ஸ்’

சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் வசித்தபோது எங்கள் தெருமுனையைத் தாண்ட முடியாமல் தேர் நின்றுவிடும். அதை அங்கிருந்து நகர்த்த அரை நாள் ஆகிவிடும்.

Published:Updated:
சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

செல்போன் இருந்திருந்தால் இந்தப் படமே வந்திருக்காது என்று எந்தப் படத்தைச் சொல்வீர்கள்?

காதல் கோட்டை

ஆர். பிரசன்னா

பாலக்காட்டு மாதவன் வீட்டிலிருந்தே யூடியூப் சேனல் தொடங்கி இசைத் திறமைகளை வெளியிட்டு வல்லிய மியூசிக் டைரக்டர் ஆகியிருப்பார்.் சென்னை வந்திருக்க மாட்டார். ‘அந்த ஏழு நாட்கள்’ படமே வந்திருக்காது.

மஹஜூதா

மூன்றாம் பிறை. ஸ்ரீதேவி கமலின் பராமரிப்பில் இருந்தபோது கமல் செல்போனில் போட்டோ வீடியோ என்று எடுத்து வைத்துக்கொண்டிருந்தால், அவர் குணமடைந்து கிளம்பும்போது அதைப் போட்டுக்காட்டி, தன்னை ஸ்ரீதேவியிடம் சுலபமாக கமல் நினைவுக்குக் கொண்டு வந்து அவரைத் தக்கவைத்திருக்கலாம்.

S.பற்குணன்

அரங்கேற்ற வேளை. ஒரு லேண்ட்லைன் போனால் ஏற்படும் குழப்பம்தானே கதை. செல்போன் இருந்திருந்தால் இந்தப் படமே வந்திருக்காது.

கே.முருகன்

‘துள்ளாத மனமும் துள்ளும்’ குட்டியோட ‘வாட்ஸ் அப் டி.பி’யை ருக்கு பார்த்திருப்பார், படம் ஆரம்பத்திலேயே முடிந்திருக்கும்.

krishna.moorthy.F

‘நாளை நமதே’ படத்தில் ‘நாளை நமதே இந்த நாடும் நமதே' என்ற குடும்பப் பாடலை எல்லா சகோதரர்களும் செல்போனில் பதிந்து வைத்திருப்பார்கள். மறந்திருக்க மாட்டார்கள். அடிக்கடி போட்டுப்பார்த்துக் கேட்டுப் பாடி எப்பவோ இணைந்திருப்பார்கள்.

jerry46327240

திரிசூலம். டிரெயினை விட்ட அப்பா சிவாஜி, கே.ஆர். விஜயாவுக்கு போன் செய்து, ‘ஸ்டேஷன்ல வெய்ட் பண்ணு அடுத்த டிரெயினில் வருகிறேன்’ என்று தகவல் சொல்லியிருக்கலாம். பிரிந்திருக்க மாட்டார்கள். படமும் வந்திருக்காது.

DevAnandR155

விஜய்யின் ‘பீஸ்ட்’ படமே விஜயகாந்த் படம்தான் என்கிறார்கள். அதே விஜயகாந்த் சாந்தமாக நடித்த சின்னக்கவுண்டரை ரீமேக் செய்தால் யாரை நடிக்க வைக்கலாம்?

நடிகர் சசிகுமார்! கிராமத்துக் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர்.

வே.விநாயகமூர்த்தி

மிர்ச்சி சிவா நடித்தால் கலகலப்பான சின்னக்கவுண்டர் கிடைப்பார்.

ராம் ஆதிநாராயணன்

ஆல்ரவுண்டர் விஜய் சேதுபதி.

அ.பச்சைப்பெருமாள்

கார்த்தி பல கிராமியப் படங்களில் கலக்கியதைப் போல சின்னக்கவுண்டராகவும் மிரட்டுவார்.

ந.அய்யப்பசாமி

நடிகர் சீமான். ‘எனக்கு வேற வழி தெரியல ஆத்தா’ன்னு கண்ணீர் விட்டு அழுதாப் போதும், தம்பிங்க ஆர்ப்பரிச்சுக் கொண்டாடுவாங்க.

saravankavi

வாசகர் மேடை: உதயநிதி வழங்கும் ‘கவர்னர் ஃபைல்ஸ்’

உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத திருவிழா சம்பவம் ஒன்றைச் சொல்லுங்கள்.

சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் வசித்தபோது எங்கள் தெருமுனையைத் தாண்ட முடியாமல் தேர் நின்றுவிடும். அதை அங்கிருந்து நகர்த்த அரை நாள் ஆகிவிடும். தேர் நகரும் வரை பானகம், நீர்மோர், பழங்கள் எல்லாம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். சில்லறைகளை வீசுவார்கள். சிறுவர்களான நாங்கள் தேர் அங்கிருந்து நகரவே கூடாதென்று வேண்டிக்கொள்வோம்.

hemalatha.srinivasan.

சிறுவயதில் திருவிழா என்றாலே டைட்டானிக் என்ற பெயர் கொண்ட jolly ride தான் நினைவுக்கு வருகிறது. தினமும் தவறாமல் போவேன். ஆனால் ரோஸ் மட்டும் மிஸ்ஸிங்.

செல்லத்துரை

என் உறவினர்கள் சொல்லிக் கேட்டது. காரணம் அப்போது நான் குழந்தைங்கோ.

எனக்கு மூன்று வயதிருக்கும். பயங்கர விஷமக்காரனாம். திருப்பதி சென்று முடி இறக்கினார்கள். அப்போது பிரம்மோத்சவத் திருவிழா. கூட்டமான கூட்டம். ஒரு நொடியில் அவர்களுக்குக் கடுக்காய் தந்துவிட்டு தடதடவென்று ஓடிவிட்டேன். பின்னால் ஓடி வந்த பெற்றோரும் உறவினர்களும் ‘எங்கே போனேனோ’ என்று பயந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேட, நான் ஒரு போலீஸ் பூத் அருகே தளிர் நடை போட்டபடி சென்றுகொண்டிருந்தேன். ஒரு போலீஸ்காரர் என்னைத் தூக்கி வைத்துக்கொண்டு தன்னிடமிருந்த வாக்கி டாக்கி மூலம் தேவஸ்தான அலுவலகத்துக்குத் தகவல் சொல்லி மைக்கில் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது நான் வாக்கி டாக்கியைப் பிடுங்கி தூர எறிந்து விட்டேன். கடுப்பான அவர் என்னை முறைக்க, நான் பயந்துபோய் ஓவென்று அழுது ஊரைக் கூட்ட, என் அழுகுரலை அடையாளம் கண்ட அம்மா ஓடி வந்துவிட்டார். சுபம்.

ஆர் ரகோத்தமன்

நீண்ட நாள்களுக்குப் பிறகு எங்கள் ஊர் மணப்பாட்டில் திருச்சிலுவைத் திருநாளுக்குச் சென்றபோது, பால் பாண்டி அண்ணாச்சி மிட்டாய்க் கடையில், கொதிக்கக் கொதிக்க தேன் குழல் மிட்டாய் வாங்கி அங்கேயே சாப்பிட்டதும், பல வருடம் கழித்து என்னைச் சந்தித்த கடைக்காரர், ஒரு கிலோ மிட்டாய் பார்சலாகக் கொடுத்தது மட்டுமன்றி, மிகுந்த பாசத்துடன் பணம் வாங்க மறுத்துவிட்டதும் இன்றும் நினைவில் இருக்கிறது.

தார்சி எஸ். பெர்னாண்டோ

திருவிழாவில் கீழே கிடந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து அப்பாவிடம் கொடுத்தேன். ‘இது கடவுளின் பணம். உண்டியலில்தான் போட வேண்டும்’ என்று உண்டியலில் போட்டார் அப்பா. பணத்தைத் தொலைத்த ஆசாமி சற்று நேரத்தில் என்னைக் கண்டுபிடித்து வர, அப்பாவுக்குச் செலவு ₹100.

absivam

என் சிறுவயதில், ஒவ்வொரு திருவிழாவிற்கும் என் அப்பா எனக்கு ஒவ்வொரு எம்.ஜி.ஆர் பட கெட் அப் போட்டு அழைத்துச் செல்வார். அப்படி ஒரு திருவிழாவின் போது ‘ஆயிரத்தில் ஒருவன்' பட கெட் அப் போட்டு அழைத்துச் சென்றதை மறக்கவே முடியாது.

IamJeevagan

மதுரை சித்திரைத் திருவிழாவில் அப்பா அம்மாவை விட்டுக் கூட்டத்தில் வழி தவறிச் சென்றுவிட்டேன். வீட்டுச் சாவி என்னிடம் இருப்பதை மறந்து ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு இரவு வீட்டுக்குப் போனால், வாசலில் காத்திருந்த மொத்தக் குடும்பமும் எனக்குத் திருவிழா கொண்டாடியது.

RavikumarMGR

ராட்டினம் ஏற அடம்பிடித்து, இரண்டே சுற்றில், தலை சுற்றி வயிறு கலக்கி, பின் அடம்பிடித்துப் பாதியிலேயே இறங்க வேண்டியது ஆகி அப்பாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன்!

vrsuba

வாசகர் மேடை: உதயநிதி வழங்கும் ‘கவர்னர் ஃபைல்ஸ்’

கவர்னரின் குடைச்சல்களை எதிர்கொள்ள ஸ்டாலின் என்ன செய்யலாம்?

ஆளுநரால் என்னென்ன பயன்பாடுகள் இருக்குன்னு தொகுத்து ரெட் ஜெயன்ட் மூலம் ‘கவர்னர் ஃபைல்ஸ்’ என்னும் தலைப்பில் படம் எடுக்கலாம்.

பெ.பாலசுப்ரமணி

வழிகாட்டுதல் குழு மாதிரி குடைச்சல் சமாளிப்புக் குழு என ஒன்றை அமைக்கலாம்.

ஈனோஸ் இப்ராஹீம்

‘ஆளுநரின் அநீதி' என்ற பெயரிலான புத்தகத்தை எழுதி, புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்து அவரது கையால் வெளியிடச் செய்யலாம்.

வீ.வைகை சுரேஷ்.

‘முதல்வன்’ படத்தில் வர்ற மாதிரி ஆளுநரும் முதல்வரும் ஒரு நாள் மட்டும் தங்கள் பதவியை மாற்றிக்கொண்டால் இருவருக்கும் உள்ள கஷ்ட நஷ்டங்கள் தெரிந்துவிடும். குடைச்சல் யாருக்குமே இருக்காது!

ப.சோமசுந்தரம்

தமிழகப் பிரச்னைகளைக் கமல் மூலமாக ஆளுநரிடம் பேசினாலே போதும்...

KMuthusaidai

கவர்னர் அடிக்கடி ஆன்மிக டூர் போகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுக்கலாம்.

Saisudhar1

கவர்னர் நியமனத்தை அந்தந்த மாநில அரசுகளே செய்து கொள்ளலாம் எனச் சட்டத் திருத்தம் செய்வதற்குப் போராடலாம்.

/bcGzrIETJx8MnVP

இன்ஸ்டாகிராம் அட்ராசிட்டிகள் பற்றி ரெண்டு வார்த்தைகள்...

‘என்சைக்ளோபீடியா' நெனப்புல எதையெதையோ பினாத்துவது!

மூ. மோகன்

கிராம் கணக்குல இல்லை.அலப்பறைகள் கிலோ, டன் கணக்கில்.

செந்(தில்)வேல்

‘ஜாலியோ ஜிம்கானா’ (இரண்டே வார்த்தைகள்).

எம்.கலையரசி

அதில்தானே கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் - இந்த அழகிய பெருமைமிகு இருவார்த்தைகள் கிடைத்திருக்கு!

கே.கருணாநிதி

சீரியல் நடிகைங்க எல்லாரும் இன்ஸ்டால ரொம்ப பேமஸ், அட இங்க வேணான்னு அங்க போனா...

அ.வேளாங்கண்ணி

சாப்பாடு ரெடி ஆன உடனே, ‘`ஏங்க இங்க வாங்க’’ன்னு மனைவி கூப்பிட்டதும், டேஸ்ட் பார்க்கத்தான் கூப்பிடுறான்னு போனா, ‘‘உங்க போன்ல இதை ரெண்டு போட்டோ எடுத்துக் கொடுங்க’’ன்னு சொல்லுவா பாருங்க...

IamUzhavan

விசிட்டிங் கார்டு கொடுத்து வெறுப்பேத்துவதைப் போல் இன்ஸ்டால பாலோ பண்ணுன்னு தொல்லை தருவாங்க.

urs_venbaa

வாசகர் மேடை: உதயநிதி வழங்கும் ‘கவர்னர் ஃபைல்ஸ்’

1. ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி பற்றி நச்சுனு நாலுவரியில் சொல்லுங்க!

2. ‘சிறுவயதில் காளைகளை அடக்கிய வீரன் நான்’ என்று சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, உதயநிதி போன்றவர்கள் எல்லாம் எந்த விளையாட்டு வீரர்களாக இருந்திருப்பார்கள்?

3. மின்வெட்டு பற்றி ஒரு ஜாலி கவிதை...

4. வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தை ரீமேக் செய்தால் அதில் இப்போது நடிக்கப் பொருத்தமான நடிகை யார்?

5. ‘புகைபிடித்தல் உடல்நலத்துக்குத் தீங்கானது’ என்று சினிமாவில் எச்சரிக்கை வாசகங்கள் போடுவதைப்போல் அரசியல்வாதிகள் பேட்டியை ஒளிபரப்பும்போது என்ன எச்சரிக்கை வாசகம் போடலாம்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism