Published:Updated:

வாசகர் மேடை: நல்லாச் சொல்றீங்கய்யா மருத்துவக்குறிப்பு!

பாசமலர்
பிரீமியம் ஸ்டோரி
பாசமலர்

ஸ்டைல் பாண்டியாக வடிவேலு நடித்த ‘நகரம் மறுபக்கம்' ரீமேக்கில் வடிவேலுவாக நடிக்கலாம்.

வாசகர் மேடை: நல்லாச் சொல்றீங்கய்யா மருத்துவக்குறிப்பு!

ஸ்டைல் பாண்டியாக வடிவேலு நடித்த ‘நகரம் மறுபக்கம்' ரீமேக்கில் வடிவேலுவாக நடிக்கலாம்.

Published:Updated:
பாசமலர்
பிரீமியம் ஸ்டோரி
பாசமலர்

? ‘குக்கு வித் கோமாளி’ புகழ் - புகழ் எந்தப் படத்தை ரீமேக் செய்து நடித்தால் பொருத்தமாக இருக்கும்?

‘அறிவாளி’ படத்தில் தங்கவேலு ரோல் புகழுக்கு. முத்துலட்சுமி அம்மா ரோலில் ஷிவாங்கி. அந்த பூரி காமெடியில் அசத்திடுவார். முத்துலட்சுமி அம்மா குரல் கண்ணை மூடிட்டு கேட்டா ஷிவாங்கி குரல்போலவே இருக்கு. படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட். - ரம்யா, பெங்களூரு

‘நள தமயந்தி’ படத்தில் நடிக்கலாம். - மீனலோசனி பட்டாபிராமன், சென்னை

ஸ்டைல் பாண்டியாக வடிவேலு நடித்த ‘நகரம் மறுபக்கம்' ரீமேக்கில் வடிவேலுவாக நடிக்கலாம். ‘வாடா... வாடா... எங்க ஏரியாவுக்கு வாடா' க்ளாப்ஸ் அள்ளும். - RamAathiNarayen

‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்து லொள்ளு சபா எடுத்தால், அந்நியன் வேடத்துக்குப் புகழ் செட்டாவார். IamUzhavan

நாகேஷின் ‘சர்வர் சுந்தரம்.’ ARiyasahmed

‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகிபாபு வேடம் பொருத்தமாய் இருக்கும். NatarajanAS2

‘வின்னர்' படத்தின் ரீமேக்கில்... வித்தியாசமான கைப்புள்ளயைப் பார்க்கலாம்..! - LAKSHMANAN_KL

தர்ஷா, பவித்ரா இருவரையும் ஹீரோயின்களாக வைத்து, புகழை நடிக்கச் சொல்லி ‘வீரா' படத்தை ரீமேக் செய்யலாம்! - நா.இரவீந்திரன், வாவிபாளையம்

நாசர் நடித்த ‘அவதாரம்.' - ஜெ. மாணிக்கவாசகம் இடைப்பாடி

ஷிவாங்கியும் புகழும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால் ‘பாசமலர்’ படத்தை ரீமேக் செய்யலாம்! ‘கை வீசம்மா கை வீசு. குக் வித் கோமாளி போகலாம் கை வீசு'ன்னு க்ளைமாக்ஸ்ல அடிச்சு நொறுக்கிடலாம்! - absivam

? வாட்ஸ்அப் ஃபார்வர்ட்களில் உங்களை அதிரவைத்த அழகுக்குறிப்பு/மருத்துவக்குறிப்பு?

‘சிகரெட்டின் மீது தைலத்தைத் தடவிப் புகைக்கும் பட்சத்தில் நெஞ்சுச்சளி அறவே நீங்கும்’ என்று நண்பர் கூறிய மருத்துவக் குறிப்பு. PG911_twitz

வஞ்சிரம் மீன் கருவாட்டு ரத்தத்தை, வழுக்கைத் தலையில் தடவி வர, கொத்துக் கொத்தாக கருகருன்னு முடி வளரும்..! LAKSHMANAN_KL

காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவை பருகுவதால் பற்கள் சேதமாகும். அதனால் அவற்றைப் பற்களில் படாதவாறு ஸ்ட்ரா போட்டுப் பருகலாம். IamUzhavan5

‘புங்க மரங்கள் அதிகமாக வைக்காததே ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்குக் காரணம்’ என வந்த மெசேஜைப் பார்த்ததும் எனக்கு மூச்சே நின்றதுபோல இருந்தது. IamUzhavan

‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பசுஞ்சாணியைக் கிருமிநாசினியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பசுஞ்சாணியுடன் ஒரு கப் தயிர் கலந்து முகத்தில் தடவி 10 நாள்கள் அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவிவந்தால் முகப்பருக்கள் முழுவதுமாக நீங்கும்’னு போட்டிருந்தான் பாருங்க! - NedumaranJ1

எறும்பு சாப்பிட்டால் கண்பார்வை நன்றாகத் தெரியும். - chennappan

O+ ரத்தம் இருப்பவருக்கும், கொரோனா வைரஸுக்கும் அதிக தொடர்பு இருப்பதால்.உடும்புக்கறி சாப்பிட வேண்டும். - Vasanth920

தலையில் சூடிய பின் மல்லிகைப் பூவை வெயிலில் காய வைத்துப் பொடி ஆக்கி 30 நாள் பல்துலக்க துர்நாற்றம் நீங்கி வாய் மணக்கும். pbukrish5

எந்த மருத்துவக் குறிப்பு போட்டாலும் ‘மானே தேனே’ங்கிற மாதிரி... எலுமிச்சம் பழச் சாற்றையும் தேனையும் சேர்த்துக்கணும். urs_venbaa2

வெறும் புரோட்டாவை வாயில் போட்டு மென்றால் ‘விக்கல்’ நின்றுவிடும்! krishmaggi

‘கொரோனா என்று ஒன்று இல்லையாமே, அரசாங்கமும் டாக்டர்களும்தான் மக்களைப் பாடாய்ப் படுத்துறாங்க’ என்று ஊர்க்காரத் தோழி சொல்ல, ரொம்பவே அதிர்ந்துபோனேன். மன்சூரலிகான் பேச்சைக் கேட்டிருப்பாங்க போல. Tamizhse_twits

வாசகர் மேடை: நல்லாச் சொல்றீங்கய்யா மருத்துவக்குறிப்பு!

? நிஜமாகவே காக்காவுக்கு ஏன் காக்கான்னு பேர் வந்தது?

நிஜமாகவோ, பொய்யாகவோ காக்காவைக் காக்கான்னுதான் கூப்பிட முடியும். குருவின்னா கூப்பிட முடியும்? என்ன விகடனாரே!  V மீனா, கிருஷ்ணகிரி

கா`கம்' என்பது தங்கிலீஷ் வார்த்தையாக இருப்பதால், காக்கா என்று வைத்திருக்கக்கூடும். PG911_twitz

நாம அதுக்குக் காக்கான்னு பெயர் வச்சதெல்லாம் இருக்கட்டும். அது நமக்குக் காக்கான்னு பெயர் வச்சுருக்கு தெரியுமா? - Vasanth920

பின்னாளில் ‘காக்கா முட்டை’ன்னு பேமஸான படம் வரும் என்று எண்ணித்தான் காக்கான்னு பேரு வந்திருக்குமோ! chennappan10

மார்ட்டின் ‘குரோ', ரஸ்ஸல் ‘குரோ'கிட்ட கேட்டுட்டு வர்றேன்... ஒருவேளை அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். LAKSHMANAN_KL

மொதல்ல ‘கா’ன்னுதான் பேர் இருந்ததாம். அதுக்கப்புறம் நியூமராலஜி பார்த்து ‘இரண்டு பெயர் இருந்தால்தான் சாப்பாட்டுக்கு அழைப்பாங்க’ன்னு காக்கா ஆகிடுச்சாம்! SowThanishka

வாசகர் மேடை: நல்லாச் சொல்றீங்கய்யா மருத்துவக்குறிப்பு!

? நாளிதழ்கள், பத்திரிகைகளில் எந்த விஷயம் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா சம்பந்தமான துணுக்குகளில் மூன்றெழுத்து வெற்றி நடிகர், நான்கு எழுத்து பப்ளி நடிகைன்னு போடறாங்க... கடைசி வரைக்கும் யார்னே கண்டுபிடிக்க முடியல. ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி போட்டோ, பேரோட போடணும். saravankavi0

ஓம் பூரிக்கும் மசாலா பூரிக்கும் உள்ள சம்பந்தம் போல நடிகைகள் தொப்புள் படத்தை வைத்துச் செய்திகளை அலங்கரிப்பது. BlitzkriegKK

எந்தெந்த நியூஸுக்குன்னு இல்லாம, சோகமான நியூஸுக்குக்கூட ரைமிங்கா தலைப்பு போடுவாங்க பாருங்க... அத மாத்தணும். nanbanvela8

மொக்கையான செய்திகளைப் படிக்க வைக்க செய்திக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு கொடுப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். sudarvizhie

இது அவசர யுகம். எதை எழுதுவதானாலும் வள வள என எழுதாமல் சுருக்கமாக சுவையாக எழுத வேண்டும், தலையங்கம் உட்பட! AmbaiDeva18

எளிய மனிதர்களின் சாதனைச் செய்திகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கலாம். maha0

? கொரோனா முதல் அலையில் கைதட்டுவது, விளக்கு ஏற்றுவது என்று பல டாஸ்க்குகள் கொடுத்த மோடிக்கு நீங்கள் ஒரு டாஸ்க் கொடுப்பது என்றால் என்ன டாஸ்க் கொடுப்பீர்கள்?

திருப்பதி போய் மொட்டை போட்டு பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்! சாமா ஸ்ரீரங்கம்

மயிலுக்கு உணவளித்து போட்டோ எடுத்தது போல புலிக்கு உணவளித்து போட்டோ எடுத்துக்கணும். sudarvizhie

ஒரு வருஷம் அமெரிக்காவுக்கும், ஒரு வருஷம் சீனாவுக்கும் பிரதமரா இருந்தா போதும், இந்தியா முன்னேறிவிடும்!
San8416


இனி விமானப் படிக்கட்டில் கால் பதிப்பதில்லை என்ற உறுதிமொழி எடுக்க சொல்லலாம்.bpthilakavathi

மன் கீ பாத் நிகழ்ச்சியில் go corona பாடலை பாடச்சொல்லி மோடிக்கு டாஸ்க் கொடுக்கலாம்.மோடியின் உருக்கமான குரலைக் கேட்டு கொரோனா போகவும் வாய்ப்பிருக்கு.  R.அருண்குமார், கும்பகோணம்

ஒரு நாட்டின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என நியூசிலாந்து மற்றும் கனடா சென்று கற்று வரச் சொல்வேன்.  ஆ. ஆனந்தகுமார், திண்டுக்கல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: நல்லாச் சொல்றீங்கய்யா மருத்துவக்குறிப்பு!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ரஜினியும் எஸ்கேப். அழகிரியும் தம்பிக்கு வாழ்த்து சொல்லியாச்சு. அடுத்து தமிழகத்தில் தாமரையை மலர வைக்க யாரைப் பிடிக்கலாம், ஏன்?

? மன்சூர் அலிகான் ஹீரோவாகவும் கமல் வில்லனாகவும் நடித்தால் இருவரும் எந்த கெட்டப்பில் நடிக்கலாம்?

? நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதியைப்போல் ஆண்களுக்கு என்ன இலவசம் தரலாம்? (நோ டாஸ்மாக் கோரிக்கை!)

? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! - உங்கள் வாழ்க்கையில் நடந்த ஜாலியான சம்பவத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்!

? தந்திரிக்கும் ராஜ தந்திரிக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com