‘புகைபிடித்தல் உடல்நலத்துக்குத் தீங்கானது’ என்று சினிமாவில் எச்சரிக்கை வாசகங்கள் போடுவதைப்போல் அரசியல்வாதிகள் பேட்டியை ஒளிபரப்பும்போது என்ன எச்சரிக்கை வாசகம் போடலாம்?
டங் ஸ்லிப்பிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
வெ.சென்னப்பன்
தொடர்ந்து பார்ப்பதும் கேட்பதும் மனநலத்திற்குத் தீங்கானது.
எம்.கலையரசி
இந்தப் பேட்டி எதிரிக்கட்சிக்கான போட்டி மட்டுமே.
வன்னி தங்கம் ராதா
அட்மின்கள் ஜாக்கிரதை!
நா.இரவீந்திரன்
`இந்தப் பேட்டியின் போது சேனல் மாத்தறவன் ரத்தம் கக்கிச் சாவான்’னு போடலாம்.
manipmp
வாக்குறுதிகள் கொடுப்பதற்கு மட்டும்தான்... நிறைவேற்றுவதற்கல்ல..!
Rajasekar4795
அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்பனவற்றின் அர்த்தம் தெரியாதவர்கள் இந்தப் பேட்டியை முழுமையாகப் பார்த்துப் பயன்பெறவும்.
maha40176220

ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி பற்றி நச்சுனு நாலுவரியில் சொல்லுங்க!
சமூக நீநி ஆட்சிக்கு
கைதட்டு
தவிர்க்க வேண்டும்
மின்வெட்டு
பா .ஜெயக்குமார்
மகளிர்க்கு இலவச பஸ் வருது. ஆனா மணிபர்ஸ்க்கு வர வேண்டிய ஆயிரம் ரூபாய் இன்னும் வரலை. நிறைகளும் குறைகளும் சமமாய் இருந்தாலும் முந்தைய இ.பி.எஸ் ஆட்சியைவிட நன்றாகத்தான் உள்ளது.
த.சிவாஜி மூக்கையா, சென்னை
ஓராண்டில் ஐந்து, ஏன் பத்து ஆண்டுகள் சாதனைகளைச் செய்திருக்கிறோம்னு ஸ்டாலின் சொன்னதால, பதவிக் காலம் முடிஞ்சு போச்சுன்னு திருப்பி தேர்தல் வச்சிராம!
ப.சோமசுந்தரம்
தனி வேளாண் பட்ஜெட் - நச்..!
மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்- டச்..!
சொத்து வரி உயர்வு - டிச்..!
சட்டம் ஒழுங்கு - ப்ச்..!
LAKSHMANAN_KL
அடிமையா வாழாம கொஞ்சம் சுயமரியாதையோடு வாழ்கிற ஒரு ஃபீல் இருக்கு.
I amUzhavan
‘சிறுவயதில் காளைகளை அடக்கிய வீரன் நான்’ என்று சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, உதயநிதி போன்றவர்கள் எல்லாம் எந்த விளையாட்டு வீரர்களாக இருந்திருப்பார்கள்?
எடப்பாடி - தரை நீச்சல்
அண்ணாமலை - கணுக்கால் நீரிலும் ஓடம் ஓட்டும் விளையாட்டு.
உதயநிதி - பளு தூக்குதல்.
சுஸ். துருவ்
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, உதயநிதி இவங்க எந்த விளையாட்டில் வேண்டுமானாலும் வீரர்களாக இருக்கட்டும். ஆனா அவங்களுக்கு எல்லாம் ஒரே ஒருத்தர் மட்டும்தான் கோச்சாக இருந்திருக்க முடியும்...தட் நேம் இஸ் சீமான்...!
saravankavi
எடப்பாடி பழனிசாமி - கண்ணாமூச்சி ( யார் எங்கே எந்தப் பக்கத்தில் என்று கண்டறிய முடியாது)
அண்ணாமலை - கபடி (காலைப் பிடிக்கலாம், வாரியும் விடலாம்)
உதயநிதி - ஓட்டப்பந்தயம் (தாய் தந்தையைச் சுற்றி வந்தே வெற்றியை(கனியை) பறித்து விடலாம்).
SowThanishka
சீமான்: நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி வீசக் கற்றுக்கொடுத்த என் பேரை இதி்ல் சேர்க்கணும் என்று உங்களுக்குத் தோணலையா?!
pbukrish
எடப்பாடி - நீச்சல் போட்டி; கூவத்தூர் தரையிலே அடித்து முதல்வர் ஆனவர். அண்ணாமலை - கண்ணாமூச்சி போட்டி. கண்(ணை) மூடித்தனமாய் புத்தகங்களைப் படிப்பவர். உதயநிதி - ரிலே ஓட்டப்பந்தயம். அப்பாவின் பின்னால் ஓடுபவர்.
skkaran_68

வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தை ரீமேக் செய்தால் அதில் இப்போது நடிக்கப் பொருத்தமான நடிகை யார்?
சண்டைக் காட்சிகளில் நடித்து கலக்கியவர் என்ற வகையில் தன்ஷிகா பொருத்தமாக இருப்பார்.
துடுப்பதி வெங்கண்ணா
மஞ்சு வாரியர்
கா.மு.ஃபாரூக், விருகம்பாக்கம்
பிரியங்கா மோகனுக்கு அதிரடி காட்ட ஒரு சான்ஸ் தரலாம்.
S.கருணாகரன், சென்னை
ப்ரியா பவானி சங்கர். உயரம் பொருத்தமாக இருக்கும்.
மலர்சூர்யா
வைஜெயந்தி ஐ.பி.எஸ் வேடத்திற்கேற்ற கம்பீரமும் பொருத்தமும் கொண்டவர் - ஹுமா குரேஷிதான்.
JaNeHANUSHKA
ரௌடிகளையும் ஊழல் அரசியல்வாதிகளையும் கங்கணம் கட்டிக்கொண்டு களையெடுக்கும் வைஜெயந்தி ஐ. பி.எஸ் கேரக்டரில் நடிக்க கங்கனா ரணாவத் பொருத்தம்.
NedumaranJ
மின்வெட்டு பற்றி ஒரு ஜாலி கவிதை...
நீ எப்போது வருவாய்
எப்போது போவாய்
உனக்கில்லை கட்டுப்பாடு...
உன்னைப் பகைத்துக்கொள்ள முடியாது
அதனால் வாழப் பழகிவிட்டோம்
உனக்குக் கட்டுப்பட்டு..!
வி. கார்த்திகை குமார்
அனல் உண்டு
புனல் உண்டு
காற்றாலை உண்டு
என்ன செய்ய...
அணிலும் உண்டே..!
கோ.காளீஸ்வரன்
காதல்
கடவுள்
வரிசையில் - இனி
மின்சாரமும்
கண்டவர்கள் யாரோ?!
absivam
கேண்டில் லைட் டின்னர்
சாப்பிட ஆசை எனச் சொன்னேன்,
தினசரி சாப்பிடு என வரமளித்தான்
ஆண்டவன் என் கண்ணே!
DevAnandR155
பகலில் வந்து பாடாய்ப் படுத்துகிறாய்
இரவில் வந்து தூக்கத்தைக் கெடுக்கிறாய்
மொத்தத்தில் மனித இனத்தைக் கொல்கிறாய்
உன் பெயர் மின்வெட்டு அல்ல
மின்வேட்டு..!
வி. கார்த்திகை குமார்
1. உங்கள் பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் நடந்த ஜாலியான சம்பவம்..?
2. ‘தல’ தோனி சினிமாவில் நடிக்க வந்தால் எந்த அஜித் பட கெட்டப்பில் நடிக்கலாம்?
3. நிலாவுக்குப் போகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் நிலாவில் இறங்கியவுடன் என்ன செய்வீர்கள்?
4. ‘பத்தல பத்தல’ கமலின் எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டை அண்ணாமலை எழுதினால் என்ன வரிகள் இடம்பெற்றிருக்கும்?
5. திராவிட மாடலுக்கும் மோடி மாடலுக்கும் நச்சுனு ஒரு வித்தியாசம் சொல்லுங்க!
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com