Published:Updated:

வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

ஓவியங்கள்: நெடுமாறன்

வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...

ஓவியங்கள்: நெடுமாறன்

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை
வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...

இப்போது மோடிக்கு ஒரு திருக்குறளோ, பாரதியார், ஔவையார் பாடலோ சொல்லுங்களேன்! -

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

(‘தீதி ஓ தீதி’ பேச்சு) - அன்னா மேரி இவான், சென்னை.

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். - இந்திராணி தங்கவேல் சென்னை

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. - ARiyasahmed

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. (குடிமக்களை அணைத்து நல்லாட்சி புரியும் அரசனின் கட்டளையைப் பின்பற்றி மக்களும் நடப்பார்கள்.) - KmFarook6

காஷ்மீர் ஊரடங்கிற்குப் பின் மொத்த இந்தியாவுக்கும் ஊரடங்கு, குடியுரிமைச் சட்ட மசோதாவுக்குப் பின் விசா, பாஸ்போர்ட் எதுவுமின்றி நாடு முழுக்க குடியேறிவிட்ட கொரோனா, விவசாயிகளை பாதிக்கும் மசோதாக்களுக்குப் பின் 2ம் அலை தாக்குதல் இதையெல்லாம் நிவர்த்திக்க ‘மோடி’ படிக்க வேண்டிய திருக்குறள் ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்.’ - எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சாத்தான்குளம்.

`நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடி.’ - தெ.அ.அசோகன், சென்னை.

வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...

ஒரு ஹீரோவின் படத்தை ரீமேக் செய்து ஹீரோயின் நடிக்கலாம் என்றால் எந்த ஹீரோவின் படத்தை ரீமேக் செய்து எந்த ஹீரோயின் நடிக்கலாம்?

‘பஞ்ச தந்திரம்’ படத்தை ரீமேக் செய்யலாம்.
கமலாக - குஷ்பு; ஜெயராமாக - ரோஜா;யூகிசேதுவாக - நதியா; ரமேஷ் அரவிந்தாக - தேவயானி; ஸ்ரீமனாக - ஊர்வசி! - பாலு இளங்கோ, வேலூர்.

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை ரீமேக் செய்து நடிகை நயன்தாரா நடிக்கலாம்! - கருணா, சென்னை.

நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்த `இறுதிச்சுற்று’ படத்தை ரீமேக் செய்து நடிகை ஜோதிகா நடிக்கலாம். - ஆர். பத்மநாபன்

`நேர் கொண்ட பார்வை’ படத்தை ரீமேக் செய்து ‘தல’ கேரக்டரில் தலைவி நயன்தாரா வக்கீலாக. - எம்.கலையரசி, சேலம்.

`விக்ரம் - வேதா’ படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் அனுஷ்கா, மாதவன் வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க வைக்கலாம். -
saravankavi

வடிவேலுவின் `இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தை அவரைப் பல படங்களில் `இம்சை' செய்து நடித்த `கோவை சரளா' ரீமேக் செய்து நடிக்கலாம். - Kirachand42

வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...

அட, கமலும் சீமானும் ஒரு படம் சேர்ந்து நடிக்கலாமே. நாலுவரியில் கதையும் நச்சென்ற டைட்டிலும் சொல்லுங்கள்.

`இணைந்த கைகள் -2.’ பாழடைந்த பங்களாவை சுத்தப்படுத்த உதவியாக நண்பரை அழைத்து, களத்தில் இறங்குவதே கதை. - பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

காமராசர் காலத்து ‘முதல்வர் நாற்காலி’ காணாமல் போகுது. அதைக்கண்டுபிடிக்க களமிறங்குகிறார்கள் நம்ம கமலும் சீமானும். அது அமெரிக்காவில் இருப்பதாக கமலுக்கும், இலங்கையில் இருப்பதாக சீமானுக்கும் தெரியவருகிறது. ‘வேட்டையாடு விளையாடு - 2’ - க.விஜயபாஸ்கர், திருச்சி.

`கதை கதையாய்...’ கதைகளைச் சொல்லிப் பிழைப்பு நடத்துகிறார் சீமான். அந்தக் கதைகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அவை பொய்யான கதைகள் என்று நிரூபிக்கிறார் கமல்.- வெ.சென்னப்பன், தருமபுரி.

கமலும் சீமானும் சேர்ந்து `ஆண்டவர் தம்பி’ என்று டைட்டில் வைக்கலாம். தேவர்மகனுக்கு டப் கொடுக்கும். - M.கணேஷ். கிருஷ்ணகிரி.

‘விஸ்வரூபம் பார்ட் 3’ எடுக்கலாம். சர்வதேசத் தீவிரவாதியாக சீமான். க்ளைமாக்ஸில் கண்ணிவெடியை இட்லிக்குள் வைத்துத் தருவதாக முடித்தால் அப்ளாஸ் அள்ளும்! - absivam

‘இப்படியெல்லாமா ஊர்ப்பெருமை பேசுவாங்க’ என்று உங்களை வியக்கவைத்த சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்களேன்...

எங்க ஊர் தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் இருக்கும் ரதி-மன்மதன் கடவுளைக் கும்பிட்டால் விரைவில் திருமணம் நடக்கும்னு பெருமையாகச் சொல்லுவாங்க. உள்ளூர்க்காரன் நானும் பல தடவை ரதி-மன்மதனைக் கும்பிட்டேன். இன்னும் கல்யாணம் நஹிஹே! - balasubramni1

`ஸ்ரீரங்கம் கோபுரம் மேல ஏறிப் பார்த்தா இலங்கையே தெரியும்'னு சொன்னானுங்க! ஆனால் இனாம்குளத்தூர்கூடத் தெரியாதுங்கறதுதான் நிஜம்! - absivam

ஊட்டிக்காரங்களோட உக்காந்து நிம்மதியா படம் பார்க்க முடியாது. இந்த சீன் இங்க எடுத்தது, இது அங்க எடுத்ததுன்னு சொல்லிக் கடுப்பேத்துவாங்க. - ARiyasahmed6

``ஞங்களைக் கண்டோ, பிஜேபி-யினை தோல் பிச்சு, நிங்கள் நாணங்கெடுத்திச்சல் லோடா’’ன்னு கேரள நண்பர் கிண்டலடிக்கும்போது. - RamuvelK

`எம்.ஜி.ஆர் இருந்திருந்தா தமிழ்நாட்டோட தலைநகரமே திருச்சிதான் தெரிஞ்சிக்க’ன்னு இன்னும் சொல்லிக் கொண்டிருப்பது. - urs_venbaa3

`தஞ்சாவூர் நெற்களஞ்சியம்' என்று ஊர்ப் பெருமை பேசிவிட்டு எங்க ஊர்க்காரர்கள் வாங்குவதென்னவோ `மைசூர்ப் பொன்னி!' -RamAathiNarayen

சென்னிமலை பெட்ஷீட்டில் படுத்துத் தூங்கினால் கலர் கலராய் கனவுகள் வரும்! - mahesh.panankottanvilai

வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...
வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எல்.முருகன், குஷ்பு, ஹெச்.ராஜா ஆகியோரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

குஷ்பூ: உடனே கட்சி மாறலாமா, நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் காத்திருக்கலாமா? - ரிஃபாத்துன்னிஷா, திருமங்கலக்குடி

ஹெச்.ராஜா - தேர்தல்ல நின்னது நானே இல்ல, என்னோட அட்மின்னு சொல்லிடலாமா? - ச.பிரபு, குற்றாலம்

முருகன்: முருகனுக்கே வேல் யாத்திரை கை கொடுக்கலையேன்னு உலகம் பேசாதா முருகா..? - அவ்வை. கே. சஞ்சீவிபாரதி, கோபி

முருகன் : தொகுதியை மாத்திக்கணும். குஷ்பூ : கட்சியை மாத்திக்கணும். ஹெச்.ராஜா: தொழிலை மாத்திக்கணும். - மீனலோசனி பட்டாபிராமன், சென்னை

ஹெச்.ராஜா : ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் இருக்கான்னு ஜாதகம் பார்த்தோமே தவிர, நமக்கு எம்.எல்.ஏ ஆகும் யோகம் இருக்கான்னு ஜாதகம் பார்க்காம விட்டுட்டோமே. - PG911_twitz

குஷ்பு: அடுத்து... `மய்யம்' பக்கம் ஒதுங்கலாம்னு நெனச்சேன்... நாம போறதுக்குள்ள மய்யம் `மாயம்' ஆயிடும் போலிருக்கே..?! - LAKSHMANAN_KL0

குஷ்பு : நான்கூட படத்துல நடிக்கப் போயிருவேன். இந்த அண்ணாமலையை நினைச்சா தான்... - RamuvelK

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: கமல் சீமான் இணைந்து மிரட்டும்...

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? முதல்வர் பதவியும் கிடைக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காமல் வெறுத்துப்போயிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கினால் என்ன பெயர் வைக்கலாம்?

? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து எஸ்கேப் ஆனவர்களை வைத்து கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் அது எப்படி இருக்கும்?

? சொர்க்கலோகத்தில் லாக்டௌன் வந்தால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?

? ஐ.பி.எல்லும் பாதியில் நின்னாச்சு. இந்த ஓய்வு நேரத்தில் எந்தெந்த ஐ.பி.எல் வீரர்கள் என்னென்ன டைம்பாஸ் செய்யலாம்?

? தமிழ் சினிமாவைப் பார்க்கும்போது, ‘அட, இந்த கேரக்டரில் அவர் நடித்திருக்கலாமே?’ என்று நீங்கள் நினைக்கும் பிறமொழி நடிகர் யார்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com