Published:Updated:

வாசகர் மேடை: அசுரன் VS ஈஸ்வரன்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

தனுஷ், காக்க வந்த ‘ஈஸ்வரன்’ படத்தையும், சிம்பு அழிக்க வந்த ‘அசுரன்’ படத்தையும் ரீமேக் செய்து நடிக்கலாம்.

வாசகர் மேடை: அசுரன் VS ஈஸ்வரன்!

தனுஷ், காக்க வந்த ‘ஈஸ்வரன்’ படத்தையும், சிம்பு அழிக்க வந்த ‘அசுரன்’ படத்தையும் ரீமேக் செய்து நடிக்கலாம்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? சிம்பு படத்தை தனுஷும் தனுஷ் படத்தை சிம்புவும் ரீமேக் செய்து நடிப்பதாக இருந்தால் எந்தப் படங்களை யார் ரீமேக் செய்யலாம்?

தனுஷ் ‘கோவில்’.

சிம்பு ‘ஆடுகளம்’.

 சி.கார்த்திகேயன், சாத்தூர்

சிம்பு - 3

தனுஷ் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

 venkat

‘மாரி’ படத்தை சிம்புவும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தனுஷும் ரீமேக் செய்து மாறி மாறி நடிப்பை வெளிப்படுத்தலாம்..

 ஜெ.ஜான்சி சுப்புராஜ் கடலூர்

தனுஷ், காக்க வந்த ‘ஈஸ்வரன்’ படத்தையும், சிம்பு அழிக்க வந்த ‘அசுரன்’ படத்தையும் ரீமேக் செய்து நடிக்கலாம்.

sudarvizhie

'வட சென்னை' படத்தில் இருவரும் இணைந்து நடிக்கலாம்...! 'அமீர் கேரக்டரில்' சிம்பு நடித்தால் 'செம'யா இருக்கும்...!

BaaluElango

'திருடா திருடி'யாக சிம்பு, 'போடா போடி'யாக தனுஷ்.

akas.ayyan1

‘வானம்’ - தனுஷ், ‘புதுப்பேட்டை’ - சிம்பு

vaira.bala.12

வாசகர் மேடை:  அசுரன் VS ஈஸ்வரன்!

? அஜித் மாஸ்க், விஜய் சைக்கிள் வரை அரசியல் குறியீடு கண்டுபிடித்துவிட்டார்கள். நடிகர்களின் சினிமாக் காட்சிகளை வைத்து ஜாலியான குறியீடுகள் சொல்லுங்கள்...

‘இது நம்ம ஆளு’ படத்தில் ‘நான் ஆளான தாமரை, ரொம்ப நாளாகத் தூங்கலை’ எனும் பாடல் வரி மூலம், ‘தாமரை சின்ன கட்சிக்காரர்களுக்கு டெபாசிட் கிடைக்குமா? கிடைக்காதா?’ என்ற கவலையில் தூக்கமே வராது என்ற குறியீடு.

 சி.பி. செந்தில்குமார், சென்னிமலை

ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்யப் போவதை, ‘பறந்தாலும் விடமாட்டேன்' என்று 'குரு' படத்திலேயே கணித்தவர் கமல்..!

LAKSHMANAN_KL

‘புவனா ஒரு கேள்விக்குறி’ - ரஜினி ஒரு கேள்விக்குறி.

pachaiperumal23

“வீரம்னா என்ன தெரியுமா..? பயப்படாத மாதிரி நடிக்கிறது...” என்று தன் இன்றைய அரசியல் நிலைப்பாட்டை அன்றே ‘குருதிபுனல்’ படத்தில் குறியீடாகக் கூறிவிட்டார் கமல்.

krishmaggi

‘நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா...

எனை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா... ஜெ ஜெ உனக்கு ஜெ ஜெ’ என ‘ஜெ ஜெ’ படத்தில் பாட்டெழுதி இருப்பார் வைரமுத்து. அப்பவே பாஜக அதிமுக கூட்டணி வரும்னு சிம்பாலிக்கா சொல்லிட்டார்!

h_umarfarook2

‘பேங்க் ஒன்னு கட்டி விடுங்க, நடத்துறோம்’னு கைப்புள்ள வடிவேல் சொன்னது, பேங்க்கெல்லாம் தனியார்மயம் ஆகப்போகுதுங்குறதுக்கான குறியீடு

RamuvelK5

வடிவேலு குக்கரு என்று திட்டுவதைப் பார்த்தால், அவர் டி.டி.வி எதிர்ப்பாளர் என்பது தெளிவாகிறது.

pesumpadam

‘திருடா திருடா’ படத்தில் வரும் ‘வீரபாண்டிக் கோட்டையிலே’ பாடலில் ‘ரெட்டைச் சூரியன் வருகு தம்மா ( ஸ்டாலின்- உதயநிதி ஸ்டாலின்) ஒற்றைத் தாமரை கருகுதம்மா’னு திமுகவுக்கு ஆதரவா கவிப்பேரரசு அப்பவே எழுதியிருப்பார்.

balasubramni1

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படிவருவேன்னு யாருக்கும் தெரியாது.

கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியப் போறதில்லைன்னு தலைவர் அப்பவே குறியீடா சொல்லியிருக்காரே..!

 எம்.கலையரசி, சேலம்.

ஹெச்.ராஜா தேற மாட்டார் என்பதன் குறியீடாக ‘ஒரு தலை ராகம்’ படத்தில் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்ற பாடல் எழுதி தொடக்கத்திலேயே நிரூபித்தவர் டி.ராஜேந்தர்.

senthilkuF

? முகக்கவசங்களில் எழுதுவதற்கு சுவாரஸ்யமான வாக்கியங்கள் சொல்லுங்கள்...

வாய்மூடி பேசவும்

 பா து பிரகாஷ்,

\பை! பை! கொரோனா!

 ப.த.தங்கவேலு,

பண்ருட்டி

If you have sense, keep

Distance...!

 வி. கீர்த்தனா, சென்னை

கவசம் அணிவோம் கட்டணத்தைத் தவிர்ப்போம்!

 இந்திராணி தங்கவேல், சென்னை.

தடுப்பூசி போட்டாச்சு

 தே.மாதவராஜ் கோவை

எட்டி நில்லு கிட்ட வராதே!

udayakumar.kr

ஆக்சிஜனுக்கு மட்டுமே அனுமதி!

AmbaiDeva1

ஆதார் பான் இணைக்க கடைசி நாள் 30-6-2021

ARiyasahmed

பயமில்லையா குமாரு...

saravankavi

? அரசியல்வாதிகள் அரசியலைத் தவிர இன்னொரு வேலை பார்க்கலாம் என்றால் யார் யாருக்கு என்ன வேலை தரலாம், ஏன்?

அரசியல் என்கிற வேலையை(சேவையை) ஒழுங்கா பார்க்கத் தெரியாத அரசியல்வாதிகளை நம்பி வேறு வேலைகளைக் கொடுக்க முடியுமா விகடனாரே

 R.அருண்குமார் ,கும்பகோணம்.

செல்லூர் ராஜூவிற்கு நீர்நிலைகளில் நீர் ஆவியாதலை தடுக்க தெர்மகோலைத் தவிர மற்ற எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பதவி

 வைரபாலா மன்னார்குடி

திண்டுக்கல் சீனிவாசன் ‘உண்மையை உரக்க சொல்வோம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணியை சிறப்பாகச் செய்வார்.

 பாலசுப்பிரமணியன், மன்னார்குடி

கமல்ஹாசன்- அரசியல்வாதின்னு படம் எடுக்கச் சொல்லலாம்

 கருணா, சென்னை

விஜயபாஸ்கர்: மெடிக்கல் ரெப்பாக வேலை செய்யலாம், தன் உடல்நிலையைக் காரணம் காட்டியே எந்த மருந்தையும் மார்க்கெட்டிங் பண்ணி விடுவார்..!

 பெ. பச்சையப்பன், கம்பம்.

சீமான் - சிரிச்சா போச்சு. இவர் ஈழப் பயணம் கூற ஆரம்பித்தவுடன் அனைவரும் சிரித்து விடுவதால்.

 சேலம் த்ருவ், திண்டுக்கல்

தமிழ் மொழி பெயர்ப்பாளராக ஹெச்.ராஜா.

ayyan.aar.9

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன் அங்கு உள்ளோருக்கும், பட்ஜெட் வாயிலாக பொதுமக்களுக்கும் அல்வா கொடுப்பதால் அல்வா கடை வைக்கலாம்.

hemalatha.srinivasan.

மருத்துவர் ராமதாஸ் கூறு கட்டி விற்கும் காய்கறிக்கடை போடலாம். ஏனென்றால் தமிழகத்தைக் கூறு போட தயாராக இருப்பதால்

anbu.bala.11

குஷ்பு - நாட்டிய ஆசிரியை. (தாமரை...)

parath.sarathi

ராதாரவி, குஷ்பு, பழ.கருப்பையா அடிக்கடி கட்சி தாவிக் கொண்டிருக்கும் அனுபவமிருப்பதால் சர்க்கஸ் ரிங் பார் மாஸ்டராகலாம்.

jerry46327240

உதயநிதி - செங்கல் சூளை போடலாம். ஒரு லட்சம் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்குவதை இலக்காக வைத்துக் கொள்ளலாம்.

PG911_twitz

ஹெச்.ராஜா ட்விட்டரில் யாருக்காவது அட்மினாக வேலை செய்யலாம்!

absivam3

எஸ். வி. சேகர் : ஓட்டைப் பால் பாக்கெட்டை வெற்றிகரமாக மாற்றிய வராச்சே... வீடு வீடாக பால் பாக்கெட்டுகள் சப்ளை செய்யலாம்..!!

KmFarook6

சோனியா காந்தி: ‘இருக்கு... ஆனா இல்லை' கேம் ஷோ நடத்தலாம்!

BaaluElango5

வாசகர் மேடை:  அசுரன் VS ஈஸ்வரன்!

? ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலைப் பாடி அழைப்பது என்றால் யாரை அழைப்பீர்கள், ஏன்?

இந்த நாட்டின் பிரதமரை கண்டா வரச்சொல்லுங்க..!

 நா.இரவீந்திரன், வாவிபாளையம்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்... அவர்கிட்ட ஒரு நல்ல பாட்டு கேட்டு ரொம்ப‌ வருஷமாச்சி.

kaviprasath

தாமரை. குறிப்பாக மே 2க்குப் பிறகு!

 தார்சி எஸ்.பெர்னாண்டோ, சென்னை

சித்திரைத் திருவிழாவுக்கு வைகை ஆத்துல தங்கக் குதிரையில் எறங்குற அழகரை கண்டா வரச்சொல்லுங்க...

 எம்.விக்னேஷ், மதுரை.

இதை எழுத உட்காரும் நேரம் விவேக்கின் இறுதி ஊர்வலம்... ‘அவர கண்டா வரச் சொல்லுங்க...'

 கி.சரஸ்வதி, ஈரோடு

பிரபாகரனை. சீமான் சொன்னதுல எதுதான் நிஜம்ன்னு கேக்கணும்.

SowThanishkas

உனக்குன்னு ஒருத்தி இந்த உலகத்துல பொறந்தி ருப்பாடான்னு அம்மா அடிக்கடி சொல்லு வாங்க. அந்தப் பெண்ணை கண்டா வரச்சொல்லுங்க. வயசு முப்பத்தைந்துக்கு மேல ஆயிடுச்சு.

PG911_twitz

ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர் களை விடுவிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ, அவரைக் கண்டா வரச் சொல்லுங்க.

Vasanth920

பிரசாந்த் கிஷோரை வரச் சொல்வேன். எங்கள் காலனி குடியிருப்போர் நலச் சங்கத் தேர்தலில் நான் ஜெயிக்க!

Kirachand4

மல்லையாக்களுக்கெல்லாம் கடன் கொடுத்த ஆபீஸர்களை கண்டா வரச் சொல்லுங்க..

RajaAnvar_8

ஜெயலலிதா - அப்பல்லோ இட்லி பத்தி ஃபீட்பேக் கேட்கணும்.

PG911_twitz

கோடைக்காலம் வந்தால் வெயிலில் கொரானா செத்துவிடும் என்ற செய்தியைப் பரப்பி விட்டவன கண்டா வரச்சொல்லுங்க.

pbukrish1

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை:  அசுரன் VS ஈஸ்வரன்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ‘குக்கு வித் கோமாளி’ புகழ் - புகழ் எந்தப் படத்தை ரீமேக் செய்து நடித்தால் பொருத்தமாக இருக்கும்?

? வாட்ஸ்அப் ஃபார்வர்ட்களில் உங்களை அதிரவைத்த அழகுக்குறிப்பு/மருத்துவக்குறிப்பு?

? நிஜமாகவே காக்காவுக்கு ஏன் காக்கான்னு பேர் வந்தது?

? நாளிதழ்கள், பத்திரிகைகளில் எந்த விஷயம் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

? கொரோனா முதல் அலையில் கைதட்டுவது, விளக்கு ஏற்றுவது என்று பல டாஸ்க்குகள் கொடுத்த மோடிக்கு நீங்கள் ஒரு டாஸ்க் கொடுப்பது என்றால் என்ன டாஸ்க் கொடுப்பீர்கள்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com