Published:Updated:

வாசகர் மேடை: தாவிய தலைவி

வடிவேலு. இருக்குற கொரோனா மன அழுத்தத்துல அட்லீஸ்ட் ஆறு மாசமாவது கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருப்போம்!

பிரீமியம் ஸ்டோரி

?ஒரு தமிழர் என்ற முறையில் நீங்கள் பெருமைப்படும் விஷயம் எது?

சின்னச் சின்னப் பூசல்கள் இருந்தாலும் எப்போதும் தமிழகம் அமைதிப்பூங்கா என்பதில் அலாதி பெருமைதான்.

அ.ராஜாரகுமான், கம்பம்

உலகப் பொதுமறையாம் திருக்குறள் நமக்குக் கிடைத்தது.

balasubramni1

வாசகர் மேடை: தாவிய தலைவி

தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள்!

RamAathiNarayen

ஆமை ஓட்டைத் திருப்பிப் போட்டு அதை boat ஆகப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்த தமிழன் சீமான் (சீமான் வாய்ஸ்லேயே படிக்கவும்) வாழ்ந்த காலத்தில் வாழ்கிறேன் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும்.

h_umarfarook

என் மொழி தமிழ்.

umakrishh

உலகமே கண்டு வியக்கும் தஞ்சை பெருவுடையார் கோயில்.

JaNeHANUSHKA

திருக்குறளை திணறியபடி சொல்லி பிரதமர் உரை நிகழ்த்துவதில் இருக்கிறது தமிழர் பெருமை.

pachaiperumal

`தாமரை’யை நோட்டாவிடம் மண்டியிடச் செய்தது..!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

? அடுத்த நிதியாண்டிலாவது இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா சொல்லுங்களேன்.

இதுவரை சுட்ட வடையெல்லாம் சேர்த்து வெச்சு வித்தாலே இந்தியப் பொருளாதாரம் முன்னேறியிருக்கும்.

realtechsiva

வாசகர் மேடை: தாவிய தலைவி

பொருளாதாரம் பாதாளத்துக்குப் போயி ருச்சுன்னு உண்மைய சொல்லி மக்கள்கிட்ட யிருந்து பி.எம் கேர்-க்குத் துண்டு விரிக்கலாம்.

BakkarSiddiq

எப்படியும் பா.ஜ.க ஆட்சில இருக்கிற வரைக்கும் இந்தியப் பொருளாதாரம் உயரப் போறது இல்ல. அதனால, கடந்த ஆறு வருசமா இவங்க செஞ்சத எப்டியாச்சும் மத்த நாடுகளையும் செய்ய வச்சு அவங்க நாட்டுப் பொருளாதாரத்த கம்மி பண்ணிட்டா நம்ம பொருளாதாரம் நல்லா இருக்கிற மாதிரி தெரியும்.

poli_kaalai

ரிசர்வ் வங்கியை நல்ல விலைக்கு ஏலத்தில் விற்று விடலாம்.

KRavikumar39

அதைவிட மோடிக்கு ஐடியா கொடுக்கலாம். “மந்திரியை மாற்றுவது.”

பெரியாரின் கைத்தடி

அரசாங்க சொத்தைத் தனியாருக்கு விற்காமல் அரசு சார்ந்த நிறுவனங் களில் என்ன குறைபாடு இருக்குன்னு ஆராய்ந்து அதைச் சரிசெய்ய முயலுங்கள்.

ssrichandra

இதுக்கு மேல ஒரு அடி விழுந்தா சேகர் (பொருளாதாரம்) செத்துடுவான்.

saravankavi

இந்தியக் கடல்களை இன்னும் விற்பனை பண்ணவில்லை.

itzVillan

விஜய், அஜித் மாதிரியான முன்னணி நடிகர்களை பி.ஜே.பி-யில் சேர்த்து அவர்களை வைத்துப் படம் எடுத்து, கிடைக்கும் வருமானத்தை அரசின் கருவூலத்தில் சேர்க்கலாம்.

balasubramni18

நாம எதுக்கு ஐடியா சொல்லணும்... அவங்க ‘கடவுள்கிட்டேயே’ கேட்டுக்கட்டும் சார்.

RamAathiNarayen

யாராவது ஒரு சாமியாரை வைத்து வேள்வி நடத்தி, அதில் நாட்டுக் கணக்கு வழக்குகளைப் போட்டு எரித்து யாகம் செய்தால், பொருளாதாரம் புகையோடு சேர்ந்து மேலே உயரே போய்விடும்.

ravikumar.krishnasamy

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? 10 ஆண்டுகளில் மூன்று கட்சிகள் மாறியிருக்கும் குஷ்புவுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்?

‘சூரியன்’ ‘கை’விட்ட தாமரையே..!

வி. ஜெய்கணேஷ், கொச்சி.

பாயின்ட் டு பாயின்ட் அல்ல (அனைத்து வழித்தடங்களிலும் நின்று செல்லும்).

pachaiperumal

வாசகர் மேடை: தாவிய தலைவி

அனைத்திந்திய கட்சி தாவல் திலகம்.

KRavikumar39

மாறுகோ மாறுகோ மாறுகயி விருது.

h_umarfarook

மியூசிக் சேர் தலைவி

IamJeevagan

அம்பியாக தி.மு.க-விலும்,

ரெமோவாக காங்கிரஸிலும்,

அந்நியன் போல பா.ஜ.க-விலும் மாறியிருப்பதால் குஷ்புவை குசும்பு என அழைக்கலாம்!

absivam

தாவிய தலைவி

modhumayoon

அறிவாலயம் டு கமலாலயம்!

(வழி: சத்தியமூர்த்தி பவன்)

laks.veni

? அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டன. என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு சுங்கச் சாவடிக்கருகிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தரமான மலிவு விலை உணவகம் ஆரம்பிக்க வேண்டும்.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி

வாசகர் மேடை: தாவிய தலைவி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் மூன்றே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதிக்கப்படும். பெண்களுக்கு தேர்தல் தொகுதிகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 33% ஒதுக்கீடு உறுதியாக வழங்கப்படும் என வாக்குறுதிகள் தரலாம்.

எஸ். வைத்தியநாதன், மதுரை.

எந்த வடிவத்தில் வாங்கியிருந்தாலும் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

KRavikumar

உடல்நலனை மேம்படுத்த ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு விலையில்லா மிதிவண்டி கொடுக்கலாம்.

IamUzhavan

தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் மாதத்திற்கு 10 அல்லது 15 ஜிபி இலவச டேட்டா.

SriRam_M_20

ஓட்டுக்கு இவ்வளவுதான் அமௌன்ட் தரமுடியும்னு முன் கூட்டியே தெரிவிக்கலாம்..

HariprabuGuru

சக்கரை நோயாளிகளுக்கு ரேஷனில் அஸ்காவிற்கு பதில் நாட்டு சர்க்கரை.

ARiyasahmed

தமிழக மக்களின் கலை ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் ‘Tik Tok’ போன்று ‘Tik tamilakam’ ஆரம்பிக்கப்படும்.

Sivakum

? நீங்கள் செய்த வித்தியாசமான சத்தியம் பற்றிச் சொல்லுங்களேன் .

இனி ஆனந்த விகடன் மேடைக்கு ரிப்ளை பண்ணக்கூடாது. இது சத்தியம் (போன வாரம் பண்ணுனது)

brammahbal

‘சிகரெட்டை விட்டுடறேன்’ என்று நண்பர்களிடம் பல நியூ இயர்களில் சத்தியம் செய்தேன். முடியவில்லை. யாரிடமும் எந்த சத்தியமும் செய்யாமல் ஒருநாள் நிறுத்தினேன். 2-வது நாள்... 3-வது நாள்... நிறுத்தியே விட்டேன்... நமக்கு நாமே சத்தியம்.

RamAathiNarayen

‘இந்த செல்லை இனி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் பார்க்கணும்’ என்று சத்தியம் செய்தது. செல்லே சிரித்திருக்கும்.

KRavikumar

குறட்டை விட மாட்டேன் என்று மனைவியிடம் சத்தியம் செய்து அதைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன் ஆவ்!

ARiyasahmed

பிரசுரம் ஆகாதது குறித்து வீட்டில் எல்லோரும் கிண்டலடித்தாலும் கவலைப்படாமல் கஜினி போல 17 முறை முயற்சிக்குப்பின் வாசகர்மேடைக்கு எழுதுவதை நிறுத்திவிடுவதாக சத்தியம் செய்திருக்கிறேன்.

நடராஜன்.V., மும்பை.

ரஜினியின் அரசியல் முடிவைத் தெளிவாக அறிவிக்கச் செய்வோம்னு யாராவது வாக்குறுதி கொடுங்கப்பா.

மாணிக்கம், திருப்பூர்.

? அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழக சினிமா நட்சத்திரங்களில் ஒருவரை முதல்வராக நியமிக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார்?

என் மகன் பேரு சிம்பு

எங்கிட்டே வச்சுக்காதே வம்பு

நல்லது செஞ்சால் நீ மந்திரி

இல்லாட்டி நீ எந்திரி

என்று பேசி, கலக்குவார் டி.ஆர். அதனால் என் சாய்ஸ் அவர்.

RahimGazzali

முதல்வர் கவுண்டமணி, துணை முதல்வர் செந்தில். கடைசி ஆறுமாசமாவது கலகலப்பாய்ப் போகட்டுமே!

parath.sarathi

வடிவேலு. இருக்குற கொரோனா மன அழுத்தத்துல அட்லீஸ்ட் ஆறு மாசமாவது கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருப்போம்!

KarthikMSomasundaram

காஜல் அகர்வால், அமலாபால், சமந்தா, ஸ்ருதிஹாசன் இவங்கள்ள ஒருத்தரை முதல்வரா நியமிக்கலாம். நாட்டிலேயே அழகான முதலமைச்சர் இருக்கிறது நம்ம தமிழ் நாடுன்னு பெருமைப் பட்டுக்கலாம்.

Kirachand1

நடிகர் அஜித்... தானுண்டு தனது வேலையுண்டு என இருப்பார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்போல... எதையுமே கண்டுக்காமல் ஒதுங்கியே நின்று செயல்படுவார்!

ramkumar_vea

நம்ம குஷ்பு அக்காவ முதலமைச்சர் சீட்டுல உட்கார வச்சா.. இன்னும் ஆறு மாசத்துக்கு அவங்க ஒரே கட்சியில இருப்பாங்க.

nanbanvela

சரத்பாபுவை நியமிக்கலாம்.

ரஜினி ஆதரவும் கிடைக்கும் கமல் ஆதரவும் கிடைக்கும்.

h_umarfarook,

சரத்குமார். நாட்டாமைத் தீர்ப்பு எப்படி இருக்கும்னு பார்ப்போம்.

msrirammca

வருத்தப்படாத முதல்வர், துணை முதல்வர் சிவகார்த்திகேயன் சூரி.

கண்ணன் செழியன், தேனி.

சத்யராஜ் முதல்வராக வேண்டும்.

ஆர்.அஜிதா, கம்பம்

ரஜினியை அழைக்கலாம், அவர் வருவதற்குள் ஆறுமாதம் முடிந்துவிடும்.

ப.சுதா லட்சுமி, கம்பம்.

நம்ம ஜல்லிக்கட்டு நாயகர்கள் ஆர்.ஜே.பாலாஜியும் ஹிப் ஹாப் ஆதியும் இருக்காங்களே, மறந்துட் டீங்களா?

ஜான், தேனி.

ராஜ்கிரண ஆறு மாத முதலமைச்சர் ஆக்கலாம்.

ச.பிரபு, குற்றாலம்.

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: தாவிய தலைவி

? பிக் பாஸில் தன் கட்சிச் சின்னத்தை விளம்பரம் செய்யும் கமல், தன் கட்சியை விளம்பரம் செய்ய இன்னும் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

? ‘விஜய் பெயரில் கட்சி. ஆனால் விஜய்க்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்ற எஸ்.ஏ.சி-யின் அறிவிப்பைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது?

? கிரிக்கெட் வீரர் பயோபிக் தமிழில் எடுத்தால் எந்த வீரரின் பயோபிக்கில் யார் நடிக்கலாம்?

? ரயில் பயணங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

? ஷாப்பிங் - ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு