? பிரபாகரன் முதல் எஸ்.பி.பி வரை சீமான் சொல்லும் ‘கதைகளை’த் தொகுத்துப் புத்தகமாகப் போட்டால் என்ன டைட்டில் வைக்கலாம்?

நம்பித்தான் ஆகணும்

eromuthu

வாயிருக்கும் வரை

BlitzkriegKK

சில நேரங்களில் சில கதைகள்

balasubramni1

பு...ஹா...ஹா....

RahimGazzali

கொலம்பஸ் என்னிடம் கூறியவை.

pachaiperumal23

? அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கினால் அண்ணாவாக யாரை நடிக்க வைக்கலாம்?

முன்னணி நடிகர்லயே ஒரு அண்ணா இருக்கும்போது வேற ஆள ஏன் தேடிப் போகணும்... நம்ம விஜய் அண்ணாவையே நடிக்க வைக்கலாம்.

Elanthenral

ஹோலோக்ராபிக் டெக்னிக் மூலம் அறிஞர் அண்ணாவையே வரவழைச்சு அற்புதமா படம் எடுக்கிறத விட்டுட்டு எதுக்கு வேற நடிகரைத் தேடணும்கிறேன்.

Kirachand1

பாரதி வேடத்துக்கு சாயாஜி ஷிண்டேவைக் கொண்டுவந்ததுபோல், அண்ணாவையும் வடக்கிலிருந்து புதுமுகமாகவே கொண்டு வரவேண்டும் (அதற்குப் பிறகு அந்த நடிகரை வில்லன் வேடங்களில் நடிக்க வைக்காமல் இருந்தால் சரி).

RamAathiNarayen

நாஞ்சில் சம்பத். மெலிதான ஒப்பனையே போதும். கனகச்சிதமாகப் பொருந்துவார். அண்ணாவைப் பற்றி அறிந்தவர் என்பதால் உடல்மொழியில் பாதி நடிப்பைக்கொண்டு வந்துவிடுவார்.

pachaiperumal23

நாசர் அண்ணாவாக நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும், தேசிய விருதும் நிச்சயம் கிடைக்கும்.

SriRam_M_20

பழ.கருப்பையா, பிரமிட் நடராஜன், தம்பி ராமையா போன்றோர் உருவ ஒற்றுமைக்குப் பொருத்தமாக இருப்பார்கள். தம்பி ராமையாவுக்கு டப்பிங் குரல் கொடுக்க வேண்டும்.

RamAathiNarayen

மம்முக்கா. ஏற்கெனவே அம்பேத்கராக அசத்தியவர்.

pachaiperumal23

அண்ணாவின் சிரிப்புக்குக் கார்த்தி கச்சிதமாகப் பொருந்துவார்.

RamuvelK

வாகை சந்திரசேகர். அந்தக் கரகரக் குரல் செட்டாகும்.

gazaliththuvam

? ஒருவேளை தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து குஷ்பு முதல்வர், ஹெச்.ராஜா துணைமுதல்வர் என்றால் எப்படி இருக்கும்?

அண்ணாமலை ஐபிஎஸ் வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்.

balasubramni1

திருமாவளவனுக்கு எதிராக, தான் போராட்டம் நடத்திய போட்டோவை வைத்து எடிட்டிங் செய்து மீம்ஸ் கிரியேட் செய்தவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய உத்தரவிடுவார் முதல்வர் குஷ்பு.

balasubramni1

தற்போது துணைத் தலைவர்களாக இருக்கும் எண்ணற்றோரும், தங்களுக்கும் துணை முதல்வர் பதவி வேண்டும் எனப் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்துப் போராட்டம் செய்வார்கள்.

IamUzhavan

குஷ்பு விமானத்தில் போகும் போது எச்.ராஜா மற்றும் அமைச்சர்கள் வானத்தைப் பார்த்து குஷ்பு குஷ்புன்னு கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்கி நிற்பார்கள்.

Kirachand1

உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவார்.

KRavikumar39

அம்மா மெஸ்ல குஷ்பு இட்லி கிடைக்கும்!

h_umarfarook

பசுப் பராமரிப்புப் பாதுகாப்புக்கெனத் தனித்துறை ஆரம்பிக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்படுவார்.

pachaiperumal23

‘அப்படி ஒத்துக்க முடியாதுங்கறேன். நான்தான் முதல்வர். குஷ்பு வேண்டுமானால் துணை முதல்வரா இருந்துட்டுப் போகட்டும்’ என்று எச்.ராஜா பைட் பண்ணுவார்.

RahimGazzali

குஷ்பு இட்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும்.

ARiyasahmed

சிட்டிசன் அத்திப்பட்டி மக்கள்போல தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் “நாங்கள் வாழத் தகுதியற்றவர்கள்”னு ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் திருப்பிக் கொடுத்திடுவோம்!

absivam

? ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்’ ரஜினியை உண்மையிலேயே ஆண்டவன் சந்தித்தால் என்னதான் சொல்வார்?

அடுத்து என்ன ட்வீட் போடப் போறீங்கன்னு கேட்பார்.

saravankavi

என் பெயரைச் சொல்லி ‘ஆன்மிக அரசியல்’னு மக்களுக்கு இன்னும் எவ்ளோ நாள்தான் விபூதி அடிப்பீங்க ரஜினின்னு கேட்பார்.

saikibrahim

ஆண்டவன், ஆளப்போறவன் சொன்ன தையே கேக்கல... இந்த மனுசன் நான் சொன்னதையா கேக்கப்போறார். இன்னொரு 7 மந்திரம் பேக்கேஜ் இருக்கு. வச்சிக்கங்க ரஜினி ஜி!

Elanthenral

“நான் உங்கள எல்லாம் காப்பாத்துறேனோ இல்லையோ, முதல்ல உங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கணும்...”

krishmaggi

ஆமா... நீங்க யாரு?

pachaiperumal23

ஹலோ ரஜினி! நீங்க அரசியலுக்கு வரதும் வராததும் உங்க விருப்பம், என்னைய ஏன் மாட்டி விடுறீங்க?!

San8416

? உங்களால் மறக்க முடியாத ஒரு தீபாவளிச் சம்பவத்தை மிகச்சுருக்கமாகச் சொல்லுங்கள்.

சர்கார் படம்... மறக்கமுடியாத தரமான சம்பவம். இன்னும் வலிக்குது...

paranirajansathyamoorthi

ஒரு தீபாவளி அன்று ஊர்காவலன் சினிமா பார்த்து, பாதிப் படத்தில் தலைதெறிக்க ஓடி வந்தது.

Nagaraj Facebook

வேலைக்குப் போய் என்னுடைய முதல் சம்பளத்தில் அப்பா அம்மா தம்பி தங்கை மற்றும் நண்பர்களுக்குப் புத்தாடை எடுத்துக்கொடுத்து மனநிறைவுடன் கொண்டாடிய 1989-ம் வருட தீபாவளிதான் வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத தீபாவளி.

rishivandiya

ஸ்கூல்ல லவ் பண்ணுன பொண்ணு தீபாவளி நைட் மொட்டை மாடில ஜாலியா பேசலாம் வான்னு கூப்ட்டு, கற்பனைகளோட கிளம்பிப் போய் கடைசில அவ வீட்ட விட்டு வெளிய வராம, அவ வீட்டு மாடிலயே தூங்கிட்டு காலைல 4 மணிக்கு வெடிச்சத்தம்லாம் கேட்டு எந்திரிச்சு ஓடி வந்ததுதான்.

Athreyadaw

புதுசா வந்திருக்கும் பெரிய கம்பி மத்தாப்புன்னு சொல்லி வெடியைப் பத்த வைக்கும் நீட்டக் குச்சியை என்னிடம் கொடுத்துப் பத்த வைத்து அரை மணி நேரம் அதைக் கையிலே பிடிக்க வைத்து எங்க அண்ணன் என்னை ஏமாற்றியது.

balasubramni1

பிரபுதேவா ஸ்டைலில் ‘பேகி’பேன்ட் தைத்து தீபாவளி அன்று போட்டபோது “இது என்னடா மாவுமில்லுல மாவு வந்து விழுற பை மாதிரி இருக்கு” என்று எங்க தாத்தா கூற, அன்று அந்த தீபாவளி முழுவதும் எங்க வீட்டில் எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.

krishmaggi

1991-ம் ஆண்டு தளபதி, குணா என இரு படங்கள் தீபாவளி ரிலீஸ். ஈரோடு அபிராமி தியேட்டரில் தளபதி ரிலீஸ், கவுன்ட்டர் டிக்கெட் பால்கனியே அப்போ 6 ரூபாதான், ஆனா பிளாக்ல 90 ரூபா, கிட்டத்தட்ட 15 மடங்கு விலை அதிகமாக விற்றது தமிழ் சினிமா வரலாற்றில் அதுதான் முதல் முறை.

CpsWriter

தீபாவளி முதல் நாள் இரவோடு இரவாக பக்கத்துத் தெருவில் வெடி வெடித்து சிதறிய பேப்பர்களை எடுத்து வந்து எங்கள் வீட்டு வாசலில் போட்டுவிட்டு, காலையில் அண்டை வீட்டு நண்பர்களிடம் எவ்வளவு வெடி வெடிச்சிருக்கோம் பாத்தியா என்று பீத்திக்கொண்டது.

Shivan_11

நெருங்கிய நண்பன் காதல் திருமணம் செய்து கொண்டதனால் இருவீட்டார் எதிர்ப்பு. அதனால் நண்பர்கள் அனைவரும் அவர் இல்லம் சென்று ஒன்றாகக் கொண்டாடினோம்.

raghuna03058764

அப்போ எனக்கு 11 வயசு. அந்த வருஷம் தாத்தா இறந்ததால் தீபாவளி இல்லன்னு சொல்லவும், தீபாவளிக்கு முதல் நாளே எல்லாப் பட்டாசையும் கொளுத்த முடிவெடுத்தேன். ஒரு நாட்டு வெடி மட்டும் வெடிக்காமல் இருக்க, தூக்கிப் போடலாம்னு எடுத்தா டொப்புனு வெடிச்சு மூஞ்சி மொகர எல்லாம் காலி.

vrsuba

கல்யாணமாகி 17 வருஷத்துக்கப்புறம் அண்ணன் வீட்ல இருந்த எங்க அம்மா தீபாவளி கொண்டாட எங்க வீட்டுக்கு வந்து எங்ககூட சேர்ந்து கொண்டாடியது.

விஜி, சென்னை

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? எஸ்.ஏ.சியைப் பற்றி விஜய் படமெடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? பா.ஜ.க. - வேல் யாத்திரை, காங்கிரஸ் - டிராக்டர் யாத்திரை. மற்ற கட்சிகள் என்னென்ன யாத்திரை போகலாம்?

? பிரியாணிக்கு சீரகச்சம்பா, பாசுமதி எது பெஸ்ட்? பிரியாணி அனுபவத்தைச் சுவையாகச் சொல்லுங்களேன்.

? ட்ரம்புக்கு ஜாலியாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லுங்களேன்...

? ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com