? இந்தியாவில் யாருக்காவது நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் யாருக்குக் கொடுக்கலாம், ஏன்?
வடிவேல். கட்சி, ஜாதி, மத பேதமின்றி, அவருக்கு ரசிகர்கள் இருப்பதால்.
எல்.வி. வாசுதேவன், சென்னை

இசையால் இதய உள்ளங்களை மயங்க வைத்து 1000 படங்களுக்கு மேல் இசை சாதனை படைத்த இளையராஜாவுக்கு நிச்சயம் நோபல் பரிசு கொடுக்கலாம்.
ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்
ஸ்டாலினுக்கு. அவரும் தல கீழ நின்னு பாக்கிறாரு முதல்வர் ஆகணும்னு. இலவு காத்த கிளியா இருக்குறாரு, ரொம்ப ஏமாந்துட்டார்னு ஏமாந்ததுக்கான நோபல் பரிசு கொடுக்கலாம்.
Kirachand1
இந்தியர் ஜீரோவைக் கண்டுபிடித்தார் என்பதற்காகவே எவ்வளவு பேர் அசிங்கப்படுத்தினாலும் அதிகமாக ஜீரோவைப் பயன்படுத்தித் தப்புக் கணக்கு போடும் மதுவந்திக்குக் கணிதத்திற்கான நோபல் பரிசு.
SriRam_M_20
ஜீ தரும் எல்லா ‘போஸ்’களையும் சளைக்காமல் போட்டோ எடுக்கும் அந்தப் பொறுமைசாலி ‘போட்டோகிராபருக்கு’ கண்டிப்பாக ஒரு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்.
krishmaggi
செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, வளர்மதி இவர்களில் ஒருவருக்குக் குலுக்கல் முறையில் கொடுக்கலாம்.
Seenira
‘சிஎஸ்கே தோல்விகளுக்கு இளைஞர்கள்தான் காரணம்’ என்று கண்டுபிடித்த தோனிக்கு வழங்கலாம்!
பாலு இளங்கோ, ஈரோடு.
சொன்னதும் சொத்துவரியைக் கட்டி, சிஸ்டத்தை சரிசெய்த சூப்பர் ஸ்டாருக்குத்தான்!”
பா து பிரகாஷ், தஞ்சாவூர்
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொண்டு அமைதி காக்கும் இந்திய மக்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசை அள்ளி வழங்கலாம்.
Raveendran Gopalasamy

? எந்த முன்னாள் கிரிக்கெட் வீரர், இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம், ஏன்?
ஸ்ரீகாந்த் தமிழ் கமென்ட்ரி இரைச்சல்கள் குறையும்.
bommaiyamurugan
ஹேமங் பதானி. எல்லாப் பந்தையும் எப்படி அடிக்கணும்னு கமென்ட்ரில வட சுடுறாரு. களத்துல என்ன சுடுறாருன்னு பார்க்கலாமே!
kaviprasath1029
பிரேம்ஜி அமரன்
tparaval
முக்கியமான நேரத்தில் சரியாகக் கைகொடுக்கும் வெஸ்ட் இண்டீஸுன் ஹூப்பர் பெஸ்ட்.
KRavikumar39
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ரிச்சர்ட் ஹார்ட்லி.களத்தில் யூகங்களை வகுப்பதில் வல்லவர்.
ramkumar_vea
டெத் ஓவர்களில் பௌலிங்கில் மிரட்டும் வாசிம் அக்ரம் பேட்டிங்கிலும் பவுண்டரி, சிக்ஸர்களை அநாயாசமாக அடித்துத் தூள் கிளப்புவார். ஹீ வில் பீ எ கிரேட் அஸெட் டு எனி டி 20 டீம்!
எஸ். வைத்தியநாதன், மதுரை
சவுரவ் கங்குலி. இரண்டு ஸ்டெப் முன்னே வந்து இடது கையால் அவர் பந்தை பேட்டால் பறக்க விடும் அழகே அசத்தலாக இருக்கும். கங்குலி பேட்டிங், பௌலிங் இரண்டிலும் ‘கிங்’குலி!
Ram Aathi Narayenan
வீரேந்திர சேவக்... பந்துகளைப் பறக்கவிட்டு நம்மைக் கைதட்ட வைத்தவர்.
CHAN32497582
கர்ட்லி அம்ப்ரோஸ் - மனுஷன் பந்து போட்டாருன்னா இமயமலை உச்சியிலிருந்து பந்து வர்றாப்பல இருக்கும்.பார்க்க பார்க்க ஜாலியா இருக்கும்.
NedumaranJ
விவியன் ரிச்சர்ட்ஸ் - தலைக்கவசம் இல்லாமல் அழகாக அதிரடி காட்ட.
nayirpuras
தென்னாப்பிரிக்க வீரர் லான்ஸ் க்ளூஸ்னர், மனுசன் அப்பவே 50 ஓவர் மேட்ச்சை 20/20 மாதிரிதான் டீல் பண்ணுவாரு.
tstmanikandan
லிட்டில் மாஸ்டர் சச்சின்.. சச்சினப் பார்க்க காரணம் வேற சொல்லணுமா?
சாமந்தி, வேலூர்
? பிக்பாஸ் வீட்டுக்குப் புதிதாக ஒரு ரூல் போடலாம் என்றால் நீங்கள் என்ன விதியைச் சொல்வீர்கள்?
போட்டியாளர்கள் எலிமினேசன் இல்லாமல் 100 நாள்களும் உள்ளே இருக்க வேண்டும். நாமும் 100 நாள்களும் அவங்க சண்டையைப் பார்க்கலாம்.
balasubramni1
இங்கிருந்து செல்லும் யாரும் தங்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஓராண்டு கழித்து ட்வீட் போடக்கூடாது.
pachaiperumal23
தினமும் கமலை ஒரு ட்வீட் போடச் சொல்லி அதை யார் சரியாக விளங்கிக் கொண்டு உண்மையான அர்த்தத்தை எழுதிக் காண்பிக்கிறார்களோ அவர்களுக்கு மதிப்பெண் தரலாம்!
h_umarfarook
இத்துனூண்டு சமைப்பதுபோலக் காட்டாமல் மொத்த சமையலையும் காட்டவேண்டும்.
Vaira Bala
ஓரிடத்தில் இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது.
Gomathi Sivayam
இருபாலாரும் தங்கலாம்..! சில ஒழுங்குமுறை விதிகளுடன்..!
dhayalan.sandarasegaram
? விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், துருவ் விக்ரம் என்று வாரிசு நடிகர்கள் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
உன்னைப்போல் ஒருவன்
eromuthu
பசங்க 3
theparvathy
நாங்க மூணு பேரும்
நல்லா இருந்த சினிமாவும்
RahimGazzali
மகனதிகாரம்
h_umarfarook
தகப்பன் சாமி
P.Dhanasekaran, Chennai
மனதில் உறுதி வேண்டும் (FOR AUDIENCE) என்று கீழே இங்கிலிஷ் கேப்ஷன் போட்டுடலாம்.
பசுபதி , CHENNAI
டாட் பாய்ஸ் (பேட் பாய்ஸ் இருக்கும் போது டாட் பாய்ஸ் இருக்கக் கூடாதா?)
San8416
அன்புள்ள அப்பா... எங்க வழி தப்பா...
rishivandiya
? எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது டி.டி.வி.தினகரனின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?
நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கர சேர்த்து
ஆடும் இந்தத் தோணி.
ச.பிரபு, குற்றாலம்
ஆளுக்கொரு எலைய பறிப்?ள்?ல்ச்சுக்கிட்டு புட்டுக்கிரும்னு பாத்தா... ம்ம்...
க .மாதவன், புதுக்கோட்டை
உடன்பிறவா சகோதரியோட சப்பாத்தி தட்டின சபதமெல்லாம் சவுண்ட் இல்லாம ஆயிடுச்சே!
RamAathiNarayen
இவங்களுக்கு ஒரு பாயசத்தைப் போட்டுறவேண்டியதுதான்.
krishmaggi
“அடுத்த தேர்தல்ல தோத்ததுக்கு அப்புறம் நம்மளத் தேடி வராமலயா போவீங்க.”
IamUzhavan
வட போச்சே!
ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்
கிளிக்கு இறக்க முளைச்சிட்டுது. பறந்து தானே போகும்.
ஜெரி. D. டார்வி
நான் இருந்திருக்க வேண்டிய இடம்டா அது.
tparaval
No comments... simply waste.
iuma24

ஆளுநர் என்றால் அவகாசம்!
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டன. என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
? நீங்கள் செய்த வித்தியாசமான சத்தியம் பற்றிச் சொல்லுங்களேன் .
? அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழக சினிமா நட்சத்திரங்களில் ஒருவரை முதல்வராக நியமிக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார்?
? ஐ.பி.எல் பைனலில் எந்த டீம் ஜெயிக்கும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?
?ஒரு தமிழர் என்ற முறையில் நீங்கள் பெருமைப்படும் விஷயம் எது?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com