Published:Updated:

வாசகர் மேடை: இதுக்காகவா காத்திருந்தோம்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

ரஜினி அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்கும் விதமாக `முகமது பின் துக்ளக்-2’ல் துக்ளக் பாதுஷாவாக நடிக்கலாம். இயக்குநர் சிம்பு தேவன்.

வாசகர் மேடை: இதுக்காகவா காத்திருந்தோம்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்கும் விதமாக `முகமது பின் துக்ளக்-2’ல் துக்ளக் பாதுஷாவாக நடிக்கலாம். இயக்குநர் சிம்பு தேவன்.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

ரஜினி தன் அடுத்த படத்தில் எந்த கேரக்டரில் நடிக்கலாம்? யார் இயக்குநர்?

இந்தியத் தேர்தல் ஆணையர். இயக்கம் முருகதாஸ்.

 எம்.பி.தினேஷ், கோவை

எனக்குத் தெரிந்த வரை அவர் இதுவரை நடிக்காத `மீனவர்’ கேரக்டரில் நடிக்கலாம். வெற்றிமாறன் இயக்குநர்.

 க.மோகனசுந்தரம்

இது சரித்திரக் கதைகள் நேரம்! சாண்டில்யனின் `கடல் புறா’வைப் படமாக்கலாம். ரஜினி கருணாகரப் பல்லவராக நடிக்கலாம். ராஜமௌலி இயக்கினால் விருதுகளும் நிச்சயம்!

h_umarfarook

`ஜிகர்தண்டா 2.’ பாபி சிம்ஹாவுக்கு பதில் ரஜினி. இதில் முதல் பாதி காமெடி, பின்பாதி அதகளம். இப்படித் திரைக்கதை அமைத்து கார்த்திக் சுப்புராஜ் டைரக்ட் பண்ணலாம்.

Lakshmi98598036

சமுத்திரக்கனி இயக்கத்தில் (பாலசந்தர் உயிரோடு இல்லாத காரணத்தால்) `தப்புத்தாளங்கள் 2’ படத்தில் நடித்து, அரசியல் பிரவேசத்திற்குத் தான் போட்ட தப்புக்கணக்குகளை விலாவாரியாக எடுத்துரைக்கலாம்.

rishivandiya

`DontBreathe 2’ படம்போல் கண் தெரியாத கேரக்டரில் பேத்தியைக் காப்பாற்றும் தாத்தாவாக நடிக்கலாம்.

saikailash11

ரஜினி அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்கும் விதமாக `முகமது பின் துக்ளக்-2’ல் துக்ளக் பாதுஷாவாக நடிக்கலாம். இயக்குநர் சிம்பு தேவன்.

modhumayoon

ஹெச்.வினோத் இயக்க `எளிமை’ என்ற படத்தில் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் நடுத்தர குடும்பஸ்தனாக நடிக்கலாம்.

vaira.bala.12

ஷங்கர் இயக்கத்தில் முதல்வராக நடிக்கலாம்.

டைட்டில் `வரும் ஆனா வராது’

gazaliththuvam

வாசகர் மேடை: இதுக்காகவா காத்திருந்தோம்!

இணையம் தோன்றியிராத காலத்தில் இருந்த எதை இப்போது மிஸ் செய்கிறீர்கள்?

உறவினர்களிடம் டெலிபோன் பூத்தில் எஸ்.டி.டி போட்டுப் பேசும்பொழுது... வாய் பேசிக் கொண்டிருக்கும்... கண்கள் டிஜிட்டலில் எகிறிக் கொண்டிருக்கும் டெலிபோன் பில்லைப் பார்த்துக் கொண்டிருக்கும்... அந்த த்ரில் நொடிகளை.

 கீராசந்த்

சினிமாப் பாட்டுப் புத்தகம்.

 கே.எம். ரவிச்சந்திரன்

ஆங்கிலம் டு தமிழ் விளக்கத்திற்குப் பக்கம் பக்கமாக டிக்‌ஷனரி புரட்டியது.

 சி. கார்த்திகேயன்

‘காதல் கோட்டை’ போன்ற படங்களை இனிமேல் எடுக்கவே முடியாது என்று நினைக்கும்போது.

balebalu

பஞ்சாயத்து ஆபீசில் இருக்கும் செய்தித்தாளை ஏழெட்டுப் பேர் ஆளுக்கொரு தாளாக எடுத்துப் படித்துக்கொண்டிருக்கும்போது, நாம் படித்த தாளின் தொடர்ச்சியைப் படிக்க, அத்தொடர்ச்சித் தாளைப் படித்துக்கொண்டிருப்பவர் முடிக்கும்வரை காத்திருந்து வாங்கிப் படித்தல்.

IamUzhavan

‘அன்புள்ள’ என்று தொடங்கி, ‘இப்படிக்கு’ என்று முடியும் கடிதங்களை!

aksrtamilan

பண்டிகை நாள்களில் சொந்தபந்தங்களுடன் `வீடியோ டெக்' எடுத்துப் போட்டுப் பார்த்தது!

San8416

வாழ்த்துகள் சொல்ல, கடைக்குப் போய்த் தேடிப்பிடித்து வாங்கும் வாழ்த்து அட்டைகளை மிஸ் பண்றோம்.

Malli_official

எல்லாப் பக்கமும் அணைகட்டும் தி.மு.க அரசிடமிருந்து தப்பிக்க அ.தி.மு.க நிர்வாகிகளுக்குச் சில ஜாலி ஐடியாக்கள் ப்ளீஸ்?

உதயநிதியை வைத்து பிரமாண்ட படத்திற்குத் தயாரிப்பாளராக மாறினால் கிடைக்கும் ‘லிங்க்’கில் கைக்கு ‘ரிங்’ வராமல் தப்பிக்கலாம்.

 ஆர்ஜே.கல்யாணி

சட்டையில் மேலே ரெண்டு, கீழே ரெண்டு என மொத்தம் நாலு பாக்கெட்டுகள் வைத்துத் தைத்து... ஒவ்வொரு பாக்கெட்டிலும் வெளியே தெரியும்படி கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி படங்களை வைத்தபடி சுற்றலாம்..!

 கே.லக்‌ஷ்மணன்

துர்க்கை வழிபாடு செய்தால் பயம் போகும் (துர்கா ஸ்டாலின் அல்ல).

 எம்.விக்னேஷ்

செல்லூர் ராஜுவிடம் சொல்லி சட்டசபையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையே ஒரு தெர்மாகோல் சுவரை எழுப்பச் சொல்லி, தப்பித்துக்கொள்ளலாம்!

PRABU_4M_ADM

அண்ணன் சீமானை சரணடையுங்கள். அவரிடம் டோல் கேட்டை இடிக்க வாங்கிய JCP-க்கள் நிறைய உள்ளதாம். அவற்றால் தி.மு.க கட்டிய `அணைகளை’ தவிடு பொடியாக்கிவிடுவார்.

Kannarka

`நான் என்றால் உதடு ஒட்டாது. நாம் என்றால்தான் உதடுகள்கூட ஒட்டும்.’ கலைஞர் பொன்மொழியை கார்க்கண்ணாடியில் பெரிதாக எழுதி வைக்கலாம்.

ARiyasahmed

வாசகர் மேடை: இதுக்காகவா காத்திருந்தோம்!

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் பயோபிக்கை எடுக்கலாமென்றால் அஷ்வினாக நடிக்க உங்களின் சாய்ஸ் யார்?

‘பிரேமம்' நிவின்பாலிக்கு அஷ்வினாக நடிக்க பத்துப் பொருத்தமும் பக்கா!

 எஸ்.ஏ. விஜயலஷ்மி

அஷ்வினாக ஆர்யா நடிக்கலாம்.

 V. மீனா, கிருஷ்ணகிரி

அசோக் செல்வன் சரியாக இருப்பார்.

 மாணிக்கம்

சிபிராஜ் - அஸ்வினின் உயரத்திற்கு அவரே சரியான சாய்ஸ்.

 எம்.கலையரசி

அஷ்வினாக `துல்கர் சல்மான்' கண்களைக் கொள்ளையடித்துவிடுவார்!

 நா.இரவீந்திரன்

விஜய் சேதுபதி. முரளிதரன் சூ(சு)ழலில் சிக்காதவர். அஸ்வின் பயோபிக்கில் கேரம் வீசட்டும் (எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்).

 பாலாஜி.மு

அதர்வா நடித்தால் பொருத்தமாக இருப்பார். இவரின் ஆக்ரோஷமான நடிப்பு, படத்தை உயிரோட்டமானதாக வைத்திருக்கும்.

amuduarattai

ஹரிஷ் கல்யாண் - கிரிக்கெட் ப்ரேமா காதல்னு டைட்டில் வைக்கலாம்.

ParveenF7

`இதுக்காகவா இவ்ளோ நாள் காத்துக்கிட்டு இருந்தோம்' என உங்களை நினைக்க வைத்த சம்பவம் எது?

ஆறு மாதமாக ஆவலாய்க் காத்திருந்து, ஆயா செத்துப்போனதாக ஆபீஸில் சொல்லி மட்டம் போட்டு, ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கிச் சென்று, `லிங்கா' திரைப்படம் பார்த்தபோது நினைத்தேன்.

 ஆர்.பிரசன்னா

தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தது சந்தோஷம். வெளியாகும் படங்களைப் பார்க்கும் போது `இதுக்காகவா இவ்ளோ நாள் காத்திருந்தோம்...' என்று நினைக்கத் தோன்றுகிறது!

 மணிமேகலை பாலு

‘நல்லதொரு தலைவரைத் தேர்ந்தெடுத்திருக் கிறோம், நாடு நல்ல வளர்ச்சி அடையும்’ எனக் காத்துக்கொண்டிருக்கும்போது தாடி மட்டுமே வளர்ச்சியடைந்ததைக் கண்டு...

 ப. சீனிவாசன்

நட்சத்திர ஓட்டலில் ஒரு நாளாவது சாப்பிட வேண்டும் என்ற கனவு நனவான தருணத்தில், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல், எங்கிருந்து ஆரம்பிப்பது, எதை முதலில் சாப்பிடுவது, கையால் சாப்பிட்டால் எல்லோரும் தப்பா நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் இரண்டு கரண்டி தயிர்சாதத்தில் முடித்தபோது... ‘ச்சே... இதுக்கா ஆசைப்பட்டோம்’ என்று ஆகிவிட்டது.

 பூநசி.மேதாவி

‘அத்தோ’ சாப்பிடணும்னு ரொம்ப நாள் திட்டம் போட்டு வெச்சிருந்தோம். ஒரு நாள் அதை வாங்கிச் சாப்பிட்டதுக்கப்புறம்...

RamuvelK

ஆய்வு செய்து பிஹெச்.டி பட்டம் பெற்றால் பெரிய அங்கீகாரம் கிடைத்தது ஒருகாலம். அதை நினைத்துக் கடின உழைப்பால் பெற்ற பட்டத்தை, கண்டுகொள்ளாத தனியார் கல்வி நிறுவனத்தை நினைத்தபோது ‘இதற்காகவா இவ்வளவு நாள் காத்திருந்தோம்’ என எண்ணத் தோன்றியது.

Paa_Sakthivel

‘மறுவார்த்தை பேசாதே’ விஷுவல் பார்த்த போது.

vrsuba

`கேம்ப் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸோட கடைசி சீசன் பார்த்தப்போ..!

itz_jo__

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் ஸ்போர்ட்ஸ் படங்களில் நடித்தால் என்னென்ன விளையாட்டுகள் விளையாடலாம்?

2. 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் என்ன தேர்தல் வாக்குறுதிகளைத் தருவார்கள்?

3. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை - சுவாரஸ்யமான உதாரணம் ப்ளீஸ்!

4. தமிழக அமைச்சர் ஒருவருக்கு வித்தியாசமான பட்டம் கொடுங்களேன்!

5. கோலி டாஸ் ஜெயிக்க ஆலோசனைகள் சொல்லுங்க, பார்ப்போம்!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com