Published:Updated:

வாசகர் மேடை: பி.ஜே.பி... ஜே.சி.பி!

நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாரா

மஞ்சு வாரியர் (சோகம் ததும்பும் அந்தக் கண்கள் கண்ணகி வேடத்துக்கு மிகப் பொருத்தம்)

வாசகர் மேடை: பி.ஜே.பி... ஜே.சி.பி!

மஞ்சு வாரியர் (சோகம் ததும்பும் அந்தக் கண்கள் கண்ணகி வேடத்துக்கு மிகப் பொருத்தம்)

Published:Updated:
நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாரா

இப்போது சிலப்பதிகாரத்தைத் திரைப்படமாக எடுத்தால் கண்ணகி பாத்திரத்தில் யார் நடிக்கலாம்?

‘நடிகையர்’ திலகம் சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் கண்ணகியாக நடிக்கலாம்.

 க. ரவீந்திரன்

ஐஸ்வர்யா ராஜேஷ்

 S.கருணாகரன், சென்னை

இப்போ இருக்கிற எல்லா நடிகைகளுக்கும் டப்பிங் வாய்ஸ் என்பதால் நடிகை ராதிகா மட்டுமே கரெக்ட்டாகப் பொருந்துவார்.

mathi.vaanan.

மஞ்சு வாரியர் (சோகம் ததும்பும் அந்தக் கண்கள் கண்ணகி வேடத்துக்கு மிகப் பொருத்தம்)

 ஜெரி.D.டார்வி

கண்ணகி பாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

 வானதி ஜவஹர்

மொதல்ல... சேக்கிழார் எழுதிய சிலப்பதிகாரமா... கம்பர் எழுதிய சிலப்பதிகாரமான்னு சொல்லுங்க..!

LAKSHMANAN_KL

சினேகா - தனக்கு அனைத்து ரசங்களும் வெளிப்படுத்தத் தெரியும் என அந்தப் புன்னகை முகத்தில் சோகத்தையும் கோபத்தையும் காட்டி நிரூபிப்பார்.

JaNeHANUSHKA

மதுரைய எரிக்கணும்னா அதுக்கு கண்டிப்பா நயன்தாரா வேணும்.

Ival_sagi

வாசகர் மேடை: பி.ஜே.பி... ஜே.சி.பி!

உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் செய்த சிறந்த சமாளிப்பிகேஷன் என்ன?

ICSC பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் என் பேரன் கேட்ட கடினமான கணிதக் கேள்விக்கு, முன்னாள் கணிதப் புள்ளியான நான் விடை தெரியாமல், அவன் தந்தை அதைச் சொல்லிக்கொடுத்து முடிக்கும் வரை, ஜெபம் செய்வதுபோல் போக்குக் காட்டித் தப்பித்தது.

 தார்சி எஸ்.பெர்னாண்டோ

குடும்பத்தினர் வேண்டாம் என்று சொன்னபிறகும் மீறி நண்பர்களுடன் ஊட்டி சென்றபோது மைனர் செயின் தொலைந்துவிட, வரும் வழியிலேயே அதைப்போலவே கடையில் வாங்கிப் போட்டு வந்து சமாளித்தது. (இப்போது இதைப் படித்த பிறகுதான் 12 வருடங்கள் கழித்து பிரச்னையாகப் போகிறது)

vaira.bala

நமக்குத் தெரிந்த இரண்டே அழகிய தமிழ் வார்த்தை ‘சரிம்மா’, ‘சாரிம்மா.’

sadhik.F

வீட்டில் பால், லெமன் எதுவுமில்லாத போது உறவினர்கள் பத்திரிகை வைக்க வர, ‘‘நீங்க போற இடத்துல எல்லாம் டீ, ஜூஸ் குடிச்சு சங்கடமா இருப்பீங்க, அதனால தொந்தரவு பண்ண விரும்பல’’ என்று சமாளித்து அனுப்பியது.

MahjoodaF

அம்மணி வச்சது சாம்பாரா காரக் கொழம்பான்னு பிடிபடாதப்ப, ‘நீ சோத்துக்கு ஊத்திக்க வச்சது நல்லா இருக்கு’ன்னு பொதுவாச் சொல்லி சமாளிச்சிடுவேன்...

சோறு முக்கியம் அமைச்சரே!

bommaiya

சீமானும் மோடியும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

மோடி: பெகாசஸ் பத்தி என்ன நெனைக்கிறீங்க?

சீமான்: அந்தக் கறி நல்லாருக்குமா?

 எம் விக்னேஷ்

சீமான்: வடைக்கு எந்தப் பருப்பு யூஸ் பண்றீங்க?

மோடி: அது அந்தந்த நேரத்தைப் பொறுத்தது!

ravikumar.krishnasamyF

சீமான்: உங்கள எங்க முப்பாட்டன் முருகன் ரூபத்தில பாக்குறேன், அவர் மயில்ல சுத்தினார், நீங்க ப்ளைட்ல...

மோடி: நான் இவ்ளோ நாட்டுக்குப் போறேன்... எனக்கு ஒரு கதையும் சொல்ல வரல. நீங்க ஒரு நாட்டுக்குப் போய்ட்டு வந்து, கேட்கும்போதெல்லாம் அருவியா கொட்றதை நினைச்சாதான்...

 பெரியகுளம் தேவா

மோடி: நான் பி.ஜே.பி...

சீமான்: நான் ஜே.சி.பி...

 வி.சி. கிருஷ்ணரத்னம்

அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைவிட, ‘மோடியிடம் நான் அதைப் பேசினேன் இதைப் பேசினேன்’ என சீமான் அப்புறம் மேடைகளிலும் ப்ரஸ்மீட்டிலும் கதை விடுவார் பாருங்கள்... அதுதான் அல்டிமேட்!

ParveenF7

சீமான்: அண்ணே, ஆமை ஓட்டைத் திருப்பிப் போட்டு போட்டா பயன்படுத்திய கதை தெரியுமாண்ணே?!

மோடி: நான் வீட்டுக்கு முதலைக் குட்டியைத் தூக்கிட்டு வந்த கதை தெரியுமா? யாருகிட்ட?!

h_umarfarook

சீமான்: கறி இட்லி, ஆமை ஓடுன்னு நானும் கதையா புளுகித் தள்றேன். ஒரு MLA தேத்த முடியலை... 300 MP எப்படி தெய்வமே..?

மோடி: உங்க ஊர்ல திரும்புன பக்கமெல்லாம் பள்ளிக்கூடம், காலேஜ். இப்படியிருந்தா வெளங்குமாயா. ஒத்தைப் பொய் சொல்ல முடியுமா?

Kannarka

சீமான்: இன்னும் என்கிட்டே நிறைய கதை இருக்கு.

மோடி: இனி கதைக்கும் ஜி.எஸ்.டி போடும் திட்டமிருக்கு.

rajasinghjeyak1

வாசகர் மேடை: பி.ஜே.பி... ஜே.சி.பி!

மறதி இல்லாமல்போயிருந்தால் நம் வாழ்க்கையில் என்னென்ன காமெடிகள் நடந்திருக்கும்?

இதே கேள்வியை ஏற்கெனவே வாசகர் மேடையில் கேட்டதுபோல இதுவரை கேட்ட கேள்விகள் மீண்டும் வாசகர் மேடையில் கேட்கப்பட்டிருக்கும்.

 வெ.சென்னப்பன்

விகடனார் ‘பொக்கிஷங்கள்’ என்ற தலைப்பில் தன் கருவூலத்திலிருந்து எதையும் எடுத்து மறுபிரசுரம் செய்ய முடியாது.

 எம்.கலையரசி

குஷ்புவைப் பார்க்கும்போது, அவர் நடித்த படங்களின் பெயர்கள் நினைவிற்கு வருவதற்கு முன், அவர் இருந்த கட்சிகளின் பெயர்கள் நினைவிற்கு வரும்...!

 மணிமேகலை பாலு

சூர்யாவின் ‘கஜினி’, கமலின் ‘வெற்றிவிழா’ போன்ற படங்களெல்லாம் வந்திருக்காது.

 க.விஜயபாஸ்கர்

குடும்ப விழாக்களில் `நான் யாருன்னு சொல்லு?' 'என்னைத் தெரியலையா?' என்று கேட்கும் உறவினர்களின் தொந்தரவுகள் இருக்காது!

San8416

காலேஜ்ல இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, வாசகர் மேடையில தமிழ்ல எழுதும்போது ழ, ல, ள குழப்பம் வராமல் இருந்திருக்கும்.

kalagowri91

ஒன்னாவது படிக்கும்போது சிலேட் திருடு போனத நெனச்சு இன்னைக்கும் அழுதுட்டு இருந்திருப்பேன்.

StrangersWelcom

மனைவி டு கணவன்: அப்படி மட்டும் நடந்தா நீ செத்துருவ...

SowThanishka

ஸ்டேண்ட்-அப் காமெடியில் எரிச்சலூட்டும் விஷயம் எது?

பேக்கிரவுண்டில் சிரிப்புச் சத்தத்தைச் சேர்த்து விடுவதுதான். நாம சிரிக்காமப் போய்டுவோமா என்ன?

 ச.பிரபு

பெண்களைக் கேவலமாகக் கிண்டல் செய்வது.

SriRam_M_20

வாத்தியார், டாக்டர், சொந்தக்காரங்க இல்லாம ஜோக்ஸ் சொல்ல மாட்டாங்க...

urs_venbaa

ஜட்ஜுன்னு சொல்லிட்டு ஒரு மூணு பேர் உட்காந்திருப்பாங்க பாருங்க. அவங்க கொலிஜியம் மூலமா அப்பாய்ன்மென்ட் ஆனதா நெனச்சுப் பேசறதுதான்...

திருமாளம் எஸ்.பழனிவேல்

‘வாழ்க்கையில் எங்குதான் இல்ல நகைச்சுவை’ன்னு அவங்க சொல்லும்போதே எரிச்சலா வரும். வாழ்க்கையே நகைச்சுவை தான்யா, போய் புள்ள குட்டிகள படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க!

b_kaviyarasu

வாசகர் மேடை: பி.ஜே.பி... ஜே.சி.பி!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது தமிழ் சினிமாவில் பொருத்தமானவர் யார்?

2. உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு நச்னு ஒரு ஐடியா....

3. மொபைல் கேம் விளையாடுபவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?

4. செல்லமாகக் கூப்பிடுவதில் நீங்கள் கேட்ட வித்தியாசமான ‘செல்லப்பெயர்’ எது?

5. நண்பர் - உயிர் நண்பர் என்ன வித்தியாசம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com