தொடர்கள்
சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: மணிரத்ன மன்மோகன் சிங்!

மணிரத்னம்
News
மணிரத்னம்

இரவு 12 மணிக்கு கிரெடிட் ஆகும் 2 ஜி.பி டேட்டா, காலை பிரேக்பாஸ்ட்டிற்குள் 90% ஓவர் என்ற மெசேஜ்.

பாரதிராஜா முதல் எஸ்.ஜே.சூர்யா வரை இயக்குநர்கள் நடிக்கும் காலம் இது. மணிரத்னம் நடிக்க வந்தால் எந்த கேரக்டரில் நடிக்கலாம்?

எழுத்தாளர் கதாபாத்திரம் மிகப் பொருத்தமாக இருக்கும்!

நா.இரவீந்திரன்

அதிகம் பேசாத மன்மோகன் சிங் அல்லது நரசிம்மராவ் கேரக்டர்களில் நடிக்கலாம்!

absivam

சார்லி சாப்ளின்... பேசவே தேவையில்லை.

saravankavi

சினிமாவில் வரும் கவர்னர் கேரக்டரில் நடிக்கலாம். அதற்கு நல்லா செட்டாவார்.

collegeanand

நீதிபதி கேரக்டர். அவங்கதான் அதிகம் பேச மாட்டாங்க!

RahimGazzali

விஞ்ஞானி கேரக்டர் அட்டகாசமாகப் பொருந்தும்..!

LAKSHMANAN_KL

Money Heist மாதிரி, ஒரு Professor கேரக்டரில் நடிக்கலாம்...

chef_arul

சுஜாதாவின் நகரம் சிறுகதையில் வரும் டாக்டர் மாதிரியான கதாபாத்திரத்தில்...

யுவராஜ் மாரிமுத்து

வாசகர் மேடை: மணிரத்ன மன்மோகன் சிங்!

‘இருக்கு, ஆனா இல்லை' என்று வாழ்க்கையில் உங்களுக்குத் தோன்றும் விஷயம்?

முயற்சி இருக்கு... முன்னேற்றம் இல்லை.

ராஜகுமாரி, விருதுநகர்.

இரவு 12 மணிக்கு கிரெடிட் ஆகும் 2 ஜி.பி டேட்டா, காலை பிரேக்பாஸ்ட்டிற்குள் 90% ஓவர் என்ற மெசேஜ்.

சுஸ்.துருவ், சேலம்.

அப்ரைசல்னு ஒன்னு இருக்கும், ஆனா சம்பளம் ஏறாது.

weknowth827

மகிழ்ச்சி இருக்கு... நிம்மதிதான் இல்லை!

p_jegatha

கோவா போகணும்ன்ற எண்ணம் பல காலமா இருக்கு... ஆனா, நேரம், காசு, நல்ல கம்பெனி கொடுக்குற நண்பர்கள் இல்லை!

NedumaranJ

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜைக்கெல்லாம் அரசு விடுமுறை இருக்கு... ஆனா இப்போதைய முதல்வரி டமிருந்து வாழ்த்து மட்டும் இல்லை.

JaNeHANUSHKA

இ.எம்.ஐ இருக்கு... ஆனா சம்பளம் இல்ல!

urs_venbaa

கல்யாணம் பண்ணணும்னு ஆசை இருக்கு. ஆனால் பொண்ணுதான் இல்லை: 90s கிட்ஸ்

balasubramni1

தலை இருக்கு... ஆனா தலையில் முடி இல்லை!

parveenyunus

திருமணத்திற்குப் பிறகு கோபம் இருக்கு, ஆனா இல்லை!

g_amirtharaj

பர்ஸ் இருக்கு. ஆனால், பைசா இல்லை.

krishmaggi

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டருக்கு ஒரு மாதம் லீவு கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்?

இணைய சேவை வழங்கும் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் பின்னால் போயிடுவார்!

absivam

மொபைல் யூஸ் பண்ணுவதால் டிப்ரஷன்ல இருக்கேன்னு சொல்லுறவங்க, மொபைல் இல்லாம டிப்ரஷன்ல சுத்துவாங்க.

Itz_Araviind

ஐ.டி விங் ஊழியர்களுக்குக் கட்சிகள் நிவாரணம் வழங்கும்.

PG911_twitz

மதுவுக்கு அடிமை யானோருக்கு, திடீரென அது கிடைக்காமல்போனால்... withdrawal symptoms ஏற்படுவது போல, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டருக்கு அடிமை யானோருக்கும் அதே symptoms ஏற்படலாம். அதைச் சரிசெய்யும் மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பிவழியும்!

LAKSHMANAN_KL

சாதா மெசேஜில் சாட் செய்ய ஆரம்பிப்பாங்க!

urs_venbaa

போனுக்கே லீவு கொடுத்த மாதிரி இருக்கும்..!

கே.எம்.ரவிச்சந்திரன், மதுரை.

ரீல் லைஃப் மாதிரி ரியல் லைஃப் அவ்வளவு ஈசி இல்லன்னு புரிஞ்சிடும்!

pbukrish

ஸ்மார்ட் போனில் சார்ஜ் தாராளமாக நான்கு நாள்களுக்கு நிற்கும்.

ராம்ஆதிநாராயணன்,

தஞ்சாவூர்.

இது பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றின்னு அன்புமணி அறிக்கை விடுவார்.

Kirachand4

தேவையற்ற வெற்றுச் சண்டைகள் ஓயும்.

boldlysathya

தங்கள் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிச் சிக்காமலிருக்க ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்?

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனோடு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி கேரள மந்திரவாதிகளைக் கொண்டு வாயைக் கட்டி விடலாம்!

ப.இராஜகோபால்,

மன்னார்குடி.

என்ன கேள்வி கேட்டாலும், ‘இதுகுறித்து எங்கள் தலைவர் பேசுவார்... தலைவர் பேசுவார்... என்று பேசிச் சமாளிக்க வேண்டும்’ என்று கட்டளையிடலாம்.

jerry46327240

வழக்கம் போல பேசியதை வாபஸ் வாங்கலாம்.

Vasanth920

‘பழகுங்கள் பண்புத்தமிழ்' என்ற திட்டம் தொடங்கி அறிவாலயத்தில் பயிற்சி அளிக்கலாம்.

Sivakum31085735

‘ஒரே தலைவர் ஒரே அறிக்கை’ திட்டத்தை அமல்படுத்தலாம்!

pbukrish

இந்த விஷயத்தில் ‘அம்மா' வழியைப் பின்பற்றலாம்..!

LAKSHMANAN_KL

சர்ச்சையாகப் பேசுபவர்களுக்கு எந்த கான்ட்ராக்டும் கிடையாது என்று அறிவிக்கலாம்.

chennappan10

ஹெச்.ராஜா மாதிரி ‘என் அட்மின்தான் பேசினாரு’ என்று சொல்ல வைக்கலாம்.

Shivan_11

மோடியைப் போல கட்சியினர் யாரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாதுன்னு ஸ்டாலின் அறிவிக்கலாம்.

balasubramni1

இனிமேல் சர்ச்சைக்குரிய வகையில் கட்சியினர் யாராவது பேசினால் அவர்கள் கட்சி நிதிக்கு ரூ.10 கோடி தர வேண்டும் என்று உத்தரவிடலாம்.

SriRam_M_20

ஸ்டாலின் துண்டுச்சீட்டில் எழுதிக் கையெழுத்துப் போட்டு அதை மட்டுமே பேச வேண்டும் என்று கட்டளையிடலாம்.

ராஜகுமாரி, விருதுநகர்.

வாசகர் மேடை: மணிரத்ன மன்மோகன் சிங்!

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸில் இல்லாத ஒரு தலைவர் நிற்கலாம் என்றால் யார் உங்கள் சாய்ஸ், ஏன்?

ஜி.கே.வாசன் பெஸ்ட் சாய்ஸ். காங்கிரஸ் தலைவரானதும், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக் கணிசமான சீட்டுகளை வாங்கும் சாமர்த்தியம் உள்ளவர்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

சீமான். ‘நானும் காந்தியும் ஒரே ஜெயிலில், அதுவும் ஒரே அறையில் இருந்தபோது...’ - இப்படிக் கதைவிட்டாவது காங்கிரஸை கரன்ட் ட்ரெண்டிங்கில் வைத்திருப்பார்.

IamUzhavan

சுப்ரமணியன் சுவாமி. திடீர் திடீர்னு அதிரடிச் சரவெடியைப் பற்ற வைப்பது காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்டும்.

adiraibuhari

காங்கிரசிலிருந்து விலகி, பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆன சரத் பவார் சந்தர்ப்பவாதத் தலைவராக காங்கிரஸுக்கு மீண்டும் யு டர்ன் அடிக்கலாம்.

vikneshmadurai

கமல்ஹாசன். கமலாலயத்துக்கு சரியான டஃப் கொடுப்பார்.

Elanthenral

தோனி. வட நாட்டில் கண்டிப்பா வெற்றி தான்.

RavikumarMGR

பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்குப் பிடித்த அமித் ஷா.

amuduarattai

வி.கே.சசிகலா நிற்கலாம், அவங்களும் பாவம் எவ்வளவு நாளுக்குத்தான் ‘இனியும் என்னால் வேடிக்கை பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாது’ன்னு சொல்லிட்டே இருப்பாங்க? கொஞ்ச நாளைக்கு காங்கிரஸ்ல கோஷ்டியைப் பார்த்திட்டிருக்கட்டுமே!

sudarvizhie

மோடி. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா'ன்னு சொன்னவரை, தலைவராகவே ஆக்கிக் கலாய்க்கலாமே!

KrishnaratnamVC

பழ.கருப்பையா. இப்போதைக்கு அவர்தான் ஃப்ரியா இருக்கார்.

manipmp

தலைமைப் பொறுப்புக்குக் காத்திருக்கும்

ஓ.பன்னீர்செல்வம் நிற்கலாம்.

NatarajanAS2