Published:Updated:

வாசகர் மேடை: தி.மு.க-வின் செல்லூரார்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

விக்ரம் - ஹாக்கி - பஞ்சாப் வீரரைப்போல் தோன்றுவார்! சூர்யா - துப்பாக்கி சுடுதல் - ஹரி உபயம்

வாசகர் மேடை: தி.மு.க-வின் செல்லூரார்!

விக்ரம் - ஹாக்கி - பஞ்சாப் வீரரைப்போல் தோன்றுவார்! சூர்யா - துப்பாக்கி சுடுதல் - ஹரி உபயம்

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் ஸ்போர்ட்ஸ் படங்களில் நடித்தால் என்னென்ன விளையாட்டுகள் விளையாடலாம்?

‘கபடி' போட்டி... பயிற்சியாளராக விக்ரம், நடுவராக சூர்யா, `பொல்லாதவன் டீம்' அணித் தலைவராக தனுஷ்... ‘வல்லவன் டீம்' அணித் தலைவராக சிம்பு..!

 மணிமேகலை பாலு

விக்ரம் - இளவட்டக் கல் தூக்கும் விளையாட்டு! சூர்யா - ஜல்லிக்கட்டு! சிம்பு - சிலம்பம்! தனுஷ் - கபடி!

 எ.முகமது ஹுமாயூன்

விக்ரம் - ஹாக்கி - பஞ்சாப் வீரரைப்போல் தோன்றுவார்! சூர்யா - துப்பாக்கி சுடுதல் - ஹரி உபயம். சிம்பு - கிரிக்கெட் - ஆத்திரத்தில் கோலியை மிஞ்சுவார்! தனுஷ் - கபடி…மூச்சிழுத்துப் பாடுவார்!

 ரெ.ஆத்மநாதன்

நாலு பேரு இருக்காங்க, கேரம் போர்டு விளையாடச் சொல்லுங்க!

baskaran

வாசகர் மேடை: தி.மு.க-வின் செல்லூரார்!
வாசகர் மேடை: தி.மு.க-வின் செல்லூரார்!

50 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் என்ன தேர்தல் வாக்குறுதிகளைத் தருவார்கள்?

அனைவருக்கும் தினம் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் இலவசம், அனைவருக்கும் தினம் அரை லிட்டர் வாட்டர் பாட்டில் இலவசம்!

 ரிஷிவந்தியா

தமிழ்நாட்டைச் செவ்வாய்க் கிரகமாய் மாற்றுவோம்!

parath.sarathi

ஒருவேளை நாட்டை முன்பு இருந்ததைப் போல் ‘பழைய நாடாக்கிக் காட்டுவோம்’ என்று வாக்குறுதி கொடுப்பார்களோ?!

umar.mydeen

‘கறுப்புப்பணம்’ ஒழிக்கப்பட்டு வாக்காளர்கள் வங்கிக்கணக்கில் ‘பிட்காயின்’கள் வரவு வைக்கப்படும்.

 க.விஜயபாஸ்கர்

கச்சத்தீவை மீட்போம், காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம், சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் பதினைந்து கோடி செலுத்துவோம்...

 எஸ்.இராஜேந்திரன்

இனிமேல் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பா.ம.க தேர்தல் வாக்குறுதி தரும்!

absivam

மானிய விலையில் டைம் ட்ராவல் மெஷின் வழங்கப்படும்.

PG911_twitz

அப்பவும் காங்கிரஸ் கட்சியினர், ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லிக்கொண்டு, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திப்பார்கள்.

ParveenF7

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படும்.

balasubramni1

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை - சுவாரஸ்யமான உதாரணம் ப்ளீஸ்?

வீடியோ கோச் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, நமக்கு மிகவும் பிடித்த காட்சி வரும் சமயத்தில், நாம் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்துவிடும்... பல சமயங்களில்!

 ஆர். பிரசன்னா

புரட்டாசி மாதத்தில் தினமும் பிரியாணிக் கடையை கிராஸ் பண்ணும்போதெல்லாம் இதுதான் தோணுது...

 வெ.சென்னப்பன்

காலம் காலமாக கையில் பக்குவமாக எடுத்தாலும் வாய்க்குள் போடும் முன் உடையும் ஆஃப்பாயிலைவிட வேறு என்ன வேணும்?!

 க.மோகனசுந்தரம்

அரசு விடுமுறை நாள்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவது.

 ஆ. மாடக்கண்ணு

மே 2020-ல் குடும்பத்தோடு சிங்கப்பூர் சுற்றுப்பயணம் செல்வதற்கு, ஆறு மாதத்துக்கு முன்பே எல்லாம் புக் பண்ணி ரெடியாக இருந்தோம்... இந்தப் படுபாவி கொரோனா பயபுள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான்!

LAKSHMANAN_KL

ஊரெங்கும் ஜே.சி.பி-க்கள் இருக்க, ஆட்சி அதிகாரம் இல்லாததால் டோல் கேட்களை இடிக்க முடியாமல் தவிக்கும் சீமான் நிலை!

NedumaranJ

எல்லாத் தேர்தல்களிலும் தோற்ற தகுதியிருந்தாலும், இன்னும் உயர்பதவி கிடைக்காத ஹெச்.ராஜாவின் நிலைமை.

RamuvelK

மில்க் பிக்கிஸ் பிஸ்கெட்டை டீயில நனைச்சு சாப்பிடக் கொண்டு போனதும் வாய்கிட்ட போய் கீழ விழும் பாருங்க... ‘அந்த வேதனை இருக்கே அந்த வேதனை’ மொமென்ட்தான்!

sudarvizhie

வாசகர் மேடை: தி.மு.க-வின் செல்லூரார்!

கோலி டாஸ் ஜெயிக்க ஆலோசனைகள் சொல்லுங்க, பார்ப்போம்!

இவர் ஹெட் கேட்க வேண்டும்.

இரண்டு பக்கமும் ஹெட் உள்ள காயினை அம்பயர் கையில் திணித்துவிட வேண்டியதுதான்.

Adhirai Yusuf

டாஸ் போடலாமா வேண்டாமா என டாஸ் போட்டுப் பார்க்கலாம்.

srividhya.prasath.

பழைய ‘ஷோலே’ இந்திப் படத்துல வர்ற மாதிரி ரெண்டு பக்கம் தலை உள்ள காய்ன்ஸ்;

இல்லை, ரெண்டு பக்கம் பூ உள்ள காய்ன்ஸ் வச்சுக்க வேண்டியதுதான்.

 கு.வைரச்சந்திரன்

பௌலிங் கோச், ஃபீல்டிங் கோச் என்று தனித்தனி கோச் இருப்பதுபோல, ‘டாஸிங்' கோச் ஒருவரை நியமிக்கலாம்...

 ஆர். பத்மப்ரியா

டாஸை மூன்று வாட்டி போட்டுப் பார்த்து, ஒரு முறை ஜெயிப்பவரை வெற்றியாளராக அறிவிக்கலாம்.

 மோகன் ராஜன்

பாகம் பிரியாளை நினைத்துக்கொண்டு பிதாமகன் சூர்யா லங்கா கட்டை உருட்டியது போல டாஸ் செய்யவேண்டியதுதான்.

 எம் விக்னேஷ்

காங்கிரஸ் தமிழ்நாட்டுல ஜெயிக்கறதுக்கான ஆலோசனை சொல்லச் சொல்லி முன்னர் வந்த கேள்வியோட வெர்ஷன் 2.0 -வா இந்தக் கேள்வி?

 அஜித்

பரீட்சை எழுதாமலே பாஸ் பண்ணுன மாதிரி புதுசா ஒரு விதிமுறை கொண்டு வந்து, கோலி டாஸ் ஜெயிக்கும்படி செய்யலாம்!

Rajkumarvee69

டாஸில் தோத்தவர்கள்தான் முதலில் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்ய வேண்டும் என ரூல்ஸ மாற்றலாம், அப்பறம் பாருங்க, என் தலைவன் எப்படி ஜெயிக்கறார்னு!

San8416

‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' கார்த்திக் மாதிரி காசைத் தூக்கிப் போட்டு விட்டு, ‘‘மேலே வீசுறது எல்லாம் எனக்கு’’ன்னு சொல்லிவிடலாம்.

balebalu

லோக்கல் கிரிக்கெட் மாதிரி எதிரா டாஸ் விழுந்தா, காத்துக்கு திரும்பிருச்சுன்னு சொல்லி மறுபடியும் டாஸ் போடச் சொல்லலாம்.

manipmp

தமிழக அமைச்சர் ஒருவருக்கு வித்தியாசமான பட்டம் கொடுங்களேன்!

தியாகராஜன்-அலப்பறை அன்லிமிடெட்!

 அவ்வை. கே.

சஞ்சீவிபாரதி

தவறென்று தெரிந்தால் தன் கட்சியினரே ஆனாலும் போட்டுத் தாக்குகிற அளவுக்கு ‘வைப்ரேஷன்’ மோடிலேயே இருக்கும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ‘அதிர்வலை அமைச்சர்’ என்ற பட்டத்தைத் தரலாம்.

 எம்.கலையரசி

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - ‘மெகா முகாம்' சுப்பிரமணியன்.

 இரா.வசந்தராசன்

துரைமுருகனுக்கு ‘நையாண்டி நைனா' பட்டம் கொடுக்கலாம்!

 மலர்சூர்யா

சேகர்பாபு - ‘ஆண்டவன் அனுப்பிய ஆக்‌ஷன் கிங்' (அதிரடியாக கோயில் நிலங்களை மீட்டெடுப்பதால்...)

 ப. சீனிவாசன்

செந்தில் பாலாஜிக்கு ‘அணில் ஆர்வலர்’ பட்டம் சிறப்பாக இருக்கும்.

Paa_Sakthivel

துரைமுருகன் - துரோகிகளைக் கண்டுபிடிப்பதால், ‘பெருஞ் சீமான்' பட்டம்.

JaNeHANUSHKA

செந்தில் பாலாஜி: தி.மு.க-வின் செல்லூரார்!

jerry46327240

முதல்வருக்கு ‘ஜாதகத்தை சாதகமாக்கியவர்.’

vaira.bala.

வாசகர் மேடை: தி.மு.க-வின் செல்லூரார்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. ‘வாகன ஹாரன்களில் இந்திய இசைக்கருவிகள்’ - இந்தமாதிரி

என்ன வித்தியாசமான அறிவிப்புகளை மத்திய அரசு அறிவிக்கலாம்?

2. பொன்விழா காணும் அ.தி.மு.க-வை நிறுவிய எம்.ஜி.ஆர் இப்போது வந்தால் முதலில் எங்கு செல்வார், யாரைப் பார்ப்பார்?

3. ஏதாவது ஒரு தமிழ் சினிமாவுக்கு, ‘புதிய கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு’ வழங்குவது என்றால் எந்த சினிமாவுக்குக் கொடுக்கலாம்?

4. ஏதாவது ஒரு பொருளை வாங்கி, அதை வேறுவிதமாய் வினோதமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? என்ன பொருள்?

5. இந்தப் படத்து இயக்குநரே ஹீரோவாக நடிச்சிருக்கலாமே என்று உங்களை யோசிக்கவைத்த படம் எது, இயக்குநர் யார்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com