சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: கடைசி சீசன் வரை கலக்குவாரு சீமான்!

வாசகர் மேடை
News
வாசகர் மேடை

ரயிலில் இலவசப் பயணம் என்று அறிவிக்கலாம். பிளாட்பாரக் கட்டணம் மட்டும் ரயில் கட்டணத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கலாம்.

ராமரை மையமாக வைத்து பாலிவுட் படங்களும், பேன் இந்தியா படங்களும் வரத் தொடங்கிவிட்டன. என்.டி.ராம ராவ் இடத்தை நிரப்பும் அளவுக்கு இப்போதைய தமிழ் நடிகர்களில் ராமர் வேடத்துக்குப் பொருத்தமானவர் யார்?

ரகுமான்

எஸ்.விஜயலக்ஷ்மி, சென்னை.

ஜீவா அல்லது அஜித்குமார்.

ஆர்.மகேஷ், மதுரை.

ஹரீஷ் கல்யாண்!

நா.இரவீந்திரன்

நாங்கள் ஆன்மிகத்துக்கு எதிரியில்லைன்னு சொல்லிச் சொல்லி மாய்ந்துபோவதைவிட உதயநிதியை ஒரு தடவை ராமர் வேடத்தில் நடிக்க வைத்தால் போதுமே! உள் வேஷமும் நல்லாருக்கும். வெளி வேஷமும் கலையாதே!

ஆர்.ஜி.காயத்ரி, திருநெல்வேலி.

அருண்விஜய் ராமர், தசரதராக விஜயகுமார் நடிக்கலாம்.

பெரியகுளம் தேவா, திண்டுக்கல்.

விக்ரம்

செல்வி ராதா, மதுரை.

ஆர்யா

வண்ணை கணேசன், சென்னை.

சூர்யாதான்...

mekalapugazh

ஒரு சேஞ்சுக்காக நம்ம விஜய் டி.வி ராமரையே நடிக்க வைக்கலாமே!

balasubramni1

வாசகர் மேடை: கடைசி சீசன் வரை கலக்குவாரு சீமான்!

விரைவில் குஜராத் மற்றும் இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களுக்கு பா.ஜ.க எத்தகைய வாக்குறுதிகளை அறிவிக்கும்?

முதற்கட்டமாக குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மக்களுக்கு ‘அந்த 15 லட்சம்' வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்னு அறிவிக்கலாம்!

ப.இராஜகோபால், மன்னார்குடி.

தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரத்திற்கு இத்தனை கோடி ஒதுக்கியிருக்கிறோம். அந்தத் தொகை உங்களுக்கு வேண்டுமா? எங்களுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி ஓட்டை அள்ளலாம்!

ஆர்.ஸ்ரீகாந்தன், சென்னை.

கடன் செயலிகள் மற்றும் ஆன்லைன் ரம்மி மூலம் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களின் அக்கவுன்ட்டில் போடுவோம்.

PG911_twitz

அனைவருக்கும் ஆதி புருஷ் படத்துக்கு இலவச டிக்கெட்...

RavikumarMGR

வீட்டுக்கு ஒரு புல்புல் பறவை வழங்குவோம்.

LAKSHMANAN_KL

எதாருந்தாலும் வடைதான்; இமாச்சலுக்கு மசால் வடை, குஜராத்துக்கு உளுந்து வடை.

aSmallSharp

ரயிலில் இலவசப் பயணம் என்று அறிவிக்கலாம். பிளாட்பாரக் கட்டணம் மட்டும் ரயில் கட்டணத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கலாம்.

h_umarfarook

அரவிந்த் கெஜ்ரிவால் கேஸ் சிலிண்டர் ரூ.500-க்குக் கொடுக்கிறேன்னு சொன்னதால, பா.ஜ.க ரூ.300-க்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கலாம்!

சோமசுந்தரம், சென்னை.

‘இவரை ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிடலை' என்று நீங்கள் நினைக்கும் பிரபலம் யார்?

பைக் டிடிஎப் வாசன்

எம்.விக்னேஷ், மதுரை.

சரத்குமார்

டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

விஜய் டி.வி-யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி!

இர.செல்வநிகிலா

காரசாரமாக விவாதிக்கும் பா.ஜ.கட்சித் தலைவர் அண்ணாமலையை ஏன் இன்னும் அழைக்கவில்லை.

எஸ்.மோகன், கோவில்பட்டி.

இதுவரை ஹெச்.ராஜாவை அழைக்காதது எனக்குப் பெரிய ஏமாற்றம்.

ர.தாயுமானவன், கடலூர்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அழைக்கலாம்.

கண்ணப்பன்

வடிவேலு. நிகழ்ச்சி செம காமெடியா போகுமுங்க.

எம்.கல்லூரி ராமன், ராமநாதபுரம்.

கூல் சுரேஷ், மன்சூர் அலிகான், பெப்ஸி உமா

அஜித், சென்னை.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஏன் கூப்பிடலை? பாட்டு பாடுவார், கிரிக்கெட் ஆடுவார். டவுசர் போட்டுக்கொண்டு அங்குள்ள இளைஞி, இளைஞர்களுக்கு டப் கொடுப்பார்.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

சின்ன புரட்சித்தலைவி ஜெ.தீபா.

PG911_twitz

சீமான். மனுஷன் எப்பவுமே உண்மை மாதிரியே பேசுவாரு, இவரைக் கூப்பிட்டால் பிக்பாஸ் கடைசி சீசன் வரைக்கும் கலக்குவாரு...

saravankavi

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தையும், ஆர்ஜே பாலாஜியையும் அனுப்பலாம்.

h_umarfarook

கிரண்

ArjunJu63516803

வாசகர் மேடை: கடைசி சீசன் வரை கலக்குவாரு சீமான்!

உங்களால் மறக்க முடியாத தீபாவளி... ஏன்?

என் எட்டு வயதில் தீபாவளிக்கு முதல் நாள் இரவுதான் அப்பா துணி வாங்கி வந்தார். அதை டெய்லரிடம் கொடுத்துவிட்டு கடை வாசலிலேயே காத்துக் கிடந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். விழித்துப் பார்க்கும்போது கடை பூட்டியிருந்தது. அந்த தீபாவளிக்கு புதுத்துணி உடுத்தவேயில்லை!

RavikumarMGR

1991 தீபாவளி... ‘குணா' படம் FDFS பார்க்கப் போய், தியேட்டர் கேட் ஏறிக் குதித்ததில் கால் எலும்பில் சின்னக் கீறல் விழுந்து, வலியோடு படம் பார்த்துட்டு வந்து, ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போட்டது!

LAKSHMANAN_KL

முதன்முதலில் என் கையைப் பிடித்து என் அப்பா என்னை வெடி வெடிக்க வைத்த தீபாவளியை என்னால் என்றும் மறக்க முடியாது.

SriRam_M_20

முதல் போனஸ் பணத்தில், ஆசிரமத்தில் இருக்கும் என் அம்மாவுக்கு மோதிரம் வாங்கிக் கொடுத்தது.

AbdulRa04208627

1988. தீபாவளி முன்னிரவு கடும்மழையில் மின்சாரம் துண்டிக்கப்பட, ஊழியர்களாலும் உடனே சரி செய்யமுடியாத சூழல். வேறு வழியில்லாமல் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் குத்துமதிப்பாக லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்து முடித்தோம்.

என்.உஷாதேவி, மதுரை

2010 தீபாவளி. ஊருக்கு டிக்கெட் கிடைக்காமல் பைக்கிலேயே 600 கிலோமீட்டர் முதன்முதலாகப் பயணித்த அந்த நாள்கள் மகிழ்வும் வீரமும் நிரம்பியவை.

அ.பச்சைப்பெருமாள்

போனஸ் இல்லாமல் பாதிச் சம்பளத்தில் கொண்டாடிய ‘கொரோனா தீபாவளி.’

Sivakum31085735

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து சரஸ்வதி வெடியைப் பக்கத்து வீட்டில் மாட்டுக்குப் பக்கத்தில் வெடிக்க, மாடு பயத்தில் கயிற்றை அத்துக்கிட்டு ஓட, மாட்டுக்காரர் ‘மாட்டை நீங்கதான் பிடிச்சுட்டு வரணும்’னு விரட்ட, அரை நாள் ஓடி அந்த மாட்டைப் பிடிச்சோம்.

பெ.பாலசுப்ரமணி

2006 தீபாவளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நான் மாமியார் வீட்டில் தீபாவளி கொண்டாடியபோதுதான் எனக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மகள் பிறந்தாள்.

பி.சுமதி, கோவூர்.

வாழ்க்கையில் யாரைச் சமாதானப்படுத்த நீங்கள் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள், அந்த ஜாலியான சம்பவம்..?

கணவரிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்டு, அதை மறைக்க இன்னொரு பொய் சொல்லி, மற்றொரு நாள் அவர் அதைக் கேட்கும்போது அந்தப் பொய்களை ஞாபகம் வைத்துச் சமாளிப்பது தான்!

இர.செல்வநிகிலா

வேற யாரை, என்னைத்தான். ‘வாழ்க்கை நமக்குப் புடிச்ச மாதிரி மாறும்’னு இன்னும் ஏமாத்திக்கிட்டு இருக்கேன்.

Thaadikkaran

வங்கி ஊழியர்களிடம் அரைகுறை இந்தியில் பேசிச் சமாளித்து, நம்ம தேவையைப் புரிய வைக்குறதுக்கு நாம படுற பாடு இருக்கே...

balebalu

ஏன் அழுகிறதுனே தெரியாத என் குழந்தையைத்தான்! கடைசியில் நான் அழுத பிறகுதான் சமாதானம் ஆனாள்.

Vasanth920

பையனிடமிருந்த ஒரு லேஸ் சிப்ஸை எடுத்து சாப்பிட்டுவிட்டதால், அவன் அழுத அழுகையும், ஒரு சரம் லேஸ் சிப்ஸ் பாக்கெட் வாங்கிக் கொடுத்த பிறகும் சமாதானம் ஆகாமல், நான் சாப்பிட்ட அதே சிப்ஸ்தான் வேண்டுமெனக் கேட்டதும் எந்த அப்பனுக்கும் வரக் கூடாதுங்க!

amuduarattai