சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை - மொத்தம் மூணு முதல்வர்கள்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

கடுப்பில் தினகரன் தர்மயுத்தம் செய்வாரு.

? சசிகலா முதல்வர். பன்னீர்செல்வமும் பழனிசாமியும் துணைமுதல்வர்கள் என்றால் என்ன நடக்கும்?

முதல்வர் சசிகலா காலில் யார் அதிகம் விழுந்தார்கள் எனப் பத்திரிகைகளில் போட்டி வைப்பார்கள். - கதிஜா ஹனிபா, திருச்சி.

துணைமுதல்வர்களில் முதல் துணை முதல்வர் யார் என்று பன்னீர் செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் சண்டை நடக்கும்! - ஆர்.அஜிதா, கம்பம்

`சின்னம்மாதான் எங்க மம்மி...ஸ்டாலின் எப்பவுமே டம்மி' என ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் கூட்டாகப் பேட்டி கொடுப்பார்கள். - RamAathiNarayen

இப்பொழுது இருமுனைப் போர் நடக்கிறது.இனி மும்முனைப்போர் நடக்கும். - Kirachand1

மிக்சி இருக்கும் வீட்டில் ஒரு அம்மிக்கல்லே தேவையில்லை. இரண்டு அம்மிக்கல் எதற்கு என மக்கள் நினைப்பார்கள். - IamUzhavan

பிரதமராக இருக்கும் ஜெ.தீபா தமிழக ஆட்சியைக் கலைக்க ஜனாதிபதி மாதவனுக்குப் பரிந்துரைப்பார்! - h_umarfarook

கடுப்பில் தினகரன் தர்மயுத்தம் செய்வாரு. - RahimGazzali

ஓபிஎஸ் தர்மயுத்தம் பண்ணிக்கிட்டே பீச்சில் சுண்டல் விற்பார். இபிஎஸ் மக்காச்சோளம் பொரிச்சுக் கொடுப்பார். - RavisankarBose

சசிகலாவைத் தவிர அனைவரும் மாஸ்கைக் கழற்றிவிட்டு ப்ளாஸ்த்ரி போட்டுக் கொள்வார்கள். - சிவராமகிருஷ்ணன், சென்னை

வாசகர் மேடை - மொத்தம் மூணு முதல்வர்கள்!

? இந்த ஐபிஎல் தொடரில் உங்களைக் கடுப்பேற்றும் விஷயம் எது?

"Virtual guest box-இல் உள்ள ரசிகர்களின் செயல்கள் எரிச்சலூட்டுகிறது" தனசேகரன், சென்னை

போலியாக உருவாக்கப்பட்ட பார்வையாளர்களின் சத்தம். - பிரநவ் சேஷாதிரி, திருப்பூர்

கேதார் ஜாதவ் - ரிஃபா திருமங்கலக்குடி

ரசிகர்கள் இல்லாததால் ஆர்வம் குறைந்து விளையாடும் பேட்ஸ்மென், பவுலர்கள். - eromuthu

பிக் பாஸ் - ஐபிஎல் இடையே ஏற்பட்டுள்ள `நேர மோதல்' - vc.krishnarathnam

ட்ரீம்11 ல நம்ம எடுக்காத பவுலர் விக்கெட் எடுக்குறது....எடுத்த பவுலர் பாயின்ட் மைனஸ்ல போறது... இதுல அந்த பவுலர் கேப்டன்னு சொல்லும்போது கூடுதல் சோகம். - L0nely_Mind

வீரர்கள் சிங்கிள் ரன்னுக்கு ஓடும் போதும் ஆடியோ ஒலி சிக்ஸ் அடித்தது மாதிரி போடுவது. - balasubramni1

அவ்வளவு பெரிய சிக்ஸர் அடித்து ஆள் இல்லாத இடத்தில் விழும் பந்தைப் பார்த்தால்… - KRavikumar39

கேபிளில் பார்ப்பவர்களுக்கு தமிழ் வர்ணனையில் தான் ஐபிஎல் என்று கட்டாயம் ஆக்கியது, அரசு கேபிளும் எங்க ஊரில் வரல. - SriRam_M_20

சிஎஸ்கேவின் டாடி அணி. - UDAYAKUMARKR202

அம்பயர்ஸ் எல்லாம் விளையாடறாங்களோன்னு சந்தேகப்படற அளவுக்கான அம்பயர்ஸ் நடவடிக்கைகள் எல்லாமே, கடுப்பேத்தறாங்க மை லார்ட்... - SowThanishka

காமெடினு நினைச்சுக்கிட்டு கண்றாவியா பண்ணும் கமென்ட்ரிதான்! - NedumaranJ

தோனியின் கேப்டன்சி... பொங்கல் சாப்பிட்டு மேட்ச்க்குப் போன மாதிரி இருக்கு. - msrirammca

என்னவோ 50 ஓவர் கிரிக்கெட் ஆடற மாதிரியே டாட் பால் ஆடறது... - SowThanishka

? டென்ட் கொட்டாய், ஷாப்பிங் மால் தியேட்டர், ஓ.டி.டி - வித்தியாசங்களைக் கவிதையா சொல்லுங்க பார்ப்போம்!

முழு இருட்டில் டென்ட் கொட்டாய்

அரை இருட்டில் மால் தியேட்டர்

முழு வெளிச்சத்தில் ஓ.டி.டி. - எம் விக்னேஷ், மதுரை

அமர்ந்து பார் சாய்ந்து பார் படுத்துப் பார். - Adhirai Yusuf

மண்ணுலயும் சீட்லயும் உட்கார்ந்து பார்த்ததைவிட வீட்ல ஹாயாக ரிலாக்ஸாக ஓ.டி.டில பார்க்கற சுகமே தனி! - UDAYAKUMARKR202

டென்ட் கொட்டாய் : ஒரே படம் தான் வேறு சாய்ஸ் கிடையாது!

மால் தியேட்டர் : நாலைந்து படத்தில் ஒரு படம் செலக்ட் செய்யலாம்!

ஓ.டி.டி : உலகத் திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கும்! எதைப் பார்ப்பது எதை விடுவது? - balebalu

டென்ட் கொட்டாய் - கசங்கிய உடை

மால் தியேட்டர் - பார்மல் டிரஸ்

ஓ.டி.டி - லுங்கி, பனியன் - parveenyunus

வாசகர் மேடை - மொத்தம் மூணு முதல்வர்கள்!

? உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் ஒன்லைன் சொல்லுங்க.

டைம் மெஷினில் 2021, 2026, 2031 வரை ட்ராவல் செய்து பார்த்துவிட்டு வருவது போல் எடுக்கலாம்! - நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

பொறுங்க செல்லூர் ராஜூகிட்ட நல்ல கதை இருக்கும். கேட்டுட்டு வந்து சொல்றேன். - balasubramni1

ஏழாம் அறிவு படத்தில் வருவதைப்போல ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் அவரது டி.என்.ஏ-வைத் தூண்டி கலைஞரின் அனைத்துத் திறன்களையும் (பேச்சு, எழுத்து, ராஜதந்திரம்) ஸ்டாலினுக்கு வரவைக்க உதயநிதி உதவி செய்து ஸ்டாலினை முதல்வராக்குவது. - SriRam_M_20

டைம் மிஷினில் ஏறி தாத்தாவிடம் ஐடியா கேட்டு வந்து அரசியல் நடத்தி ஆட்சி நடத்துகிறார். - KRavikumar39

Fantastic four-இல் ஒருவர்போல சூரிய சக்தியை அவர் கையில வெச்சிட்டு வித்தை காட்டி ஓட்டு வாங்குவார். - RavisankarBose

? இ-மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸப், மெசஞ்சர் எல்லாவற்றுக்கும் தடை போட்டுவிட்டு ‘இனி கடிதம்தான் எழுதவேண்டும்’ என்றால் என்ன செய்வீர்கள்?

முதலில் இன்லேண்ட் லெட்டரை கிழியாமல் பிரிப்பது எப்படி என்று அனுபவப்பட்டோரிடம் கேட்டுப் பயிற்சியெடுப்பேன். - எஸ்.பிரபு, தேனி

கையில இருக்கிற போஸ்ட் கார்டுகளை என்ன பண்ணுறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்... இப்படி ஒரு வாய்ப்பு வந்தா கடிதங்களா எழுதி போஸ்ட்கார்டுகளைத் தீர்த்துட வேண்டியதுதான்! - RamAathiNarayen

ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும் ‘இதில் ஏதும் தப்பிதமாக இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்’ என்று எழுதவேண்டி வரும். - krishmaggi

12.10.2020 தேதியிட்ட தங்களின் கடிதத்துக்கான எனது பதில் என்று எழுதத் துவங்குவேன். - pachaiperumal23

அன்பும் பன்பும் பாசமும் நேசமும் கொண்ட மாமா அவர்களுக்கு மருமகப்பிள்ளை எழுதிக்கொள்வது என்று ஜமாய்க்க வேண்டியதுதான். - ARiyasahmed

ஊருக்குப் போயி லெட்டர் போடு என்ற வார்த்தைகளுக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கும். - h_umarfarook

பழையபடி ஒரு ‘வாசனை மை’ பேனா வாங்கிடணும். - krishmaggi

எவ்வளோ டெக்னாலஜி வந்தாலும் மாநில அரசு மத்திய அரசுக்குக் கடிதம்தானே எழுதுது. அதையே நாமளும் பாலோ பண்ண வேண்டியதுதான். - vrsuba

உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் போன்ற அபத்தங்களிலிருந்து தப்பித்தோம் எனப் பெருமூச்சு விடுவேன். - செல்லதுரை, சென்னை

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை - மொத்தம் மூணு முதல்வர்கள்!

? யாரையும் புண்படுத்தாமல் திரைப்படம் எடுப்பது எப்படி?

? 10 ஆண்டுகளில் மூன்று கட்சிகள் மாறியிருக்கும் குஷ்புவுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்?

? அடுத்த நிதியாண்டிலாவது இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா சொல்லுங்களேன்.

? எட்டு மாதங்களாக யாரும் செல்லாத மெரினா கடற்கரைக்குப் பேசும் சக்தி வந்தால் என்ன பேசும்?

? ‘புன்னகை அரசி’, ‘புன்னகை இளவரசி’ என்று நடிகைகளுக்குத்தான் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். நடிகர்களில் ‘புன்னகை அரசன்’ பட்டத்தை யாருக்குக் கொடுக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.