சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: சிட்டி ரோபோ நம்பியார்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

யார் வேணா சிம்புவா, எஸ்.ஜே.சூர்யாவா, எஸ்.ஏ.சியா நடிக்கட்டும்... ஆனால் டைரக்டர் மட்டும் நம்ம மோடி ஜீதான்...

எம்.என் நம்பியார் பயோபிக்கில் இப்போதைய நடிகர்களில் யார் நடித்தால் பொருத்தமாய் இருக்கும்?

‘‘ஹூ இஸ் த பிளாக் ஷீப்... வஷீ...” என்று குரூரமான வில்லத்தனம் காட்டும் சிட்டி ரோபோவே நம்பியாரின் நவீன பாத்திரம்தான். ஆக, நம்பியார் ரோலுக்கான நம்பர் ஒன் சாய்ஸ் ரஜினிதான்!

சு.அருண்பிரகாஷ்

எம்.என்.நம்பியார் போலவே தலையை ஆட்டி, கைகளைப் பிசைந்து, குரூரமாகப் பேசி வில்லத்தனம் காட்ட மன்சூரலிகான் மிகவும் பொருத்தமானவர்.

ராம்ஆதிநாராயணன்

வில்லத்தனம் நிறைந்த நடிப்பில் வேல இராமமூர்த்தி பொருத்தமாக இருப்பார்.

ப.இராஜகோபால்

ஹரீஷ் பெராடி. நம்பியார் போல ரிசம்பிலன்ஸ் உள்ள அவர் பொருத்தமாக இருப்பார்.

செந்(தில்)வேல்

எம்.என்.நம்பியார் பயோபிக்கில் நாசர் கலக்குவர்.முகபாவமும் உடல் மொழியும் பக்காவாகப் பொருந்தும்.

K.யாழின்பம்

எம்.என்.நம்பியார் போன்றே தாடை அமைப்பும், தீர்க்கமான பார்வையும் கொண்ட பிருத்விராஜ் சுகுமாரன் தாராளமாக நடிக்கலாம்..!

LAKSHMANAN_KL

பல படங்கள் பார்த்து மெருகேறிக்கொண்டிருக்கும் அண்ணன் கார்த்தி சிதம்பரம் கச்சிதமாகப் பொருந்துவார். எம்.ஜி.ஆர் ஆக ராகுல் நடித்தால் இன்னும் பிரமாதமாகப் பண்ணுவார்...

DevAnandR155

குரூப், தள்ளுமலா போன்ற படங்களில் கலக்கிய வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, நம்பியாராக பின்னிப் பெடலெடுப்பார்.

IamJeevagan

கொஞ்சம் உடம்பை ஏற்றி பகத் பாசில் நடிக்கலாம். கண்ணே போதும், கத்தி வேண்டாம். சேட்டனுக்கு சேட்டன்...

SaiAzhagesh

ஆனந்தராஜின் நடிப்பே குட்டி நம்பியார் போலத்தான் இருக்கும். எனவே ஆனந்தராஜ் பொருத்தமாக இருப்பார்.

amuduarattai

நடிகர் ராஜீவ்... நிறம், சாயல், நடிப்பு என மிகப் பொருத்தமாக இருப்பார்.

sankariofficial

கும்பல் கும்பலாய் கிளம்பிச் செல்லும் தன் கட்சித் தலைவர்களைத் தடுக்க ராகுல் காந்திக்கு ஐடியா கொடுங்களேன்...

வாசகர் மேடை: சிட்டி ரோபோ நம்பியார்!

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருவர் சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிக்கலாம்’ என்று அறிவிக்கலாம்.

அஹமத்

காங்கிரசில் வெகு காலம் இருப்பவர்களுக்கு ‘வாழ்நாள் சகிப்பாளர்' விருது கொடுத்து கௌரவிக்கலாம்.

ஈனோஸ் இப்ராஹீம்

பெரிய கடையில் பணியாற்றிய பின்பு பிரிந்து சென்று கடை தொடங்கு பவர்கள் (வாடிக்கை யாளர்களைக் கவரவும் + குழப்பவும்) பழைய கடையின் பெயரையே தன் புதிய கடைக்கு வைப்பார்கள். போனால் போகிறதென்று பெயருக்கு முன்னால் பொடி எழுத்தில் நியூ என்று எழுதுவார்கள். ராகுல்காந்தியும் அதைப் பின்பற்றி தன் கட்சியின் பெயரை ‘நியூ பா.ஜ.க’ என்று மாற்றிவிடலாம்.

ஆர்.ஸ்ரீகாந்தன்

‘உங்களில் யார் காங்கிரஸ் கட்சித் தலைவர்?' என்ற நிகழ்ச்சியை டெல்லியில் நடத்தி, தற்காலிகமாகத் தடுக்கலாம்!

மன்னார்குடி இராஜகோபால்.

அஞ்சு வருஷம் கட்சியில் இருந்தால், ஆறாவது வருஷத்திலிருந்து தகுதிக்கேற்ப இயர்லி இன்கிரிமென்ட் கொடுக்கலாம்.

urs_venbaa

உறுப்பினர் அட்டையில் GPS ட்ராக் சேர்த்துக் கொடுத்து விட்டால் யார் எங்கு ரகசியமா பேசுறாங்கன்னு ஈசியா கண்டு பிடித்து அதைத் தடுக்கலாம்.

balebalu

‘அச்சமின்றி அமலாக்கத் துறையைச் சந்திப்பது எப்படி’ என்று மீதமுள்ள தலைவர்களுக்குப் பயிற்சி வகுப்பைத் தொடங்கலாம்.

pbukrish

‘நீங்க ஈசியா விட்டுட்டுப் போயிடுறீங்க... நான் யார்கிட்ட விட்டுட்டுப் போறது’ன்னு தனது கையறு நிலையைச் சொல்லி, பாசத்தில் கட்டிப் போடலாம்.

manipmp

90ஸ் கிட்ஸ் 2k குழந்தைகளுக்கும், 2k குழந்தைகள் 90ஸ் கிட்ஸுக்கும் பரஸ்பரம் ஒரு அட்வைஸ் தரலாமென்றால் என்ன தருவார்கள்?

90ஸ் கிட்ஸ்: அதைச் செய்யாதே. இதைச் செய்யாதே.

2k குழந்தைகள்: அதைச் சொல்லாதீங்க. இதைச் சொல்லாதீங்க.

பர்வீன் யூனுஸ்

90ஸ் கிட்ஸ் டு 2k கிட்ஸ்: சும்மா செல்ல நோண்டாம போய்ப் படி!

2k கிட்ஸ் டு 90ஸ் கிட்ஸ்: மண்டையில முடி கொட்டிக்கிட்டே இருக்கு, சீக்கிரம் கல்யாணம் பண்ணு!

கு.வைரச்சந்திரன்

90ஸ் கிட்ஸ்: மாதா, பிதா, குரு, தெய்வம்னு இருந்ததை மாத்தி வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம்னு நீங்க போறது நல்லதுக்கில்ல!

2k குழந்தைகள்: முதல்லே உங்க அட்வைஸை நிறுத்துங்க. எங்களவிட நீங்கதான் இதிலெல்லாம் ஆக்டிவா இருக்கறதா ஒரு சர்வே சொல்லுது.

ஆர்.ஹரிகோபி

90s கிட்ஸ்: வெப் சீரிஸிலே மூழ்கிக் கிடக்காதீங்க!

2k கிட்ஸ்: மெகா சீரியலிலே மூழ்கிக் கிடக்காதீங்க!

பெ.பாலசுப்ரமணி

90ஸ் கிட்ஸ்: செல்போனைத் தவிர்க்கவும்!

2k கிட்ஸ்: சிங்கிளாகவே இருப்பதைத் தவிர்க்கவும்!

absivam

90ஸ் கிட்ஸ்: அரியர் விழுதேன்னு கவலைப்படாதே!

2k கிட்ஸ்: வழுக்கை விழுதேன்னு கவலைப்படாதே!

ParveenF7

விரைவில் 5ஜி இணையசேவை வரப்போகிறது. இந்த நேரத்தில், பழைய பட்டன் போன்களில் நீங்கள் மிஸ் பண்ணும் விஷயம் எது?

ஒவ்வொரு பட்டனையும் அழுத்தும்போது ஏற்படும் அலாதியான சவுண்டு மிஸ் பண்ண முடியாதது.

பா.சக்திவேல்

வாங்கின நாள்ல இருந்து, அது வேண்டாம் என்று நாம் முடிவு செய்த நாள் வரை, ஒத்தைப் பைசா ரிப்பேர் செலவு வெச்சதில்லீங்க அந்தத் தங்கக் குட்டி.‌

ஆர்.பிரசன்னா

பாம்பு கேம் விளையாடுவது, ரோப் கட்டி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு ஒரு எக்ஸிகியூட்டிவ் லுக்குடன் வலம் வருவது, அவ்வளவு சீக்கிரம் தீராத சார்ஜ்... ம்ம்ம்...

S.பற்குணன்

எவ்வளவு செலவு செய்து ஸ்மார்ட் போன் வாங்கினாலும் ஹெட்போன் இல்லாமல் எஃப். எம் கேட்கும் வசதி வருமா?

கீதா பூபேஷ்

நகத்தால் ரீ-சார்ஜ் வவுச்சர்களைச் சுரண்டியது!

நா.இரவீந்திரன்

பட்டன் போனில் msg அனுப்புவதில் schedule send வசதி இருக்கும். இப்போது வரும் போன்களில் அந்த வசதி இல்லை (பிறந்ந நாள் வாழ்த்து 12.01AMக்கு செட் செய்துவிட்டுத் தூங்கிவிடலாம்).

Sivakum31085735

வெளியூர் போகும்போது சார்ஜர் எடுத்துட்டுப் போக வேண்டிய அவசியமே இருந்ததில்லை. ஒரு முறை சார்ஜ் போட்டு புல்லானா போதும், பேட்டரி ஒரு வாரம் தாங்கும்!

h_umarfarook

கங்காருக்குட்டி போல் பாக்கெட்டில் இருந்து என்றுமே எட்டிப் பார்க்க முற்பட்டதில்லை.

kayathaisathya

வாசகர் மேடை: சிட்டி ரோபோ நம்பியார்!

‘மாநாடு’ படம் போல, ‘பொதுக்குழு’ எனத் தலைப்பு வைத்து அ.தி.மு.க-வின் தற்போதைய விவகாரங்களை ‘செல்லும், செல்லாது, ரிப்பீட்டு’ எனப் படமாக எடுத்தால், அதில் யார் சிம்பு? யார் எஸ்.ஜே.சூர்யா? யார் எஸ்.ஏ.சந்திரசேகர்?

தண்ணீர் பாட்டிலைத் தாங்கும் ஓ.பி.எஸ்ஸாக (சொந்த மகனால் சோதனையில் உள்ள) எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கலாம். ‘வா வா எங்கிட்ட மோதத் தயாரா?' என ஆர்ப்பரிக்கும் எடப்பாடியாக சிம்பு, சொன்னதையே ரிபீட்டடாக மைக்கில் சொல்லும் ஜெயக்குமாராக எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம்.

அ.சுகுமார்

சிம்பு: ஈ.பி.எஸ், எஸ்.ஜே.சூர்யா: ஓ.பி.எஸ், எஸ்.ஏ.சந்திரசேகர்: டிடிவி.தினகரன்

எஸ்.எல்.ஜார்ஜ் அருண்

சிம்புவாக டிடிவி.தினகரனும், எஸ்.ஜே.சூர்யாவாக சி.வி.சண்முகமும், எஸ்.ஏ.சந்திரசேகராக எடப்பாடியாரும், ஒய்.ஜி.மகேந்திரனாக ஓ.பி.எஸ்ஸும் நடித்தால் ‘பொதுக்குழு' குதூகலமா இருக்கும்!

பா.து.பிரகாஷ்

யார் வேணா சிம்புவா, எஸ்.ஜே.சூர்யாவா, எஸ்.ஏ.சியா நடிக்கட்டும்... ஆனால் டைரக்டர் மட்டும் நம்ம மோடி ஜீதான்...

RavikumarMGR

சிம்பு: அமித்ஷா, எஸ்.ஏ.சந்திரசேகர்: பன்னீர் செல்வம், எஸ்.ஜே.சூர்யா: எடப்பாடி.

vijiraja4

வாசகர் மேடை: சிட்டி ரோபோ நம்பியார்!

* காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸில் இல்லாத ஒரு தலைவர் நிற்கலாம் என்றால் யார் உங்கள் சாய்ஸ், ஏன்?

* பாரதிராஜா முதல் எஸ்.ஜே.சூர்யா வரை இயக்குநர்கள் நடிக்கும் காலம் இது. மணிரத்னம் நடிக்க வந்தால் எந்த கேரக்டரில் நடிக்கலாம்?

* இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டருக்கு ஒரு மாதம் லீவு கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்?

* தங்கள் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிச் சிக்காமலிருக்க ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்?

* ‘இருக்கு, ஆனா இல்லை' என்று வாழ்க்கையில் உங்களுக்குத் தோன்றும் விஷயம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!