? தேர்தலைத் தேர்வுமுறையாக மாற்றினால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன கேள்வி கேட்கலாம்?
எடப்பாடிக்குக் கேள்வி: ஆட்சியைக் கவிழாமல் பார்த்துக்கொண்டது எப்படி என்பது பற்றிச் சிறு குறிப்பு வரைக...
ஸ்டாலினுக்குக் கேள்வி: `நான் முதலமைச்சர் ஆனால்’ என்ற தலைப்பில் கற்பனை வளத்துடன் கட்டுரை வரைக...
எஸ். மோகன், கோவில்பட்டி
ஸ்டாலின்: உயிரெழுத்தில் இரண்டாம் எழுத்தும் வல்லினத்தில் முதல் எழுத்தும் சேர்ந்தால் என்ன வார்த்தை கிடைக்கும்?
இ.பி.எஸ்: குழந்தை சிறுவயதில் தரையில் ______ ழும்: நிரப்புக.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
balasubramni1
To Eps-பாசத்தில் சிறந்தவர் அம்மாவா, சின்னம்மாவா?
To Stalin-பண்பில் சிறந்தவர் அண்ணனா, தம்பியா?
urs_venbaa
எடப்பாடி : கம்பராமாயணத்தை எழுதியது யார்?
ஸ்டாலின் (நிரப்புக) : யானை வரும் ------- மணியோசை வரும் --------.
KarthikeyanTwts
எடப்பாடி பழனிச்சாமி: எட்டுவழிச் சாலை காண்ட்ராக்டுக்கு ஒரு கி.மீ-க்கு எவ்வளவு கமிஷன்?
ஸ்டாலின் : அண்ணா அறிவாலயம் மூலப்பத்திரம் யார் பெயரில் இருக்கிறது?
absivam
எடப்பாடியிடம் : இரட்டை இலையில் மொத்தம் எத்தனை இலைகள் இருக்கின்றன?
ஸ்டாலினிடம் : திருவள்ளுவர் பிறந்த ஆண்டைக் கூறவும்...
jerry
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS? உங்க வித்தியாசமான தீபாவளி பிளான் சொல்லுங்க...
பலகாரங்களைத் தவிர்த்து கபசுரக்குடிநீர், நிலவேம்புக் கசாயம், முருங்கையிலைச்சாறு போன்றவற்றைப் பருகுவேன்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
‘தீபாவளி கொண்டாட மாட்டேன் போடா’ - டிஷர்ட் போட்டுக்கொண்டு தீபாவளி கொண்டாடுவேன்.
எம் விக்னேஷ் மதுரை
மாஸ்க் போட்டு பட்டாசு வெடிப்பேன்.கொரோனா, பட்டாசுப் புகை இரண்டிலிருந்தும் தப்பிக்கலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

ச.நரேஷ்,சென்னை.
“நித்தியோட ‘கைலாச’ நாட்டுக்கு டிரிப் அடிக்கலாம்னு இருக்கோம்!”
பா து பிரகாஷ், தஞ்சை
கொரோனா வெடின்னு ஒண்ணு வரும். அதைக் கண்டிப்பா வெடிக்கணும்.
jairamguttuvan
நடக்குறது, பறக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, இவற்றை வகைக்கு ஒன்றாக ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் தூங்கினால்தான் அந்த தீபாவளிக்குப் பெருமை.
krishmaggi
ஆளேயில்லாமல் ஐபிஎல்லில் ஆடியன்ஸ் இருக்கிற மாதிரி சவுண்ட் எபெக்ட் தருவது போல் வெடியே வெடிக்காமல் மொபைலில் விர்ச்சுவல் தீபாவளி கொண்டாட ஒரு ஆப் வராமலா போயிடும்?!
h_umarfarook
கொரோனா டைம் என்பதால் உறவினர்களுடன் ஜூமில் பேசுவேன்.
snareshtamilan
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
? விஜய்யும் அஜித்தும் ஒரு சரித்திரப் படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
இரட்டைக் குழல் துப்பாக்கி
ஜெ.ஜான்சி சுப்புராஜ், கடலூர்
ஆயிரம் `தலை’ வாங்கிய அபூர்வ `தளபதி’
Elanthenral
தல தளபதியின் பார்வையிலே
urs_venbaa
ஒரு ஊர்ல இரண்டு ராஜாக்கள்
rajusundararaja
எதிரும் புதிரும்
RahimGazzali
வேதாள உலகில் பாதாள பைரவா
laks veni
? ஒருவேளை தமிழகம் இந்தித் திணிப்பை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
“கட்டற கம்பி ஸ்ட்ராங்கா இருந்தா கட்டடமும் ஸ்ட்ராங்கா இருக்கும்ல”ன்னு கேட்டுக்கிட்டு சரத்குமார் சமுத்திரக்கனியோடு சல்மான்கானும் ஒரு முறுக்குக் கம்பியோடு வந்திருப்பார்!
எஸ். வைத்தியநாதன், மதுரை
வடநாட்டுத் தலைவர்கள் மொழிபெயர்ப்பு இல்லாமலே நிகழ்ச்சிகளில் பேசுவார்கள்.
மொஹம்மது யூசஃப்
பார்லியில் எம்.பி நவநீத கிருஷ்ணன் `காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீரு’க்கு பதிலாக `கபீ கபீ மேரே தில் மே’ பாடியிருப்பார்.
பிரியதர்ஷினி, மதுரை
விகடன் இந்தியிலயும் ஒரு பதிப்பு வெளியிட்டிருக்கும்...
ssuba_18
ஹோட்டலில் “ஒரு மீல்ஸ்” என்று சொல்வதற்குப் பதில் “ஏக் தாலி” என்று கேட்டிருப்போம்.
வேலிடுபட்டி நவனீ
எடப்பாடியாருக்கு `வீர சாவர்க்கர் விருது’ வழங்கப்பட்டிருக்கும்.
balasubramni1
கல்யாண விருந்தில் பானிபூரி முதலிடம் பிடித்திருக்கும்.
RamAathiNarayen
நமிதாவின் தமிழ் உச்சரிப்புகளை மிஸ் பண்ணியிருப்போம்.
HariprabuGuru
பெயர் சூட்டும் பேஷன் இப்படி இருக்கும்... பாரதி பச்சன், அவ்வை சோப்ரா.
AAdhirai yusuf
? பழைய கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும்போது ‘அட இந்தக்காலப் படத்தைவிட பெட்டரா இருக்கே?’ என எந்த அம்சம் உங்களுக்குத் தோன்றும்?
காமெடிக் காட்சிகளின் மூலம் சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொன்னது... இப்போ எங்கே அதெல்லாம்?
எஸ்.ஏ.விஜயலஷ்மி, தஞ்சாவூர்
ஹீரோ ஹீரோயின் இடையேயான சோஷியல் டிஸ்டன்ஸிங்.
கு ராஜஸ்வாதி பிரியா
தொழில்நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே புராணப் படங்களில் இருக்கும் தத்ரூபமான பிரமாண்டமான காட்சிகள்.
balasubramni1
சிறுத்தை, கரடிகூட ஹீரோஸ் போடுற சண்டை!
San8416
வசன உச்சரிப்புதான்.
h_umarfarook
அந்தக்காலத்திலேயே பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வட இந்திய சினிமாக்களை மிரட்டிய சந்திரலேகா போன்ற படங்களின் பிரமாண்டம்.
RamuvelK
தர்மயுத்தம் 2.O எப்போ ஆரம்பம்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? சீமான் இப்போது படம் இயக்கினால் என்ன டைட்டில் வைப்பார்?
? பிரியாணி பற்றி நாலு வரியில் நறுக் கவிதை சொல்லுங்க, பார்ப்போம்!
? தலைவர் இல்லாத காங்கிரஸுக்கு மோடி தலைவரானால் எப்படி இருக்கும்?
? அக்டோபரில் பள்ளிகள், நவம்பரில் கல்லூரிகள் திறப்பு - உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
? உங்கள் ஊர்த்திருவிழாவில் நடந்த ஜாலியான சம்பவம் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள்...
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.
ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com