Published:Updated:

வாசகர் மேடை: எக்ஸ்க்யூஸ் மீ ஏலியன்ஸ்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

ரஜினிகாந்த் - நடிப்புக்கு முழுக்குப் போட்டிருப்பார். ஒருவேளை சினிமாவில் யாராவது ‘முதல்வர்' ரோல் தந்தால் நடிக்க முன்வரலாம்.

வாசகர் மேடை: எக்ஸ்க்யூஸ் மீ ஏலியன்ஸ்!

ரஜினிகாந்த் - நடிப்புக்கு முழுக்குப் போட்டிருப்பார். ஒருவேளை சினிமாவில் யாராவது ‘முதல்வர்' ரோல் தந்தால் நடிக்க முன்வரலாம்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

2040-ல் நம் முன்னணி ஹீரோக்கள் என்ன பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள்?

விகடனில் வெளிவந்த பிரபல நாவல் ‘வீரயுக நாயகன் வேள்பாரி' பிரமாண்டமான திரைப்படமாக எடுக்கப்பட்டு, அதில் முன்னணி ஹீரோக்கள் பலர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார்கள்.

 வெ. இராமானுஜம்

விஜயண்ணா... முதலமைச்சர் கதாபாத்திரம்.

ananthi.ramakrishnan.

‘சிங்கம் 10’-ல் சூர்யாவும், ‘காஞ்சனா 10’-ல் ராகவா லாரன்ஸும், ‘இந்தியன் 5’-ல் கமலும் அந்தந்த கேரக்டர்களிலேயே நடித்துக் கொண்டிருப்பார்கள்.

 எஸ். ராஜம்

விஜய், ‘சார்பட்டா பரம்பரை - 4' திரைப்படத்தில், நடிகர் பசுபதி நடித்த வாத்தியார் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருப்பார்.

 ஆர். பத்மநாபன்

ரஜினிகாந்த் - நடிப்புக்கு முழுக்குப் போட்டிருப்பார். ஒருவேளை சினிமாவில் யாராவது ‘முதல்வர்' ரோல் தந்தால் நடிக்க முன்வரலாம். (சினிமாவில் முதல்வராவது ஈஸி என்பதால்...)

 க.விஜயபாஸ்கர்

தனுஷ் - தமிழில் அவ்வப்போது மட்டும் தலை காட்டுவார். மற்றபடி ஹாலிவுட் உலகமே அவர் உலகம். ஆஸ்கர் அவார்டுகளை வரிசைப் படுத்தி வைக்க இடம் தேடிக் கொண்டிருப்பார்.

 ஜெ. மாணிக்கவாசகம்

‘சென்னை மாநகர் கடலுக்குள் மூழ்கியது எப்படி...’ என்கிற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையில், ஒரு புது இயக்குநரின் பெயரிடப்படாத புதுப்படத்தில், கடல் ஆராய்ச்சியாளராக வயதான தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கலாம்.!

 கே.எம்.ரவிச்சந்திரன்

இப்ப நடிக்குற அதே பாத்திரம்தான். என்ன ஒண்ணு, பலராலும் தனியா தாக்குப்பிடிக்க முடியாது. Fast and Furious, The Expendables, Guardian of the galaxy-ன்னு மல்டி ஸ்டாரர் படங்களா இருக்கும்.

 அஜித்

ராகவா லாரன்ஸ் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரீமேக்கில் ‘நம்பியார்' ரோலில் நடித்துக் கொண்டிருப்பார்.

 க.கீராசந்த்

சூர்யா - அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு.

 மலர்விழி

கமல் ‘மருதநாயகம்’ படத்தை 75% முடித்து விட்டு, புது இயக்குநர்களின் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார்!

San8416

இரஞ்சித் இயக்கத்தில் ‘டான்சிங் ரோஸ் வகையறா' படத்தில் டைட்டில் ரோலில் பிரபுதேவா நடித்துக்கொண்டிருப்பார்.

ParveenF7

வயசான கிராமத்துப் பெருசாக வந்து, பழமொழியும், அறிவுரையும் தந்து, இளைஞர் களைத் தெறிக்க விட்டுக்கொண்டிருப்பார் சமுத்திரக்கனி.

KRavikumar39

நம்ம நடிகர்கள் ரோபோட்டாக நடித்தது போய், ரோபோட்கள் நம்ம நடிகர்களின் பயோபிக்கில் நடித்துக்கொண்டிருக்கும்.

IamJeevagan

வாசகர் மேடை: எக்ஸ்க்யூஸ் மீ ஏலியன்ஸ்!

தி.மு.க அரசின் வழக்குகளைத் தவிர்க்க எடப்பாடி - பன்னீருக்கு ஜாலி ஆலோசனைகள் ப்ளீஸ்...

இருவரும் சேர்ந்து உதயநிதியை ஹீரோவா போட்டு ஒரு படம் தயாரிக்கலாம்..!

 கே.லக்‌ஷ்மணன்

அதான் ஓ.பி.எஸ்-ஸே, ‘என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்’னு சொல்லிட்டாரே... இதுக்கு மேலே நாம என்ன ஐடியா சொல்லிட முடியும்?

 எஸ்.இராஜேந்திரன்

இரண்டு பேரும் டில்லிக்குப் போறத விட்டுட்டு ஜிம், சைக்கிள் ரைடுன்னு போகலாம். அங்க ஸ்டாலின் வருவார். அப்படியே பேசி சமாதானம் ஆக முயற்சி செய்யலாம்.

pbukrish

பழைய கலைஞர் திரைப்படங்களை டி.வி-யில் பார்த்து ரசிப்பது போல் போட்டோ எடுத்துப் போடலாம்.

balebalu

2 டிக்கெட் வாங்கிக் கைலாசா நாட்டுக்குப் போய்விடுவது நல்லது..!

SJB56856832

வாசகர் மேடை: எக்ஸ்க்யூஸ் மீ ஏலியன்ஸ்!

சுப்பிரமணியன் சுவாமி தமிழக பா.ஜ.க தலைவர் ஆனால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?

குஷ்புவின் துணையுடன், கமலாலயத்தில் ‘கலகலப்பு 3' படத்தை சுந்தர்.சி தொடங்கி விடுவார்...!

 மணிமேகலை பாலு

‘இதுவும் பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றி’ன்னு டாக்டர் ராமதாஸ் அறிக்கை கொடுப்பார்.

 பெ.பாலசுப்ரமணி

‘வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சுவாமியை தரிசிக்க முடியாது என்ற அரசின் உத்தரவு எனக்குப் பொருந்தாது. எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொண்டர்கள் தரிசிக்கலாம்' என்று அவர் அறிக்கை விடுவார்.

 ப. த. தங்கவேலு

தன்னை பா.ஜ.க தலைவராக்கியதை எதிர்த்து வழக்கு தொடுப்பார்!

 நா.இரவீந்திரன்

சுப்பிரமணியன் சுவாமி பேசும் தமிழை, தமிழக மக்களுக்குப் புரியும் தமிழில் மொழிபெயர்க்க, ஹெச்.ராஜா மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்படுவார்..!

LAKSHMANAN_KL

‘தமிழகத்தில் கொரோனா பரவியதற்கு விடுதலைப்புலிகளும் தி.மு.க-வுமே காரணம்’ என்பார்.

rajasinghjeyak1

சுப்பிரமணியன் சுவாமி பா.ஜ.க தலைவரானால் காமெடியாக இருக்காது. தமிழகம் முழுவதும் அவர் பேசியதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் போராட்டமு மாகத்தான் இருக்கும்.

amuduarattai

ஏலியன்களைப் பார்த்தால் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி..?

என்னோட ஆதார் கார்டு போட்டோவுல என்னைப் பார்த்த மாதிரியே இருக்கீங்களே, எப்படி?

 ஜெரி.D.டார்வி

அமெரிக்காவுக்கு மட்டும்தான் வருகை தருவீங்களா? ஏன்... எங்கள பாத்தா மனுஷங்களா தெரிலையா?

 ஆனந்தகுமார்

வாங்க கமல் சார்... இதென்ன புது கெட்டப்பா... எந்தப் படத்துக்கு?

 ரிஷிவந்தியா

வாசகர் மேடையில் நீ ஒரு கேள்வி கேட்கலாம்னு சொன்னா... உன் கேள்வி என்ன?

 ப. சீனிவாசன்

பூமியிலேருந்து ராக்கெட் அனுப்பி போட்டோ எடுத்தா ஏன் நீங்க யாருமே வரமாட்றீங்க?

 மகேஷ்

நான் 90ஸ் கிட். உங்க ஊர்லயாவது கல்யாணம் பண்ணப் பொண்ணு கிடைக்குமா?!

 சிவம், திருச்சி

இப்படி ஊர் சுத்திக்கிட்டே இருக்கீங்களே நீங்க பிரதமரா?

Vasanth920

விகடன் வாசகர் மேடையில் கேள்வி பதில் பகுதியில் மூன்றாவது முறையாக உங்களால் எப்படி இடம் பிடிக்க முடிந்தது..?!

saravankavi

பரோட்டா பற்றி ‘சுவையான’ கவிதை எழுதுங்களேன்...

நீ நைட்டு கடை சூப்பர் ஸ்டாரு! உன் தனி டேஸ்ட்டு எப்பவுமே தாறுமாறு!

 கு.வைரச்சந்திரன்

கொத்துப்பரோட்டா தின்று வாழ்வாரே வாழ்வார் - மற்றவரெல்லாம் வெத்து வயிரோடு நோவார்...!

 வே. விநாயகமூர்த்தி

பரோட்டா, நீ ஓர் அஹிம்சைவாதி மாவாய்ப் பிசைந்துன்னை நையப்புடைத்துத்

தீயில் வாட்டிய பின் கொத்தென்றும் வீச்சென்றும் கொடுமை உனக்குச் செய்தாலும் எங்கள் நாவிற்கு ருசியாவாய். ஏழைகளின் பசிக்கு உணவாவாய். நீ ஓர் அஹிம்சைவாதி.

 செல்லதுரை

ஒவ்வொரு பரோட்டாவின் வெற்றிக்குப் பின்னாலும் சால்னா ஒளிந்திருக்கிறது.

 செல்வகுமாரி பாஸ்கரன்

சின்னச் சின்ன பரோட்டாக்குள்ள

சொர்க்கம் இருக்கு, அட சால்னா மட்டும்

போதும் கண்ணே சாஸும் சாம்பாரும்

என்னத்துக்கு... மைதா கிளிகள் நாவோடு... சால்னா குயில்கள் வயிற்றோடு... பூலோகம் சுவைக்கு எல்லை... இந்தப் பூமிக்கு புரோட்டா சொந்தமில்லை.

 ரகுநாத் வ

திரையில் சூரிக்கு, வாழ் வளித்தாய்... இந்த மேடையில் எனக்கொரு சான்ஸ் கொடு..!

 பெ.பச்சையப்பன்

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;

ஒரு செட் பரோட்டா திங்கலாம் வா.

G0OGLY

குழலிசை என்பார் யாழிசை என்பார்

பரோட்டா மாஸ்டரின் டன் டன் டன் சத்தம் கேளாதார்.

urs_venbaa

புரோட்டாவுக்குக் கவிதையாம். நல்லவேளை `புரோட்டாவே கவிதைதான் புரோட்டாவுக்கு ஏன் தனிக்கவிதை?' என்று யாரும் கேட்கல.

RahimGazzali

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: எக்ஸ்க்யூஸ் மீ ஏலியன்ஸ்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. உதயநிதியைப் புகழ்வதுதான் இப்போது டிரெண்ட். நிதியே அசரும் அளவுக்கு தி.மு.க காரர்கள் எப்படிப் புதுமையாகப் புகழலாம்?

2. ஒருநாள் பிரதமர் ஆனால் உங்கள் முதல் நடவடிக்கை என்ன?

3. வடிவேலுவின் ஒரு கேரக்டரில் வேறொரு நடிகர் நடிக்கலாம் என்றால் எந்த கேரக்டர், எந்த நடிகர் உங்கள் சாய்ஸ்?

4. தாலிபன் ஊஞ்சல் ஆடியதைக் கமல் ‘விஸ்வரூபம்’ படத்திலேயே காட்டிவிட்டார் என்பதைப்போல் ‘தீர்க்கதரிசன’ சினிமாக் காட்சிகள் சொல்லுங்க (ஜாலியாதான்!)

5. ‘இருந்தாலும் இவ்ளோ ஆகாது’ என்று நீங்கள் எப்போது நினைப்பீர்கள்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com