Published:Updated:

வாசகர் மேடை: ‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

பணத்திற்குப் பதிலாய் கிரெடிட் கார்டுடன்.. கேஸ்லெஸ் எகானாமிக்கு கேஷூவலா ஒரு போட்டோ.

பிரீமியம் ஸ்டோரி

? யோகா போட்டோஷூட், பறவைகளோடு போட்டோஷூட்... அடுத்ததாக என்ன போட்டோஷூட் செய்யலாம் என மோடிக்கு ஐடியா சொல்லுங்கள்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ், லூஃப்தான்ஸா போன்ற எல்லா இண்டர்நேஷனல் ஏரோப்ளேன் பொம்மைகளோடு ஒரு போட்டோ ஷூட் எடுக்கலாம்.

IamUzhavan

பணத்திற்குப் பதிலாய் கிரெடிட் கார்டுடன்.. கேஸ்லெஸ் எகானாமிக்கு கேஷூவலா ஒரு போட்டோ.

urs_venbaa

சீன எல்லையில் ராணுவ உடையில் டேங்கர் பீரங்கி வாகனத்தில் இருப்பதுபோல்.

ஏ. வி. கிரி

பாரம்பர்ய விளையாட்டுகளை ஊக்குவிக்க, அம்பானி, அதானியுடன் பல்லாங்குழி விளையாடுவதுபோல் ஒரு போட்டோஷூட்!

ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்

சிவாஜி (நவராத்திரி) & கமல் (தசாவதாரம் ) படங்களில் வரும் எல்லா கெட்டப்களையும் போட்டு போட்டோஷூட் நடத்தலாம் (இவரும் சிறந்த நடிகர்தானே!)

வாசகர் மேடை: 
‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

KarthikeyanTwts

போட்டோகிராபருடன் போட்டோ ஷூட்... பாவம் அவருக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கட்டும்!

vrsuba

23ம் புலிகேசி வடிவேலு போல தலையை மட்டும் தோணியின் உடம்புக்கு மேல் பொருத்திக் கொண்டால், இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்தது இவர் தான் என வரலாற்றில் படத்தோடு எழுதி வைத்துக்கொள்ளலாம். வரலாறு முக்கியம் அமைச்சரே.

absivam

சுற்றிலும் புத்தகங்கள் கரைந்து கிடக்க, ஒரு கப்பில் புத்தகத்தைக் கரைத்துக் குடிப்பதுபோல போட்டோக்கள்!

வாசகர் மேடை: 
‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

KRavikumar39

‘பத்திரிகையாளர் சந்திப்பு’ போன்று ஒரு போட்டோ ஷூட் நடத்தலாம்.

liveto_

‘பொருளாதாரம் தெரியாது போடா’ வாசகத்தோடு கூடிய டிஷர்ட் போட்டுகிட்டு போட்டோ ஷூட் நடத்தலாம்.

malarsoorya.kbr

? உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் படிக்கும்போது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கிறது?

மொபைல் பார்க்காதன்னு திட்டின நானே, இப்ப மொபைல உத்துப் பார்த்து நல்லா கவனின்னு சொல்ல வேண்டியதாப் போயிடுச்சே.

அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

உண்மையிலேயே பாடத்தை கவனிக் கிறாங்களா. இல்லை கவனிக்கிற மாதிரி சீன் போடுறாங்களா. எப்பதான் ஸ்கூலைத் திறப்பாங்களோ, அப்பதான் நிம்மதி!

எஸ். மோகன், கோவில்பட்டி

பேரன்ட் டீச்சர் மீட்டிங் மாதிரி ஸ்டூடன்ட் டீச்சர் மீட்டிங்ன்னு வருஷத்துக்கு ஒரு முறைதான் பசங்க ஸ்கூல் போவாங்களோ?

ரம்யா, பெங்களூரு

வர்ற சரஸ்வதி பூஜைக்கு மொபைலையும் பூஜையில வெச்சுக் கும்பிடணுமோ..?!

வாசகர் மேடை: 
‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

laks veni

ஸ்லிப் டெஸ்ட் குழந்தைக்கா... நமக்கா?

Ram Aathi Narayenan

நமக்கெல்லாம் ஆப்ன்னா என்ன, டவுன்லோடுன்னா என்னன்னு தெரியலை. இதுங்க எப்படிக் கத்துக்கிட்டாங்கன்னு தோணும்.

poonasimedhavi

நல்லவேளை மனைவியோட மொபைல் ஹாட்ஸ்பாட் ஆன் செய்ததை யாரும் பார்க்கல.நம்ம டேட்டா சேஃப்.

manipmp

ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு.

குழந்தைக்கா?

கிளாஸ் அட்டென்ட் பண்ணுற எனக்குத்தான்யா.

NedumaranJ

க்யூல நின்னு பீஸ் கட்டினதுக்கு ஆன் லைன் கிளாஸ்தான் மிச்சம்னு தோணும்.

MahaDV1610

மொதல்ல எல்லாத்துக்கும் பாஸ்வேர்டு போட்டு வைக்கணும்

brammahbal

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? பா.ஜ.க-வில் சேர்ந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு ஒரு பட்டம் கொடுங்களேன்.

புள்ளிவிவர எலி

SriRam_M_20

புது கன்டென்ட் நாயகர்

JaNeHANUSHKA

மோடிக்கேத்த ஜாடி

aathinarayenan

அறுபது சீட்டை வெல்ல வந்த அலாவுதீனின் அற்புத விளக்கே

Kirachand1

பாரதி ராஜா கட்சியின் கமலமே

வாசகர் மேடை: 
‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

RamuvelK

இது ‘தாண்டா’ போலீஸ்..!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

அன்று காக்கிக் காவலர்

இன்று காவிக் காவலர்.

வாசகர் மேடை: 
‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

venkat

பா.ஜ.க.வின் கிரிவல பாதையே...

அனந்தகிருஷ்ணன், சென்னை

கன்னட டப்பிங் சிங்கம்

பா து பிரகாஷ், தஞ்சாவூர்

? உதயநிதி பக்திப்படத்தில் நடித்தால் அதற்கு என்ன டைட்டில் கொடுக்கலாம்?

துர்க்கையின் பிள்ளை

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

சரவணன் இருக்க பயமேன் 2

கண்ணன் செழியன், போடிநாயக்கனூர்

ஒரு கற்பூரம் ஒரு ஊதுபத்தி

dramnanthu

கோயில் கொடியவர்களின் கூடாரமாகக் கூடாது

வாசகர் மேடை: 
‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

aruns_page

விநாயகன் பாதை! (அப்பனைச் சுற்றி மாம்பழம் வாங்கியதுபோல் அப்பாவைப் பின்தொடர்ந்ததால் பதவி)

San8416

நா-ஆத்திகன்

NedumaranJ

இது கதிர்வேலன் தேர்தல்!

KLAKSHM14184257

ஒரு கல் ஒரு கடவுள்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

? இப்போதுள்ள தேர்வுமுறையில் ஒரு மாற்றம் செய்ய உங்களுக்கு அனுமதி கொடுத்தால் என்ன மாற்றம் செய்வீர்கள்?

பாஸ், பெயில் என்பது மட்டும்தான் வெளியிடப்படும். நோ மார்க்; நோ கிரேடு!

IamUzhavan

பப்ளிக் எக்ஸாம் பயத்தைப்போக்க pre exam முறை நடத்துவது. இதுபோல் செய்தால் அச்சம் நீங்கும்.

urs_venbaa

தேர்வுத்துறையை ‘திறன் சோதிக்கும் துறை’ என்று பெயர் மாற்றிவிடுவேன்.

பானுமதி பாபு, சென்னை

வினாத்தாள்களை மாணவர்களுக்கு முன்னதாகவே கொடுத்துப் படிக்க வைத்துத் தேர்வு நடத்துவேன்.

ஏ. எஸ். நடராஜன், சிதம்பரம்

பிடித்தமான பாடத்திலிருந்து, ‘நானே கேள்வி, நானே பதில்’ டைப்பில் கேள்வியெழுதி பதில் எழுதச் சொல்லுவேன்!

ramkumar

தம்பியுடையான் பிரிவுக்கு அஞ்சுவான்

வாசகர் மேடை: 
‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்!

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தேர்தலைத் தேர்வுமுறையாக மாற்றினால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன கேள்வி கேட்கலாம்?

? விஜய்யும் அஜித்தும் ஒரு சரித்திரப் படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? ஒருவேளை தமிழகம் இந்தித் திணிப்பை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

? பழைய கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும்போது ‘அட இந்தக்காலப் படத்தைவிட பெட்டாரா இருக்கே?’ என எந்த அம்சம் உங்களுக்குத் தோன்றும்?

? உங்க வித்தியாசமான தீபாவளி பிளான் சொல்லுங்க...

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு