Published:Updated:

வாசகர் மேடை: டாஸ்மாக் ஒரு கேள்விக்குறி!

உதயநிதி, அருள்நிதி

நண்பர்களாகக் காட்ட வேண்டுமெனில் ‘தளபதி’ ரீமேக். முட்டிக்கொள்கிற மாதிரி என்றால் ‘நேருக்கு நேர்’ ரீமேக்.

வாசகர் மேடை: டாஸ்மாக் ஒரு கேள்விக்குறி!

நண்பர்களாகக் காட்ட வேண்டுமெனில் ‘தளபதி’ ரீமேக். முட்டிக்கொள்கிற மாதிரி என்றால் ‘நேருக்கு நேர்’ ரீமேக்.

Published:Updated:
உதயநிதி, அருள்நிதி

ஹெட்போன், ஹெட்செட்களை நம் ஆட்கள் எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகிறார்கள்?

ஹெட் செட் ஒயர்களை இடியாப்பச் சிக்கலில் மாட்டிவிட்டு வேடிக்கை பாக்கறதுல நம்ம ஆளுங்கள மிஞ்ச முடியாது.

கி.சரஸ்வதி

குழந்தைகள் கை சூப்பிக்கொண்டு தூங்குவது போல, இப்போது நிறைய பேர் காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு தூங்குவது சாதாரணமாகிவிட்டது.

கே.ஆர்.அசோகன்

காதுகளில் மாட்டுவதைவிட கழுத்தில் தொங்க விட்டு ‘சீன்' போடுவதுதான் அதிகம்!

- இர.செல்வநிகிலா

கண்டக்டர்கள்: பஸ்ஸில் ஏறிட்டிங்க... ஓகே! டிக்கெட் வாங்கிட்டாவது அந்த ஹெட்செட்டை மாட்டிக்குங்கய்யா..!

saravankavi

நண்பர்கள் என்றாலும் சரி, காதலர்கள் என்றாலும் சரி, பெரிய மாற்றான் சூர்யாக்கள் என்று நினைப்பு. ஒரு ஹெட்போனின் ரெண்டு ஸ்பீக்கரை ஆளுக்கு ஒரு காதில் மாட்டிக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு திரிவார்கள்.

amuduarattai

எப்படியும் ஒரு பக்கம் ஹெட்செட் கொஞ்ச நாளில் கேட்காமல் போயிடும். புதுசா ஒண்ணு வாங்கும்வரை ஒரு காதுலயே கேட்பாங்க.

manipmp

அருள்நிதியும் உதயநிதியும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அதன் கதை என்னவாக இருக்கலாம்?

வாசகர் மேடை: டாஸ்மாக் ஒரு கேள்விக்குறி!

நண்பர்களாகக் காட்ட வேண்டுமெனில் ‘தளபதி’ ரீமேக். முட்டிக்கொள்கிற மாதிரி என்றால் ‘நேருக்கு நேர்’ ரீமேக்.

பர்வீன் யூனுஸ்

சீரியஸாக இருக்கும் அருள்நிதியை கணேஷாகவும், ஜாலியாக இருக்கும் உதயநிதியை வசந்தாகவும் வைத்து, சுஜாதாவின் எந்தவொரு நாவலையும் படமாக்கலாம்.

செல்லத்துரை

நேர்மையான போலீஸ் அதிகாரியான அப்பாவும், கலெக்டரான அம்மாவும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட, சகோதரர்களான அருள்நிதியும் உதயநிதியும் இளம் வயதிலேயே பிரிய நேர்கிறது. 20 வருடங்கள் கழித்து ‘விடியல் எங்கே... இதோ இங்கே...' என்ற அவர்களது குடும்பப் பாடல் மூலம் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை!

ரிஷிவந்தியா

அருள்நிதியும், கட்டட காண்ட்ராக்டர் உதயநிதியும் நண்பர்கள். நண்பனுக்காக வீடு கட்டும்போது செங்கல்லின் தரத்தை செக் பண்ணுகிறார் உதயநிதி. அப்போது ஒத்த செங்கல் கீழே விழ... உடைந்த செங்கல்லில் இருந்து வைரக்கற்கள் சிதறுகின்றன. அதிர்ச்சி அடைந்த உதயநிதி போலீசிடம் தெரிவிக்கலாம் என்று கூற, நண்பன் அருள்நிதியோ வைரக்கற்களை நாமே வைத்துக்கொள்ளலாம் என்று கூற, அதனால் நட்பு உடைய... பிரிந்த நண்பர்கள் மீண்டும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே மீதிக்கதை. டைட்டில்: ஒத்த செங்கல்.

க.அய்யனார்

அருள்நிதி போதைப் பொருள்களுக்கு எதிராகவும், உதயநிதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகவும் போராடி வெற்றி பெறுகிறார்கள். ஆனால் மதுக்கடைகளை மூட அவர்கள் எடுக்கும் தொடர் முயற்சிகள் தடைபடுகிறது. இறுதியில் ‘அரசியல்வாதிகள் இருக்கும்வரை மதுக்கடைகளை மூடவே முடியாது சகோ' என்று குமுறிக்குமுறி அழுவதுதான் கதை. டைட்டில்: டாஸ்மாக் ஒரு கேள்விக்குறி.

ஆ.மாடக்கண்ணு

அருள்நிதி அம்பானியாகவும், உதயநிதி அதானியாகவும் நடித்து, இவர்கள் உலகின் பெரும் பணக்காரர்களாக ஆவதற்கு அரசு இவர்களுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதைக் கதையாக வைத்தால், பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னொரு செங்கல் தேவைப்படாது.

IamUzhavan

மகிழ்வான குடும்பம் மூன்றாக பரம்பரைப் பகையால் பிரிகிறது. தற்போது மூன்று குடும்பமும் ஒன்றாய் இணையும் கதை. கெஸ்ட் ரோலில் தயாநிதி அழகிரியும் நடிக்கிறார்.

urs_venbaa

நிதிப் பற்றாக்குறை குறித்து பரிமளா பரசுராமனிடம் இருவரும் கேள்வி கேட்க, ‘ஒரு நாள் நிதி அமைச்சரா இருந்து பாருங்க’ என்று அவர் சவால் விட, உடனே அருள்நிதி நிதி அமைச்சராகவும், உதயநிதி பிரதமராகவும் இருக்கிறோம் என்று பதில் சவால் விட... ஒரே சவாலே சமாளி!

sakthi68

வாசகர் மேடை: டாஸ்மாக் ஒரு கேள்விக்குறி!

காளான் பிரியாணி போல் ராகுல்காந்தி பாத யாத்திரையில் என்னென்ன புதிய யுக்திகளைக் கடைப்பிடிக்கலாம்?

‘குக்கு வித் கோமாளி'யில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை சென்றால் விதவிதமாக சமைத்துச் சாப்பிடலாம். கால்வலி தெரியாமல் ஜாலியாக பேசிக்கொண்டே நடக்கலாம்!

எம்.இராஜேந்திரன்

‘ரணம் ஆற்றும் ராகுல்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெட்டியை வைத்து மனுக்களை வாங்கி அங்கே சீல் வைக்கலாம். தேர்தலில் ஜெயித்து பிரதமர் ஆ(னால்)னவுடன் தீர்த்து வைப்பதாக உறுதி அளிக்கலாம்.

Sivakum31085735

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து சைக்கிளிங் போகலாம்.

IamJeevagan

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பெங்களூரைக் கடப்பதற்கு அண்ணாமலையின் போட்டையோ அல்லது சாவர்க்கரின் புல் புல் பறவையையோ பயன்படுத்தி ஸ்கோர் பண்ணலாம்.

PG911_twitz

யாத்திரையில் உடன் நடந்து வருபவர்கள் அனைவருடைய விருப்பமான வெப்சீரிஸ்களை கார்த்தி சிதம்பரம் மூலமாக ஒளிபரப்ப வழிவகை செய்யலாம்.

Sureshveeranan

சினிமாக்களில் குறியீடுகளைக் கண்டுபிடிப்பதில் ‘இது ரொம்ப அநியாயமால்ல இருக்கு' என்று உங்களுக்குத் தோன்றிய கண்டுபிடிப்பு?

கதாபாத்திரங்களின் குணாதிசயத்தைக் காட்ட சிவப்பு, மஞ்சள், பச்சை என விதவிதமா கேமரா லென்ஸ் யூஸ் பண்ணுனதா, அவுங்களே சொல்லித்தான் தெரியுது.

ச.பிரபு

கிராமத்தான் என்றால் தலையில் வாழைப்பழத்தார் சுமந்து வருவது போலவும், டவுன்வாசி எனில் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு வருவது போலவும் காட்டுவது!

கே.எம்.ரவிச்சந்திரன்

ரஜினி படத்தில் பேசிய வசனங்களையெல்லாம் அவர் அரசியலுக்கு வரும் குறியீடாக நினைத்து ஏமாந்ததெல்லாம் அநியாயம்தானே...

எம்.கலையரசி

வீரபாண்டிக் கோட்டையிலே பாடலில் ‘ரெட்டைச் சூரியன் வருகுதம்மா ஒற்றைத் தாமரை கருகுதம்மா’ வரிகளை, ஸ்டாலின் - உதயநிதியால் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்று அன்றே வைரமுத்து கணித்து எழுதியதாக கடந்த வருடம் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உடன்பிறப்புகள் கண்டுபிடித்தது.

பெ.பாலசுப்ரமணி

உடல்நிலை சரியில்லாமல் அம்மா படுத்திருப்பார். வெளியே காற்று, மழை. எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் சுடர் காற்றில் அணைய, அடுத்த காட்சியில் மகன் அம்மாவின் சிதைக்கு எரியூட்டுவார். இது பன்னிரண்டாயிரம் படங்களில் வந்திருந்தாலும், பார்க்கும் எல்லாப் படங்களுக்கும் தமிழன் அழுது வைத்தது தனிச்சோகம்.

அ.பச்சைப்பெருமாள்

கமல் படம் முழுக்கக் குறியீடுதான்... அவரே வந்து விளக்கினால்தான் எல்லோருக்கும் புரியும்.

Laviher3

டேபிள் மேல் உள்ள பூமி உருண்டையை உருட்டிவிட்டவுடன் ஹீரோ பெரியவனாய் வளர்ந்துவிடுவது.

krishmaggi

ஒரு பூ இன்னொரு பூவோட மோதினால் ஹீரோ ஹீரோயின் இடையே காதல் என்று காட்டுவது.

SriRam_M_20

டீக்கடைகளில் நீங்கள் ரசிக்கும் விஷயம் எது?

பத்துப் பேர் பத்து விதமான டீ சொன்னாலும், மாஸ்டர் அத்தனையையும் மைண்ட்ல ஏத்தி, கரெக்டா அந்தந்த டீயை அந்தந்த ஆள்கிட்ட கொடுப்பார் பாருங்க... சூப்பர் கம்ப்யூட்டரை மிஞ்சின அவருடைய மெமரி பவரை வெகுவாக ரசிப்பேன்.

ஆர்.பிரசன்னா

விடுமுறை நாளுக்கு அடுத்த நாள் தினசரிகள் வரவில்லை என்றாலும், நேற்றைய பேப்பரை வைத்துக்கொண்டே சுவாரசியமாக சென்னை அரசியல் முதல் இங்கிலாந்து அரசியல்வரை மணிக்கணக்கில் சளைக்காமல் விவாதிப்பது.

ஆர்.ஹரிகோபி

கட்சி வித்தியாசம் பார்க்காமல் சேர்ந்தே வந்து சேர்ந்து டீ சாப்பிட்டு, யாரோ ஒருவர் எல்லோருக்கும் காசு கொடுக்கும் அன்னியோன்யம்.

தே.ராஜாசிங்ஜெயக்குமார்

வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை பலர் உரிமையுடன் எடுத்தாலும், டீ ஆத்துவதில் கவனமாக இருக்கும் சேட்டன் அந்தக் கணக்கை அனைவருக்கும் சரியாகச் சொல்வது.

தார்சி எஸ்.பெர்னாண்டோ

சொந்தக்காரர்கள்கூட நம்மளை நம்பி பத்துப் பைசா கடன் தரமாட்டார்கள். ஆனால், ‘அண்ணே, அக்கவுண்ட்ல வெச்சிக்குங்க...' என உரிமையாகக் கூறலாம்!

நா.இரவீந்திரன்

காலையில் புதிதாய் இருக்கும் பேப்பரைக்கூட மாலையில் போண்டா, பஜ்ஜி, வடை கட்டுவதற்கு கிழித்து ‘வாழ்க்கையும் இதுபோல, எதுவும் நிரந்தரம் இல்லை’ என்று உணர்த்த ஒரு டீக்கடை போதுமானதாக இருக்கிறது.

SowThanishka

‘அண்ணே, இந்த போண்டா நேத்து போட்டதா’ என்று டீக்கடைக்காரரைக் கலாய்ப்பது...

RahimGazzali

‘தொடர்ச்சி 8-ம் பக்கத்தில்' என்று வரும் செய்தியைப் படிக்க முடியாமலே போவது!

SeSenthilkumar

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிவிங்கிப்புலி இந்தியாவில் உலாவவுள்ளது. இதேபோல, அழிந்துபோன எந்த உயிரினத்தை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வரலாம்?

2.பாத யாத்திரையில் இருக்கும் ராகுல்காந்தியும், பைக் யாத்திரையில் இருக்கும் அஜித்குமாரும் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டால், என்ன பேசிக்கொள்வார்கள்?

3. புதுப்புது அப்டேட்டுகளைப் பயனர்களுக்கு வழங்கிவருகிறது வாட்ஸ்அப் நிறுவனம். நீங்கள் எதிர்பார்க்கும் வசதி என்ன?

4. கட்சி மாறுபவர்களுக்கு காமெடி யாக தண்டனை கொடுக்கலாம் என்றால் என்ன தண்டனை கொடுக்கலாம்?

5. உலகின் நம்பர் 2 பணக்காரர் ஆகி யிருக்கும் கௌதம் அதானியின் பயோபிக் எடுத்தால், அதில் அவர் கதாபாத்திரத்திலும், அவரின் நண்பரான பிரதமர் மோடி கதாபாத்திரத்திலும் யார் நடிக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!