Published:Updated:

வாசகர் மேடை: அப்பவே அப்படி!

எஸ்.ஜே.சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஜே.சூர்யா

விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு வெஜிடேரியன்ல சாப்பாடு போடுவது.

வாசகர் மேடை: அப்பவே அப்படி!

விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு வெஜிடேரியன்ல சாப்பாடு போடுவது.

Published:Updated:
எஸ்.ஜே.சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஜே.சூர்யா

‘இருந்தாலும் இவ்ளோ ஆகாது’ என்று நீங்கள் எப்போது நினைப்பீர்கள்?

மாதம்தோறும் ‘சுகர்’ செக்கப் செய்யும் போதெல்லாம் நினைப்பேன்.

 எம்.கலையரசி

கறிவேப்பிலை, கொத்தமல்லிக்கு காய்கறிக்கடைக்காரர் பில் போடும்போது.

 ச.பிரபு

வாரா வாரம் வாசகர் மேடையில் ஐந்து கேள்விக்கும் நம்ம பதில் செலக்ட் ஆகணும்னு நினைக்கும்போதுதான்.

pbukrish

சுகர் வருவதற்கு, அதிகமான கரும்பு உற்பத்திதான் காரணம் என்று உ.பி முதல்வர் சொன்னபோது.

Vasanth920

விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு வெஜிடேரியன்ல சாப்பாடு போடுவது.

electricalsasi

ராகவா லாரன்ஸ் மறுபடியும் பேய்ப் படம் நடிக்கப்போவதாகக் கேள்விப்பட்ட போது.

SriRam_M_20

லட்சம் ரூபாய் கொடுத்து நகை வாங்கும்போது இல்லாத திருப்தி, இலவசமாக ஹேண்ட்பேக் கேட்டு வாங்கி சாதித்ததுபோல் திருப்தியடையும் பெண்களைப் பார்க்கும்போது.

Malli_official

ஹோட்டலில் சாப்பிடும்போது இரண்டாவது முறை சட்னியோ அல்லது சாம்பாரோ கேட்கும்போது சர்வர் ஏதோ ஓசியில கொடுக்கிற மாதிரி ஒரு லுக்கு விடுவார் பாருங்க, ‘இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆகாது.’

Rameshp15680533

வாசகர் மேடை: அப்பவே அப்படி!

வடிவேலுவின் ஒரு கேரக்டரில் வேறொரு நடிகர் நடிக்கலாம் என்றால் எந்த கேரக்டர், எந்த நடிகர் உங்கள் சாய்ஸ்?

‘நகரம்’ படத்தில் வரும் ‘ஸ்டைல்’ பாண்டி கேரக்டரில் யோகிபாபு நடித்தால், ஹேர்ஸ்டைல் செமயா ஒத்துப்போகும்..!

 கே.லக்‌ஷ்மணன்

இம்சை அரசன் கதாபாத்திரத்தில் மோஷன் கேப்சர் மூலம் நடிகர் நாகேஷை நடிக்க வைக்கலாம்.

 பெ.பாலசுப்ரமணி

அதான் வடிவேலுவே திரும்ப நடிக்க வந்துட்டாரே... வேறொரு நடிகர் எதற்கு?

 எஸ்.ராஜம்

‘ப்ரண்ட்ஸ்’ நேசமணி கேரக்டர் கவுண்டமணி நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

 வானதி ஜவஹர்

நாய் சேகர் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம். த்ரிஷாவும் இருக்கு, நயன்தாராவும் இருக்கு.

 மகேஷ்

வக்கீல் வெடிமுத்து கேரக்டரில் முனீஸ்காந்த் நன்றாகவே வாதாடுவார்!

 நா.இரவீந்திரன்

இவர்கள் இருவருமே தாங்கள் வெறும் காமெடி நடிகர்கள் மட்டுமல்லர் என்பதைப் பல படங்களில் நிரூபித்திருப்பதால், இசக்கி (தேவர் மகன்) கேரக்டருக்கு சார்லி மிகப் பொருத்தமாக இருப்பார்.

h_umarfarook

ஒருநாள் பிரதமர் ஆனால் உங்கள் முதல் நடவடிக்கை என்ன?

வாசகர் மேடையில் எனது பதில்களைத் தொடர்ந்து நிராகரிக்கும் ஆ.வி ஆசிரியர் குழுவைக் கூண்டோடு மாற்றிவிடுவேன்!

 வி.சாந்தி

60 மாதங்களை உள்ளடக்கியதுதான் ஒரு நாள் என்று சட்டம் கொண்டு வருவேன்.

 செல்லத்துரை

இன்னும் ஏதேனும் பொதுத்துறை நிறுவனம் பாக்கியுள்ளதா என ஆராய்ந்து, அதை ஏலம் விடுவேன்.

 பெரியகுளம் தேவா

அப்படியெல்லாம் திடீர்னு சொல்லிடாதீங்க. பாஸ்போர்ட் எடுக்கணும், டிரஸ் பேக் பண்ணணும், எந்த நாட்டுக்குப் போணும்னு டிசைட் பண்ணணும். எவ்வளவு வேலை இருக்கு... என்ன நீங்க?!

kalagowri91

பென்ஷன் உண்டா, செக்யூரிட்டி தருவார்களா முன்னாள் பிரதமர்னு போட்டுக்கலாமா என்று கன்பர்ம் செய்துகொள்வேன்.

jerry46327240

எந்தெந்தப் பிரச்னைகளை நேரு தலையில் தூக்கிப் போடலாம் என்பதைக் கண்டறிய பிரத்யேக உயர்மட்டக்குழு ஒன்றை அமைப்பேன்.

pachaiperumal23

சீமானுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பிரஸ்மீட் வைப்பேன்.

saravankavi

இப்ப இருக்கும் பிரதமரை ஒரு நாள் முழுக்க மீடியா முன்னாடி உட்கார வச்சி கேள்விகளுக்கு பதில் சொல்ல வைப்பேன். அதான் முதல் நடவடிக்கை.

pencil_tweets

தாலிபன் ஊஞ்சல் ஆடியதைக் கமல் ‘விஸ்வரூபம்’ படத்திலேயே காட்டிவிட்டார் என்பதைப்போல் ‘தீர்க்கதரிசன’ சினிமாக் காட்சிகள் சொல்லுங்க...

சீனாக்காரன் பண்ணி வச்ச வேலையை (கொரோனா) ஏழாம் அறிவிலேயே சொன்ன முருகதாஸின் தீர்க்க தரிசனம்.

 பா.ஜெயக்குமார்

‘பாசமலர்’ படத்தில் சிவாஜி தங்கையின் நிலைமையை நினைத்து நினைத்து வருந்தி இறுதிக்காட்சிகளில் நீண்ட தாடி வளர்த்திருப்பார். அந்தக் காட்சியை நினைக்கும்போது மக்கள் படும் கஷ்டங்களை நினைத்து வருந்தி ‘ஜீ’ தாடி வளர்ப்பதுதான் நினைவுக்கு வருகிறது.

 க.கீராசந்த்

‘ரெட்டைச் சூரியன் வருகுதம்மா (ஸ்டாலின்-உதயநிதி) ஒற்றைத் தாமரை கருகுதம்மா’ என்று இந்த வருடச் சட்டசபைத் தேர்தல் முடிவை அன்றே கணித்து ‘திருடா திருடா’ படத்தின் ‘வீரபாண்டிக் கோட்டையிலே’ பாடலில் எழுதியிருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து.

 பெ.பாலசுப்ரமணி

ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில், `நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’ என்று ஒரு வசனம் வரும். அமைச்சரவையில் அவர் முன் எல்லோரும் அடிமைகள்போல் நின்றது தமிழ்நாட்டுக்கே தெரியுமே!

 எஸ்.மோகன்

தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வர முடியாது என்பதை சூர்யா `வாரணம் ஆயிரம்’ படத்திலேயே கணித்ததுதான்... ‘நீருக்குள் மூழ்கிடும் தாமரை.’

ParveenF7

“புதுப் புது வியாதிகளும், அதற்கான மருந்துகளும்தான் இன்னைக்கு உலகத்தோட பெரிய பிசினஸ்!” என்று 2006-ல் வெளியான எஸ்.பி.ஜனநாதனின் ‘ஈ’ படத்தில் பசுபதி பேசியிருப்பார். அது அப்படியே இன்று நடக்கிறது.

IamJeevagan

‘பாபா படம் ஓடாது’ன்னு நாயகன் படத்தில் ஒரு காட்சியில் ‘பாபா மர்கயா’னு சொல்லியிருப்பாங்க.

manipmp

போனைக் கண்டுபிடிச்சது வேணா அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லாக இருக்கலாம். ஆனால் போனை ஒட்டுக் கேட்பது எப்படின்னு கண்டு பிடிச்சது நம்ம அரசியல்வாதிகள்தான் என இன்றைய ‘பெகாசஸ்’ விவகாரத்தை அன்றே காட்சிப்படுத்தியவர் மணிவண்ணன்.

Vaigaisuresh9

வாசகர் மேடை: அப்பவே அப்படி!

உதயநிதியைப் புகழ்வதுதான் இப்போது டிரெண்ட். நிதியே அசரும் அளவுக்கு தி.மு.க காரர்கள் எப்படிப் புதுமையாகப் புகழலாம்?

“தந்தை செங்கோல் பிடிக்க தான் ‘செங்கல்’ பிடித்த நாளைய முதல்வரே!’’

 அதிரைபுகாரி

அதோ அந்த

கலைஞர் போல

வாழ வேண்டும்...

இதோ இந்த

ஸ்டாலின் போல

ஆள வேண்டும்...

வா உதயநிதி

ஓடி வா உதயநிதி

ஒரே கீதம் உரிமை கீதம்

பாடுவோம்..!

 மணிமேகலை பாலு

அறிவாலயத்தின் ஆனந்த விகடனே!

அடுத்த தலைமுறையின் ஜூனியர் விகடனே!

கழகத்தின் சக்தி விகடனே!

வேகத்தில் நீ மோட்டார் விகடனே!

நாணயம் தவறாத நாணயம் விகடனே!

அரசியலில் என்றும் நீ பசுமை விகடனே!

 எம். விக்னேஷ்

ஒற்றைக் கையால் எய்ம்ஸைத் தூக்கிய எங்கள் மீராபாய் சானுவே!

எதிரிகளை எகிறி அடித்த சிந்துவே!

பிரிவினைவாதிகளை நாக் அவுட் செய்த லவ்லினாவே!

மீண்டும் ஆட்சி என மனக்கோட்டை கட்டியவர்களைத் தகர்த்த நீரஜ்சோப்ராவே!

உரிமைகளை அடகு வைத்தவர்களைத் தடுத்திட்ட தாகியாவே! புனியாவே! ஸ்ரீஜேஷே!

JaNeHANUSHKA

“உதயநிதிதான் வாராரு...

உடுக்கையடிக்கப் போறாரு...

அதுதான் அதுதான்

மோடி ஆட்சிக்கே முடிவு!”

absivam

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

* சீமானும் மோடியும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

* இப்போது சிலப்பதிகாரத்தைத் திரைப்படமாக எடுத்தால் கண்ணகி பாத்திரத்தில் யார் நடிக்கலாம்?

* மறதி இல்லாமல்போயிருந்தால் நம் வாழ்க்கையில் என்னென்ன காமெடிகள் நடந்திருக்கும்?

* ஸ்டேண்ட்-அப் காமெடியில் எரிச்சலூட்டும் விஷயம் எது?

* உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் செய்த சிறந்த சமாளிப்பிகேஷன் என்ன?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com