கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: விஜய்க்கு கிரீன் சேலஞ்ச், மத்தவங்களுக்கு என்ன சேலஞ்ச்?

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

வாசகர் மேடை

? இந்தியர்கள் மட்டும் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடிக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?

111, 222, 555, 1111, 2222 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்திருக்கும்.

வன்னி தங்கம் ராதா

15 லட்சம் ரூபாய் 15 ரூபாயாகி இருக்கும். பேங்குக்கும் வந்திருக்கும். மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு அதையும் ஆட்டைய போட்டிருப்பாங்க..

HariprabuGuru

யாரும் 0% வட்டின்னு பீத்திக்க முடியாது!

mohamed.humayoon

ஷங்கரின் 2.1 - என்று வந்திருக்கும்.

Adhirai Yusuf

வேறு யாராவது கண்டுபிடித்தி ருப்பார்கள்... அவ்வளவுதான்.

mekalapugazh

வாசகர் மேடை:  விஜய்க்கு கிரீன் சேலஞ்ச், மத்தவங்களுக்கு என்ன சேலஞ்ச்?

கணக்குல முட்டை மார்க் வாங்கினேன் என்ற வரலாறு இல்லாமலிருந்திருக்கும்.

Thaadikkaran

பைனரி எண்களில் 1 மட்டும் இருக்கும் அதனால் கணினி குழப்பம் அடைந்திருக்கும்.

நரேசு தமிழன், சேலம்

`நான் ஒரு தடவை சொன்னா தொண்ணூற் றொன்பது தடவை சொன்ன மாதிரி'ன்னு ரஜினியின் `பாட்ஷா' பட பஞ்ச் டயலாக் மாறியிருக்கும்..!

KLAKSHM14184257

? தோனியுடன் ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னாவின் பயோபிக் தமிழில் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம், யார் நடிக்கலாம்?

கடைக்குட்டி தல கார்த்தி நடிக்கலாம். சுரேஷ் ரெய்னாவின் அமுல்பேபி லுக் `கார்த்தி'க்கு செட்டாகும்.

அருண்குமார் ரகுபதி

குருவும் சீடனும் - அதர்வா

மணி திருப்பதி

வீரனைப் போற்று - சூர்யா.

பெரியகுளம் தேவா

நடிகர் ஜீவா நடிக்கும் 'சின்ன தல'

அனிருத் சுதர்சன், மும்பை

`அடிச்சா சிக்ஸர்... நின்னா ஃபோர்'

`சுரேஷ் ரெய்னா'வே ஹீரோவா நடிச்சாதான் நல்லா இருக்கும்.

aathinarayenan

ரெட்டை செருப்பு - ரெய்னாவாக சாந்தனு, தோனியாக கெஸ்ட் ரோலில் பார்த்திபன்

WhiteDevil666_

வாசகர் மேடை:  விஜய்க்கு கிரீன் சேலஞ்ச், மத்தவங்களுக்கு என்ன சேலஞ்ச்?

? மதுரை இரண்டாவது தலைநகரானால் என்னென்ன நடக்கும்?

ஆஸ்திரேலியாவின் சிட்னி பெயர் மாற்றம் செய்யப்படும்... செல்லூர் ராஜு ஞாபகம் இருக்குல்ல!

மணிவண்ணன்

அழகிரி துணை முதலமைச்சர் பதவி கேட்பார்.

bala_bodi

எனது பல ஆண்டுகள் கோரிக்கையை அரசு நிறைவேற்றியது, நன்றி என காலைச்செய்திதாள்களில் மருத்துவரய்யா அவர்களின் அறிக்கை படித்து மகிழலாம்.

pachaiperumal23

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று ஆர்.பி.உதயகுமாருக்கு மதுரை எங்கும் போஸ்டர் ஒட்டப்படும்.

SriRam_M_20

கோவை மூன்றாவது தலைநகரமாகவும், சேலம் நான்காவது தலைநகரமாகவும்...

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

? ‘பா.ஜ.க வேட்பாளரை வெற்றிபெற வைத்தால் மாவட்டச் செயலாளருக்கு இனோவா கார் பரிசு’ - பா.ஜ.க தமிழ்நாட்டுத் தலைவர் முருகன். பா.ஜ.க.வினர் இனோவா வெல்ல ஆலோசனைகளை அள்ளி வழங்குங்களேன்!

மொதல்ல நல்ல மாவட்டச் செயலாளரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் இனோவா கார் பரிசு என அறிவித்திருக்கலாம்.

ச.பிரபு, சென்னை

காசில்ல காசில்லன்னு சொல்லிட்டு...

வே.புனிதா, வேளாங்கண்ணி

மண்டையைக் கசக்கி நான் யோசனை கூறுவேன். ஆனால் இனோவா கார் அவர்களுக்கு.இந்த டீல் சரியா இல்லையே பாஸ்.

R. நேஹாயாழினி, சேலம்

வாசகர் மேடை:  விஜய்க்கு கிரீன் சேலஞ்ச், மத்தவங்களுக்கு என்ன சேலஞ்ச்?

கேள்வி என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? நோட்டோவைவிட ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கித் தரும் மா.செ. இனோவா கார் பரிசு, அதற்கு ஆலோசனை அள்ளி வழங்குங்களேன் என்று கேட்டிருந்தால் ஒரு நியாயம் இருக்கும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

அவனுங்க இனோவா வாங்க நாங்க எங்க தலையில மண்ணள்ளிப் போட்டுக்கணுமா...போய்யா!

YAADHuMAAGE

எல்லா வேட்பாளர்களையும் உ.பி எலக்‌ஷன்ல நிறுத்துங்க! இனோவா இல்லாட்டியும் மாருதி 800-ஆவது கிடைக்கும்!

San8416

இனோவாவில் கைலாசா டூர் அழைத்துப் போவேன்னு சொன்னா, தொகுதியில் இருப்பதை விட இரண்டு மடங்கு ஓட்டு அதிகம் கிடைக்கும்.

KRavikumar39

? விஜய்க்கு மகேஷ்பாபு கிரீன் சேலஞ்ச் டாஸ்க் கொடுத்ததைப் போல மற்ற எந்த நடிகர்களுக்கு என்ன சேலஞ்ச் டாஸ்க் கொடுக்கலாம்?

ரஜினிக்கு இமயமலையில் பாபா குகைகள் அமைப்பது.

தார்சி எஸ். பெர்னாண்டோ, சென்னை

சூரி, யோகிபாபுவுக்கு புரோட்டா சேலஞ்ச் டாஸ்க் கொடுக்கலாம்.

மு.குட்டி , கிருஷ்ணகிரி

மதன் பாபுவை சிரிக்காம ஒரு அழுவுற காட்சியை நடிக்கச் சொல்லிக் கேட்கலாம்...

Manjalll

வாசகர் மேடை:  விஜய்க்கு கிரீன் சேலஞ்ச், மத்தவங்களுக்கு என்ன சேலஞ்ச்?

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா - ‘காமெடியாக’ சீரியஸ் ரோல் பண்ணாம, சீரியஸ்ஸா ஒரு ‘காமெடி’ ரோல் பண்ண சேலஞ்ச் டாஸ்க் கொடுக்கலாம்.

krishmaggi

கமலுக்கு ஐந்து நிமிடம் சாதாரண மனிதன் புரிந்துகொள்ளும்படி சிம்பிளாகப் பேசும் சேலஞ்ச் டாஸ்க் கொடுக்கலாம்.

ARiyasahmed

விஷால் - ஒரே நேரத்தில் ஒன்பது இடத்தில் மனுத்தாக்கல் செய்து பதவி பெறும் சேலஞ்ச்.

urs_venbaa

பாக்யராஜ் லாரன்ஸ் மாஸ்டருடன் சேர்ந்து ஒரு குத்துப்பாடலுக்கு ஆட வேண்டும்.

jerry.darvey

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை:  விஜய்க்கு கிரீன் சேலஞ்ச், மத்தவங்களுக்கு என்ன சேலஞ்ச்?

? பா.ஜ.கவில் சேர்ந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு ஒரு பட்டம் கொடுங்களேன்.

? உதயநிதி பக்திப்படத்தில் நடித்தால் அதற்கு என்ன டைட்டில் கொடுக்கலாம்?

? இப்போதுள்ள தேர்வுமுறையில் ஒரு மாற்றம் செய்ய உங்களுக்கு அனுமதி கொடுத்தால் என்ன மாற்றம் செய்வீர்கள்?

? உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் படிக்கும்போது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கிறது?

? யோகா போட்டோஷூட், பறவைகளோடு போட்டோஷூட்... அடுத்ததாக என்ன போட்டோஷூட் செய்யலாம் என மோடிக்கு ஐடியா சொல்லுங்கள்.

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com