Published:Updated:

வெஜிடபிள் கார்விங்: காய்கறிகளில் கலைவண்ணம்!

கார்விங்
பிரீமியம் ஸ்டோரி
கார்விங்

நம்மைக் கவரக்கூடியவை இந்த வெஜிடபிள் கார்விங் சிற்பங்கள்

வெஜிடபிள் கார்விங்: காய்கறிகளில் கலைவண்ணம்!

நம்மைக் கவரக்கூடியவை இந்த வெஜிடபிள் கார்விங் சிற்பங்கள்

Published:Updated:
கார்விங்
பிரீமியம் ஸ்டோரி
கார்விங்

ரம்பத்தில் தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் மட்டுமே காணப்பட்ட `வெஜிடபிள் கார்விங்’ கலை, இப்போது இந்தியாவிலும் புகழ்பெற்று வருகிறது. எந்தவொரு நட்சத்திர உணவகத்திலும் நம் நாவுக்கு விருந்தளிக்க ஒருபக்கம் சுவையான உணவுகளும், நம் கண்களுக்கு விருந்தளிக்க மறுபக்கம் அழகான வெஜிடபிள் கார்விங் சிற்பங்களும் அடுக்கப்பட்டிருக்கும். இவற்றின் அழகையும் கலைநயத்தையும் பார்த்து சொக்கி நிற்கும் நாம் சாப்பிடக்கூட மறந்தே போவோம். அந்த அளவுக்கு நம்மைக் கவரக்கூடியவை இந்த வெஜிடபிள் கார்விங் சிற்பங்கள்.

உமாசங்கர் தனபால்
உமாசங்கர் தனபால்

``அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகளிலும் ‘வெஜிடபிள் கார்விங்’ செய்யலாம். இதைச் செய்வதற்கென்று தனியே பயிற்சி முறைகளும் படிப்பும் இருந்தாலும்கூட, ஆர்வமும் கூர்மையான கவனிப்பும் வழிகாட்டலும் இருந்தால் வீட்டிலேயே செய்யலாம்’’ என்கிறார் உமாசங்கர் தனபால். இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெஜிடபிள் கார்விங் செய்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வெஜிடபிள் கார்விங் கலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தாய்லாந்திலும் சீனாவிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இவை ஃபுளோரல் எஸ்டஸி, வொண்டெர்ஸ் இன் மெலன்ஸ், 2டி அண்ட் 3டி கிரியேஷன், ராயல் தாய் ஸ்டைல் கார்விங், ஃபன்டாஸ்டிக் ஃபேசஸ் என்று பல முறைளில் உள்ளன.

கார்விங்
கார்விங்

இம்முறைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களில் பூக்களின் உருவங்கள், மனித முகங்களின் வடிவங்கள், விலங்குகள், பறவைகளின் உருவங்கள், வெவ்வேறு வகையான டிசைன்கள், 2டி மற்றும் 3டி உருவங்கள் போன்றவை செதுக்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`வெஜிடபிள் கார்விங்’ செய்வதற்கு கத்தி, குக்கீஸ் கட்டர், டூத் பிக் மற்றும் பிரத்யேக உபகரணங்கள் உள்ளன. கார்விங் செய்யப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் புதிதாகவும், தோல்களில் சுருக்கங்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். கார்விங் செய்வதற்கு முன்பு காய்கறிகளைத் தூய்மையான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

கார்விங்
கார்விங்

கார்விங் செய்யப் பயன்படுத்தும் கத்தியைக் கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். கத்தியைப் பிடிக்கும்போது (பார்க்க படம்) மூன்று விரல்களால் பிடிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக... கேரட்டை பயன்படுத்தி ஒரு கார்விங் மாடல் செய்கிறோம் என்றால், முதலில் நீளமான, தோலில் சுருக்கங்கள் இல்லாத கேரட்டைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு கேரட்டைத் தூய்மையான நீரில் கழுவிக்கொண்டு, அதன் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். பிறகு குக்கீஸ் கட்டர் போன்ற கார்விங் செய்யப் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பயன் படுத்தியோ, கத்தி போன்றவற்றை வைத்தோ நாம் கற்பனை செய்து வைத்துள்ள வடிவங்கள், பூக்கள், பறவைகள் போன்றவற்றின் உருவங்களைச் செதுக்க வேண்டும்.

கார்விங்
கார்விங்

கார்விங் செய்ய கேரட், முள்ளங்கி முதல் பரங்கிக்காய், பூசணிக்காய் மற்றும் பல்வேறு வகையான பழங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய பெரிய ஐஸ்பார்களில் கூட கார்விங் செய்யப்படுகிறது. வெஜிடபிள் கார்விங் மூலம் செய்யப்பட்ட சிற்பங்களை தனித்தனி கன்டெய்னர்களில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தலாம். ஈரமான துணிகளில் சுற்றி குளிர்ந்த இடங்களிலும் வைக்கலாம்.

காய்கறிகளில் கார்விங் மூலம் செய்யப்பட்ட சிற்பங்களை விருந்துகளில் அலங்கார பொருள்களாகவும், வீடுகளில் அலங்காரத்துக்கும் பயன்படுத்தலாம்.

கார்விங் கலை
கார்விங் கலை

இனி ஒவ்வோர் இதழிலும் கார்விங் கலையை உங்களுக்கும் கற்றுத்தர இருக்கிறார் செஃப் உமாசங்கர். காய்கறி, பழங்களோடும் கருவிகளோடும் காத்திருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism