ரெசிப்பிஸ்
Published:Updated:

வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

லீக் பூச்செண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
லீக் பூச்செண்டு

செஃப் உமாசங்கர் தனபால்

வெஜிடபிள் கார்விங்கில், தக்காளியை மட்டும் கொண்டு அழகான ரோஜாப்பூக்கள் செய்து உங்கள் விருந்து மேஜையை அலங்கரிப்பது எப்படி என்று சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், லீக் தண்டை கார்விங் மூலம் கண்கவர் பூச்செண்டாக மாற்றுவது எப்படி என்று கற்றுத்தருகிறர் செஃப் உமாசங்கர் தனபால்.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு
 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

குறிப்பு:

லீக் (Leek) என்பது வெங்காய இனத்தைச் சேர்ந்த ஒருவகை புல் வகை. இது, காய்கறி சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.

தேவையானவை:

லீக் தண்டு

பேரிங் கத்தி (Paring Knife)

செய்முறை:

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 1: நீளமாக இருக்கும் லீக் தண்டின் அடிப்பகுதியில் உள்ள வேரின் நுனியை, பேரிங் கத்தியைக்கொண்டு லேசாக நறுக்கிக்கொள்ளவும். வேரை முழுமையாக வெட்டிவிடக் கூடாது.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 2: வேர்ப்பகுதி லேசாக நீக்கப்பட்ட லீக் தண்டுப்பகுதி இப்படித்தான் இருக்கும்.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 3: வேரிலிருந்து தண்டின் மேல்நோக்கி 7 அல்லது 8 செ.மீ வரை அளந்து, அதை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இதுதான் நாம் ‘கார்வ்’ செய்யப்போகும் பகுதி.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 4: நாம் ‘கார்வ்’ செய்ய வெட்டி வைத்திருக்கும் லீக் தண்டின் மையத்தில், படத்தில் காட்டியுள்ளவாறு பேரிங் கத்தியின் நுனிப்பகுதியை வைத்துக்கொள்ளவும்.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 5: இப்போது லீக் தண்டின் மையத்தில் இருந்து அதன் கீழ்ப்பகுதிக்கு 2 செ.மீ வரை இடை வெளிவிட்டு, படத்தில் காட்டியுள்ளவாறு கத்தியைக் கொண்டு ஒரே நேர்கோட்டில் வெட்டிக் கொள்ளவும்.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 6: ஸ்டெப் 5-ல் செய்ததுபோல பேரிங் கத்தியைக்கொண்டு லீக் தண்டைச் சுற்றியும் ஐந்து இதழ் பகுதிகளாக வகுத்துக்கொள்ளவும்.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 7: இப்போது லீக் தண்டின் ஐந்து இதழ் பகுதிகளிலும் நிறைய லேயர்கள் இருப்பதைக் காணலாம். படத்தில் காட்டியுள்ளவாறு அதன் வெளிப்புறத்திலிருக்கும் முதல் லேயரை நன்றாக உள்நோக்கி மடித்துச் செருகிக்கொள்ளவும்.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 8: லீக் தண்டில் நாம் பிரித்துவைத்திருக்கும் ஐந்து இதழ் பிரிவுகளுள் ஒன்றின் லேயர்களை எவ்வாறு முழுமையாக உள்நோக்கி மடித்துச் செருகி யுள்ளோம் என்பது இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 9: ஸ்டெப் 8-ல் காட்டப்பட்டுள்ளதுபோல் லீக் தண்டின் மற்ற நான்கு இதழ் பகுதியின் லேயர் களையும் உள்நோக்கி மடித்துச் செருக வேண்டும்.

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

ஸ்டெப் 10: லீக் இதழின் அனைத்து லேயர்களையும் மடித்துவிட்ட பிறகு அதன் நடுப்பகுதியில் ஒரு செ.மீ நீளத்துக்கு நீட்டிக்கொண்டிருக்கும் எஞ்சிய தண்டுப் பகுதியில் பேரிங் கத்தியைக்கொண்டு படத்தில் கட்டியுள்ளவாறு கீறிக்கொண்டு, லேசாக அவற்றைப் பிரிக்கவும். கண்களைக் கவரும் அழகான லீக் பூச்செண்டு தயார்!

 வெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு

பார்ப்பதற்கு வெளிர் பச்சை நிறத்தில் ஒரு மலர் போன்று காட்சியளிக்கும் இந்த லீக் பூச்செண்டைக் கொண்டு உங்கள் விருந்தை மட்டுமல்ல; வீட்டையும் அழகுபடுத்தலாம்.