Published:Updated:

காய்கறி, அரிசி, பருப்புடன் மக்கள் நீண்ட வரிசை!- புதுக்கோட்டையில் நடந்த சமத்துவ காய்கறித் திருவிழா

புதுக்கோட்டை அருகே மெய் வழிச்சாலையில் நடைபெற்ற புரட்டாசி மாத சமத்துவ காய்கறித் திருவிழாவில், மெய் வழிச்சாலை மதத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்

 சமத்துவ காய்கறித் திருவிழா
சமத்துவ காய்கறித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மெய் வழிச்சாலை கிராமம் உள்ளது. இங்கு, 1940-ம் ஆண்டு புதிதாக மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய் வழி மதத்தை உருவாக்கினர். அதில், சாதி, மத பேதமின்றி உறுப்பினர்களைச் சேர்த்தனர். பல்வேறு சமூகத்தினரும் மெய் வழி மதத்தில் உள்ளனர்.

சமத்துவ காய்கறித் திருவிழா
சமத்துவ காய்கறித் திருவிழா

இந்த மதத்தில் இணைபவர்கள் சாலை என்ற வார்த்தையை தங்கள் பெயருக்கு முன்பாக சேர்த்துக்கொள்வார்கள். இங்கு ஒவ்வோர் ஆண்டும் தைப் பொங்கல் விழா, கார்த்திகை விழா, புரட்டாசி காய்கறித் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்கள் அனைத்தையும் சமத்துவ விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும், இந்த விழாக்களில் கலந்துகொள்ளத் தவறுவதில்லை. இந்த வருடம் 119-வது புரட்டாசி காய்கறித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 சமத்துவ காய்கறித் திருவிழா
சமத்துவ காய்கறித் திருவிழா

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொருவரும் காய்கறிகள், பருப்பு, அரிசிகளை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர். தற்போதைய மெய் வழி சபைக்கரசருமான சாலை வர்க்கவானிடம் இருந்த காய்கறி, அரிசி, பருப்புகளைப் பெற்றுக் கொண்டனர். அப்போது அவர் ஆசீர்வாதம் வழங்கினார்.

தொடர்ந்து, அனைவரிடம் இருந்து பெறப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்து சபைக்கரசர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினார். அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றாக இருப்பதற்காகவே, இந்த சமத்துவ காய்கறித் திருவிழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

 சமத்துவ காய்கறித் திருவிழா
சமத்துவ காய்கறித் திருவிழா

வெளியூர்களிலிருந்து மெய் வழி மதத்தினர் தவறாமல் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் பொங்கல் விழாவும் சமத்துவ பொங்கல் விழாவாகவே நடைபெறுகிறது.