Published:Updated:

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

ரங்கசாமிக்கு ரகசிய யாகம்!
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமிக்கு ரகசிய யாகம்!

பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி, கஷ்டம் என்று வரும் பக்தர்களைக் காட்டேரி சிலை முன் அமரவைத்து, பொம்மையை வெடிக்கச் செய்து அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக வித்தை காட்டுகிறார் லோகநாத சித்தர்.

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி, கஷ்டம் என்று வரும் பக்தர்களைக் காட்டேரி சிலை முன் அமரவைத்து, பொம்மையை வெடிக்கச் செய்து அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக வித்தை காட்டுகிறார் லோகநாத சித்தர்.

Published:Updated:
ரங்கசாமிக்கு ரகசிய யாகம்!
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமிக்கு ரகசிய யாகம்!

சித்து வேலைகளைக் காட்டி பக்த கோடிகளிடம் பணத்தைக் கறக்கும் போலி சாமியார்களின் ஏமாற்று வித்தைகள் குறைந்தபாடில்லை. அதிலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சாமியார்களின் அமானுஷ்ய அட்ராசிட்டிகளைப் பார்க்கும்போது, `பகீர்’, `திகீர்’ என்றிருக்கிறது... ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்... அவர்களை ஒவ்வொருவராகப் பார்ப்போம்.

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

ரங்கசாமிக்கு ரகசிய யாகம்!

வேலூரை ஒட்டியுள்ள செங்காநத்தம் மலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு திடீர்ச் சுரங்கம் அமைத்து ஜீவசமாதி அடையப்போவதாக சர்ச்சையைக் கிளப்பியவர் ‘பகவதி சித்தர்.’ ஆனால், ஜீவசமாதி அடையாமல் சுரங்கம் அமைத்த இடத்தைச் சுற்றிக் கோயில் கட்டி உட்கார்ந்துகொண்டார். பரிகாரம் தேடி அவரிடம் செல்பவர்களுக்கு மந்திரத் தகடு கொடுத்தே தலைவர் மஹிந்திரா எக்ஸ்.யூ.வி காரில் பவனிவருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, இவரிடம் சென்று ரகசிய யாகம் நடத்திவிட்டே முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றெல்லாம் பரபரக்கிறார்கள் சாமியாரின் சிஷ்ய கோடிகள். ரங்கசாமி வந்துபோகும் தகவலறிந்து, வேலூரின் அரசியல் புள்ளிகள் பலரும் பகவதி சித்தரை மலர் தூவி வழிபடுகிறார்கள்.

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

லேடி கெட்டப்பில் மேஜிக்!

பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி, கஷ்டம் என்று வரும் பக்தர்களைக் காட்டேரி சிலை முன் அமரவைத்து, பொம்மையை வெடிக்கச் செய்து அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக வித்தை காட்டுகிறார் லோகநாத சித்தர். குடியாத்தம் அருகே கம்மவாரன்பட்டி கிராமத்தில் பீடம் நடத்திவரும் இவர், சேலையைக் கட்டிக்கொண்டு பெண் வேடத்தில்தான் அருள்வாக்கு சொல்கிறார். ஏவல்வைத்துவிட்டார்கள் என்று யாராவது வந்துவிட்டால் போதும்... குட்டிச் சாத்தான் பொம்மையைவைத்து ஓர் உருட்டு உருட்டிவிடுகிறார். அதனருகில் மாவு பொம்மையைவைத்து, கத்திமீது நின்று தண்ணீர் தெளிக்கிறார். திடீரென மாவு பொம்மை வெடிக்கிறது. அதன் தந்திரம்தான் புரியவில்லை. இதைப் பார்க்கும் பொதுமக்கள் கேட்கும் பணத்தைக் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள்!

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

திராவிட மாடல் சாமியார்!

நெருப்பின்மீது படுத்துக்கொண்டே தியானம் செய்வதாகக் கிளப்பிவிட்டிருக்கிறார் காட்பாடி அருகேயுள்ள காங்குப்பம் மலையைக் குடைந்து கோயிலைக் கட்டியிருக்கும் மகானந்த சித்தர். இந்த கிராமம், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பிறந்து வளர்ந்த ஊர். ஈசன் தன் முன் தோன்றி 500 ஆண்டுகள் பூமியில் வாழ்வதற்கான வரம் கொடுத்திருப்பதாக சாமியாரே பில்டப் கொடுக்கிறார். ஜடாமுடியுடன் உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு, இடுப்பில் ஒரு சிறிய துண்டை மட்டுமே கட்டியிருக்கும் மகானந்த சாமியார் ஆண்டுக்கு ஒரு முறை... அதுவும் சித்திரை 1-ம் தேதி மட்டுமே ‘மில்க் பாத்’ எடுத்துக்கொள்கிறார். அப்போதுதான் இடுப்பில் கட்டியிருக்கும் துண்டையும் மாற்றுகிறார். தினமும் ஜாதிமல்லிப் பூ அணிவதிலும் மகானந்த சாமியாருக்கு அலாதிப் பிரியம். ஆனால், வாயைத் திறந்தால் வருவதெல்லாம் கெட்ட வார்த்தைகள்தான். அப்படி அவரிடம் திட்டு வாங்கிச் சென்ற பக்தர்களில் சிலர் செல்வந்தர்களாகவும் உச்சம் தொட்டிருக்கிறார்களாம். நந்தி மேல் அமர்ந்து காட்சியளிப்பதுதான் மகானந்த சாமியாருக்குப் பிடித்தமானது. முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா, துரைமுருகன் குடும்பத்தினர், டி.டி.வி.தினகரன் எனத் தலைவர்கள் பலரும் மகானந்த சாமியாரிடம் திட்டு... சாரி, ஆசி வாங்குவது வழக்கம். இதனால், இவரைச் சமீபகாலமாக `திராவிட மாடல் சாமியார்’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்!

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!
மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

ஜட்டி சாமியார்!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ராமபுரம் கிராமத்தின் மலையடிவாரத்தில், குளிர்ச்சி லிங்கேஸ்வரர் கோயிலைக் கட்டி குத்தாட்டம் போடுகிறார் பாலு சாமியார். கழுத்தில் கொத்துக் கொத்தாக ருத்ராட்ச மாலையை அணிந்துகொண்டு தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டில் தீர்த்தம் வழங்கும் இந்தச் சாமியார், பௌர்ணமி மற்றும் அமாவாசை நாள்களில் ஒன்பதே முக்கால் அடியிருக்கும் பெரிய சிவலிங்கத்தின் மீதேறி ருத்ர தாண்டவமாடுகிறார். அப்போது, மூட்டை மூட்டையாகத் திருநீற்றைக் கொண்டுவந்து அவர்மீது கொட்டுகிறார்கள் சீடர்கள். விபூதி அபிஷேகத்தின்போது, ஜட்டி மட்டுமே அணிந்திருக்கும் இவரைப் பார்க்கும்போது, ‘நான் கடவுள்’ படத்தின் அகோரி ஆர்யா கண்முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை... ‘வித்திட்டான் என்னை; விதைத்துட்டேன் உன்னை; வளர்ந்துட்டாய் கல் மரமாக... எழுந்துட்டாய் குளிர்ச்சி லிங்கேஸ்வரராக’ என்று பஞ்ச் வசனம் பேசும் பாலு சாமியார், கடையெழு வள்ளல்கள் காலத்தில் அவர் இங்கு வாழ்ந்ததாகவும், முற்பிறவி பலனாக இங்கேயே இருப்பதாகவும் அளந்துவிடுகிறார்!

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!
மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

மயான வேட்டை!

ஆற்காட்டிலிருந்து கலவை செல்லும் சாலையில் பாலாற்றங்கரையோரத்தில் 36 அடி உயரத்தில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது தோப்புக் கருப்பு சாமி சிலை. இந்தக் கோயிலில் பூஜை செய்யும் ரமேஷ் என்பவர் பௌர்ணமி, அமாவாசை மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாள்களில் மயான வேட்டைக்குப் புறப்படுகிறார். சிலை முன்பு வளர்க்கப்படும் வேள்வி பூஜையின் யாக குண்டத்தில் கையைவிட்டு நெருப்பை அள்ளி கருப்பு சாமிக்கு ஆராதனை காட்டுகிறார். பின்னர் ஒரு கையில் சாட்டை, மறு கையில் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு கண்களை உருட்டியபடியே பாலாற்றின் மயானப் பகுதிக்குச் செல்கிறார். அங்கு சுருட்டு புகைத்துவிட்டு மீண்டும் வந்து மக்களுக்கு அருள்வாக்குச் சொல்கிறார். இதையெல்லாம் மிரட்சியோடு பார்க்கும் ஆற்காடு பகுதி மக்கள் சாமிக்கு அள்ளிக் கொடுக்கவும் தவறுவதில்லை!

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

லேடீஸ் ஒன்லி!

சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் நாகாத்தம்மன் கோயிலை நிறுவியிருக்கும் கேந்து சாமியார், தினமும் தனக்கு 1,700 போன் கால்கள் வருவதாக அளந்துவிடுகிறார். ஆனால், அதென்ன 1,700 என்ற கணக்கு மட்டும் தெரியவில்லை... கிராமத்துப் பெண்களின் குறைகளை மட்டுமே ஆரம்பத்தில் தீர்த்துவைத்த இந்தச் சாமியார், இப்போது வெளிநாட்டுப் பெண்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்கிறார். பெண்கள் இவரைத் தேடி வந்தால், குறைந்தது 15 நாள்கள் தங்க வேண்டுமாம். அப்போதுதான் அவர்களுக்கான பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிறார். சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா(!) எனப் பல்வேறு நாடுகளிலும் தனது கிளைகளை விரிவுபடுத்தியிருப்பதாக அடித்துவிடுகிறார் சாமியார். ஆனால், அதெல்லாம் உண்மையா என்பது அவருக்கே வெளிச்சம்!

மில்க் பாத்... சிணுங்கல் நடனம்... ஜட்டி அபிஷேகம்... சர்ச்சை கிளப்பும் வேலூர் சாமியார்கள்!

சிணுங்கல் சாமியார்!

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரியில் சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம் அமைத்து பெண்களுடன் நடனமாடிவருகிறார் மோகனாந்தா சாமியார். அவரது உடல்மொழியில் சிணுங்கலும் நளினமும் நவரசமாக நாட்டியமாடுகின்றன. மேல் சட்டை அணியாமல், தன்னைக் கவர்ச்சியாகக் காட்டிக்கொள்வதில் அந்தச் சாமியாருக்கு அலாதிப் பிரியம். ஆடம்பர கார்களில், கடைதிறப்பு விழாக்களுக்குச் சென்று ரிப்பன் வெட்டுவது, அண்ணாரின் அவ்வப்போதைய ஹாபி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism