Published:Updated:

`பேருதான் ஸ்மார்ட் சிட்டி; ஊரெல்லாம் பள்ளம்!' - வேலூர் மாநகராட்சிக்கு எதிராக சீறும் மக்கள்

சேறும் சகதியுமாக மாறிய வீதிகள்

வேலூர் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டிய பள்ளங்களைச் சரிவர மூடாததால் வீதிகளும் சாலைகளும் சேறும் சகதியுமாக மாறியிருக்கின்றன.

`பேருதான் ஸ்மார்ட் சிட்டி; ஊரெல்லாம் பள்ளம்!' - வேலூர் மாநகராட்சிக்கு எதிராக சீறும் மக்கள்

வேலூர் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டிய பள்ளங்களைச் சரிவர மூடாததால் வீதிகளும் சாலைகளும் சேறும் சகதியுமாக மாறியிருக்கின்றன.

Published:Updated:
சேறும் சகதியுமாக மாறிய வீதிகள்

``சர்க்கரை என்று வெற்றுக் காகிதத்தில் எழுதிவைத்தால் இனிக்குமா? என்கிற கேள்விக்கான பதில்தான், வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான மதிப்பீடும்’’ என்று விமர்சிக்கிறார்கள் வேலூர் மக்கள். ``மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளை நான்கு மண்டலங்களாகப் பிரித்து நிர்வகித்தும் சொல்லும்படியாக எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளவில்லை.  

பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டிய பள்ளம்
பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டிய பள்ளம்

குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை, இயற்கை வளங்களைக் கவனமாகக் கையாள்வது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கூடிய திட்டங்களையும் சரியாகச் செயல்படுத்தவில்லை. காட்பாடி காந்தி நகரில் வசதி படைத்தவர்கள் இருக்கும் வீதிகளை மட்டுமே பளபளப்பாக மாற்றியிருக்கிறது மாநகராட்சி. பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளைக் குப்பை மேடுகளாக மாற்றியிருப்பதே சாதனை’’ எனவும் ஆதங்கப்படுகிறார்கள் மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர்க் குழாய் பதிப்பதற்காக மாநகராட்சியில் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்களைத் தோண்டினர். அந்தப் பணிகளை அரைகுறையாக முடித்த கையோடு பள்ளங்களையும் சரிவர மூடாமல் சென்றுவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தைக் கவனிக்காமல் நடந்து செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் தவறிவிழுந்து காயமடைகிறார்கள்.

டி.கே.எம் கல்லூரி சாலை
டி.கே.எம் கல்லூரி சாலை

பாதாளச் சாக்கடை, குடிநீர்க் குழாய் பதிக்கும் பணிகள் 2021-ல் தான் நிறைவடையும் என்று மாவட்ட நிர்வாகமே அறிவித்திருப்பதால் தரமான சாலைகளை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குக் காணமுடியாது. அதுவரை, இந்த மேடு பள்ளத்தைத்தான் பயன்படுத்தவேண்டும். கடந்த ஒரு வாரமாக வேலூரில் பலத்த மழை பெய்துவருவதால் பள்ளம் இருக்கும் இடங்கள் சேறும் சகதியுமாக மாறியிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக சத்துவாச்சாரி பகுதி மற்றும் சாய்நாதபுரம், சங்கரன்பாளையத்திலிருந்து டி.கே.எம் மகளிர் கல்லூரி செல்லும் சாலை மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. மாணவிகளும், வயதானவர்களும் சேற்றில் வழுக்கி விழுகிறார்கள். இதுபற்றி மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் யாருமே கண்டு கொள்ளவில்லை. கல்லா கட்டுவதில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்துவதாகக் கொந்தளிக்கிறார்கள் பொதுமக்கள்.

நடந்துசெல்ல முடியாமல் அவதிப்படும் மாணவிகள்
நடந்துசெல்ல முடியாமல் அவதிப்படும் மாணவிகள்

இதுபற்றி மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு பைப் லைன் இணைப்பு கொடுத்து 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகிக்கும் திட்டப் பணிகளும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகள் முடியும் வரை இந்த மாதிரி சிறுசிறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். விரைவில் தீர்வுகாணப்படும்’’ என்றார்.

பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷிடம் கேட்டதற்கு, ‘‘மெயின் லைன், வீடுகளுக்கான இணைப்பு என முழுப் பணிகளும் முடிந்த பிறகு வீதிகளும் சாலைகளும் மறுசீரமைப்பு செய்யப்படும். தற்காலிகமாக வேண்டுமானால், டி.கே.எம் கல்லூரி சாலையில் மண்ணைக் கொட்டி சமன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உடனே செய்கிறோம்’’ என்று உறுதியளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism