Published:Updated:

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

ஆச்சர்யமூட்டும் கரடி டாக்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யமூட்டும் கரடி டாக்டர்

சேவை

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

சேவை

Published:Updated:
ஆச்சர்யமூட்டும் கரடி டாக்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யமூட்டும் கரடி டாக்டர்
ர்நாடக மாநிலம் பன்னேருகட்டா தேசிய வனவிலங்குச் சரணாலயத்தில் 70 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது கரடிகளுக்கான பிரத்யேக மறுவாழ்வு மையம். வித்தைக்காட்டுபவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 71 கரடிகள் இங்கு தங்களின் முந்தைய கால துன்பங்களை மறந்து, தங்களது வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்கின்றன.

இவற்றுக்கும் இதுபோல இந்தியாவிலுள்ள பல்வேறு மையங்களில் கரடி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வனவிலங்கு களுக்கும் மருத்துவம் பார்க்கும் மகத்தான பணியைச் செய்துகொண்டிருக்கும் மருத்துவர் ஆ.ச.அருண் நம் ஊர் தமிழர். இந்தியாவில் கரடிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர் களில் முதன்மையானவர். பன்னேருகட்டா கரடிகள் மறுவாழ்வு மையத்தின் தலைமை நிர்வாகியான அருணிடம் அவரது பணி அனுபவங்கள் குறித்து உரையாடினோம்...

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

“பூர்வீகம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ஆறகழூர் கிராமம். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலைப் படிப்பை முடித்ததும், கோயமுத்தூர் மாவட்டம் சோமனூரில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்தேன். சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் வாகனங்கள் மோதி அடிபடுவது உட்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகளின் உயிரிழப்புச் செய்திகளை அதிகம் கேள்விப்பட்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு, வனவிலங்குகளுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் அதிகம் இல்லை. எனவே, விலங்குகளின் நலனுக்காகப் பணியாற்றும் எண்ணத்துடன், அதே பிரிவில் முதுநிலைப் படிப்பை முடித்தேன். ஆக்ராவிலுள்ள சூர் சரோவர் பறவைகள் சரணாலயத்தில் 2000-ல் தொடங்கப்பட்ட கரடிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

முகலாயர்கள் காலத்தில் இருந்தே நம் நாட்டில், குறிப்பிட்ட சில இன மக்கள் கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளை வைத்து வித்தை காட்டிப் பிழைத்து வந்தனர்.

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

இதனால், வனவிலங்குகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டதுடன், அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையும் சிதைந்தது. இதை முறைப்படுத்த 1972-ல் சட்டம் இயற்றப்பட்டாலும், அதன் பிறகு உரிமம் பெற்று கரடி வளர்ப்போர் போர்வையிலும் முறைக்கேடுகள் அதிகரித்தன. தாய் கரடியைக் கொன்று கடத்தப்படும் அதன் குட்டிக்குக் கொடூரமான முறையில் கருத்தடைச் செய்வார்கள். பழுக்கக் காய்ச்சிய கம்பியைக் கொண்டு மூக்கில் துளையிட்டு கயிற்றைக் கட்டுவதுடன், இரும்புக் கம்பியால் கோரைப் பற்களை உடைப்பார்கள். காலில் சூடு வைத்து குடுகுடுப்புச் சத்தத்துக்கு நடனமாட பழக்கப்படுத்துவார்கள். இதுபோன்ற பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு உயிர்பிழைக்கும் கரடிகளை, மக்களின் வசிப்பிடங்களுக்குக் கொண்டுவந்து வித்தைகாட்டி பிழைப்பு நடத்துவார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கொடுமைகளைத் தடுப்ப துடன், அழிந்துவரும் உயிரிங்களின் பட்டியலில் கரடி சென்றுவிடாமல் தடுக்க, நான் பணியாற்றும் ‘வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ்’ அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. கரடியை வைத்து வித்தைகாட்டிப் பிழைப்பவர்களைச் சந்தித்தோம். சட்டப்படி வன விலங்குகளை வைத்து தொழில் செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். அவர்களிடம் இருந்து 625 கரடிகளை மீட்டோம். பல்வேறு காரணங் களுக்காகக் கரடிகளை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலிடமிருந்து 90 கரடிகளை மீட்டோம். அத்துடன், வனத்துறை மற்றும் சட்டத்துறை உதவியுடன் அந்தக் கும்பலையும் கட்டுப்படுத்தினோம். இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பாகக் கரடிகள் வளர்க்கப்படுவதில்லை என்பதை 2009-ல் உறுதிசெய்தோம்” என்கிறார் புன்னகையுடன்.

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

கர்நாடகம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலுள்ள இந்த அமைப்பின் மறுவாழ்வு மையங்களில் தற்போது 350 கரடிகள் பராமரிக்கப் படுகின்றன. மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்கும் இந்த மையங்கள், சம்பந்தப்பட்ட மாநில வனத்துறையின் கீழ் செயல்படுகின்றன.

“18 ஆண்டுகளுக்கு முன்பு நான் பணியில் சேரும்போது, இந்தியாவில் கரடிகளுக்கு மருத்துவம் பார்க்க பிரத்யேக மருத்துவர் யாருமில்லை. இதில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கூட பெரிய அனுபவமில்லை. முதுநிலைப் படிப்பில் கற்ற விஷயங்கள் ஓரளவுக்கு மட்டுமே பயன்கொடுக்க, அப்போது ஆக்ரா மையத்தில் பராமரிக்கப்பட்ட 25-க்கும் அதிகமான கரடிகளுடன் அதிக நேரம் செலவிட்டேன். அவற்றின் குணாதிசயங்கள், உடல்நிலை குறித்துத் தெரிந்துகொண்டேன். வயதுக்கு ஏற்ற எடையும் ஆரோக்கியமும் இல்லாமல் பரிதாபத்துடன் இருந்த கரடிகளின் உடல்நிலையைப் பலப்படுத்தினோம். சிதைந்துபோயிருந்த அவற்றின் மனநிலையைச் சீர்படுத்தினோம். இதற்கெல்லாம் ஆண்டுக்கணக்கில் மெனக்கெட்டோம். கரடிகளுக்குக் கோரைப் பற்கள் உடைக்கப்பட்டிருந்ததால், அவை கடித்தாலும் ஆபத்து ஏற்படாது. இருப்பினும் அவற்றின் கால் நகக் கீறல்களால் என் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தத் தழும்புகள் என்மீது கரடிகள் போட்ட ஆட்டோகிராப்” என்று நெகிழ்கிறார்.

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

“இந்த நிலையில், 2005-ல் பன்னேருகட்டாவில் உருவாக்கப்பட்ட மையத்துக்குத் தலைமை நிர்வாகியாக மாறுதலானேன். அண்டை மாநிலங்களில் மீட்கப்பட்ட கரடிகளை இந்த மையத்தில் பராமரிக்கிறோம். சோளம் அல்லது கேழ்வரகு மாவுடன் பால், முட்டை, காய்கறிகள், சோயா, தேன் கலந்து தயாரிக்கப்படும் கஞ்சியை கரடிகளுக்குக் காலையிலும் மாலையிலும் உணவாகக் கொடுப்போம். மதிய உணவாக ஏதாவதொரு வகை பழத்தை தலா இரண்டு கிலோ அளவில் கொடுப்பதுடன், வேர்க்கடலை வெண்ணெயுடன் தேன் கலந்த கலவையைக் காடுகளில் மறைத்து வைத்துவிடுவோம். இதைக் கரடிகள் தேடிப்பிடித்துச் சாப்பிடுவதால், அதன் உடல் உழைப்பும் உறுதிசெய்யப்படும். கரடிகள் சுதந்திரமாக உலாவுவதற்கும் விளையாடி மகிழவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஒவ்வொரு கரடிக்கும் தனிப் பெயர் குறிப்பிட்டு, அவற்றின் முழு விவரங்களையும் தனித்தனி கோப்புகளாகப் பதிவு செய்கிறோம். பல கரடிகளுக்கு தோனி, ஐஸ்வர்யா ராய் எனப் பிரபலங்களின் பெயர்களை வைத்துள்ளோம். அதில், தோனி சமத்துக்காரன். ஐஸ்வர்யா ராய் குறும்புக்காரி.

கரடிகள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்வதே எங்கள் முதல் பணி. ஆண்டுதோறும் எல்லாக் கரடிகளுக்கும் முழு உடல் பரிசோதனை செய்வோம். மனிதர்களைப் போலவே புற்றுநோய், காசநோய், இதய பாதிப்பு, ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பாதிப்புகள் கரடிகளுக்கும் ஏற்படும். எல்லா நோய்களுக்கும் சிகிச்சையளித்து குணப்படுத்தும் அனுபவங்கள் பெற்றுள்ளோம். இந்தியா மற்றும் வெளிநாட்டு சரணாலயங்களில் வளர்க்கப்படும் கரடிகளுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கும் ஆலோசனை கொடுக்கிறோம்” என்று சொல்லும் அருணிடம் 17 வன விலங்கு மருத்துவர்கள் பணியாற்று கின்றனர்.

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

வித்தை காட்டுவது, பிச்சை எடுப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட யானைகள், ஊருக்குள் புகுந்து காயமடைந்த சிறுதைகள், கழுதைப்புலிகள், மான்கள், குரங்குகள், பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளையும் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் மறுவாழ்வு மையங்களில் பராமரிக்கின்றனர். எல்லா மையங்களிலும் விலங்குகளுக்கு மேற்கொள்ளப்படும் முக்கியமான அறுவைசிகிச்சைகள் அருண் மேற் பார்வையில்தான் நடை பெறுகின்றன. வனவிலங்குகள் குறித்த ஆராய்ச்சி யிலும் ஈடுபடுபவர், விலங்குகள் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார்.

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

கரடிகளுக்குக் காலை நேர உணவு வழங்கும் பணிகளைக் கண்காணித்து விட்டு வந்தவர், “எங்கள் மையங்களில் பராமரிக்கப்படும் கரடிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் இனவிருத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. மீண்டும் காடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தான் அவை மீட்கப்பட்டிருக்கின்றன. எனவே, அனைத்து விலங்குகளும் தங்களின் எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கட்டமைத்துள்ளோம்.

“என் உடல் முழுவதும் கரடிகளின் ஆட்டோகிராப்!” - ஆச்சர்யமூட்டும் ‘கரடி’ டாக்டர்

விலங்குகள் இன்றி காடுகள் இல்லை. காடுகள் இல்லாமல் இயற்கை உயிர்ச்சூழல் இல்லை. இந்தச் சுழற்சி சரியாக இயங்கினால்தான் இந்த உலகில் மனிதர்களும் உயிர்வாழ முடியும். இந்தப் பூமி எல்லா உயிரினங்களும் பொதுவானது என்பதை உணர்ந்து, விலங்குகள் அதன் வாழ்விடத்தில் நிம்மதியாக வாழ நாம் வழிவகை செய்ய வேண்டும்” என்று முடித்தார் அருண்.

வன விலங்குகளின் மறுவாழ்வுக்காக அருண் தன் வாழ்வையே அர்ப்பணித் திருக்கிறார் என்றால் அது மிகையல்ல!