Published:Updated:

இபிஎஸ்Vsஓபிஎஸ்:அதிமுக க்ளைமாக்ஸ்-பற்றி எரியும் வடமாநிலங்கள்-இந்திய கோதுமை.. தடை ஏன்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights june 16
Listicle
Vikatan Highlights june 16

இபிஎஸ்Vsஓபிஎஸ்:அதிமுக க்ளைமாக்ஸ்-பற்றி எரியும் வடமாநிலங்கள்-இந்திய கோதுமை.. தடை ஏன்|விகடன் ஹைலைட்ஸ்


1
அதிமுக கூட்டம்

இபிஎஸ் Vsஓபிஎஸ்: அதிமுகவில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் காட்சிகள்...

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருப்பதாக அக்கட்சியினர் பரபரக்கிறார்கள்.

முதல்வராக பதவி வகித்தபோதே கட்சியிலும் தனக்கான செல்வாக்கை படிப்படியாக அதிகரித்து, ஓ.பன்னீர் செல்வத்தை ஓரங்கட்டி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அ.தி.மு.கவை தனது தலைமையின் கீழ் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீர்மானித்து, அதற்கான காய்நகர்த்தல்களை மிக வேகமாக முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார்.

அதன் எதிரொலியாகத்தான், சில தினங்களுக்கு முன்னர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, 'ஒற்றைத் தலைமை' கோஷம் ஓங்கி ஒலித்தது.

பதிலுக்கு ஓபிஎஸ் தரப்பிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு ஆதரவாக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. கூடவே, கட்சியில் தனக்கான ஆதரவு வட்டத்தை அதிகரிக்கவும், ஏற்கெனவே இருக்கும் தனது விசுவாசிகளைத் தக்க வைத்துக்கொள்ளவும் அவர் படு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கான பணிகளில் தனது இரண்டாவது மகனை களம் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம், வருகிற 23 ஆம் தேதியன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக, தனது தலைமையை ஏற்க ஓ.பி.எஸ்-ஸை சம்மதிக்க வைத்து விட வேண்டும் எனத் தனது தரப்பில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை அனுப்பி, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இந்த முறையும் வெற்றிப்பெறப் போவது எடப்பாடிதான் என அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை தொடர்பாக செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் நடத்திய தீவிர ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது என்ன என்பதை தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்...


2
பீகாரில் போராட்டம்

ராணுவ பணி: புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு... போராட்டத்தினால் பற்றியெரியும் வட மாநிலங்கள்...

மத்திய அரசு புதிதாக நான்கு ஆண்டுகள் ராணுவப் பணி என்ற திட்டத்தை `அக்னிபத்’ என்ற பெயரில் அறிவித்திருக்கிறது.

இந்த நான்கு ஆண்டு ராணுவப் பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்தவிதச் சலுகையும் இருக்காது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதுபோல் சேர்த்து, அவர்களில் சிறப்பாக பணியாற்றும் 25 சதவிகிதம் பேரை மட்டும் நான்கு ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு ராணுவத்தில் சேரத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் தீ வைப்புச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகள் அரங்கேறி உள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
கோதுமை

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை: காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

இந்திய கோதுமை மீதான ஐக்கிய அரபு அமீரகத்தின் திடீர் முடிவின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
பினராயி விஜயன்

'நீங்கள் வீட்டில் உறங்க முடியாது' - கேரள முதல்வருக்கு ஆதரவாக சர்ச்சைப் பேச்சு!

கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம்-க்கு எதிராகவும், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தீவிர போராட்டம் நடத்திவருகின்றன. திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்தே இந்தப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், பினராயி விஜயனுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ள சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டி.ஒய்.எஃப்.ஐ) பாலக்காடு மாவட்டச் செயலாளர் பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மிகக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்து அவர் பேசியதைப் படிக்க க்ளிக் செய்க...


5
பருத்திவீரன்

தமிழ் நாயகிகளின் "மல்டிவெர்ஸ்" சினிமா!

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், கார்த்தி ஆகியோரின் பங்களிப்பு இருந்தது. அப்போதிலிருந்தே "மல்டிவெர்ஸ்" என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாயகர்களுக்கு மட்டும்தான் மல்டிவெர்ஸ் எடுக்க முடியுமா? நாயகிகளை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்? அதற்கான கதை எப்படி அமைக்கலாம்?

ஒரு கிராமத்து இளம்பெண் சாதிபாகுபாடு, குடும்ப எதிர்ப்பு காரணமாக தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்க... காதலில் தோற்றுப்போன, காதலனோடு வாழ முடியாமல் போன பருத்திவீரன் முத்தழகு, சுப்ரமணியபுரம் துளசி எனப்போகும் தமிழ் நாயகிகளின் "மல்டிவெர்ஸ்" சுவாரஸ்யங்களை மேலும் படிக்க க்ளிக் செய்க...


6
Jayalalitha tells about her Mother Sandhya

“அம்மா நான் ஷூட்டிங்குக்குப் போயிட்டு வர்றேன்!” ஜெயலலிதா #AppExclusive

"When we sigh about our troubles, It doubles everyday. When we laugh about our troubles, It is bubble blown away. Let these words of love soothe your woeful eyelid, But not your aching heart. Mummy rests in peace to see her darling kid, To rise to sky in Maternal art."

- "என் அன்னை இறந்ததையொட்டி எனக்கு வந்த ஆயிரக்கணக்கான அனுதாபக் கடிதங்களில் எனக்கு மிகவும் ஆறுதல் அளித்த கடிதம் இதுதான். ஆம், என் அன்னை, நான் என்னென்ன செய்யப்போகிறேன், எப்படி இருக்கப்போகிறேன், எவ்வாறு என் அன்னை கவனித்து வந்த காரியங்களைக் கவனிக்கப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக் கொண்டு தானிருப்பார். அவரது எண்ணப்படி நான் வளருகிறேனா என்பதையும் கவனித்துக் கொண்டுதானிருப்பார். அவர் ஆசையாக, அன்புடன் வளர்த்த பெண்ணாயிற்றே நான்..."

தன் தாய் சந்தியா பற்றி 1971ல் ஜெயலலிதாவே எழுதிய உருக்கமான கட்டுரையைப் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism