Published:Updated:

அதிமுக - பாஜக ரேஸ் - சசிகலாவின் க்ளைமாக்ஸ் - 7 வயது ஐஏஎஸ் கனவு - பாக்யராஜின் மேஜிக்|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights
Listicle
Vikatan Highlights

சசிகலாவின் க்ளைமாக்ஸ் - 7 வயது ஐஏஎஸ் கனவு - பாக்யராஜின் மேஜிக்|விகடன் ஹைலைட்ஸ்


பின்னுக்குத் தள்ளப்படுகிறதா அதிமுக?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசியலில் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவதில் திமுகதான் நம்பர் ஒன் என்ற பேச்சு எப்போதுமே உண்டு. குறிப்பாக அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான கருணாநிதி, 'முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் செயல்பட்டதை விட எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதுதான் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுவார்' என்பது திமுகவினரே ஒப்புக்கொண்ட விஷயம்.

அதேபோன்று ஜெயலலிதா காலத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும், அவர் விடும் அறிக்கைகள், பொதுக்கூட்ட பேச்சுகள், பேட்டி போன்றவற்றுக்கு உடனடி ரியாக்சன் இருக்கும்.

இந்த நிலையில், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினும் எதிர்க்கட்சி ரோலை சிறப்பாகவே செய்ததால்தான் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால், 2021 தேர்தலில் ஆட்சியை இழந்த அதிமுக, 2 வது இடத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் உள்ளது. ஆனால் மந்தகதியிலேயே செயல்படுவதால், அதிமுகவைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு விட்டு, எதிர்க்கட்சிக்கான இடத்தைக் கைப்பற்றுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்பாக அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்யும் அதிரடி அரசியலும், அதற்கு திமுகவினர் பதிலளிப்பதும் அதிமுக இடத்தை, பாஜக பிடித்துவிடுமோ என்ற சந்தேம அதிமுகவினருக்கே வரத் தொடங்கி விட்டது.

உண்மையில் அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதா..? இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் சொல்வது என்ன..? தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்....


1
சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.,

க்ளைமாக்ஸை நெருங்குகிறதா சசிகலா விவகாரம்?

அ.தி.மு.கவில் மீண்டும் நுழைந்து, கட்சியில் பழைய அதிகார நிலைக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் சசிகலாவும் என்னென்னவோ செய்துதான் பார்க்கிறார். எதுவும் நடந்தபாடில்லை. அதிலும் ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டாலும், சசிகலாவை அதிமுகவுக்குள் சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

அதே சமயம், சசிகலாவையும் சேர்த்துக்கொண்டால் அது அதிமுகவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் எனக் கருதும் பாஜக, அப்படி இருந்தால்தான் அது தங்களுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் உதவியாக இருக்கும் என நினைக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து, இந்த விவகாரத்தின் க்ளைமாக்ஸாகவே பார்க்கப்படுகிறது. அப்படி அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2
ஏஞ்சலின் ரெனிட்டா

3 -ம் வகுப்பு அப்பாவும் 7 வயது மகளின் ஐ.ஏ.எஸ் கனவும்..! - சாதித்த ஏஞ்சலின் ரெனிட்டா

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி - விக்டோரியா தம்பதி. இவர்களுடைய மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழி கல்வியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். 7 வயதிலேயே அப்பாக்கிட்ட, `நான் ஐ.ஏ.எஸ் ஆகணும்!' எனச் சொன்னவர், தற்போது அதை சாதித்துக் காட்டியுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் ஏஞ்சலின் ரெனிட்டா இந்திய அளவில் 338வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அப்பா 3-ம் வகுப்பும், அம்மா 9-ம் வகுப்பும் மட்டுமே படித்துள்ள நிலையில், தனது ஐ.ஏ.எஸ் கனவை ஏஞ்சலின் ரெனிட்டா சாத்தியமாக்கியது எப்படி என்பதை படிக்க க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


3
பம்பர் பரிசுக்கான லாட்டரி சீட்டு

ரூ. 250 -க்கு வாங்கிய லாட்டரியில் ரூ.10 கோடி... திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த திருப்பம்!

‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்பார்கள். அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் டாக்டர் ஒருவருக்கு உண்மைச் சம்பவம் நடந்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சியை சேர்ந்த டாக்டர்.பிரதீப்குமார் தற்செயலாக ரூ. 250 -க்கு வாங்கிய கேரள லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக 10 கோடி ரூபாய் கிடைத்திருப்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக். பிரதீப்குமாருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது எப்படி..? க்ளிக் செய்க...


4
சின்ன வீடு

டென்ட் கொட்டாய் டைரீஸ்: கே.பாக்யராஜின் `சின்ன வீடு':

11 நவம்பர், 1985 அன்று வெளியான ‘சின்ன வீடு’, ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். பாக்யராஜ் திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு வெற்றிப் பதக்கமாக இது இணைந்தது. ‘திரைக்கதை மன்னன்’ என்னும் பட்டப் பெயர் பாக்யராஜிற்கு உண்டு. அதை மெய்ப்பிக்கும் படி, இன்றைய தேதியில் பார்த்தாலும் கூட மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிற அளவிற்குக் கோர்வையான, கச்சிதமான திரைக்கதையை தன்னுடைய பாணியில் எழுதி, இயக்கி சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் பாக்யராஜ்.

‘சின்ன வீடு’ திரைப்படத்தின் கதை என்பது அடிப்படையில் சிலப்பதிகாரத்தின் கண்ணகி – கோவலன் – மாதவி கதைதான்.

படம் குறித்த மேலும் சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க க்ளிக் செய்யவும்...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism