Published:Updated:

தலைவராகும் பிரேமலதா - அதிமுக தனித்துப் போட்டி - பாஜக + 1 முயற்சி... பதறும் சிவசேனா |விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights
Listicle
Vikatan Highlights

தலைவராகும் பிரேமலதா - அதிமுக தனித்துப் போட்டி - பாஜக + 1 முயற்சி... பதறும் சிவசேனா |விகடன் ஹைலைட்ஸ்


1
பிரேமலதா விஜயகாந்த்

தலைவராகும் பிரேமலதா... தயாராகும் திட்டங்கள்?

தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். மேலும், அந்தக் கட்சி அடுத்தடுத்து தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.

அதனால் துவண்டுபோயிருக்கும் கட்சியைத் தூக்கிநிறுத்துவதற்கு சில திட்டங்களை தே.மு.தி.க பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் வகுத்திருப்பதாக அந்தக் கட்சியினர் கூறுகின்றனர்.

இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
செல்லூர் ராஜு

தனித்துப் போட்டி: பாஜக- வை சவாலுக்கு அழைக்கிறதா அ.தி.மு.க?

'அ.தி.மு.கவை ஓரங்கட்டும் விதத்தில், தமிழகத்தின் ஆக்டிவான எதிர்க்கட்சி நாங்கள்தான்' என்பதுபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுவதாக அ.தி.மு.க கருதிய நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையனின் சமீபத்திய விமர்சனம் பா.ஜ.க தரப்பை உஷ்ணமாக்கியது.

இதனையடுத்து, 'பொன்னையன் கருத்து அவரது சொந்த கருத்து; அதிமுக கருத்தல்ல' என அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். டெல்லி மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்திலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

இந்த நிலையில், பொன்னையனைத் தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, பா.ஜ.க மீது பாய்ந்துள்ளார்.

குறிப்பாக தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக காண்பித்துக் கொள்ளும் பா.ஜ.க தனித்துப்போட்டியிட தயாரா எனச் சவால் விடுவது போன்ற கருத்தை செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்நாவிஸ்

ராஜ்ய சபை தேர்தல்: பாஜக-வின் `ப்ளஸ் ஒன்’ முயற்சி... பதறும் சிவசேனா!

மகாராஷ்டிரா ராஜ்ய சபை தேர்தலில் பாஜக தரப்பில் இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், அக்கட்சி 3 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.

இதற்காக பா.ஜ.க மேற்கொண்டுள்ள `ப்ளஸ் ஒன்’ முயற்சி சிவசேனாவைப் பதற வைத்துள்ளது. அது என்ன `ப்ளஸ் ஒன்’ முயற்சி? விரிவாக படிக்க க்ளிக் செய்யவும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
திரையரங்கம்

ஆந்திரா: இனி ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை!

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு திரைப்படத் துறையில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபகாலமாக திரையரங்க டிக்கெட் விற்பனை தொடர்பாக பல ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது திரைப்பட டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்வது தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பதை படிக்க க்ளிக் செய்யவும்...


5
இயக்குநர் மணிரத்னம்

Maniratnam: ‘உங்கப்பன்கிட்ட ஒரு சான்ஸ் வாங்கிக் குடுடா’ - சிவாஜி கேட்ட எமோஷனல் தருணம்

நிஜப்பெயர் சுப்பிரமணியன். சினிமாவிற்காக மணிரத்னம். யாரிடமும் உதவியாளராக இருந்தவரில்லை. அவரது மானசீக குரு என்றால் அது அகிரா குரோசோவா.

தான் இயக்குநர் ஆவதற்கு முன்னர் படத்தயாரிப்பு மற்றும் பட விநியோகத் துறையில் இருந்திருக்கிறார். இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர், சிவாஜி, நாகேஷ் இவர்களின் படங்கள் பார்த்துதான் இயக்குநராக விரும்பினார்.

* இவரது படங்களில் ரயில் சீக்குவென்ஸ்கள், மழை, கண்ணாடி முன்னாடி நின்று பேசும் காட்சிகள், சில்அவுட் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும். அதை சென்டிமென்ட் ஆகவும் ஒவ்வொரு படங்களிலும் கடைபிடிக்கிறார்.

மணிரத்னம் குறித்த மேலும் சுவாரஸ்யப் பக்கங்களைப் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism