Published:Updated:

திமுக-வுக்கு மாற்று யார்?- நயினாரை பாராட்டும் சசிகலா - இலங்கை வீழ்ச்சிக்கு காரணம்-|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 6
Listicle
Vikatan Highlights June 6

திமுக-வுக்கு மாற்று யார்?- நயினாரைப் பாராட்டும் சசிகலா- இலங்கையும் இயற்கை விவசாயமும்..! |விகடன் ஹைலைட்ஸ்


1
அ.தி.மு.க கூட்டணி

திமுக-வுக்கு மாற்று யார்? - தொடங்கிய யுத்தம்!

10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்திருந்த பா.ம.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளே அடுத்த தேர்தல் குறித்து வெளிப்படையாகப் பேசுவதால், தமிழக அரசியல் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில், தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள்தான் என்பதில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே மோதிக் கொள்வது ஏன் என்பதைப் படிக்க க்ளிக் செய்க...


2
சசிகலா

நயினார் நாகேந்திரனைப் பாராட்டும் சசிகலா!

சசிகலா பாஜகவுக்கு வந்தால் அவரை வரவேற்போம் என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சொன்னாலும் சொன்னார்... சிறிது நாட்களாக அடங்கி இருந்த சசிகலா - அதிமுக விவகாரம் மீண்டும் ஹாட் டாபிக்காக மாறிவிட்டது.

அ.தி.மு.கவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என சசிகலா மல்லுக்கட்டுவதும், அதற்கு வாய்ப்பளித்து விடாமல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டும் கடுமையான எதிர்ப்பும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வை மூக்கை நுழைக்க வைத்துள்ளன.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனைப் பாராட்டி சசிகலா பேட்டியளித்திருப்பது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன சொல்லிவிட்டார் சசிகலா என்பதைப் படிக்க க்ளிக் செய்க...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
இலங்கை

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு இயற்கை விவசாயம்தான் காரணமா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி உலக அளவில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் கொந்தளிப்பில் ராஜபக்சே அரசு வீழ்ந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு, ராஜபக்சே அரசு திடீர் நடவடிக்கையாக இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியதுதான் காரணம் என்கிற கருத்து ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது. இக்கருத்து உண்மைதானா..?

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு இயற்கை விவசாயம்தான் காரணமா என்பது குறித்து பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து சொல்வது என்ன என்பதை தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
வியாசர்பாடி சக்திவேல்

உடைத்துப் பேசுவோம்: "தொட்டா தீட்டுன்னு சொல்லுவாங்க. ஆனா கொரோனா காலத்துல..."

வியாசர்பாடி சுடுகாட்டில் பிணங்களை எரித்துக் கொண்டிருக்கும் வியாசர்பாடி சக்திவேல், ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வல வண்டி, ஐஸ் பாக்ஸ் உட்பட பலவற்றையும் இல்லாதவர்களுக்கு இலவசமாய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுத்து உதவி வருகிறார்.

ஆனந்த விகடன் 'உடைத்துப் பேசுவோம்' நிகழ்ச்சிக்காக வியாசர்பாடி சக்திவேல், திருநங்கை நேஹாவுக்கு அளித்த பேட்டியிலிருந்து...


5
செய்தியாளர் சந்திப்பில் மதுரை ஆதீனம்

``மதுரை ஆதீனம் ஆன்மிகப் பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டார்!"

ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக அனலை கக்கி வருகிறார் மதுரை ஆதீனம்.

பா.ஜ.க கட்டுப்பாட்டில் மதுரை ஆதீனம் இருப்பதாகவும், அதனால்தான் அறநிலையத் துறை தொடங்கி கோயில் நிர்வாகம் வரைக்கும் அவர் திமுக ஆட்சியை விமர்சிப்பதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், "மதுரை ஆதீனம் ஆன்மிகப் பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டார்" எனக் கடுமையாக சாடியுள்ள சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆதீன மடங்கள் என்ன மாதிரி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளா எனக் கேள்வி எழுப்பி உள்ளதோடு, அவர் முன்வைத்த மேலும் பல விமர்சனங்களை படிக்க க்ளிக் செய்யவும்...


6
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

மருத்துவக் காப்பீட்டு பாலிசி... வேறு நிறுவனத்துக்கு மாற்றுவது எப்படி?

தற்போதைய மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாமல் இருப்பது, நீங்கள் எதிர்பார்க்கும் சில கவரேஜ்கள் உங்களின் தற்போதைய பாலிசியில் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது, தற்போது உள்ள பாலிசியில் இருக்கும் ஆப்ஷன்களைவிட புதிய நிறுவனத்தில் அதிக ஆப்ஷன்கள் இருப்பது, வேறு ஏதாவது தனிப்பட்ட காரணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

அப்படி வேறு ஒரு நிறுவனத்துக்கு ஹெல்த் பாலிசியை மாற்றும் முன்பு முக்கியமாக கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள் என்னென்ன..? தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism