Published:Updated:

குரங்கு அம்மையில் சதி?- அண்ணாமலையின் அட்டாக் வீடியோ- இந்திய தேயிலைக்கு என்னாச்சு?-|விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights June 7
Listicle
Vikatan Highlights June 7

குரங்கு அம்மையில் சதி?- அண்ணாமலையின் அட்டாக் வீடியோ- இந்திய தேயிலைக்கு என்னாச்சு?-|விகடன் ஹைலைட்ஸ்


1
குரங்கு அம்மை

குரங்கு அம்மைக்கு பின்னால் பிசினஸ் சதியா..?

புதிதாக ஒரு நோய் பரவும்போது, மக்கள் அச்சத்தில் தூக்கம் தொலைக்கிறார்கள். ஆனால், நாடுகள் அதைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் பெயரைக் கெடுக்கப் பார்க்கின்றன. மருந்து நிறுவனங்கள் உற்சாகத்துடன் வியாபாரக் களத்தில் குதிக்கின்றன. தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் அபகரிக்கின்றன. கொரோனா தொற்று பல மருந்து நிறுவன அதிபர்களை உலகின் மகா கோடீஸ்வரர்களாக மாற்றியது அனைவரும் அறிந்ததுதான்.

இந்த நிலையில் குரங்கு அம்மை அதை 'ரிப்பீட்டு' செய்வதாக செய்திகள் தட தடக்கின்றன. குரங்கு அம்மை உலகெங்கும் பரவுவது மருத்துவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, இதன் பின்னால் சதித்திட்டங்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் கிளம்பிவிட்டன. எதனால் இத்தகைய குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன..? தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்...


2
அண்ணாமலை வெளியிட்ட வீடியோ

"அமைச்சர் பொய் சொல்கிறார்..?" -    அண்ணாமலையின் அட்டாக் வீடியோ

தி.மு.க அரசு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகத்தில் ஊழல் செய்த்திருக்கிறது என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விளக்கமளித்திருந்தனர்.

ஆனால் சத்துணவு பெட்டகத்தில் ஊழல் நடந்திருப்பதாக அடித்துக் கூறும் அண்ணாமலை, இந்த விவகாரத்தில் அமைச்சர் பொய் சொல்வதாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
அசாம் தேயிலை தோட்டம்

இந்திய தேயிலைக்கு என்னாச்சு..? ஏற்றுமதியில் சிக்கல்

இலங்கையின் தேயிலை மார்க்கெட்டை உலக அளவில் இந்தியா பிடிக்கலாம் என்று கருதி தேயிலை ஏற்றுமதியைக் கடந்த சில மாதங்களாக அதிகரித்தது.

இந்நிலையில், பல நாடுகள் இந்திய தேயிலையைத் திருப்பி அனுப்பி வருகின்றன. அதுமட்டுமன்றி உள்ளூரிலும் பல நிறுவனங்கள் தேயிலைகளை திருப்பி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம் என்ன..? தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் மெத்தனமா?! - சர்ச்சையும் அமைச்சரின் விளக்கமும்

"தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனங்கள் அவ்வளவாக நடைபெறவே இல்லை. பல பள்ளிகளில், ஒரேயோர் ஆசிரியரே பணியாற்றிவரும் கொடுமையும் நடந்துவருகிறது" எனக் குற்றம் சாட்டுகின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தரப்பில்.

மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சில கோரிக்கைகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்த சர்ச்சை மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சொல்லும் விளக்கம் என்ன என்பதை படிக்க க்ளிக் செய்க...


5
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

தீட்சிதர்கள் Vs அறநிலையத்துறை: சிதம்பரம் கோயில் ஆய்வில் நடந்தது என்ன?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாகரீதியான அலுவல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்குழுவினர், ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களைக் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், அதிகாரிகளிடம் சொன்னது என்ன..? தெரிந்து கொள்ள க்ளிக் செய்க...


6
விஜயலட்சுமி விக்ரம்

டாய்லெட் பிரச்னை... பேசக்கூடாத விஷயமா?

ஒரு மனிதன் இயற்கை உபாதைகளை முறையாக வெளியேற்றினால்தான் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்றே அர்த்தம். ஆனால், அது பற்றி வெளியில் சொல்ல பெரும்பாலானவர்கள் தயங்குகிறார்கள்.

குடல் மற்றும் வயிறு தொடர்பான இந்த டாய்லட் பிரச்னைக்கான அறிகுறிகள் எப்படியிருக்கும்... இதிலிருந்து மீள முடியுமா?

சொந்த அனுபவங்களையே கேள்விகளுக் கான பதில்களாகத் தருகிறார் விஜயலட்சுமி.


7
ஜிகினா டிரஸ்ல கனவுப் பாடல் அதை என்னால தவிர்க்க முடியாது - பாக்யராஜ்- #Classics

"கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது" - பாக்யராஜ் #AppExclusive

"தாவணிக் கனவுகள்" படம் ஊத்திக்கிச்சாமே?” "தாவணிக் கனவுகள் படம் சரியா இல்லாததாலே படத்தை வாங்கின டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்குப் பாதிப் பணத்தை பாக்யராஜ் திருப்பிக் குடுத்துட்டாராமே"'

"பாக்யராஜ் கவர்மெண்ட்ல பெரிய புள்ளிகளப் பாத்துப் பேசியிருக்கிறார், அதனால படத்துக்கு ’டாக்ஸ் ஃப்ரி' கிடைச்சுடும். அப்புறம் என்ன. . . படம் பிக்-அப் ஆயிடாதா?’’

- இப்படி தாவணிக் கனவுகள்' படம் பற்றிக் கிளம்பிய விமர்சனங்கள்... முருங்கைக்காய் சமாச்சாரம்... அ.தி.மு.க., கலைஞர்... கலர் காஸ்ட்யூம் என 1984-ம் ஆண்டு வெளியான பாக்யராஜ் அளித்த விரிவான பேட்டியைப் படிக்க க்ளிக் செய்க...


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism