எடப்பாடி போடும் இலாப கணக்கு- புற்றுநோய் மருந்து வெற்றி-அடங்காத சர்ச்சையில் ஆதீனம்-|விகடன் ஹைலைட்ஸ்

எடப்பாடி போடும் இலாப கணக்கு- புற்றுநோய் மருந்து வெற்றி-அடங்காத சர்ச்சையில் ஆதீனம்-|விகடன் ஹைலைட்ஸ்

பா.ஜ.க - அ.தி.மு.க மோதல்: எடப்பாடி போடும் இலாப கணக்கு!
'இடத்தைக் கொடுத்தால், மடத்தைக் கேட்பார்கள்' என கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அ.தி.மு.க., பா.ம.க கட்சியினரிடையே பா.ஜ.க-வை முன்வைத்த விமர்சனங்களில் அதிகமும் இந்தப் பழமொழியைக் கேட்க முடிகிறது. இந்த விமர்சனக் குரல் கூட்டணிக்குள் சர்ச்சை, சலசலப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செல்லூர் ராஜூ என அடுத்தடுத்து பா.ஜ.க-வுக்கு எதிராக அ.தி.மு.க தலைவர்கள் இடியாக முழங்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே, “பா.ஜ.க-வில் எந்த வன்னியர் இளைஞரும் இணையக் கூடாது” எனக் கட்டளை பிறப்பித்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளெல்லாம் இணைந்துதான் கூட்டணி சமைத்தன. அந்தக் கூட்டணியில் தற்போது ஓட்டை விழ ஆரம்பித்திருக்கிறது.

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து; வெற்றி பெற்ற ஆய்வு!
மற்ற நோய்களைப் போல அல்லாமல் புற்றுநோய் மனித வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். நோயின் பாதிப்பைவிட, புற்று செல்கள் பரவாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகள் மிகவும் வேதனை அளிக்கக் கூடியவையாக இருக்கும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
"ரஃபேல் ஊழல் குறித்தும் பேசுவாரா ஆதீனம்..?" - அனல் கிளப்பும் அரசியல் கட்சிகள்
பல அதிரடியான கருத்துகளைப்பேசி எப்போதும் லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். சமீபத்தில் மதுரையில் நடந்த துறவிகள் மாநாட்டில் அவர் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகி அவருக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்ளை முழுமையாக படிக்க க்ளிக் செய்க...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பெட்ரோலில் எத்தனால்... விவசாயிகளுக்கு 40,000 கோடி வருமானம் என்பது உண்மையா?
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

முதல் மரியாதை: கணிப்புகளைத் தாண்டி பாரதிராஜா வென்ற கதை!
சிவாஜி நடித்த பாத்திரத்திற்கு முதலில் பரிசிலீக்கப்பட்டவர் நடிகர் ராஜேஷ். ஆனால் படம் வியாபாரம் ஆகுமா என்று விநியோகஸ்தர்கள் ஆட்சேபம் எழுப்பினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை பரிந்துரைத்தார் செல்வராஜ். ஆனால் பாடகராக பிஸியாக இருந்த எஸ்.பி.பியால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை.
"சிவாஜியை அணுகிப் பார்த்தால் என்ன?" என்கிற யோசனை பாரதிராஜாவிற்கு வந்தது. உடல்நலம் சரியில்லாத நிலையிலும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சிவாஜி.
ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது..? விவரமாக படிக்க க்ளிக் செய்யவும்