Published:Updated:

நெஞ்சுக்கு நீதி `ஓஹோ விளம்பரம்'... அமேசான் கூப்பன் மோசடி... நெருக்கடியில் எடப்பாடி... Uber-ன் அதிரடி

நெஞ்சுக்கு நீதி
Listicle
நெஞ்சுக்கு நீதி

இன்றைய விகடன் ஹைலைட்ஸ்


1
நெஞ்சுக்கு நீதி படத்தில்...

நெஞ்சுக்கு நீதி: `ஒரு படம்; ஓஹோ விளம்பரம்' - உடன்பிறப்புகள் செய்த உச்சகட்ட அரசியல்!

தி.மு.கவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தனி ஆளுமை செலுத்திய முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய அவரது சுயசரிதை நுாலான `நெஞ்சுக்கு நீதி' புத்தகம் தி.மு.கவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை இன்றைக்கு உள்ள தி.மு.க வினர் எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. அதேநேரம் கருணாநிதியின் பேரன் உதயநிதி நடிகராக நடத்து வெளிவந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைபடத்தைப் பார்க்க தீவிர ஆர்வம் காட்டிவருகிறார்கள் உடன்பிறப்புகள். கட்சியின் தொண்டர்களுக்கும் டிக்கெட் எடுத்துக்கொடுத்து பார்க்க வைக்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார்கள் மாண்புமிகு அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களும். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியான பல திரையரங்குகளை தி.மு.க-வினர் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்ததாக கூறப்படுவது உண்மைதானா..?


2
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ராஜ்ய சபா ரேஸ்: நெருக்கடியில் எடப்பாடி... அமைதியில் பன்னீர்! - என்ன நடக்கிறது அதிமுக-வில்?

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள இடங்களில் திமுக 3, அதிமுக 2, காங்கிரஸ் 1 இடத்தில் போட்டியிட உள்ளன. திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுகவில் பல சீனியர்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர். இதனால், அக்கட்சி சார்பில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற கூட்டத்தில் பெரிய களேபரமே நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் முட்டி மோதும் சீனியர்கள் யார் யார்? இதில் ஓ.பி.எஸ் நிலை என்ன..? க்ளிக் செய்க....

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
ஓலா, ஊபர் நிறுவனங்கள் ( vikatan )

Uber Update: உங்க புக்கிங் ஸ்டேட்டஸ் இனி டிரைவருக்கும் அத்துபடி; உபர் செயலியில் பெரிய அப்டேட்ஸ்!

எல்லா டாக்ஸி டிரைவர்களையும் குறை சொல்லிவிட முடியாது. ஆனால், சில டிரைவர்கள் வேண்டாவெறுப்பாக கார் ஓட்டுவதைப் பார்த்ததுண்டு. ‘OTP சொல்லுங்க…’ என்று அவர்கள் கேட்க ஆரம்பிப்பதில் இருந்து, சிலர் ‘இறங்கு சீக்கிரம்’ என்று காரோட்டுவது வரை சில டிரைவர்களின் அட்ராசிட்டியைப் பார்க்கும்போது, நமக்கு BP–யே எகிறவும் செய்யும். இப்படி வாடிக்கையாளர்களிடம் இருந்து பல புகார்கள் இந்திய அரசாங்கத்துக்கு எட்ட, நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் மீட்டிங் போட்டு போன வாரம் டாக்ஸி நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விதித்தது.

இதைத் தொடர்ந்து, புக்கிங் ஸ்டேட்டஸ் தொடர்பாக உபர் செயலியில் செய்யப்பட்டுள்ள பெரிய அப்டேட்ஸ் என்ன..? க்ளிக் செய்க...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பா.இரஞ்சித் இயக்கத்தில் `வேட்டுவம்'... இது விக்ரம் படமா, கமல் படமா? என்ன ஸ்பெஷல்?

'சார்பட்டா பரம்பரை', 'நட்சத்திரம் நகர்கிறது' படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித், விக்ரம் மற்றும் கமல் நடிக்கும் படங்களை இயக்குகிறார். கான் திரைப்பட விழாவில் அவர் வெளியிட்டுள்ள 'வேட்டுவம்' விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டிலா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது. இது குறித்து விசாரித்தோம்.

வேட்டுவம்' பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் என்ன..?


5
உதயநிதி

``கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்... ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் முதல்வர்!"

திமுகவில் தற்போது சீனியர்கள் மற்றும் அமைச்சர்களிடையே, கட்சியின் அடுத்த தலைமையாக வளர்த்தெடுக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் மனதில் இடம் பிடிப்பதில்தான் கடும் போட்டா போட்டி. இன்னொரு புறம், உதயநிதி நடித்த 'நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு தியேட்டரில் மாஸ் காட்டுவதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து மாவட்டச் செயலாளர்களும் மல்லுக்கு நிற்கிறார்கள். இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக, "உதயநிதி ஸ்டாலின் முதல்வராகத் தயாராக இருக்கிறார்..." எனப் பேசி ஒட்டுமொத்த சீனியர்களைத் திகைக்க வைத்திருக்கிறார் திமுக அமைச்சர் ஒருவர். எங்கு அப்படிப் பேசினார்..?


6
மெரினா-காந்தி சிலை

இடம் மாறுகிறதா மெரினா-காந்தி சிலை?!

சென்னை மெரினா கடற்கரையில் 60 ஆண்டுகள் பழைமைவாய்ந்த காந்தி சிலை இருக்கிறது. 1959-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் நேரு, தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் முன்னிலையில், 12 அடி காந்தி சிலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த காந்தி சிலை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது எதனால்..?


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism