ஸ்டாலின் ... சிவசேனா- மாறுகிறதா கம்யூ. கொள்கை - - சூர்யா - பாலா படம் டிராப்? | விகடன் ஹைலைட்ஸ்

ஸ்டாலின் ... சிவசேனா- மாறுகிறதா கம்யூ. கொள்கை - - சூர்யா - பாலா படம் டிராப்? | விகடன் ஹைலைட்ஸ்

ஸ்டாலினை விமர்சித்த சிவசேனா... தூண்டிவிட்டதா காங்கிரஸ்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் சமீபத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதை, திராவிட கட்சிகள், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொண்டாடினாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்பு காணப்பட்டன.
அதிலும் பேரறிவாளன் தன்னை சந்தித்தபோது, முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரை கட்டி அணைத்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி வெளியான நிலையில், அக்கட்சியின் தேசிய தலைமை அது குறித்து எதுவும் ரியாக்ட் செய்யாமலேயே இருந்தது.
பாஜக அல்லாத முதல்வர்களை ஒன்றிணைத்து, தேசிய அளவில் தன்னை ஒரு செல்வாக்கான தலைவராக முன்னிறுத்தும் நோக்கத்துடன், திட்டமிட்டு ஸ்டாலின் காய் நகர்த்தி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கும் சிவசேனா, இது தொடர்பாக ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயில் திருவிழாக்களில் பங்கெடுப்பு... மாறுகிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொள்கை?
கோயில் திருவிழாக்களில் நேரடியாகப் பங்கெடுப்பதற்கான முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்திருக்கிறது. இந்த நிலையில், "கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயில் திருவிழாக்களில் என்ன வேலை?” என்ற கேள்விக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சொல்வது என்ன..? க்ளிக் செய்க
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
கூடியம் குகைகள்: 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குகைக்குள் ஒரு திக் திக் பயணம்!
இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது.
13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான 16 குகைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள் தொல்லியலாளர்கள்.
இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
எங்கே உள்ளது அந்த குகைகள்..? அதன் திக் திக் பயண அனுபவத்தைப் படிக்க க்ளிக் செய்யவும்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு செலவு; கடனில் சிக்காமல் இருப்பது எப்படி?

சூர்யா - பாலா படம் டிராப்பாகிறதா?
படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டதாகவும், சூர்யா - பாலா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இன்னொருபுறம், கன்னியாகுமரி பகுதியில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் படப்பிடிப்பில் வாக்குவாதம், படப்பிடிப்பு பாதியில் நின்றது என்ற தகவல் பரவியது.