Published:Updated:

எடப்பாடி .. ஜெயக்குமார் டீல் - கமலிடம் கைவிரிப்பு - மோடி ஆட்சி ரிப்போர்ட் கார்டு | விகடன் ஹைலைட்ஸ்

Vikatan Highlights
Listicle
Vikatan Highlights

கமலிடம் கைவிரிப்பு - மோடி ஆட்சி ரிப்போர்ட் கார்டு | விகடன் ஹைலைட்ஸ்


1
அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர்

அதிமுக ராஜ்யசபா 'சீட்': ஜெயக்குமார் விட்டுக்கொடுத்த பின்னணி ...

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தன்னை அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக நிலை நிறுத்திக் கொள்ள முயன்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படித்தான் இந்த முறை அதிமுகவுக்கான 2 ராஜ்யசபா 'சீட்' களிலும் தனக்கு விசுவாசமான ஆட்களை நிறுத்த முடிவு செய்தார்.

முன்னாள் அமைச்சர்களான செம்மலை, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் எனப் பலரது பெயர்களை எடப்பாடி பரிசீலித்து வந்த நிலையில், " அதென்ன... எப்போதும் அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி... என எதுவானாலும் அவர்களுக்குத்தான் வாய்ப்பா..? அதிலும் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள்... அவர்களுக்கு 'சீட்' கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது..." என எடப்பாடி ஆதரவாளர்களிலேயே பலர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், " நீங்களே எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்தால், இங்க நான் எதுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கேன்..?! இந்த முறை அந்த 2 சீட்டையும் தென்மாவட்டத்துக்கே கொடுத்துருங்க..." என ஓ.பன்னீர் செல்வம் ஒருபுறம் கொடி உயர்த்த, நிலைமை களேபரமானது.

இந்த நிலையில், ராஜ்ய சபா 'சீட்' விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, அதிமுக வேட்பாளர்கள் இருவரது பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பன்னீர் விடாப்பிடியாக இருந்தது ஏன்..? பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமார் விட்டுக்கொடுத்ததன் பின்னணி என்ன? தர்மர், சி.வி.சண்முகம் அதிமுக வேட்பாளர்களாக முந்தியது எப்படி? விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க...


2
கழுகார் அப்டேட்ஸ்

கமலிடம் கைவிரித்த தனியார் டிவி... அன்புமணிக்கு பட்டாபிஷேகம்!

கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் பாடல் வெளியீட்டுவிழா, மே 15-ம் தேதி நடந்தது அல்லவா... அதில் ஒரு குழப்பம்.

''கமலின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில், மூன்றெழுத்து தனியார் டி.வி-தான் முன்னணியில் நிற்கும். ஆனால் இந்த முறை...

'பா.ம.க வரலாற்றில் இப்படியெல்லாம் வழக்கம் கிடையாதே... என்ன விஷயம்?’ என்று விசாரித்தால்..."

கழுகார் தரும் அப்டேட்ஸ் படிக்க க்ளிக் செய்யவும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
மோடி, அமித் ஷா

மோடியின் 8 ஆண்டுக்கால ஆட்சி: ரிப்போர்ட் கார்டு சொல்வது என்ன?

"ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்துவந்த பொருளாதாரம், தற்போது பெரும் சரிவில் இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. 45 ஆண்டுக்கால இந்தியாவின் சாதனையை பா.ஜ.க முறியடித்திருக்கிறது..."

இது, மத்தியில் பாஜக-வின் 8 ஆண்டுக்கால ஆட்சி குறித்து ரிப்போர்ட் கார்டு வெளியிட்டுள்ள காங்கிரஸ் ரிப்போர்ட் கார்டில் இன்னும் என்னென்ன சொல்லப்பட்டுள்ளது..? க்ளிக் செய்க...


4
சமையல் எண்ணெய் ( edible oil )

சமையல் எண்ணெய்: விலை குறையுமா, உண்மை என்ன?

சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எல்லோருமே சமையல் எண்ணெய் விலை குறையப்போகிறது என்று கூறி வருகிறார்கள். ஆனால், இந்த அறிவிப்பின் தாக்கம் நடைமுறையில் எப்படி பிரதிபலிக்கும்?

மேலும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க..


5
ஆரோக்கியம் ஒரு பிளேட்

எந்தச் சர்க்கரை உடம்புக்கு நல்லது?

எந்தச் சர்க்கரை உடம்புக்கு நல்லது? குழந்தையிலிருந்து பெரியவர் வரை சர்க்கரையைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ‘வெள்ளைச் சர்க்கரை ரொம்பவே மோசம்... நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, தேன்... இதெல்லாம் நல்லது' என்று சிலர் சொல்கிறார்கள். டீக்கடைகளில் நாட்டுச் சர்க்கரையா, கருப்பட்டியா என்று சாய்ஸ் கேட்கிறார்கள். மக்களும், ‘வெள்ளைச் சர்க்கரை ஆபத்து... பனங்கருப்பட்டி மைசூர்ப் பாகை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்' என சந்தோஷமாகச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.

சர்க்கரை சார்ந்து நிறைய கேள்விகள் உள்ளன. எந்தச் சர்க்கரை உண்மையிலேயே நல்ல சர்க்கரை, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது எது, சர்க்கரை சாப்பிட்டால் உடல் எடை கூடுமா கூடாதா, செயற்கைச் சர்க்கரை பயன்படுத்தலாமா, வேண்டாமா? தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்....