இறங்கி அடிக்கும் திமுக.. எகிறும் பாஜக - அதிமுகவில் சசிகலா - மாறும் இந்திய அரசியல்| விகடன் ஹைலைட்ஸ்

இறங்கி அடிக்கும் திமுக.. எகிறும் பாஜக - அதிமுகவில் சசிகலா - மாறும் இந்திய அரசியல்| விகடன் ஹைலைட்ஸ்
'பாயவும் முடியவில்லை... பதுங்கவும் முடியவில்லை' என்ற நிலையில்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை டீல் செய்து வருகிறது திமுக. ரொம்பவும் பாய்ந்தால், அமலாக்கத்துறை தொடங்கி மத்திய அரசின் அத்தனை ஏஜென்சிகளும் தங்களை நோக்கி ஏவப்படலாம் என்பதை அறிவாலய புள்ளிகள் உணராமல் இல்லை.
அதே சமயம், ஆதீனத்தின் பட்டணப்பிரவேசம் தொடங்கி ஆம்பூர் பிரியாணி திருவிழா வரை பல விஷயங்களில் பாஜகவின் எதிர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பணிந்து போனதை சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை. கட்சியில் அல்லாத திமுக ஆதரவாளர்களின் ஆவேசம் அதற்கு மேலாக வெளிப்பட்டது. அது மட்டுமல்லாமல், திராவிடர் கழகம் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியினருமே இது விஷயத்தில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில்தான், பேரறிவாளன் விடுதலை வழக்கில், 'ஆளுநரின் அதிகாரம், மாநிலத்தின் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டதுதான்' என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, திமுகவுக்கு கொஞ்சம் தெம்பை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து வந்த நாட்களில் பாஜக மீதான விமர்சனத்தை கூர் தீட்டத் தொடங்கியது.
அதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக, நிதியமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆங்கில செய்தி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசை வெளுத்து வாங்கியது வட மாநிலங்களில் வைரல் ஆனது.
"பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத மத்திய அரசு, இப்போது மாநிலங்கள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டில் உள்ள வேறு எந்த மாநில அரசையும் விட மேம்பட்ட நிலையிலேயே உள்ளது. எங்களை விட மிகவும் மோசமாகச் செயல்படுவோர் தரும் அறிவுரை எங்களுக்குத் தேவை இல்லை" என்ற பழனிவேல் தியாகராஜன் இறங்கி அடித்ததை, பாஜக அதிர்ச்சியுடனேயே பார்த்தது.
இந்த நிலையில்தான், அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில், மேடையில் மோடியை வைத்துக்கொண்டே பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும், நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததோடு, திராவிட மாடல் அரசு என்றால் என்ன என மோடிக்கும் பாடம் எடுக்கும் தொனியில் பேசியது திமுகவினரிடையே ஆரவாரத்தைக் கிளப்பியது.
இதையடுத்து, முதல்வரின் பேச்சை கடுமையாக விமர்சித்த பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழக முதல்வர் ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன். இன்றைய நிகழ்ச்சியில் பிரதமரிடத்தில் நம் முதல்வர் மரியாதை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தன்னை தானே இழிவுபடுத்திக் கொண்டார்'' என ட்விட்டரில் ஏகத்துக்கும் எகிறி இருந்தார்.

அதிமுக-வுக்குள் சசிகலா வருவது யார் கையில்..?
"சசிகலாவை அதிமுகவில் சேர்த்தாலும் சரி, சேர்க்காவிட்டாலும் சரி... இரண்டுமே ஒன்றுதான். அவரை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் சேர்ப்பதாக தெரியவில்லை" எனச் சொல்லும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அதே சமயம் சசிகலா அதிமுகவுக்குள் வருவதற்கான சூட்சும கயிறு யாரிடம் உள்ளது என்பதையும் விளக்குகிறார். இது தொடர்பான அவரது விரிவான பேட்டியைப் படிக்க க்ளிக் செய்க...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
"மாறப்போகும் இந்திய அரசியல்... அதை யாராலும் தடுக்க முடியாது!"
"இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பரபரப்பான செய்திகளை இந்தியா பார்க்கும். இந்தியாவுக்கு ஒரு புகழ்பெற்ற எதிர்காலம் உள்ளது" எனச் சொல்லும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், "தேசிய அளவில் மாற்றம் வரும், அதை யாராலும் தடுக்க முடியாது!" என்றும் கூறியது எதனால்..? தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

WhatsApp ஹேக் செய்பவர்களின் புதிய உத்தி; நீங்கள் இதைச் செய்யக்கூடாது!

இலக்கை எட்டாத பிரதமரின் வீடு கட்டும் திட்டம்... அதிர வைக்கும் புள்ளி விவரம்!
பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின்கீழ் 1.21 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் இது 48.7 லட்சம் வீடுகளே கட்டி முடிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 50 சதவிகித இலக்கை கூட எட்டாதது ஏன்..? க்ளிக் செய்க...