Published:Updated:

விகடன் Pinnacle Awards 2021: கௌரவிக்கப்பட்ட 14 சாதனையாளர்கள்!

Pinnacle Awards 2021
Live Update
Pinnacle Awards 2021

பல்துறை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விகடனின் `Pinnacle Awards' நிகழ்ச்சி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

18 Mar 2022 4 PM

சிறந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் - Fitness பயிற்சியாளர் பரமகுரு

சிறந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் - Fitness பயிற்சியாளர் பரமகுரு
சிறந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் - Fitness பயிற்சியாளர் பரமகுரு

`உலகில் வாழ்ந்தோம் என்பதை விட, எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்' என்று வலியுறுத்தி வருகிறார் Fitness coach Dr.பரமகுரு. இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளித்த பெருமைக்கு உரிய இவரின் பயிற்சி வகுப்புகள், மாறிவரும் வாழ்க்கை முறையால் அதிகரித்து வரும் உடல் உபாதைகளுக்கும், உடல் பருமனுக்கும் இயற்கையான முறையில் தீர்வு வழங்கி வருகின்றன.

துரிதமான இன்றைய உலகில் தன்னைத் தானே தொலைத்துவிட்டு, மனம் நொந்துகொள்ளும் மனிதர்களுக்கு ஊக்கம் கொடுத்து, அவர்களின் ஆக்கம் அதிகரிக்க உதவுகிறார் இந்த மாஸ்டர் கோச்.

நூறு பேர் கொண்ட குழு உடற்பயிற்சி நிகழ்வில், அதிக உடல் எடை குறைப்புக்கான உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். PCOD முதல் நீரிழிவு நோய் வரையிலான பல பிரச்னைகளை ஃபிட்னஸ் பயிற்சி மட்டுமே கொண்டு குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் பரமகுரு.

உடல் எடைக் குறைப்புக்கு பல நவீன முறைகள் இருந்தாலும், எந்த ஒரு artificial supplements-ம் இல்லாமல், சரியான உடற்பயிற்சி, சீரான வாழ்க்கை முறை மற்றும் முறையான உணவுப் பழக்கம் மூலம் மட்டுமே உடல் எடையைக் குறைத்து விட முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ள, Fitness பயிற்சியாளர் பரமகுரு அவர்களைப் பாராட்டி, அவருக்கு 2021-ம் ஆண்டுக்கான `சிறந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 3 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது - குழந்தை பிரான்சிஸ்

சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது - குழந்தை பிரான்சிஸ்
சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது - குழந்தை பிரான்சிஸ்

தலைவர்கள் பிறப்பால் உருவாவதில்லை... மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் துணியும் அந்தத் தருணத்தில் மகத்தான ஒரு தலைவன் பிறக்கிறான்!

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான `Integrated Village Development Project'-ஐ தொடங்கியவர் குழந்தை பிரான்சிஸ்.

1979-ம் ஆண்டிலிருந்து இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட எளிய குடும்பத்துப் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது இந்த அமைப்பு.

சமூக மேம்படுத்தல் மற்றும் ஊரக மேலாண்மையில் உயர்கல்வி கற்றுள்ள குழந்தை பிரான்சிஸ் தன் வாழ்நாளையே சமூக முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துள்ளார். இரவுப் பள்ளிக்கூடம், முதல் உதவி நிலையம் என்று சிறியதாய் தொடங்கிய இவரின் பயணம் இன்று கிராமப்புறங்களில் தடுப்பணைகள் கட்டுதல், பெண்கள் முன்னேற்றம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வீட்டு வசதி, கல்வி உதவி என்று பல்கிப் பெருகியுள்ளது.

குழந்தை பிரான்சிஸ் அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி மிக உயரிய விருதான ராமோன் மகசேசே விருது 2012-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

தருர்புரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் குழந்தை பிரான்சிஸ் முன்னின்று நடத்தியுள்ள சமூக செயற்பாட்டு நடவடிக்கைகளைப் பாராட்டி அவருக்கு, 2021-ம் ஆண்டுக்கான `சிறந்த சமூக செயற்பாட்டாளர்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
18 Mar 2022 3 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறந்த சேவை - தொழில்நுட்பம் மற்றும் புதுமை - ECI systems நிறுவனம்

சிறந்த சேவை - தொழில்நுட்பம் மற்றும் புதுமை - ECI systems நிறுவனம்
சிறந்த சேவை - தொழில்நுட்பம் மற்றும் புதுமை - ECI systems நிறுவனம்

கனவுகளும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி வீடு தேடி வரும் என்கிறார் செந்தில்குமார் தேவதாஸ். ECI Systems, Keystone Instruments, Parent Technical Products மற்றும் Ritech Control Systems (Lanka) ஆகிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வரும் செந்தில்குமாரின் பயணம், பிசினஸ்ஸில் முன்னேற நினைப்பவர்களுக்கான முக்கிய பாடம்!

இந்திய நிறுவனங்கள் அடுத்தகட்டத்துக்கு முன்னேற அவர்களுக்கு தானியங்கி அமைப்புகள் தேவை என்பதை உணர்ந்துகொண்ட செந்தில்குமார், தன் துணைவியார் ஜி. பத்மாதேவி உடன் இணைந்து ECI systems நிறுவனத்தை கோவையில் தொடங்கினார்.

ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி, சிறந்த தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அமைப்புகளை இந்திய நிறுவனங்கள் பெற்று பயனடைந்திட பெரும் பங்காற்றி வருகிறது ECI systems.

Omron ஆட்டோமேஷனின் வளர்ந்து வரும் நிறுவனம் என்கிற விருதைத் தொடர்ந்து நான்கு முறை வென்றுள்ளது இந்நிறுவனம். இன்று ECI நிறுவனத்தின் சேவை, இந்தியா மட்டுமன்றி பல சர்வதேச நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது!

தங்களின் தானியங்கி அமைப்புகள் மற்றும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டும் முனைப்புடன் அயராது உழைத்து வரும் செந்தில்குமார் தேவதாஸ் அவர்களின் ECI systems நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி, 2021-ம் ஆண்டுக்கான `சிறந்த சேவை - தொழில்நுட்பம் மற்றும் புதுமை' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 3 PM

சிறந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனம் - அறம் ஐ.ஏ.எஸ் அகாடெமி

சிறந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனம் - அறம் ஐ.ஏ.எஸ் அகாடெமி
சிறந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனம் - அறம் ஐ.ஏ.எஸ் அகாடெமி

சிறப்பான அதிகாரிகளே சீராக நாட்டை முன்னகர்த்திச் செல்லும் அரசின் சக்கரங்கள். குடிமைப் பணியேற்று, நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்ற உறுதியும் ஊக்கமும் கொண்ட இளைஞர்களுக்கு உற்ற வழிகாட்டியாய் இருந்து வருகிறது அறம் ஐ.ஏ.எஸ் அகாடெமி.

கல்லூரியிலிருந்து வெளிவரும்போதே, நாட்டின் தேவைகளை உணர்ந்து செயலாற்றக்கூடிய துடிப்பான இளைஞர்களாய் மாணவர்களைத் தயார் செய்து வருகிறது அறம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி மாணவர்களுக்கு, குடிமைப் பணிகளில் சேரத் தேவையான ஆரம்பப் படிப்பை வழங்கி வருகிறது.

அறம் வழங்கும் பயிற்சி மூலம், இந்திய ஆட்சிப் பணி, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, வெளியுறவுத் துறை மற்றும் பிற குரூப் ஏ பணிகளில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் உயர் பதவி வகித்து வருகின்றனர்.

மாணவர்களை நாளைய தலைவர்களாய் வார்த்திடும் பொறுப்பும், சமுதாயத்துக்கு உதவும் மனப்பான்மையை இளைஞர்களிடம் வளர்க்கும் பொதுநலனும் கொண்டு செயலாற்றி வரும் அறம் ஐ.ஏ.எஸ் அகாடெமி நிறுவனத்தைப் பாராட்டி 2021-ம் ஆண்டின் `சிறந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனம்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 2 PM

சிறந்த ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் - Maya Export Training Academy நிறுவனம்

சிறந்த ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் - Maya Export Training Academy நிறுவனம்
சிறந்த ஏற்றுமதி பயிற்சி நிறுவனம் - Maya Export Training Academy நிறுவனம்

விவசாயக் குடும்பத்தில் பிறந்த S.R. அசோக் இன்று தமிழகத்தின் தலைசிறந்த ஏற்றுமதி பயிற்சியாளர். 13 வருடங்கள் ஐ.டி துறையில் பணிபுரிந்த பின்னர், ஏற்றுமதி வர்த்தகத்தில் கால்பதிக்க நினைத்தார் அசோக். பிசினஸ் ஆரம்பித்த சில மாதங்களிலேயே, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொண்டார். தகுந்த பயிற்சியும் ஆலோசனையும் இல்லாததால் ஏற்றுமதியாளர்கள் படும் சிரமங்களை அவரால் உணர முடிந்தது.

அசோக்குக்கு தன் வாழ்வின் நோக்கம் பிடிபட்ட தருணம் அது!
META எனப்படும் Maya Export Training Academy நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் இயற்கை, தரம், ஸ்டாக்கிங் மற்றும் பேக்கேஜிங் என்று, லைசென்ஸ் வாங்குவது முதல் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளுக்கான பணத்தைக் கையில் வாங்குவது வரை, அனைத்து சூட்சுமங்களையும் கற்றுத் தர ஆரம்பித்தது META.

கடந்த 5 வருட பயணத்தில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வர்த்தகர்களாக முன்னேற்றி சாதனை படைத்துள்ளது META. அந்நிய செலாவணி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும், நேரடி பயிற்சி மற்றும் யூடியூப் காணொளிகள் மூலம் சிறு வணிகர்களைக் கரம் பிடித்து வழிகாட்டவும் Maya Export Training Academy நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டி 2021-ம் ஆண்டின் `சிறந்த ஏற்றுமதி பயிற்சி நிறுவனம்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 2 PM

சிறந்த கிராமப்புற கல்வி மேம்பாடு மற்றும் சேவை - ஆற்றல் அசோக்

சிறந்த கிராமப்புற கல்வி மேம்பாடு மற்றும் சேவை - ஆற்றல் அசோக்
சிறந்த கிராமப்புற கல்வி மேம்பாடு மற்றும் சேவை - ஆற்றல் அசோக்

``என்னுடைய அசைக்க முடியாத கொள்கைகள், என்னுடைய ஆணித்தனமான கனவுகளில் இருந்தே பிறந்துள்ளன" என்கிறார் ஆற்றல் அஷோக்!

Amex alloys, Globe educate group of schools மற்றும் The Indian Public school group கல்வி நிறுவனங்களின் தலைவரான ஆற்றல் அசோக் கல்வித் துறைக்கு ஆற்றியுள்ள பங்கு அசாத்தியமானது!

ஜெராக்ஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட் என்று உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஆற்றல் அசோக்கின் கவனமெல்லாம் தற்போது கல்வித் துறையில்தான்!

`குழந்தைகளுக்கு எங்கு ஆர்வம் துளிர் விடுகிறதோ, அங்கிருந்தே கல்வி ஆரம்பிக்க வேண்டும்' என்பது இந்தக் கல்விப் புரட்சியாளரின் சித்தாந்தம்.

ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து உதவி வருகிறது ஆற்றல் ஃபவுண்டேஷன்!

ஃபோர்ப்ஸ் இதழின் high performing human asset விருது, டைம்ஸ் குரூப்பின் கல்விக்கான பல்வேறு விருதுகள், கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம், புது தில்லியின் கல்வித் தொழில் துறை விருது, இந்தியன் அச்சீவர்ஸ் ஃபாரமின் இந்திய சாதனையாளர் விருது என்று இவருக்குக் கிடைத்துள்ள பாராட்டுப் பட்டியல் மிக நீளம்…

இந்தப் பாராட்டுகளுக்கு எல்லாம் மேலுமொரு மணிமகுடமாய், 2021-ம் ஆண்டின் `சிறந்த கிராமப்புற கல்வி மேம்பாடு மற்றும் சேவை’க்கான Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 2 PM

சிறந்த டிராவல் நிறுவனம் - GT Holidays நிறுவனம்

சிறந்த டிராவல் நிறுவனம் - GT Holidays நிறுவனம்
சிறந்த டிராவல் நிறுவனம் - GT Holidays நிறுவனம்

கல்லூரிக் காலத்திலேயே, பிசினஸ்ஸில் சாதிக்க வேண்டும் என்று வாழ்வின் வழித்தடத்தை வகுத்துக்கொண்டவர் கார்த்திக் மணிகண்டன். பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தைப் பார்வையிட மாணவர்களை அழைத்துச் செல்ல நினைத்தது கார்த்திக் பயின்று வந்த கல்லூரி. அப்போது 50 பயணங்களுக்கான மொத்த ஏற்பாட்டு பொறுப்பையும் மாணவர் கார்த்திக்கே ஏற்று நடத்திக்காட்டினார். விரைவில் பிற கல்லூரிகளுக்கும் பயண ஏற்பாடுகள் செய்து தர ஆரம்பித்து, தன் ஹாஸ்டல் ரூமையே அலுவலகமாக மாற்றிவிட்டார் இந்த இளம் பிசினஸ் மேன்!

கல்லூரி முடித்தவுடன் தனக்குக் கிடைத்த வேலை மற்றும் வெளிநாட்டுப் படிப்பு வாய்ப்புகளை தூக்கி எறிந்துவிட்டு தான் உயிராக நினைக்கும் பிசினஸில் முழுமூச்சாக இறங்கினார் கார்த்திக். பிறந்தது GT Holidays!

அந்த இளம் வயதில் தான் எடுத்த பெரிய ரிஸ்க்தான் தனக்கென்று தனி அடையாளத்தை இன்று வழங்கியுள்ளது என்கிறார் கார்த்திக்.

இந்தியா மட்டுமன்றி உலக வரைபடத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் பயணிகளை அழைத்துச் சென்று வருகிறது GT Holidays. புயல், மழை, வெள்ளம், கோவிட் என்று எது வந்தாலும் சரி, பயணிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து, அவர்கள் விரும்பும் சுற்றுலா அனுபவத்தை வழங்குவதில் ஒரு படி அதிக உழைப்பை அளிப்பதுதான் GT Holidays-ன் தனித்துவம்!

ஜீரோவில் இருந்து ஆரம்பித்து, இன்று இளைஞர்களின் ஹீரோவாய் பிசினஸில் சாதனை புரிந்துள்ள கார்த்திக் மணிகண்டன் அவர்களின் GT Holidays நிறுவன செயல்பாடுகளைப் பாராட்டி, 2021-ம் ஆண்டுக்கான `சிறந்த டிராவல் நிறுவனம்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 2 PM

சிறந்த கட்டுமான நிறுவனம் - DAC Promoters நிறுவனம்

சிறந்த கட்டுமான நிறுவனம் - DAC Promoters நிறுவனம்
சிறந்த கட்டுமான நிறுவனம் - DAC Promoters நிறுவனம்

வீடு, நாம் வாழும் இடம் மட்டுமல்ல, அது நம் அடையாளம்! நமக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் எனும் பல குடும்பங்களின் கனவை நனவாக்கி, 10 ஆண்டு காலமாய் கட்டுமானத் துறையில் வெற்றி நடை போட்டு வருகிறது DAC promoters.

குடியிருப்பு புராஜெக்டுகளை சொன்ன நேரத்துக்கு முன்னரே கட்டி முடித்து, வாடிக்கையாளர் கையில் சாவியைக் கொடுக்கும் DAC Promoters-ன் நாணயம்தான் அவர்களின் அடையாளம்!

தொழிலில் வெளிப்படைத்தன்மை… சொன்ன நேரத்துக்கு டெலிவரி… தரத்துக்கு முன்னுரிமை… வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் DAC Promoters-ன் சிறப்புகளை... Google Reviews முழுக்க DAC Promoters வாங்கியிருக்கும் சிறப்பான வாடிக்கையாளர் கருத்துகளே இதற்கு சான்று!

கடந்த 10 வருடங்களில் 84 புராஜெக்டுகள், 10 லட்ச சதுர அடியில் வேலைப்பாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான குடும்பங்கள் என்று தனது சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது DAC Promoters!

``வாடிக்கையாளர்கள் நம் உறவுகள்... நாம் கட்டிக் கொடுக்கும் வீடுகள் அவர்களுக்கு நாம் அளிக்கும் நம்பிக்கை" எனும் நிறுவனர் சதிஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில் துடிப்புடன் செயலாற்றி வரும் DAC Promoters நிறுவனத்தைப் பாராட்டி 2021-ம் ஆண்டின் `சிறந்த கட்டுமான நிறுவனம்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 2 PM

சிறந்த தொழிலதிபர் - தகவல் தொழில்நுட்பத்துக்கான விருது - கேசவர்தனன்

சிறந்த தொழிலதிபர் - தகவல் தொழில்நுட்பத்துக்கான விருது
சிறந்த தொழிலதிபர் - தகவல் தொழில்நுட்பத்துக்கான விருது

Computer Coder, தொழில்முனைவோர், மேதாவி, கணினித் துறை முன்னோடி, கனிவான வள்ளல் என்று பன்முகம் கொண்ட கேசவன், கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவதற்காகவே பள்ளிப் படிப்பைத் துறந்தவர்!

1990-ம் ஆண்டு DIR -II வைரஸ் தாக்கியபோது, கேசவன் எழுதிய ஆன்டி வைரஸ் புரோகிராமால் பலரின் தரவுகள் காப்பாற்றப்பட்டன. கணினியால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் ஆனால் அவற்றையெல்லாம் அழிக்க ஒற்றை கம்யூட்டர் வைரஸ் போதும் என்று உணர்ந்துகொண்ட கேசவன், தன் வாழ்வையே சைபர் செக்யூரிட்டி துறைக்காக அர்ப்பணித்தார்!

1992-ல் VX 2000 ஆன்டி வைரஸ் அறிமுகம், 1994-ல் சைபர் மீடியாவுடன் இணைந்து First Aid and PC911 உருவாக்கம், 1998-ல் கேசவன் threat labs அறிமுகம், ஜப்பானின் இரண்டாவது பெரிய ஆன்டி வைரஸ் மென்பொருளான வைரஸ் செக்யூரிட்டி ஜீரோ-வை உருவாக்குவதில் பங்கு வகிப்பு, சைபர் செக்யூரிட்டி மென்பொருள் வர்த்தகத்தில் FMCG விநியோக முறையை அமல்படுத்தியது, சைபர் செக்யூரிட்டி துறையில் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர k7 academy துவக்கம் ஆகியவை கேசவன் கடந்து வந்த பயணத்தின் முக்கிய மைல்கற்கள்...

உலகின் 27 நாடுகளில் 40+ லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளை கேசவன் ஆன்டிவைரஸ் பாதுகாத்து வருகிறது. ``உலகின் தலைசிறந்த விஷயங்களை மெட்ராஸில் இருந்துகொண்டும் தயாரிக்கலாம்!" என்கிறார் கேசவன்.

சைபர் செக்யூட்டி துறையில் கேசவன் அவர்கள் ஆற்றியுள்ள மாபெரும் பணிகளைப் பாராட்டி அவருக்கு, 2021-ம் ஆண்டின் `சிறந்த தொழிலதிபர் - தகவல் தொழில்நுட்பத்துக்கான' Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 1 PM

சிறந்த தொழில்முனைவோர் - கட்டுமானத்துறை விருது - டாக்டர் A.S. ரியாஸ்

சிறந்த தொழில்முனைவோர் - கட்டுமானத்துறை விருது - டாக்டர் A.S. ரியாஸ்
சிறந்த தொழில்முனைவோர் - கட்டுமானத்துறை விருது - டாக்டர் A.S. ரியாஸ்

தென் தமிழகத்தின் கிரானைட் நகரமான மதுரையில் ARSK Group அறிமுகப்படுத்திய `பாலி மார்பிள் ஷீட்' நிறுவனம், மக்களின் பேராதரவைப் பெற்று இன்று இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் துறையில் கொடி கட்டிப் பறக்கிறது.

பொதுவாக இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் தயாரிப்புகளுக்கு சென்னை, பெங்களூர் மற்றும் மும்பையைத் தேர்வு செய்த காலம் போய் இப்பொழுது மதுரையிலிருந்து, பிற நகரங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் பாலி மார்பிள் ஷீட்ஸ் செல்வது இந்தத் தயாரிப்பின் மிகப் பெரும் சிறப்பு. ஆர்கிடெக்ட்ஸ், இன்ஜினியர்ஸ் மற்றும் இன்டீரியர் டிசைனர்ஸ் இத்தயாரிப்புக்கு வழங்கியுள்ள பேராதரவு இதற்கான சான்றாகும்!

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும்... பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா மற்றும் அந்தமான் வரை பரந்து விரிந்து, 137 கிளைகளுடன் வெற்றிகரமாக செயலாற்றி வருவது ARSK பாலி மார்பிள் ஷீட்-ன் பெருமையாகும்!

ரெஸிடென்ஷியல் பில்டிங் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் ஆச்சரியப்படுத்தி பிரம்மாண்டத்தில் ஆழ்த்திய தயாரிப்பு பாலி மார்பிள் ஷீட்!

கட்டுமானம் மற்றும் உள்ளலங்காரத் துறையில் ARSK பாலி மார்பிள் ஷீட் அளித்துள்ள பங்களிப்பைப் பாராட்டி, அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் A.S. ரியாஸ் அவர்களுக்கு 2021-ம் ஆண்டின் `சிறந்த தொழில்முனைவோர் - கட்டுமானத்துறை’ எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 1 PM

சிறந்த இளம் தொழில் முனைவோர் - டாக்டர் A.S.Prabu

சிறந்த இளம் தொழில் முனைவோர் - டாக்டர் A.S.Prabu
சிறந்த இளம் தொழில் முனைவோர் - டாக்டர் A.S.Prabu

துடிப்பான 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். அந்த நூற்றில் ஓர் இளைஞர்தான் SPK group of companies-ன் செயல் நிர்வாக இயக்குநரும், SPK GEMS Schools-ன் தலைவருமான இஞ்சினியர் டாக்டர் A.S.Prabu.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே, SPK Educational Trust-ன் managing partner எனும் முக்கிய பொறுப்பை ஏற்றுகொண்டார் பிரபு. உயர்படிப்பு படிக்கும்போதோ, SPK நிறுவனங்களையும் சேர்த்து நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பு இந்த இளைஞரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

SPK Real Estate, SPK infra works, SPK Project Management Consulting மற்றும் AAR Consigners உள்ளிட்ட பல நிறுவனங்களைத் திறமையுடன் நிர்வகித்து வருவது மட்டுமல்லாது பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் பிரபு. இதனால் இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு இவரை `மாற்றத்துக்கான வழிகாட்டி'களில் ஒருவராக அங்கீகரித்துள்ளது!

`நம் பசுமை’ திட்டம் மூலம் ஒரு லட்சம் மரம் வளர்த்தல், வெள்ள நிவாரண உதவி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெண்கள் மேம்பாடு என்று சமூக வளர்ச்சியே சிந்தனையாய் செயலாற்றி வரும் இந்த இளம் சூறாவளி professional car racing-லும் Wildlife Photography-யிலும் வல்லவர்!

தனது அயர்ச்சியில்லா உழைப்பால், இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் SPK நிறுவன குழுமத் தலைவர் இஞ்சினியர் டாக்டர் A.S.Prabu அவர்களுக்கு `சிறந்த இளம் தொழில் முனைவோர்’ பிரிவுக்கான Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 1 PM

சிறந்த மொபைல் ரீடைலர் மற்றும் வாடிக்கையாளர் சேவை - பூர்விகா மொபைல் நிறுவனம்

சிறந்த மொபைல் ரீடைலர் மற்றும் வாடிக்கையாளர் சேவை - பூர்விகா
சிறந்த மொபைல் ரீடைலர் மற்றும் வாடிக்கையாளர் சேவை - பூர்விகா

போட்டிகள் நிறைந்த அந்த 2004 கால கட்டத்தில், `வாடிக்கையாளரை எப்படி சென்றடைவது? அவர்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படுத்துவது? மாறிவரும் டெக்னாலஜியை எப்படி உடனுக்குடன் தருவது? நாளைய உலகமே செல்போனில்தான் இயங்கப் போகிறது என்பதை எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது?' இப்படிப் பல்வேறு கேள்விகளுடன் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பூர்விகா மொபைல்ஸ்... இன்று 18 வருடங்களைக் கடந்த பின்னரும் மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து இந்தியாவின் தலை சிறந்த மொபைல் விற்பனை நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது பூர்விகா.

ஸ்மார்ட் டிவி, லேப்டாப்ஸ், மொபைல்கள் மற்றும் அதைச் சார்ந்த பிற உபகரணங்களை வாடிக்கையாளர்களின் பட்ஜெட்-க்கு ஏற்ற சரியான விலையில் வழங்கும் பூர்விகா தனக்கான கோட்பாட்டில் இருந்து சற்றும் தளராமல் சில்லறை வணிகத்தில் தனியொரு பல்கலைக்கழகமாகவே விளங்கி வருகிறது.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றள்ள பூர்விகா, இன்றைய ஆன்லைன் வர்த்தக சவாலையும் எதிர்கொண்டு, இணைய வழி விற்பனையிலும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. ``பூர்விகாவிற்கு வரும் எந்தவொரு வாடிக்கையாளரும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் திரும்ப வேண்டும். அது மட்டுமே எங்களின் குறிக்கோள்" என்கிறார் பூர்விகா மொபைல்ஸ் நிறுவனர் யுவராஜ் நடராஜன்.

சில்லறை விற்பனைத் துறையில் பூர்விகா மொபைல் செய்துள்ள சாதனைகளைப் பாராட்டி 2021-ம் ஆண்டின் `சிறந்த மொபைல் ரீடைலர் மற்றும் வாடிக்கையாளர் சேவை'க்கான Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 12 PM

சிறந்த இளைய பல்கலைக்கழக வேந்தர் விருது - M.P. நாகேஸ்வரன்

சிறந்த இளைய பல்கலைக்கழக வேந்தர்' விருது
சிறந்த இளைய பல்கலைக்கழக வேந்தர்' விருது

PRIST university - எழில்மிகு தஞ்சை நகரில், தமிழகத்தின் தலைசிறந்த கல்வி மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

மாணவர் போல் தோற்றமளிக்கும் இந்த இளைஞர்தான் PRIST university-ன் மொத்த நிர்வாகப் பொறுப்புகளுக்கும் தலைமையேற்றுள்ளவர். உலகிலேயே மிக இளம் வயதில் பல்கலைக்கழக வேந்தர் ஆனவர் எனும் உலக சாதனைக்குச் சொந்தக்கார் M.P. நாகேஸ்வரன்.

தஞ்சை வளாகத்தில் விவசாய படிப்பை அறிமுகம் செய்தது… மதுரையில் சட்டக் கல்லூரி ஆரம்பித்தது… மற்றும் மலேசிய நாட்டின் WIDAD university-யுடன் இணைந்து PRIMS மருத்துவக் கல்லூரியை தொடங்கியது என்று நாகேஸ்வரன் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

நாகேஸ்வரன் அவர்களின் முயற்சியால் இன்று இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது பிரிஸ்ட் பல்கலைக்கழகம்.

இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் மிகச்சிறந்த கல்வி மையங்களில் கடைப்பிடிக்கப்படும் கல்வி முறைகளை நம் நாட்டுக்கு ஏற்றவாறு கொடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் நாகேஸ்வரன். பல சர்வதேச கல்வி கருத்தரங்குகளில் பேச்சாளாராக அழைக்கப்பட்டதுடன், தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

கல்வித் துறையில் நாகேஸ்வரன் அவர்கள் ஆற்றிவரும் மாபெரும் பணிகளைப் பாராட்டி அவருக்கு, 2021-ம் ஆண்டின் `சிறந்த இளைய பல்கலைக்கழக வேந்தர்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 12 PM

சிறந்த ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனம் - சலானி (Challani) ஜுவல்லரி மார்ட்

சிறந்த ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனம்!
சிறந்த ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனம்!

தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகை விற்பனையில் தலைமுறைகளைத் தாண்டிய பாரம்பர்யமாய் விளங்கி வரும் நிறுவனம் சலானி (Challani) ஜுவல்லரி மார்ட்.

பாரம்பர்ய ஆண்டிக் நகைகள், கம்பீரமான ஜடாவு போல்கி நகைகள், தெய்வீகமான டெம்பிள் ஜுவெல்லரி, அழகைப் பறைசாற்றும் இத்தாலிய கலக்ஷன்ஸ், காதலை வெளிப்படுத்தும் வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் என்று ஆபரணங்களின் அழகு உலகமாய் விளங்கிறது Challani. பாரம்பர்ய நகைகளுக்கு தி.நகரை அடையாளமாக மாற்றியுள்ள இந்நிறுவனம், மாடர்ன் நகைகளை வழங்குவதிலும் சற்றும் சளைக்கவில்லை...

கைதேர்ந்த நகை தயாரிக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தில், வாடிக்கையாளரைச் சென்றடையும் ஒவ்வொரு நகையும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் r கவனம் செலுத்தி வருகிறது Challani.

வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களுக்கென பிரத்தியேகமாக இயங்கி வரும் Challani House of Silver ஆச்சரியத்தின் உச்சம்! மோதிரம் முதல் ஒட்டியாணம் வரை, டோர் ஹேண்டில் முதல் சீலிங் வரை அனைத்தையும் வெள்ளியில் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது Challani House of Silver.

தரமான தயாரிப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை முழுமையாக பெற்றுள்ள Challani ஜுவல்லரி மார்ட் நிறுவனத்தைப் பாராட்டி 2021-ம் ஆண்டின் `சிறந்த ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனம்' எனும் Pinnacle Award வழங்குவதில் பெருமை கொள்கிறது விகடன்!

18 Mar 2022 11 AM

Pinnacle Awards 2021 நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

விகடனின் `Pinnacle Awards' நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அவரை விகடன் குழும தலைவர் பா.சீனிவாசன் வரவேற்றார்.

18 Mar 2022 11 AM

பல்துறை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விகடனின் `Pinnacle Awards' நிகழ்ச்சி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நேரலையில் காண இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

18 Mar 2022 9 AM

பல்துறை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விகடனின் `Pinnacle Awards' நிகழ்ச்சி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் ஒப்பற்ற பங்காற்றி வரும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரும், தெலங்கானாவின் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism