Published:Updated:

விகடன் பொக்கிஷம்: “எனக்கு வில்லனே பிரசாந்த்தான்!”

அஜீத்
பிரீமியம் ஸ்டோரி
அஜீத்

12.03.2000 ஆனந்த விகடன் இதழில்

விகடன் பொக்கிஷம்: “எனக்கு வில்லனே பிரசாந்த்தான்!”

12.03.2000 ஆனந்த விகடன் இதழில்

Published:Updated:
அஜீத்
பிரீமியம் ஸ்டோரி
அஜீத்
ன்னுடைய டிரேட் மார்க் அடையாளமான இரண்டு நாள் தாடியோடு இருந்தார் அஜீத். சகல நகரங்களிலிருந்தும் ‘முகவரி’ ரிசல்ட் வந்து கொண்டிருந்தது.

‘‘ஜெயிக்கிறதுகூட பெரிய விஷயமில்லை. அதைத் தக்கவைத்துக்கொள்வதற்குள் பெரும்பாடாப் போயிடுது. இந்த வெற்றிகளுக்குப் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிப்போய்விட்டதால் அதற்கேற்ற மாதிரி உழைக்க வேண்டியிருக்கு. கஷ்டம்தான் பாஸ்...’’ என்று சந்தோஷமாகக் கவலைப்பட்டார்.

அஜீத் அலுவலகத்தில் ஒரு டைரி இருக்கிறது. வாய்ப்பு கேட்டு வரும் இளம் டைரக்டர்களின் பெயர், விலாசம் போன்ற தகவல்களைக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

அஜீத்
அஜீத்

‘‘நிறைய பேர் தினம் தினம் வர்றாங்க. சும்மா அவங்களை ‘இன்னைக்கு வாங்க, நாளைக்கு வாங்க’ன்னு அலையவைப்பதில் அர்த்தமில்லை. இந்த டைரியில் அட்ரஸைக் கொடுத்துட்டா, ஃப்ரீயா இருக்கும் நேரத்தில் நானே கூப்பிட்டு கதை கேட்பேன். யாருக்கும் தேவையில்லாத நம்பிக்கை கொடுப்பதில் அர்த்தமில்லை... இல்லையா! எனக்குத்தான் கதை சொல்லணும்னு காத்திருக்காமல் மத்தவங்களுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி முயற்சி பண்ணலாமே. அதைத் தடுக்கிற மாதிரி நடந்துக்க மாட்டேன்’’ என்றார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அஜீத் பற்றி சமீபத்தில் வந்த செய்தி அவரை அப்செட் ஆக்கியிருக்கிறது.

அஜீத்
அஜீத்

‘‘இப்போ ‘அலைபாயுதே’ படத்தில் மாதவனுக்கு பதில் நான் நடிக்க வேண்டும் என்று ஷாலினி அடம்பிடிப்பதாக ஒரு நியூஸ்... அதைப் படிச்சப்போ அழுவதா சிரிப்பதா என்றே புரியலை. யார்கிட்டயும் சான்ஸ் தேடி அலைய வேண்டிய சூழ்நிலை எனக்கு இல்லை. அப்படியே மணிரத்தினம் சார்கிட்ட சான்ஸ் வாங்கணும்னா, நான் அவரைத் தேடிப் போவேனே தவிர ஷாலினியைப் பகடைக்காயாகப் பயன்படுத்த மாட்டேன். ஷாலினி எனக்கு அன்பு மனைவி. என் குடும்பத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய தலைவியாகத்தான் இருக்க வேண்டும். என் வாய்ப்புகளுக்கு அவர் போராட வேண்டிய அவசியம் இல்லை’’ என்று கொஞ்சம் படபடக்க முகம் சிவந்து பேசினார் அஜீத்.

‘‘அடுத்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ரிலீசாகப் போகிறது. புதுசாக ஏதாவது யோசிக்க வேண்டியிருக்கிறது. புதிய டைரக்டர்களிடம் நிறைய பேசுகிறேன்’’ என்று தன் அடுத்த திட்டங்கள் பற்றிப் பேசும் அஜீத், அடுத்து ‘சிட்டிசன்’ என்ற படத்தில் முழுக்க முழுக்க மொட்டைத் தலையோடு நடிக்கப்போகிறார்.

இந்தப்படத்தில் இவருக்கு ஏழு வித ‘கெட்டப்’களாம்! அதில் ஒன்று மொட்டை. டைரக்டர் பவித்ரனிடம் உதவியாளராக இருந்த ஷரவண சுப்பையா என்பவர் டைரக்ட் செய்யப்போகும் ‘சிட்டிசன்’ பற்றித்தான் இப்போது பேசுகிறார். ‘‘கல்யாண ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கு?’’ என்று கேட்டதும், அஜித்தின் முகம் நிஜக் கவலைக்கு மாறியது.

‘‘பிரசாந்த்தும் ஷாலுவும் நடிக்கும் படம்தான் இழுத்துக்கிட்டே போய் கல்யாணத்துக்கும் முட்டுக்கட்டையா இருக்கு. அந்தப்படம் முடிஞ்சுட்டா கெட்டிமேளம்தான். இப்போதைக்கு எனக்குப் பெரிய வில்லனே பிரசாந்த்தான்...’’ என்று நகைச்சுவையாகச் சொன்னார் அஜீத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism