Published:Updated:

விகடன் பொக்கிஷம்: சாவித்திரி சிவசங்கரி - சாவித்திரி நினைவு நாள் டிசம்பர் 26

சாவித்திரி
பிரீமியம் ஸ்டோரி
சாவித்திரி

29.11.1981 ஆனந்த விகடன் இதழில்

விகடன் பொக்கிஷம்: சாவித்திரி சிவசங்கரி - சாவித்திரி நினைவு நாள் டிசம்பர் 26

29.11.1981 ஆனந்த விகடன் இதழில்

Published:Updated:
சாவித்திரி
பிரீமியம் ஸ்டோரி
சாவித்திரி
ப்போது எனக்கு என்ன வயசிருக்கும்? பத்து - பதினொன்று? ம்ஹூம், சரியாக ஆணி அடிக்கத் தெரியவில்லை.

ஒரு கோடை விடுமுறை. என் சினேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை... குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும் அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்ற ஆசை.

என்னைவிட என் சினேகிதிக்கு இதில் முனைப்பு அதிகம். ‘‘பாண்டி பஜாருக்குப் பக்கத்துலதான் வீடு. ஒரு ரவுண்ட் போனா கண்டு பிடித்துவிடலாம்.’’

விகடன் பொக்கிஷம்: சாவித்திரி சிவசங்கரி - சாவித்திரி நினைவு நாள் டிசம்பர் 26

நீலப்பட்டில் சிகப்புக் கரையிட்ட பாவாடை, பவுடர், கண்மை இரட்டைப் பின்னல், பூ. சினேகிதி வீட்டுக்குச் சென்று தயாராக நின்ற அவளோடு பாண்டிபஜார் அடைந்தபோது மணி பத்து அடித்துவிட்டது.

‘‘ராஜகுமாரி தியேட் டருக்குப் பக்கத்துலதானாம் சாவித்திரி வீடு. தெரு பெயர், வீட்டு நம்பர் தெரியாது.’’

யாரையாவது நிறுத்தி ‘நடிகை சாவித்திரி வீடு எது’ என்று கேட்கக் கூச்சம். தணிகாசலம் செட்டி தெரு, டாக்டர் சிங்காரவேலு தெரு என்று ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்பட்டோம்.

பெரிசாய்க் காணப்பட்ட வீடுகளின் முன் நின்று சாவித்திரியின் முகம் தெரிகிறதா என்று தேடினோம்.

கையில் ரோஸ் கலர் குச்சி ஐஸோடு மீண்டும் ஒருமுறை சுற்றினபோது மாரீஸ் மைனர் காரை தானே ஓட்டிக்கொண்டு சாவித்திரி எங்களைக் கடந்து சென்றார்.

‘‘ஆ... சாவித்திரிடீ!’’

ஓட்டமும் நடையுமாக வண்டியைத் தொடர்ந்தோம். நல்லவேளையாக நாலாவது வீட்டு காம்பவுண்டுக்குள் அந்தக் கார் நுழைந்துவிட்டது. பொசுபொசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டு கேட்டைத் தாண்டி போர்ட்டி கோவில் நின்றோம்.

‘‘எவரும்மா அதி?’’ தெலுங்கில் ஒரு பெரியவரின் வினவல்.

‘‘சாவித்திரியைப் பார்க்கணும்.’’

‘‘அவங்க வீட்டுல இல்லை, போங்க.’’

‘‘இப்ப பார்த்தோமே... தானே வண்டியை ஓட்டிண்டு வந்தாங்களே?”

விகடன் பொக்கிஷம்: சாவித்திரி சிவசங்கரி - சாவித்திரி நினைவு நாள் டிசம்பர் 26

‘‘அது சாவித்திரி இல்லே... அவங்க அக்கா. போங்க... போங்க...’’

மனுஷர் பொய் சொன்னதும் எங்களுக்கு அழுகை வந்துவிட்டது. வெயில், பசி, ஏமாற்றம். குரலை எழுப்பி, ‘‘நாங்க பார்த்தோம்... அது சாவித்திரிதான். ஒரு நிமிஷம் கூப்பிடுங்க... ப்ளீஸ்.’’ சினேகிதி கத்த, யார் செய்த புண்ணியமோ சாவித்திரியே வாசலுக்கு வந்துவிட்டார்.

மேக்கப் போட்ட முகம். கோடு போட்ட ஷிபானோ ஏதோ மெல்லிய புடவை. திலகம், சிரிப்பு, அழகு.

‘‘யாரும்மா?’

சினேகிதி அருகில் சென்றாள். ‘‘நாங்க உங்க ஃபேன்ஸ்... ரொம்ப நேரமா வெயில்ல காத்திட்டிருக்கோம்.’’

‘‘அப்படியா? ஷூட்டிங்ல இருந்து நேரா இப்பதான் வரேன். சாப்டுட்டுத் திரும்பப் போகணும். சொல்லுங்க, என்ன வேணும்?’’

‘‘ஆட்டோகிராப்...’’

‘‘அவ்வளவுதானே... கொடுங்க.’’

நீட்டிய புத்தகத்தை மாரிஸ் மைனர் கார் மேல் வைத்து, ‘சாவித்திரி’ என்று இடது கையால் கையெழுத்து போட்டார். அவர் சேலை நம் மேல் படுமளவுக்கு கிட்டத்தில் நின்று பார்த்தபோது பெருமையாக, சந்தோஷமாக இருந்தது.

புத்தகத்தைத் தந்து, ‘‘ஸாரி, உடனே திரும்பப் போகணும். இல்லாட்டி கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்’’ என்று அவர் சொன்னதும், ‘‘பரவாயில்லே’’ என்று கிளம்பினோம்.

இரண்டடி நடந்தவர்கள் நின்று, ‘‘மனம் போல மாங்கல்யத்திலே உங்க நடிப்பு பிரமாதம்’’ என்று சொல்லவும், அவர் சிரித்தார். ‘`தாங்க்ஸ்’’ என்றார். அந்தச் சிரிப்பும் குரலும் ரொம்ப நாட்களுக்கு மனதில் பசுமையாக இருந்தது நிஜம்.

சென்ற ஒரு வருஷமாக - சாவித்திரி உடம்பு சரியில்லாமல் படுத்த ஒரு வருஷமாக - அடிக்கடி சின்ன வயசில் நான் அவரைச் சந்தித்தது நினைவுக்கு வரும். சாவித்திரியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும். போன வாரம்தான் அது நிறைவேறியது.

அண்ணா நகர். சிறிய வீடு. வாசலில் பழசாகி உதிரும் நிலையில் இருக்கும் தென்னங்கீற்றுப் பந்தல். நுழைந்ததும் ஒரு ஹால்.

ஒருக்களித்து உட்கார்ந்து தலையை மேலே நிமிர்த்தி கூலிங்கிளாஸ், பூப்போட்ட சேலையில் அழகாய்க் காட்சி தரும் சாவித்திரியின் படம், மேஜைமேல். ஈரம் பளபளக்கும் உதடுகளோடு சிரிக்கும் சாவித்திரியின் இன்னொரு ஓவியம்... மங்கி, பாலீஷ் இழந்த கேடயங்கள் ஓரிரண்டு.

முன்கூட்டியே தெரிவித்து விட்டுச் சென்றதால் மகன் சதீஷும் உறவினர் வெங்கட ரத்தினம் பாபுவும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.

‘‘அம்மகாருவைப் பார்க்கிறீர்களா?’’

இன்னொரு அறைக்குள் நுழைகிறோம். படுக்கையில் எலும்புச் சுருளாக அவர்...சூம்பிப்போன கைகால்கள், கறுத்துப்போன தோல், மூன்று வயசுப் பிள்ளையின் வளர்த்தி, மூடின கண்கள், மூக்கிலிருந்து ஓடும் ரப்பர் குழாய், மழமழ வென்று வாரி இரட்டைப் பின்னலாகப் பின்னி மடித்துக் கட்டப்பட்ட முடி, சிகப்புப் பொட்டு.

‘‘அம்மகாரு, ச்சூடு. அம்மகாரு இக்கட ச்சூடு... மீ பிரெண்ட் ஒச்சுண்டாரு... ச்சூடும்மா’’ என்று நர்ஸும், திரு.பாபுவும் குனிந்து குரல் கொடுக்க, சாவித்திரி மெதுவாகக் கண்களைத் திறக்கிறார்.

உள்ளுக்குள் என்னமோ வேதனை இருக்கிற தினுசில் கைகளை இப்படியும் அப்படியும் சுற்றுகிறார். மஞ்சள் ஏறிப்போன பற்களை ‘நக்நக்’கென்று கடிக்கிறார்.அரைநிமிஷம் என்னை உறுத்துப் பார்க்கிறார். திரும்ப கண்களை மூடி அமைதியாகிறார்.

சாவித்திரியா இவர்? நவரசங்களையும் விழியோரத்தில் நிறுத்தி உதட்டசைவால் அனை வரையும் ஆக்கிரமித்து நடிகையர் திலகமாக பவனி வந்த சாவித்திரி இவரா? சத்தியம் பண்ணினாலும் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

மனசு முரண்டுபிடிப்பதில் கண்ணில் ஊறிவிட்ட ஜலத்தை சமாளிப்பதற்காகத் தலையைக் குனிந்துகொள்கிறேன்.

‘‘ஒரு வாரமா ராப்பகலா ஷூட்டிங் இருந்ததால அம்மா இன்சுலின் போட்டுக்காம விட்டுட்டாங்க. பெங்களூர் போன அன்னிக்கு ராத்திரி வெறும் வயித்தோட இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டுப் படுத்துட்டாங்க. மூணு மணி சுமாருக்கு நான் பாத்ரூம் போக எழுந்தப்பா அம்மா வாயில நுரையோட நினைவிழந்து படுத்திருந்தாங்க. இதுக்கு முன்னால இரண்டு மூணு தடவை கோமா வந்து உடனே கவனிச்சதுலே சரியாயிருக்கு. இந்த முறை ஏனோ இப்படிப் பெரிசா படுத்துட்டாங்க.’’

‘‘அம்மா சரியாகி, முன் போல நடமாடுவாங்கன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா சதீஷ்?’’

‘‘நம்பிக்கை இல்லாட்டா எப்படி? சிலபேர் `எதுக்கு அனாவசியமா ஏகப்பட்ட மருந்து, வைத்தியச் செலவு? அத்தனையும் வேஸ்ட்டு’னு சொல்றாங்க. அம்மா இப்படியே இருந்தாலும்கூட எனக்குப் பரவாயில்லை. இப்போ இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு... சில நாட்கள் தூக்கி உட்கார வச்சு பிடிச்சுக்கிட்டா, கொஞ்ச நேரம் டி.வி.கூட பார்க்கறாங்க!’’

‘‘சாவித்திரி ரொம்ப குடிப்பார். அதான் இந்த நிலைமைக்குக் காரணம்னு சில பேர் சொல்றாங்களே!’’

‘‘நாலு வருஷமா அம்மகாரு குடியைத் தொடாம இருந்தது எல்லாருக்கும் தெரியும். அப்புறம் ஏன்தான் இப்படிப் பேசறாங்களோ! ‘நான் விழிச்சுக்கிட்டேன். மனுஷங்களைப் புரிஞ்சு கிட்டேன். என்னை ஏமாத்தின வங்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்காம விட மாட்டேன்’னு சதா சொல்லுவாங்க. தன் நிலைமை உணர்ந்து பழையபடி உழைக்கத் தொடங்கி, வாழ்க்கையை உயர்த்திக்கிற சமயத்துலே இந்த கோமா வந்திடுச்சி... அம்மகாரு மனோதிடம் உள்ளவர். நிச்சயம் மீண்டு வருவார்.’’

பாபு உணர்ச்சிவசப்பட்டு பேச, அடங்கி இருந்த என் கண்ணீரும் எட்டிப் பார்க்கிறது. எழுந்து விடைபெற்று வாசலுக்கு வருகிறேன்.

நாலு பேராய், பத்துப் பேராய் யார் யாரோ வந்து ஜன்னல் வழியாக சாவித்திரியைப் பார்த்து விட்டுப் போய்க் கொண்டிரு க்கிறார்கள்.

இத்தனை பேர்களுடைய அன்புக்கும், பரிவுக்கும், பிரார்த்தனைக்கும் பலன் இருக்காதா?

இருக்க வேண்டும்... தனித்துத் தவிக்கும் பிள்ளைக் காகவாவது சாவித்திரி மயக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும்.

23.05.1971 ஆனந்த விகடன் இதழில்

கோவிந்தா கோவிந்தா

- பானுமதி ராமகிருஷ்ணா

ந்தக் காலத்தில் திரையுலகை அதிர வைத்த பெயர் ‘பானுமதி ராமகிருஷ்ணா.’ நடிகை, இயக்குநர் எனப் பல முகங்கள் கொண்ட பானுமதிக்கு இன்னொரு முகம் எழுத்தாளர் என்பது. நிறைய நாவல்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரி கதலு’ என்ற சிறுகதை, ஆந்திர மாநில சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. ‘நாலோ நேனு’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய சுயசரிதை இவருக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ என்னும் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

ஆனந்த விகடன் பத்திரிகையிலும் பலப்பல சிறுகதைகள் எழுதியுள்ளார் பானுமதி ராமகிருஷ்ணா. கண்டிப்புக்கும் கறாருக்கும் பெயர்பெற்ற பி.பானுமதி எழுதிய சிறுகதைகள் பெரும்பாலும் நகைச்சுவைச் சிறுகதைகள்தான். அந்தக் கதை இதுதான் :

``அம்மா... சோடாவுக்காக ஊரெல்லாம் சுத்தியாச்சு. எங்கேயும் கிடைக்கல’’ என்றவாறே கையைப் பிசைந்துகொண்டு வந்து நின்றான் வேலைக்காரன்.

எனக்கு வயிற்று வலி தாங்க முடியவில்லை. மத்தியானம் விருந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டதுதான் இதற்கு காரணம் என்று எனக்குத் தெரியும். நாற்பது வயதான எனக்கு ஜீரண சக்தி இல்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தேன்.

முழுக்கதையையும் வாசிக்க...

https://bit.ly/SHortStory07