“என் அக்கா விஜயலட்சுமிக்கும் எனக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். அவளுக்கும் எனக்கும் ஒன்றாகவே திருமணம் நடந்தது. அப்போது எனக்கு 9 வயது. என் கணவருக்கு வயது 21. கல்யாணத்திற்கு முன்பு நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்ததில்லை” என்று கூறுகிறார், கணிதமேதை ஸ்ரீநிவாஸ ராமானுஜம் துணைவியார் திருமதி ஜானகி அம்மாள்.

“என் கணவருக்கு போர்ட் டிரஸ்ட்டில் சாதாரண குமாஸ்தா வேலை கிடைத்ததும் முதன்முதலில் ஜார்ஜ்டவுன் முத்தையா முதலி தெருவில் புதுக்குடித்தனம் புகுந்தோம். எப்போதும் கையில் வைத்திருக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ கணக்குகளைப் போட்டுக்கொண்டே இருப்பார். படுக்கையிலும் பக்கத்திலேயே ஒரு நோட்டுப்புத்தகம் இருக்கும். கனவிலும் ஏதாவது கணக்கு பற்றிச் சிந்தனைகள் வருமாம். உடனே எழுந்து அதையும் குறித்துக் கொள்வாராம்.

இங்கிலாந்து கணித மேதை ஜி. எச். ஹார்டியின் அழைப்பின் பேரில் என் கணவர் லண்டனுக்குச் செல்லும்போது, என்னையும் அழைத்துப் போகும்படி கேட்டதற்கு அவர், ‘நீ சின்னப் பெண். அழகாக இருக்கிறாய். லண்டனுக்கு வந்தால் அங்கு உன்னை வெள்ளைக்காரன் பார்த்துவிட்டால் தூக்கிக் கொண்டு போய்விடுவான்’ என்றதும் நானும் பயந்து நின்று விட்டேன். லண்டனுக்குக் கப்பலில் ஏறுவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவர் தனது குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். லண்டனிலிருந்து அவர் அனுப்பிய கிராப் தலையுடன் இருந்த போட்டோவைப் பார்த்ததும் எங்களுக்கு அடையாளமே தெரியவில்லை.

லண்டன் சீதோஷ்ண நிலை அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் காச நோயினால் உடல் நலம் குன்றி ஆள் அடையாளமே தெரியாமல் இந்தியா திரும்பி வந்ததும் நான் அவருடனே இருந்து சேவைகள் செய்தேன். தயிர் சாதம் என்றால் மிகப் பிரியம். தொட்டுக்கொள்ள ஊறுகாய் இல்லையென்றாலும் ருசி என்பதைப் பார்க்காமல் சாப்பிடுவார். சாப்பிடும் போதும் கணக்குப் பாடத்தில்தான் கவனம்.

அவருக்கு ஜோதிடம் பார்ப்பதில் சிறிதளவு ஆர்வம் உண்டு. தனது ஜாதகத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுதான் 34 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன் என்று கூறியது போலவே, அவர் 34 வயதாவதற்குள் உடலில் நோய் முற்றி சென்னையில் காலமாகிவிட்டார். இப்போது அவர் வாழ்ந்திருந்தால் இந்த டிசம்பர் 22-ல் அவருக்கு 98 வயது தொடங்கியிருக்கும். நான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்” எனக் கூறிக் கண்ணீர்விட்ட திருமதி ஜானகி ராமானுஜத்துக்கு வயது 85 நடக்கிறது.

- ரகமி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி