Published:Updated:

விகடன் பொக்கிஷம்: ரேடியோ மிர்ச்சி டார்லிங் சுசித்ரா இப்போ டி.வி-க்கு வர்றாங்க!

சுசித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சுசித்ரா

16.4.06 ஆனந்த விகடன் இதழில்

விகடன் பொக்கிஷம்: ரேடியோ மிர்ச்சி டார்லிங் சுசித்ரா இப்போ டி.வி-க்கு வர்றாங்க!

16.4.06 ஆனந்த விகடன் இதழில்

Published:Updated:
சுசித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சுசித்ரா

“நான் மிர்ச்சியில் பிரபலமானதுமே சேனல்களில் நிகழ்ச்சிகள் பண்ணித் தரக் கேட்டு, நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவை எதுவுமே என்னோட திறமையை வெளிப்படுத்தறதா இல்லாமல், டெலிபோன்ல பேசி, பிடிச்ச பாட்டு போடுறதும், எனக்குச் சுத்தமா வராத நடிப்பு சம்பந்தமாகவுமே இருந்தது. ஆனா, விஜய் டி.வி-யின் ‘காபி வித் சுஜி’ செம ஹாட்டு மச்சீ!’’ என்கிறார் பரவசமாக!

‘‘சினிமா, விளையாட்டு, அரசியல்னு ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு பிரபலங்களுடன் ஒரே நேரத்தில் பேசுகிற நிகழ்ச்சி இது. வித்தியாசமான கேள்விகள், அவங்களோட ரொம்ப பர்சனலான பக்கங்கள், இதுவரை தெரியாத தகவல்கள்னு சுவாரஸ்யமா இருக்கும். ரொம்ப ஜாலியான, பர்சனலான கேள்விகளும் இருக்கும். அவங்க கேள்விக்குப் பதில் சொல்லாம முழிக்கிறது, மழுப்பறது, கூச்சப்படுறது, சிரிக்கிறதுன்னு எல்லாமே லைவ் ஷோ மாதிரி அப்படியே வரப்போகுது. முதல் ஜோடி யார் தெரியுமா? நம்ம தினேஷ் கார்த்திக்கும் ஜோஷ்னா சின்னப்பாவும்!’’ என்கிற சுஜி, இதுவரை தமிழ் நாட்டின் டாப்பர்ஸ் பலரையும் எஃப்.எம். இன்டர்வியூவில் கலாய்த்திருக்கிறார். அந்த அனுபவங்கள் சொல்கிறார்,

விகடன் பொக்கிஷம்: ரேடியோ மிர்ச்சி டார்லிங்  சுசித்ரா இப்போ டி.வி-க்கு வர்றாங்க!

‘‘விஜய்யோட ‘வெட்கம்’ங்கிற அவுட்டர் கவரை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாப் பேசி இளக வெச்சுட்டாப் போதும், ரொம்ப ப்ரீயா பேச ஆரம்பிச்சுடுவார். ஜோக்கு, பாட்டுன்னு பின்னி எடுப்பார்.

விக்ரமை எனக்கு ‘கென்னி’யாவே தெரியும். சட்டுனு பதில் சொல்லிட முடியாத அளவுக்கு சேலஞ்சிங்கான கேள்விகள் கேட்டா விக்ரமுக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ப்ரெண்ட்லியான மனுஷன்.

விகடன் பொக்கிஷம்: ரேடியோ மிர்ச்சி டார்லிங்  சுசித்ரா இப்போ டி.வி-க்கு வர்றாங்க!

ஜெயலலிதா மேடத்தை நாங்க எங்களோட கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணியிருந்தோம். அவங்களால வர முடியலை. அதனால என்னை அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தாங்க. போயஸ் கார்டனுக்குப் போயிருந்தேன். எந்த பந்தாவுமே இல்லாத ரொம்ப சிம்பிளான ஜெயா மேடத்தைப் பார்த்தபோது எனக்கு சந்தோஷ ஷாக்! ஏதாவது நினைச்சுப்பாங்களோன்னு பார்த்துப் பார்த்துப் பேசினேன். ஆனா, அவங்க ரொம்ப கேஷுவலா இருந்தாங்க. நான் உளர்றதையும் அக்கறையா கேட்டு, நான் சொன்ன ஜோக்குக்கெல்லாம் சிரிச்சு, வெரி கூல்!’’ என்று ஒவ்வொருவரைப் பற்றியும் கூறுகிறார்.

- சி.திலகவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism