Published:Updated:

விகடன் தந்த வீடுகள்!

விகடன் தந்த வீடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் தந்த வீடுகள்

நன்றி வாசகர்களே...

டந்தாண்டு தமிழகத்தையே உலுக்கியது கஜா புயல். டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்தார்கள். விகடன் வாசகர்களின் உதவியோடு வாசன் அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. பயிர்கள் மேலும் கருகாமல் தடுக்கும் வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கியது, விழுந்துகிடந்த தென்னை மரங்களை அகற்றிச் சுத்தம் செய்தது, புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயத்தை மீட்டுருவாக்கம் செய்தது எனப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விகடன் தந்த வீடுகள்!

அவற்றின் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகேயுள்ள முதலியார்தோப்பு, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளை இழந்த ஏழைக் குடும்பத்தினருக்கு விகடன் வாசகர்கள் உதவியோடு வாசன் அறக்கட்டளை சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணி தொடங்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் தந்த வீடுகள்!

கடந்த டிசம்பர் 6 அன்று புஷ்பவனம் நண்பர்கள் மன்றம் மற்றும் கிராம வளர்ச்சிக்குழு அலுவலக வளாகத் தில் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. விழா வுக்குக் குடும்பத்துடன் வருகைதந்த பயனாளிகள் மிகவும் நெகிழ்ச்சியோடு சாவிகளைப் பெற்றுக்கொண்டார்கள். அடுத்தகட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கவுள்ளன.