Published:Updated:

பட்டைதீட்டிய பயிற்சி முகாம்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்

விகடன் மாணவப் பத்திரிகையாளர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

பட்டைதீட்டிய பயிற்சி முகாம்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

Published:Updated:
விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள்

நூற்றாண்டுகள் பழைமையான ஆலமரத்தில், புதிதாகத் தோன்றிய விழுதுகள் போன்றவர்கள், விகடனின் மாணவப் பத்திரிகையாளர்கள். விகடனில் பட்டை தீட்டப்படும் இவர்களில் பலர், சமுதாயத்தில் உயர்பதவிகளில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

2022 -23-ம் ஆண்டுக்கான விகடனின் மாணவப் பயிற்சியாளர் திட்டத்தில் தேர்வான 56 பேரில் 24 பேர் பெண்கள். சென்னை ராயப்பேட்டை, சி.எஸ்.ஐ சினாட் மையத்தில் ஜூலை 30, 31 தேதிகளில் மாணவப் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இரண்டு நாள்கள் கூட்டுப்பயிற்சி முகாமில் அரசியல், சினிமா, ஊடகம் என பல துறைகளைச் சார்ந்த பிர பலங்களும், விகடன் ஆசிரியக் குழுவினரும் மாணவச் செல்வங்களுடன் உரையாடி, பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

பட்டைதீட்டிய  பயிற்சி முகாம்!

விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன், ‘வரவேற்பும் வழிகாட்டுதலும்’ என்ற தலைப்பில் பேசி, முதல்நாள் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தார். ‘`ஒரு செய்தியை பல கோணங்களில் அணுகுங்கள், வாசகர்கள் உங்கள் படைப்புகளை ஏற்றுக்கொள்வதுதான் சிறந்த பரிசு. அதிகமாக பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள்’' என உற்சாக உரையாற்றினார்.

அடுத்து, ‘தி நியூஸ் மினிட்’ செய்தி தளத்தின் சீனியர் நியூஸ் எடிட்டர் ஷபீர் அஹமது, ‘இன்றைய ஊடகம்’ என்ற தலைப்பில் பேசினார். ``மக்கள் தான் நம்ம பாஸ். மக்களுக்கான நியாயத்தைப் பெற அரசின் சக்கரங்களை நம்மால் நகர்த்த முடியும். களத்துக்குச் சென்று உண்மையை ஆராய்ந்து செய்தியைப் பதிவு செய்யுங்கள். பத்திரிகையாளர்கள் தாண்டக் கூடாத மெல்லிய கோடு ஒன்று உள்ளது. அதை ஒருமுறை தாண்டிவிட்டால், எப்போதும் உங்களால் திரும்ப முடியாது. எனவே, கவனமாக இருங்கள்’' என, தன் கள அனுபவங்களுடன் கலகலப்பாகப் பேசினார்.

பட்டைதீட்டிய  பயிற்சி முகாம்!

அடுத்து பேசியவர் யூடியூபர் மதன் கௌரி... ``நான் ஒரு டேட்டா சேகரிப்பாளன். நான் பத்திரிகையாளர்களைப்போல கள ஆய்வுகள் மேற்கொண்டதில்லை. டீக்கடை பெஞ்சில் பேசப்படும் விஷயங்களையே மக்கள் விரும்பும் வகையில் பேசுகிறேன். இணையத்தில் இருந்தே செய்திக்கான தரவுகளை எடுப்பேன். எனவே வாசகர்களின் தேவையறிந்து அதற்கேற்றாற் போல் செய்திகளைக் கொடுங்கள்’’ என ஊக்கம் கொடுத்தார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் ‘டிஜிட்டல் காலத்து இளைஞர்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.

 ஷபீர் அஹமது
ஷபீர் அஹமது
 மதன் கௌரி
மதன் கௌரி

‘`இன்றைய இளைஞர்களிடம் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அதற்காக அவர் களைக் குறை சொல்ல முடியாது. கல்வி என்பது மதிப்பெண்கள் அடிப்படையிலான தாக மாறிவிட்டது. பெற்றோர்கள் குழந்தை களைப் போட்டி உலகத்திலேயே வளர்க் கிறார்கள். இன்றைய இளைஞர்கள் எளிதாக உணர்ச்சி வசப்படுகிறார்கள். இந்த மாற்றங் களைக் கருத்தில்கொண்டு அவர்களின் மன நிலையிலிருந்து சிந்தித்து எழுதுங்கள்’’ என்றார்.

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘`படிக்கும்போதே மாணவப் பத்திரிகையாளர்களுக்கு இத்தகைய அனுபவங்கள் கிடைப்பது பெரிய விஷயம். என் வாழ்க்கையில், நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளவே 26 வயதானது. நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பது இப்போதே உங்களுக்குத் தெரிகிறது. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றார்.

டிஜிட்டல் உலகத்தில் செய்திகளை எப்படி அறத்தோடு பதிவு செய்ய வேண்டும், எத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விகடன் ஊடகவியலாளர்களும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

பட்டைதீட்டிய  பயிற்சி முகாம்!

குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) கற்றுத்தர வேண்டியதன் அவசியமென்ன?

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்: குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்தால் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் எனச் சொல்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்ய நினைக்கும் யாரும் எடுத்தமாத்திரத்தில் பேட் டச் செய்வதில்லை. குட் டச்சில் ஆரம்பித்து படிப்படியாகவே பேட் டச் செய்கிறார்கள்.

பட்டைதீட்டிய  பயிற்சி முகாம்!

பெண்களை மையமாக வைத்து எப்போது படம் எடுப்பீர்கள்?

லோகேஷ் கனகராஜ்: ‘விக்ரம்’ படத்தில் வரும் ஏஜென்ட் டீனாவின் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது, அதை டெவலப் செய்து வெப் சீரிஸாக பண்ண ஆசை இருக்கிறது.

பட்டைதீட்டிய  பயிற்சி முகாம்!

காதலி, மனைவி... இதைத் தாண்டி சைந்தவியை ஒரு பாடகியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்: நல்ல பாடகி. ஒவ்வொருவருக்கும் வாய்ஸ் ரேன்ஜ் மாறும், சைந்தவிக்கு லோ பிட்ச் டோன் இருக்கிறது. அவரின் லோ பிட்ச் குரல் ‘எள்ளு வய பூக்கலயே...’ பாடலில் அழகாக எடுத்துக்கொடுக்கும்.