Published:Updated:

கல்லூரி தாண்டியும் கற்றது இங்குதான்!

விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

கல்லூரி தாண்டியும் கற்றது இங்குதான்!

விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

Published:Updated:
விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
மாணவப் பருவத்திலேயே சமூகம் சார்ந்த புரிதலையும் தேடலையும் மாணவர்களுக்குள் ஆழப் பதிக்கும் முன்னெடுப்பு தான் ‘விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்.’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு தேர்வு நிலைகளுக்குப் பின் மாணவப் பத்திரிகை யாளர்களாகத் தேர்ச்சி பெற்று சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியவர்களுக்கு ஆண்டின் இறுதியில் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். கொரோனா காரணமாக 2020-2021-ம் ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த 2019-2020-ம் ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய மாணவப் பத்திரிகையாளர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 21-ம் தேதி, விகடன் அலுவலக வளாகத்திலேயே நடைபெற்றது. கொரோனா காரணமாக சென்னை மாணவப் பத்திரிகை யாளர்கள் நேரடியாகவும், பிற மாவட்டத்தினர் இணைய வழியாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கல்லூரி தாண்டியும் கற்றது இங்குதான்!

மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். களத்தில் நின்று முக்கிய நிகழ்வுகளைக் கட்டுரைகளாகவும் வீடியோவாகவும் செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைச் சிரத்தையோடு நிகழ்த்திக்காட்டிய மாணவர்களைப் பாராட்டி, பரிசு வழங்கிப் பேசிய விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ‘`ஒரு வித்தியாசமான சூழலில் நாம் சந்திக்கிறோம். வழக்கமாக மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் கடைசி மூன்று மாதங்கள்தான் நிறைய கட்டுரைகள் செய்ய வாய்ப்பு அமையும். ஆனால், கொரோனா காரணமாக இம்முறை அந்த வாய்ப்பு குறைந்துவிட்டது. கட்டுரை எண்ணிக்கை குறைந்தாலும் பல புதிய முயற்சிகளைப் பலரும் செய்தீர்கள்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்றுப் பயிற்சி பெற்றவர்களில் பரிசு பெற்றவர்கள், பெறாதவர்கள் என அனைவருமே நல்ல விஷயங்கள் பலவற்றையும் கற்றுக்கொண்டிருப்பீர்கள். வரும் காலங்களில் நீங்கள் எந்தத் துறையில் பணிசெய்தாலும், இங்கே கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்கள் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்’’ என வாழ்வின் அடுத்த கட்டத்தைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்டவர்களில் ‘அவுட்ஸ்டாண்டிங்’ பிரிவில் பா.கிருத்திக் பாபு, க.நிதி, பா.கவின், க.ர.பிரசன்ன அரவிந்த், சே.பாலாஜி ஆகியோரும் ‘எக்ஸலன்ஸ்’ பிரிவில், ஆ.வல்லபி, கி.கோகுலன், கு.தினகரன், தி.ஷிவானி, செ.க.மெளரீஷ், சி.அரவிந்தன் ஆகியோரும் ‘டிஸ்டிங்ஷன்’ பிரிவில், கௌசல்யா, கிருத்திகா, நவயுகன், கற்பகவள்ளி, அந்தோணி அஜய் ஆகியோரும் தேர்வாகியிருந்தனர்.

ஓராண்டுக்கால மாணவப் பத்திரிகையாளர் அனுபவத்தையும், விருது பெற்ற உற்சாகத்தையும் பகிர்ந்துகொண்டனர் இந்த எதிர்கால ஆளுமைகள்.

பா.கவின்: ‘`இந்த ஒரு வருடம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வகுப்பறைகளில் கற்க முடியாத விஷயங்களைக்கூட இங்கு கற்றுக்கொண்டேன். இதை ஒரு ஆரம்பமாகவே பார்க்கிறேன். தொடர்ந்து விகடனோடு பயணிப்பேன்.’’

தி.ஷிவானி : “மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது பெருமிதமான தருணங்களில் ஒன்று. நிச்சயம் இந்த ஓராண்டில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அது நடந்தது.”

ஆ.வல்லபி: “சமூகத்தில் வாழும் பல்வேறு தரப்பினரின் கண்ணோட்டத்தைக் கற்றுக்கொள்ளவும், தமிழுக்கும் எனக்குமான தொடர்பை நீட்டிக்கச் செய்தது, மனதைரியத்தைப் பெருக்கியது என விகடன் நிறைய கற்றுக்கொடுத்தது. ஐ.ஐ.டி மாணவர் என்பதைவிட விகடனில் பயிற்சி பெற்றதைப் பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்.”

க.ஸ்ரீநிதி: “வீடியோ எடிட்டராக விகடனில் பயிற்சி பெற்றது மறக்க முடியாதது. நுணுக்கமான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். புகைப்படக்காரராகவும் பணியாற்றினேன். இதற்கான தளத்தைக் கொடுத்தது விகடன்தான்.”

க.ர.பிரசன்ன அரவிந்த் - கு.தினகரன் - சே.பாலாஜி - க.ஸ்ரீநிதி - ஆ.வல்லபி - தி.ஷிவானி - பா.கவின் - கோகுலன் - பா.கிருத்திக்பாபு - செ.க.மெளரீஷ்- சி.அரவிந்தன்
க.ர.பிரசன்ன அரவிந்த் - கு.தினகரன் - சே.பாலாஜி - க.ஸ்ரீநிதி - ஆ.வல்லபி - தி.ஷிவானி - பா.கவின் - கோகுலன் - பா.கிருத்திக்பாபு - செ.க.மெளரீஷ்- சி.அரவிந்தன்

சே.பாலாஜி ‘`விகடனின் தனித்தன்மையை அருகிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்பு கிடைத்தது. அரசு அதிகாரிகள், கலெக்டர் எனப் பலரையும் எப்படி அணுகுவது என விகடன் மூலமாகக் கற்றுக்கொண்டேன். தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளக் கற்றுக்கொடுத்தது விகடன்.’’

க.ர.பிரசன்ன அரவிந்த்: “என் கல்லூரியைச் சுற்றி வசித்த நிறைய சாமானியர்களையே வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகக் கற்றுக்கொடுத்தது விகடன்தான்.’’

கு.தினகரன்: “மாணவராக வருபவர்களை நல்ல வாசிப்பாளராகவும், சிந்தனையாளராகவும் மாற்றியது விகடன் எங்களுக்குச் செய்த மிகமுக்கியமான விஷயம்.”

விகடனின் நீண்டகால வாசகரான சத்தியநாராயணன், 37 வருடங்களாக, மாணவப் பத்திரிகையாளர்களில் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் எனக் கணித்து, பேனாக்களைப் பரிசாக வழங்கிவருகிறார். இந்த முறையும் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கு வாசகர்கள் சார்பாக பேனா பரிசு வழங்கி அவர் பாராட்டியது மாணவர்களை நெகிழ்ச்சியுறச் செய்தது.

பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற மாணவர்கள், புதிய பாய்ச்சலுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டபடி புறப்பட்டனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism