நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வீடு கொடுத்த விகடன்... நெகிழ்ந்த பயனாளிகள்!

வீடு வழங்கும் நிகழ்வில்...
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு வழங்கும் நிகழ்வில்...

உதவி

ங்கி நிற்கும் தேக்கு, அடர்ந்து வளர்ந்த முந்திரி, வரிசைகட்டிய சவுக்கு, பசுமை அரணாகத் தென்னை... இப்படி இயற்கை எழில் போர்த்திய கிராமங்களை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளைக் கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் அடியோடு குலைத்துப்போட்டது. புயலால் வீடுகள், உடைமைகள், வாழ்வாதாரங்களை இழந்து தவித்த மக்களுக்கு விகடன் வாசகர்கள் வாரிவழங்கிய உதவித்தொகையுடன், விகடன் குழும வாசன் அறக்கட்டளையும் இணைந்து அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் அருகேயுள்ள முதலியார் தோப்பு, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 10 ஏழைக் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது. கட்டி முடித்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா, டிசம்பர் 6-ம் தேதி புஷ்பவனத்தில் நடைபெற்றது. மஞ்சள், குங்குமச்சிமிழ், காமாட்சி விளக்கு, தாம்பூலம், தேங்காய், பழம், பூவோடு வீட்டுச் சாவிகளைப் பயனாளிகளிடம் விகடன் குழுவினர் ஒப்படைத்தனர். விழாவுக்குக் குடும்பத்துடன் வருகை தந்திருந்த பயனாளிகள் நெகிழ்ச்சியோடும் மன மகிழ்ச்சியோடும் வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

வீடு வழங்கும் நிகழ்வில்...
வீடு வழங்கும் நிகழ்வில்...

பயனாளிகளில் ஒருவரான புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா, “விவசாயக்கூலி வேலை செஞ்சுதான் பிழைக்கிறோம். பச்சைப் புள்ளைங்க ரெண்டு பேரையும் எப்படியாவது வளர்த்து, படிக்கவெச்சு கரையேத்தத்தான் கஷ்டப்பட்டோம். அந்த நேரத்துலதான் திடீர்னு புயல் வந்தது. பக்கத்துல ஒரு மாடி வீட்டுல இருட்டு அறையில அடைஞ்சு கிடந்தோம்.

பொழுது விடிஞ்சு வீட்டை வந்து பார்த்தப்போ, நாலாப் பக்கமும் வீடு சிதறிக் கிடக்கு. `இதோட நம்ம வாழ்க்கையே முடிஞ்சி போச்சு’னு நினைச்சிட்டோம்.

அந்த நேரத்துலதான் விகடன் நிறுவனம் வந்தது. கூரை வீட்டுல இருந்த நாங்க நெனச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுத்து, எங்க வாழ்க்கையில் வெளக்கேத்திவெச்சிருக்கு. இதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இது போதும் சாமி. சாகுற வரைக்கும் நாங்க இந்த உதவியை மறக்க மாட்டோம்” என்றார் நன்றி பெருக்குடன்.