Published:Updated:

கோடி கோடியாய் அறிவிப்பு... மீண்டும் மீண்டும் உடைப்பு!

தடுப்பணை
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பணை

ஒரு மதகே அடித்துச்சென்றும், ‘தடுப்பணை உடையவில்லை, தடுப்புச்சுவர் மட்டுமே உடைந்திருக்கிறது

கோடி கோடியாய் அறிவிப்பு... மீண்டும் மீண்டும் உடைப்பு!

ஒரு மதகே அடித்துச்சென்றும், ‘தடுப்பணை உடையவில்லை, தடுப்புச்சுவர் மட்டுமே உடைந்திருக்கிறது

Published:Updated:
தடுப்பணை
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பணை

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மீண்டும் மீண்டும் உடைந்திருக்கிறது. அந்தத் தடுப்பணையைச் சீரமைக்க ஆளுங்கட்சிகள் கோடி கோடியாய் நிதி ஒதுக்கியதாக அறிவிப்பு மட்டும் வெளியிடுவதும், எதிர்க்கட்சிகள் அடையாள போராட்டம் நடத்துவதும் விவசாயிகளைக் கொதிப்படைய வைத்திருக்கிறது!

அ.தி.மு.க-வினர் தர்ணா போராட்டம்
அ.தி.மு.க-வினர் தர்ணா போராட்டம்

ஒன்றரை மாதத்தில் உடைப்பு!

தமிழகத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆற்றில் ஏற்கெனவே ஆறு அணைகள் இருந்த நிலையில், கடலுக்கு வேகமாகச் செல்லும் தண்ணீரைத் தடுத்து ஏரிகளுக்குத் திருப்பவும், நிலத்தடி நீரைச் செறிவூட்டவும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.25.37 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. விழுப்புரம் - கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கட்டப்பட்ட இந்த தளவானூர் - எனதிரிமங்கலம் தடுப்பணையை, அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் 2020 அக்டோபரில் திறந்துவைத்தார்.

அணையை அவர் திறந்துவைத்த மூன்று மாதத்திலேயே அணை உடைந்துபோனது. நல்ல மழை பெய்து, தண்ணீர் தேங்கி நின்ற நிலையில், எஞ்சிய அணையையாவது காப்பாற்ற வேண்டும் என மீதித் தண்ணீரையும் வெளியேற்றினார்கள் அதிகாரிகள். இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

ரூ.7 கோடி... ரூ.15 கோடி!

இந்த அணையை உடனே சீரமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் அறிவித்தார்கள்.

தேர்தல் நெருங்கியதால், அப்போதைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வான பொன்முடியும் தொண்டர்களுடன் அங்கு காத்திருப்புப் போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்தார்.

உடனே, “தடுப்பணை உடையவில்லை. நீரின் சுழலால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தடுப்புச்சுவரைக் கட்டுவதற்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என்று பேட்டியளித்து சமாளித்தார் அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம். “ஒரு மதகே அடித்துச்சென்றும், ‘தடுப்பணை உடையவில்லை, தடுப்புச்சுவர் மட்டுமே உடைந்திருக்கிறது’ என்கிறார் சண்முகம். வெறும் கரைதான் உடைந்திருக்கிறது என்றால், அதற்கு ஏன் 7 கோடி ரூபாய்?” என்று லாஜிக்கலாக கேள்வி கேட்டுச் சீறினார் பொன்முடி.

கோடி கோடியாய் அறிவிப்பு... மீண்டும் மீண்டும் உடைப்பு!

போட்டி போராட்டம்..!

தடுப்பணை உடைப்பு விவகாரத்தில், கடந்தகால அ.தி.மு.க அரசோடு மல்லுக்கட்டிய தி.மு.க-வும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தடுப்பணை விவகாரத்தை மறந்தேபோனது. கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி (9-11-2021) ஏற்பட்ட வெள்ளத்தில், தளவானூர் அணை மீண்டும் உடைந்தது. இதையடுத்து தளவானூருக்கு வந்த அமைச்சர் பொன்முடி, “இந்த உடைப்புகளைச் சரிசெய்ய 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என பேட்டியளித்துவிட்டு இடத்தைக் காலிசெய்தார்.

இதற்கிடையே, தளவானூர் அணைக்கு முன்னதாக அமைந்துள்ள பழைமையான எல்லீஸ் சத்திரம் தடுப்பணையும், கடந்த அக்டோபர் (25-10-2021) மாதம் வெள்ளத்தில் உடைந்துபோனது. இப்படி தளவானூர், எல்லீஸ் அணைகள் அடுத்தடுத்து உடைந்துபோன நிலையிலும் கடந்த ஒன்பது மாதங்களாக தி.மு.க அரசு எவ்விதச் சீரமைப்பு பணியையும் மேற்கொள்ளவில்லை. அடுத்தடுத்து பெய்த மழைநீரெல்லாம் வீணாக கடலுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதையடுத்து, தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர் அ.தி.மு.க-வினர்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி இது குறித்துப் பேசும்போது, “தளவானூர் தடுப்பணை இரண்டாவது முறையாக உடைந்த பின்னர் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆய்வு ஏதும் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் இருவரும் மாறி மாறி 7 கோடி, 15 கோடி என்று அறிவித்தாலும், உண்மையில் அவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட வேலையென்றால், தி.மு.க அதில் ஆர்வம் காட்டாது. அதேபோல், தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட வேலையென் றால் அ.தி.மு.க ஆர்வம் காட்டாது. இவர்களுக் கிடையே வீணாய்போவது என்னவோ, வாக்களித்த மக்களும், விவசாயிகளும்தான்” என்றார்.

இதையடுத்து, தடுப்பணை உடைப்பு குறித்து அமைச்சர் பொன்முடியிடம் பேசினோம். “மழை, வெள்ளம், இதர பணிகள் போன்ற காரணங்களால், சீரமைப்பில் தாமதம் ஏற்பட்டது. எல்லீஸ் அணையில், ரூ.2.6 கோடியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட விருக்கிறது. அங்கு, புதிதாக ஒரு தடுப்பணை கட்டுவதற்கும் ரூ.40 கோடி கேட்டிருக்கிறோம். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் சரியான திட்டமிடுதலே இல்லாமல் தளவானூர் அணையைக் கட்டிவிட்டனர். எனவே, அணை இருக்கும் பகுதியை ஆய்வுக்குழு பார்வையிட்டு, புதிய திட்டத்தை வரையறுப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. அதற்காகவும் 30 கோடி ரூபாய் கேட்கப்பட்டிருக்கிறது. இரண்டு தடுப்பணைகளுக்கான வேலைகளும் உடனடியாக ஆரம்பிக்கப்படும்” என்றார்.

ஆய்வுப் பணியில் அமைச்சர் பொன்முடி...
ஆய்வுப் பணியில் அமைச்சர் பொன்முடி...

இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், கடந்த 1-9-2022 அன்று எல்லீஸ் அணையை ஒட்டியுள்ள பாலத்தின் பாதுகாப்பு கருதி, அணையின் மையப்பகுதி வெடிவைத்து தகர்க்கப் பட்டிருக்கிறது. ‘நிதி வரும் முன்பே அணையை உடைத்துவிட்டார்கள். புதிய அணைகட்ட தி.மு.க தயாராகிவிட்டதாகவே தெரிகிறது’ என்று விவசாயிகளில் சிலர் நம்புகிறார்கள்.

புதிய அணையையாவது தரமாகக் கட்டுவார்களா?