ஒரு கார் நன்றாகத் தயாரிக்கப் பட்டிருந்தாலும், ஷோரூம் அனுபவம் சுமாராக இருந்தால், அந்த கார்களின் சேல்ஸ் விறுவிறுப்பாக இருக்காது.

அப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு சூப்பர் டீலர்தான், டிவிஎஸ் சுந்தரம் மோட்டார்ஸ். இந்த ஷோரூம் எக்ஸ்பீரியன்ஸுக்காகவே இவர்களிடம் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் உண்டு.

இருபது ஆண்டுகளாக மெர்சிடீஸ் பென்ஸ் டீலராகச் செயல்பட்டு வரும் சுந்தரம் மோட்டார்ஸ் - பென்ஸ் கூட்டணிக்கு, தமிழகத்திலும் கர்நாடாகவிலும் மொத்தம் 9 ஷோரூம்கள் இருக்கின்றன. இது வரை இந்தக் கூட்டணி 9,200 பென்ஸ் கார்களை விற்பனை செய்திருக்கிறது. 1,40,000 பென்ஸ் கார்களுக்கு சர்வீஸ் செய்திருக்கிறது. என்றாலும் சென்னையைப் பொறுத்தவரை இது சுந்தரம் மோட்டர்ஸுக்கு தலை தீபாவளி. அதாவது, ஃபர்ஸ்ட் அன்னிவர்சரி. சுந்தரம் மோட்டார்ஸ் பென்ஸின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் சரத் விஜயராகவனுடன் ஒரு `நறுக் சுருக்’ ஸூம் சாட்.

“பென்ஸ் ஷோரூமில், பென்ஸ் கார்களில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘ஆண்டுக்கு 15,000 கார்களை சர்வீஸ் செய்யும் அளவுக்கு பென்ஸுக்கு என சென்னையில் பிரத்தியேகமாகக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். 94,500 சதுர அடிக்குப் பரந்து விரிந்திருக்கும் இது, நம் நாட்டில் இருக்கும் மிகப் பெரிய சர்வீஸ் சென்டரில் முக்கியமானது. பென்ஸ் கார்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான்! மற்ற கார்களைப்போல் பென்ஸின் பானெட்டைத் திறந்து யாரும் இன்ஜினில் கைவைத்து விட முடியாது. அதற்கென எங்களிடம் கம்ப்யூட்டர்கள், டயக்னாலஸிஸ், பயிற்சி பெற்ற பொறியாளர்கள் உண்டு. அந்த அளவுக்குப் பாதுகாப்பானது இது. அப்படியென்றால், பென்ஸ் ஸ்பெஷல்தானே!’’

“பென்ஸுக்குப் போட்டி தமிழ்நாட்டில் யார் என்று நினைக்கிறீர்கள்?’’

“பென்ஸ் நிச்சயம் மார்க்கெட் லீடர். பிஎம்டபிள்யூதான் எங்களுக்குப் போட்டி என்பேன்!”

“பென்ஸில் ஒரு வழியாக எலெக்ட்ரிக் கார் வந்துவிட்டதே?’’

“ஆம், இனிமேல் EQ எனும் ப்ளாட்ஃபார்மில்தான் பென்ஸின் எலெக்ட்ரிக் கார்கள் வரும். லக்ஸூரியும் வேண்டும்; பெர்ஃபாமன்ஸும் குறையக் கூடாது என்று சொல்பவர்களின் எதிர்பார்ப்புகளை அது பூர்த்தி செய்யும். நிச்சயம் EQC நல்ல வரவேற்பைப் பெறும்!’’