Published:Updated:

`மகளுடன் 10 நிமிடம் விளையாடக் கூட நேரமில்லை’ வேதனையில் உருகும் எஸ்.ஐ-யின் ஆடியோ! -பின்னணி என்ன?

காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசும் ஆடியோ வைலாக பரவி வருகிறது. அதில் பேசும் எஸ்.ஐ., ‘மன அழுத்தம் அதிகமாகி எனது உயிர் மூச்சு நின்று விடலாம். ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாகத் தூங்கி 10 ஆண்டுகள் ஆகி விட்டன’ என உருக்கமாகப் பேசுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சில உயரதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களை சக மனிதர்களாக மதிக்காமல் அதிகாரப் போக்கில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுவதுண்டு. உயரதிகாரிகளின் செயல்பாடுகளால் பல காவலர்கள் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகின்றன.

`மன அழுத்தம் குறைய காமெடி ஷோ!’ -மருத்துவர்களை உற்சாகப்படுத்திய கலெக்டர்

தமிழக டிஜிபி-யான சைலேந்திரபாபு அண்மையில், ’காவல்துறையில் பணியாற்றுபவர்கள் வாரம் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்’ என அறிவித்திருந்தார். ஆனாலும் கூட அதை உயரதிகாரிகள் பலரும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்கிற புகாரும் உள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாநகர காவல்துறைக்கு உள்பட்ட பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரான அருணாசலம் என்பவர், காவல் துறையில் நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, தான் செத்துப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக உருக்கமாக பேசிய ஆடியோ வைரலாக பரவுகிறது. .

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

அதில், ”நான் சிறுவயதிலிருந்தே காவல் பணியை நேசித்து வந்ததால் என்னை வேறு எந்த பணிக்கும் தயார்ப்படுத்தவில்லை அதன் விளைவாக 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் ஆகவும் 2011-ம் ஆண்டு உதவி ஆய்வாளராகவும் தேர்ச்சி பெற்றேன். நான் வேலை செய்த இடங்களிலெல்லாம் மரியாதை மதிப்பும் பெற்றவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது எனது ஓய்வு நேரம் மிகக் குறைவாக இருந்தபோதும் எனது உடல் பலவீனத்தையும் கவலைகளை மறந்து மிகுந்த உற்சாகத்துடன் வேலைகளைச் செய்தேன். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக திருநெல்வேலி மாநகரத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறையில் இருப்பவரின் குறைகளைக் கண்டுபிடிப்பது மிக எளிது. ஆனால் அதை நிவர்த்தி செய்வது கடினமான செயல். அதுவும், பாளையங்கோட்டை போன்ற பெரிய காவல் நிலையங்களில், ஒரு காவலரைத் தண்டிப்பதற்கு உயரதிகாரிக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இந்த பதிவைப் போடுவதால் எனக்கும் தண்டனை கிடைக்கும் என்பதைத் தெரிந்தே பதிவிடுகிறேன்.

புத்தம் புது காலை : தூக்கமின்மை, ஞாபகமறதி மன அழுத்தம்... வால்நட் நம் மூளைக்கு ஏன் அவசியம்?!

எனக்கு நாற்பத்தைந்து வயது ஆனபோதும் உடல்நலம் இன்னும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் மன அழுத்தம் அதிகமாகி எனது இதயம் துடிக்க மறந்து விட்டால், எனது குடும்ப உறவுகள் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். அதைவிடவும் எனது மனக்கவலையை வெளிக்காட்டி தண்டனை அனுபவிப்பதை நான் தவறாக நினைக்கவில்லை.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நான் விடுப்பு இல்லாமல் எனது திருமண நாள், பிறந்த நாள் என எதற்கும் ஓய்வெடுக்காமல் வேலை செய்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.ஓராண்டில் நான் எடுத்த விடுப்பை ஒரு கை விரலில் எண்ணிவிடலாம். கடந்த 10 மாதங்களில் ஒருநாள் கூட தொடர்ந்து 5 மணி நேரம் உறங்கியது இல்லை எனது அன்பு மகள் உறங்கியபின் வீட்டுக்கு வருவதும் காலையில் அவள் விழிக்கும் முன்பாக நான் வேலைக்குச் செல்வதும் வாடிக்கையாக இருக்கிறது.

என் மகள் உறங்கிய பின் வீட்டுக்குச் செல்கிறேன். அவள் எழும்பும் முன்பே வேலைக்குப் போகிறேன்.
ஆடியோவில் குமுறும் சப்-இன்ஸ்பெக்டர்

எனது குழந்தைகள் என்னை ஒரு பத்து நிமிடமாவது என்னுடன் விளையாட வாருங்கள் என்று அழைக்கும் போது கூட என்னால் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியாத அளவுக்கு எனது பணிகள் இருந்து வருகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை.

காவல்துறை பணியில் இன்றுவரை தலை நிமிர்ந்து நிற்கிறேன். நான் இப்படி பேசுவதால் காவல்துறையில் எனது பணி தொடருமா என்பது கேள்விக்குறியே” என சப்-இன்ஸ்பெக்டர் பேசிய ஆடியோ வைரல் ஆனதுடன் பலரும் இதுபற்றி விவாதித்து வருகிறார்கள்.

Vikatan

இது குறித்து விளக்கம் கேட்க எஸ்.ஐ அருணாசலத்தைத் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் பேசியதாக ஒரு ஆடியோ வைரலாக பரவி வருகிறதே’ என்று கேட்டோம். ’ஆம். ஆனால் நான் அது பற்றி இப்போது எதையும் பேச விரும்பவில்லை. உங்களிடம் நான் பிறகு பேசுகிறேன்’ என்று முடித்துக் கொண்டார்.

இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமாரிடம் கேட்டதற்கு, "நானும் அவர் பேசியதைக் கேட்டேன். உடனடியாக அவரை அழைத்து பேசி, 'உங்களுக்கு ஏதாவது குறைகள் இருந்திருந்தால் என்னிடம் சொல்லியிருக்கலாமே' எனத் தெரிவித்தேன். நெல்லையில் தற்போது நடக்கும் கொலை உள்ளிட்ட சம்பவங்களைக் கட்டுப்படுத்த எல்லோருமே கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம்.

நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார்
நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார்

சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மக்களைக் காக்கும் பணியில் நாம் நேரம் காலம் பார்த்து வேலை செய்ய முடியாது. இருந்தாலும் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளோம். அவரது மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அவரிடம் ஆறுதலாகப் பேசியிருக்கிறேன். அவர் விரும்பும் வகையில் சுலபமான பணிக்கான வாய்ப்பு இருக்குமானால் அதைக் கொடுத்து அவருக்கு உதவவும் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு